ஆகஸ்ட் 18, 2020 அன்று, புதுமை சாதனைகள் தொடர்பான நிறுவனங்களின் அடல் தரவரிசை-2020 (ARIIA-Atal Ranking of Institutions on Innovation Achievements), வெளியிடப்பட்டது. தரவரிசைகளை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.
மத்தியக் கல்வி அமைச்சகம் மற்றும் ஏஐசிடிஇ ஆகியவை இணைந்து அடல் தரவரிசைப் பட்டியலை வெளியிடுகின்றன. இது கண்டுபிடிப்புகளில் சாதனை நிகழ்த்தும் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை (ARIIA) ஆகும். இந்த ஆண்டுக்கான பட்டியல் 7 அம்சங்களை அடிப்படையாக வைத்து நிர்ணயிக்கப்பட்டது.
பட்ஜெட் மற்றும் நிதி ஆதரவு, உள்கட்டமைப்பு மற்றும் பிற வசதிகள், விழிப்புணர்வு, யோசனை உருவாக்கம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான ஆதரவு, தொழில்முனைவோர் மேம்பாட்டுக்கான ஊக்குவிப்பு, புதுமையான கற்றல் முறைகள் மற்றும் படிப்புகள், அறிவுசார் சொத்து உருவாக்கம், தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் வணிகமயமாக்கல் மற்றும் நிறுவனத்தின் நிர்வாகத்தில் புதுமை ஆகியவை அளவுகோல்களாக நிர்ணயிக்கப்பட்டன.
இந்நிலையில் ஆய்வுக்குப் பிறகு இந்த ஆண்டுக்கான பட்டியலை (ARIIA 2020) குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று வெளியிட்டார். இதில் மத்திய அரசு நிதியுதவியின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் ஐஐடி சென்னை முதலிடத்தைத் தக்க வைத்துள்ளது.
தனியார் நிறுவனங்களில் ஒடிசாவின் கலிங்கா தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. முதல்முறையாக பெண்கள் கல்வி நிறுவனங்களுக்கான சிறப்புப் பரிசு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இடத்தை அவினாசிலிங்கம் அறிவியல் மற்றும் உயர் கல்விக்கான பெண்கள் நிறுவனம் பெற்றுள்ளது.
அரியா 2020: அடல் தரவரிசை 2020
மத்திய நிதியளிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள்:
- ஐஐடி சென்னை
- ஐஐடி மும்பை
- ஐஐடி டெல்லி
- ஐஐஎஸ் பெங்களூரு
- ஐஐடி காரக்பூர்
- ஐஐடி கான்பூர்
- ஐஐடி மண்டி
- என்ஐடி கோழிக்கோடு
- ஐஐடி ரூர்க்கி
- ஹைதராபாத் பல்கலைக்கழகம்
பெண்கள் (உயர் கல்வி நிறுவனங்கள் மட்டுமே):
- அவினாசிலிங்கம் அறிவியல் மற்றும் உயர் கல்விக்கான பெண்கள் நிறுவனம்
- இந்திரா காந்தி டெல்லி பெண்கள் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
தனியார் கல்வி நிறுவனங்கள்:
- எஸ்ஆர் பொறியியல் கல்லூரி, தெலங்கானா
- ஜி.எச்.ரைசோனி பொறியியல் கல்லூரி, நாக்பூர்
- ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
- என்ஐடிடிஇ மீனாட்சி தொழில்நுட்ப நிறுவனம்
- சிஎம்ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
- தனியார் / நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்:
- கலிங்கா தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம், ஒடிசா
- எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
- வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி
- அமிர்தா விஸ்வ வித்யாபீடம்
- சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்.
- மாநில நிதியுதவி தன்னாட்சி நிறுவனங்கள், புனே, பொறியியல் கல்லூரி என்ற பிரிவின் கீழ், மகாராஷ்டிரா முதலிடம் வகித்தது.
- மகாராஷ்டிராவின் வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம், மாநில நிதியளிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் பிரிவில் முதலிடம் பிடித்தது.