50% இடஒதுக்கீடு - குழுவுக்கு அதிகாரியாக உமாநாத் நியமனம்
- இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் சரியான முறையை பின்பற்றவில்லை என கூறி தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 % இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி திமுக, அதிமுக, பாமக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக, காங்கிரஸ், விசிக மற்றும் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
- இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம்,ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிடாது. மாநில அரசின் கொள்கை என்ற அடிப்படையில் தமிழகம் தொடர்பான இடஒதுக்கீட்டிற்கு சென்னை உயர்நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் கூறியது.
- இதன் பின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அப்பொழுது இந்திய மருத்துவ கவுன்சிளின் வாதத்தை ஏற்க முடியாது எனவும், மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தர சட்டம் இயற்றலாமென தெரிவித்தது.
- மேலும் மத்திய கல்வி நிலையங்கள் அல்லாத நிலையங்களிலும் ஒபிசி இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரிதியாகவோ அரசியலமைப்பு ரீதியாகவோ எவ்வித தடையும் இல்லை என தெரிவித்தது. இது தொடர்பாக 3 மாதத்தில் முடிவு எடுக்க வேண்டும் எனவும், இட ஒதுக்கீடு வழங்க சட்டரீதியாக தடை இல்லை என தீர்ப்பளித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
- இந்நிலையில் ஓபிசி பிரிவினருக்குக்கான 50% இடஒதுக்கீடு - குழுவுக்கு அதிகாரியாக தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக மேலாண் இயக்குனர் உமாநாத் நியமனம் செய்து தமிழக தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்தி ஆலோசனைக் குழு உறுப்பினராக ஐசரி கணேஷ் தேர்வு
- மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சகத்தின் சார்பில் 'இந்தி ஆலோசனைக் குழு' அமைக்கப்பட்டுள்ளது.
- மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இக்குழுவின் தலைவராக உள்ளார். இக்குழுவில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், மத்திய அமைச்சக செயலாளர்கள், இணை செயலர்கள் உள்ளிட்ட 30 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.
- தமிழகத்தில் இருந்து சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர், வேந்தர் மற்றும் தலைவர் ஐசரி கே.கணேஷ் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பல ஆண்டுகளுக்கு பின் இந்தி ஆலோசனை குழுவில் தமிழகத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
மேகாலய மாநில ஆளுநராக சத்ய பால் மாலிக் நியமனம்
- கோவா ஆளுநராக உள்ள சத்ய பால் மாலிக், வடகிழக்கு மாநிலமான மேகாலய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா். தற்போது மகாராஷ்டிர மாநில ஆளுநராக உள்ள பகத்சிங் கோஷியாரி, கோவா ஆளுநா் பொறுப்பை கூடுதலாக கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளாா்.
- ததகட்டா ராய், திரிபுராவில் 3 ஆண்டுகளும், மேகாலயத்தில் 2 ஆண்டுகளும் என ஆளுநராக 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளாா். ஆளுநருக்கு பதவிக்கால வரம்பு ஏதும் நிா்ணயம் செய்யப்படவில்லை. இருப்பினும் தற்போது ஆளுநா் பதவிகாலம் 5 ஆண்டுகள் என்ற பொதுவான நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
- ஆனால் இதற்கு முன்னா் இ.எஸ்.எல். நரசிம்மன் தொடா்ந்து 12 ஆண்டுகள் ஆளுநா் பதவியை வகித்துள்ளாா். அவா் சத்தீஸ்கா், ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் ஆளுநா் பதவியில் நீண்டகாலம் இருந்துள்ளாா்.
- மேகாலய ஆளுநராக இருந்த ததகட்டா ராய் அடுத்த மாதம் 75ஆவது வயதை எட்ட உள்ளாா். அவருக்கு புதிய பதவி ஏதும் அளிக்கப்படவில்லை. ஜம்மு, காஷ்மீரில் சிஆா்பிஎஃப் வீரா்கள் வாகனத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரா்கள் கொல்லப்பட்ட சம்பவத்தின்போது ராணுவ அதிகாரி ஒருவா், சுட்டுரையில் 'காஷ்மீா் சரக்குகளை தடை செய்ய வேண்டும்' என பதிவிட்டதற்கு ததகட்டா ராய் ஆதரவு தெரிவித்து சா்ச்சையில் சிக்கியவா்.
- ததகட்டா ராய் கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் மேகாலய ஆளுநராக பதவி வகித்து வந்தாா். அந்த பதவிக்கு தற்போது நியமிக்கப்பட்டுள்ள 73 வயதான சத்ய பால் மாலிக், ஒருங்கிணைந்த ஜம்மு - காஷ்மீா் மாநிலத்தின் கடைசி ஆளுநராக பணியாற்றியவா் என்பது குறிப்பிடத்தக்கது.
தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்: உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல்
- உச்சநீதிமன்ற கொலீஜியம் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஜஸ்மீத் சிங், அமித் பன்சால், தாரா விதஸ்தா கஞ்ஜு, அனிஷ் தயால், அமித் சா்மா, மினி புஷ்கா்மா ஆகிய 6 வழக்குரைஞா்களை தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- இதுதவிர, பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றத்தின் நீதிபதியாக வழக்குரைஞா் ராகேஷ் குமாா் பரத்வாஜை நியமிக்கும் பரிந்துரைக்கும் அந்தக் குழு ஒப்புதல் அளித்தது.
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான கொலீஜியம் குழுவில் நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆா்.எஃப்.நாரிமன், யு.யு.லலித் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.
