- ஆகஸ்ட் 18, 2020 அன்று, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் “தேசிய புற்றுநோய் பதிவு திட்ட அறிக்கை”, 2020 ஐ வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, இந்தியாவில் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை 2025 க்குள் 15.7 லட்சமாக அதிகரிக்க உள்ளது.
- 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாட்டில் 13.9 லட்சம் புற்றுநோய் நோயாளிகள் இருப்பார்கள் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
அறிக்கையின் முக்கிய புள்ளிகள்
- இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 12% அதிகரிக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் 1.39 மில்லியனாக இருந்தது. அதுவே 2025 ஆம் ஆண்டில் 1.5 மில்லியனாக அதிகரிக்கும் என்று இந்திய புற்றுநோய் அறிக்கையின் தற்போதைய பாதிப்புகளின் அடிப்படையில் உள்ள தரவுகளின் படி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
- 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் புற்றுநோய் சுமையில் 27.1% புகையிலை தொடர்பான புற்றுநோய்கள் ஆகும். இதில் 19.7% இரைப்பை குடல் புற்றுநோய் மற்றும் 5.4% கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஆகியவை அடங்கும்.ஆண்களில் புற்றுநோய் பாதிப்பு 2020 இல் 6,79,421 ஆகவும், 2025 இல் 7,63,575 ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
- பெண்களில் பாதிப்பு 2020 இல் 7,12,758 ஆகவும், 2025 இல் 8,06,218 ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.பெண்களில் மார்பக புற்றுநோய் 200,000 பேருக்கும் (14.8% பங்களிக்கும்) மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் 75,000 பேருக்கும் (5.4% பங்களிக்கும் ) இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும், இரைப்பைக் குழாயின் புற்றுநோய் 270,000 பேருக்கும் (19.7% பங்களிக்கும்) என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
- வடகிழக்கு பிராந்தியத்தில் இந்தியாவில் அதிக அளவில் புற்றுநோய் பாதிப்பு காணப்பட்டது. அருணாச்சல பிரதேசத்தில் 0 முதல் 74 வயது வரையிலான நான்கு நபர்களில் ஒருவருக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த திட்டத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் செயல்படுத்துகிறது. நாடு முழுவதும் பரவியுள்ள புற்றுநோய் நோயாளிகளின் கண்ணோட்டத்தைப் பெறுவதே திட்டத்தின் முக்கிய நோக்கம். மேலும், நாட்டில் புற்றுநோய் பாதிப்புக்கான மதிப்பீடுகளை கணக்கிடுவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்த திட்டம் "இந்தியாவில் புற்றுநோயின் அட்லஸின் வளர்ச்சி"( “Development of an Atlas of Cancer in India)என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் புற்றுநோய் பரவுவது குறித்த அத்தகைய அட்லஸ் அல்லது அறிக்கை முதன்முதலில் 2001-2002 இல் வெளியிடப்பட்டது.