ஆகஸ்ட் 18, 2020 அன்று, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் “சுதேசி நுண்செயலி சவாலை” தொடங்கினார்.
- ஐ.ஐ.டி மெட்ராஸ் மற்றும் மேம்பட்ட கணிணி மேம்பாட்டு மையம் (CDCA) முறையே சக்தி (SHAKTI) (32 பிட்) மற்றும் வேகா (64 பிட்) என்ற இரண்டு நுண்செயலிகளைத் திறந்த மூலக் கட்டமைப்பைப் பயன்படுத்தி மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் நுண்செயலி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் உருவாக்கியுள்ளது. “சுதேசி நுண்செயலிச் சவால்- # சுயசார்பு பாரத்துக்கான புதுமையான தீர்வுகள்” பல்வேறு தொழில்நுட்பத் தயாரிப்புகளை உருவாக்க இந்த நுண்செயலிகளைப் பயன்படுத்த புதுமை விரும்பிகள், தொடக்க நிறுவனங்கள் மற்றும் மாணவர்களை அழைக்கிறது.
- தன்னம்பிக்கையின் லட்சியத்தை உணர்ந்து கொள்வதற்கான உறுதியான நடவடிக்கைகளில் ஒன்றாகவும், “சுயசார்பு பாரதம் ” நோக்கிய ஒரு முக்கியமான முன்னேற்றமாகவும், இந்த முயற்சி இந்தியாவின் எதிர்காலத் திட்டம் மற்றும் தொழில்துறை துறைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டது மட்டுமல்லாமல், பாதுகாப்பு, உரிமம், தொழில்நுட்பம் வழக்கற்றுப்போதல் மற்றும் மிக முக்கியமாக இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைத்தல் போன்றவற்றில் உள்ள சிக்கல்களைத் தணிக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளது. நம்நாட்டிலும், வெளிநாட்டிலும் முடியும் தருவாயில் உள்ள அதிநவீன செயலி வகைகளின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் கட்டுருவாக்கம், நாட்டில் மின்னணு அமைப்பு வடிவமைப்பு மற்றும் உற்பத்தியின் துடிப்பான சுற்றுச்சூழல் அமைப்பின் இறுதி இலக்கை நோக்கிப் பாய்ச்சுவதற்கான வெற்றிகரமான படியாகும்.
- "சுதேசி நுண்செயலி சவால்" என்பது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நாட்டில் தொழில்நுட்பம் சார்ந்த புதுமைச் சுற்றுச்சூழல் அமைப்பைத் தூண்டுவதற்கும் டிஜிட்டல் தத்தெடுப்பில் முன்னணியில் இருப்பதற்கும் எடுக்கப்பட்ட செயல்திறன் மிக்க, முன்னெச்சரிக்கை மற்றும் தரப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் தொடரின் ஒரு பகுதியாகும். அனைத்து மட்டங்களிலும் உள்ள தொடக்க நிறுவனங்களுக்கும், மாணவர்களுக்கும் வாய்ப்புகள் திறந்திருக்கும் இந்த சவால், சுதேசி செயலி IPக்களுடன் இணைந்து, சமூகத் தேவைகளுக்கான சிக்கனமான தீர்வுகளைக் கண்டுபிடிப்பதில் அவர்களுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், சுதேசிச் செயலிகளைச் சுற்றியுள்ள வீட்டில் வளர்க்கப்படும் முழு சுற்றுச்சூழல் அமைப்பையும் சிக்கலில்லாததாக உருவாக்க வேண்டும் என்று சவாலையும் முன் வைப்பதோடு, எதிர்காலத்தில் உலகளாவிய மற்றும் உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வடிவமைப்புகளையும் கோருகிறது.
- சக்தி மற்றும் வேகா: அட்வான்ஸ் கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையம் (சி.டி.ஐ.சி) மற்றும் ஐ.ஐ.டி மெட்ராஸ் ஆகியவை சக்தி மற்றும் வேகா எனப்படும் இரண்டு மைக்ரோ செயலிகளை உருவாக்கியுள்ளன. சக்தி 32 பிட் செயலி மற்றும் வேகா 64 பிட் செயலி. செயலிகள் ஒரு திறந்த மூல கட்டமைப்பைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டன.சக்தி ஒரு திறந்த மூல RISC அறிவுறுத்தல் தொகுப்பு கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. RISC என்பது குறைக்கப்பட்ட வழிமுறை தொகுப்பு கணினி ஆகும். இது மிகவும் உகந்த வழிமுறைகளைக் கொண்டுள்ளது.
ஆத்மா நிர்பர் பாரத் அபியான்:
இத்திட்டம் முதன்மையாக “உள்ளூர் குரல்” ( “Vocal for Local” )கருத்தில் கவனம் செலுத்துகிறது. இது ஒரு புதுமையான முறையில் நாட்டிற்குள் உற்பத்தியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதை அடைவதற்காக, நாட்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை உயர்த்தும் நோக்கம் கொண்டது. எனவே, அந்தந்த பணிகளை நிறைவேற்ற ஆத்மா நிர்பர் பாரத் அபியனின் கீழ் பின்வருபவை தேர்ந்தெடுக்கப்பட்டன
- மருத்துவ அறிவியலுக்கான எய்ம்ஸ்
- பாதுகாப்பு ஆராய்ச்சிக்கு டி.ஆர்.டி.ஓ.
- விமான போக்குவரத்துக்கு எச்.ஏ.எல்
- விண்வெளிக்கு இஸ்ரோ
- ஆற்றலுக்கான என்டிபிசி மற்றும் கெயில்