ஐபிஎல் ஸ்பான்சராக ட்ரீம் 11
- ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் டைட்டில் ஸ்பான்சராக இருந்து வந்த சீன மொபைல் நிறுவனம் விவோ விலகிய நிலையில், அடுத்த 3 ஆண்டுகளுக்கான உரிமத்தை ட்ரீம் 11 நிறுவனம் முதல் ஆண்டுக்கு ரூ. 222 கோடி, அடுத்த 2 ஆண்டுகளுக்கு தலா ரூ.240 கோடி என சராசரியாக ஆண்டுக்கு ரூ.234 கோடி என்ற ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பித்து வென்றுள்ளது.
- ஒருவேளை விவோ நிறுவனம் அடுத்த ஆண்டு மீண்டும் டைட்டில் ஸ்பான்சராக விருப்பம் தெரிவித்தால் ட்ரீம் 11 அதற்கு வழிவிட வேண்டியிருக்கும்.
- மத்திய கல்வி அமைச்சகம், உயர் கல்வி மையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு, மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவாக, ஏ.ஆர்.ஐ.ஐ.ஏ., விருது வழங்கி வருகிறது.
- மத்திய, மாநில அரசுகளின் உயர் கல்வி மையங்கள், அரசு நிதியுதவியில் செயல்படும் கல்லுாரிகள், தனியார் கல்வி மையங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில், இவ்விருது வழங்கப்படுகிறது.இதன்படி, மத்திய அரசு உயர் கல்விப் பிரிவில், முதல் மூன்று இடங்களை, சென்னை, மும்பை மற்றும் டில்லி ஐ.ஐ.டி.,க்கள் தட்டிச் சென்றன.
- அடுத்த இரு இடங்களை, பெங்களூர் இந்திய அறிவியல் மையம், கோரக்பூர், ஐ.ஐ.டி., ஆகியவை பிடித்துள்ளன.
- இந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, பெண்கள் உயர்நிலை கல்வி மையங்களுக்கான விருது பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த அவினாசிலிங்கம் அறிவியல் மற்றும் உயர்கல்வி மையம், முதலிடத்தை பிடித்துள்ளது.
- புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஏ.ஆர்.ஐ.ஐ.ஏ., விருது பட்டியலில், மாநில அரசு நிதியுதவி பிரிவில், மஹாராஷ்டிராவின் ரசாயன தொழில்நுட்ப கல்வி மையம், முதலிடத்தை பிடித்துள்ளது.
- அடுத்த இடங்களை, பஞ்சாப் பல்கலை, சவுத்ரி சரண் சிங் ஹரியானா வேளாண் பல்கலை ஆகியவை பிடித்துள்ளன.மாநில அரசு நிதியுதவிடன் செயல்படும் தன்னாட்சி கல்வி மையங்கள் பிரிவில், புனே பொறியியல் கல்லுாரி, முதலிடத்தை பிடித்துள்ளது.
- அடுத்த இடங்களில், கர்நாடகாவின், பி.இ.எஸ்., பொறியியல் கல்லுாரி, தமிழகத்தின், கோவை தொழில்நுட்ப மையம் ஆகியவை பிடித்துள்ளன.
- தனியார் பல்கலை பிரிவில், ஒடிசாவின் கலிங்கா தொழில்நுட்ப மையம், முதலிடத்தையும்; அடுத்த இரு இடங்களை, தமிழகத்தைச் சேர்ந்த, எஸ்.ஆர்.எம்., அறிவியல் தொழில்நுட்ப மையம், வேலுார் தொழில்நுட்ப மையம் ஆகியவை பிடித்துள்ளன.
அபாயகரமான ஆலையை நிறுவ ஸ்டெர்லைட்டுக்கு அடிப்படை உரிமையே இல்லை - ஹைகோர்ட் தீர்ப்பு
- 2018 மே 22 ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். 2018 மே 28 ல் காற்று, நீர் மாசு ஏற்படுத்தியதாக ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும், தமிழக அரசும் உத்தரவிட்டது.
- அரசு உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
- ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற தருண் அகர்வாலின் அறிக்கைப்படி ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதியளித்தது.
- தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதேபோல ஆலையை திறக்க அனுமதி கோரி ஸ்டெர்லைட் நிர்வாகமும் மனுத்தாக்கல் செய்தது.
- உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தடை விதித்ததுடன், வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக, வேதாந்தா நிறுவனத்துக்கு அறிவுறுத்தியது.
- 2019 பிப்ரவரி 27 ம் தேதி உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 2019 ஜூன் மாதம் இந்த வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய சிறப்பு அமர்வை அமைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.
- 2019 ஜூன் 27 முதல் சிறப்பு அமர்வில் வழக்கு விசாரணை துவங்கியது. 39 நாட்கள் விசாரணைக்கு பின், 2020 ஜனவரி 8 ம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி சிவஞானம் மற்றும் நீதிபதி பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.
- இதன்படி, வேதாந்தா குழுமத்தின் மனுவை தள்ளுபடி செய்து, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை; ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் அரசாணை செல்லும் என தீர்ப்பளித்திருக்கிறது.
நாட்டிலேயே முதல்முறையாக சட்டசபை நிகழ்வுகளை ஒளிபரப்ப சபா டி.வி - கேரள அரசு
- நாடாளுமன்றம் கூடும்போது அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது உள்ளிட்டவைகளுக்காக மத்திய அரசுக்கு லோக்சபா டி.வி சானல் உள்ளது.
- ஆனால், மாநிலங்களில் உள்ள சட்டசபைகளில் நடக்கும் விவாதங்கள், உறுப்பினர்களின் பேச்சுக்களை ஒளிபரப்ப தனி தொலைகாட்சி சேனல் கிடையாது. இந்தநிலையில், நாட்டில் முதல்முறையாக சட்டசபை நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப கேரள அரசு `சபா டி.வி' என்ற டி.வி சேனலை கேரள புத்தாண்டு தினமான நேற்று தொடங்கியுள்ளது.