- மத்திய கல்வி அமைச்சகம், உயர் கல்வி மையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு, மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவாக, ஏ.ஆர்.ஐ.ஐ.ஏ., விருது வழங்கி வருகிறது.
- மத்திய, மாநில அரசுகளின் உயர் கல்வி மையங்கள், அரசு நிதியுதவியில் செயல்படும் கல்லுாரிகள், தனியார் கல்வி மையங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில், இவ்விருது வழங்கப்படுகிறது.இதன்படி, மத்திய அரசு உயர் கல்விப் பிரிவில், முதல் மூன்று இடங்களை, சென்னை, மும்பை மற்றும் டில்லி ஐ.ஐ.டி.,க்கள் தட்டிச் சென்றன.
- அடுத்த இரு இடங்களை, பெங்களூர் இந்திய அறிவியல் மையம், கோரக்பூர், ஐ.ஐ.டி., ஆகியவை பிடித்துள்ளன.
- இந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, பெண்கள் உயர்நிலை கல்வி மையங்களுக்கான விருது பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த அவினாசிலிங்கம் அறிவியல் மற்றும் உயர்கல்வி மையம், முதலிடத்தை பிடித்துள்ளது.
- புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஏ.ஆர்.ஐ.ஐ.ஏ., விருது பட்டியலில், மாநில அரசு நிதியுதவி பிரிவில், மஹாராஷ்டிராவின் ரசாயன தொழில்நுட்ப கல்வி மையம், முதலிடத்தை பிடித்துள்ளது.
- அடுத்த இடங்களை, பஞ்சாப் பல்கலை, சவுத்ரி சரண் சிங் ஹரியானா வேளாண் பல்கலை ஆகியவை பிடித்துள்ளன.மாநில அரசு நிதியுதவிடன் செயல்படும் தன்னாட்சி கல்வி மையங்கள் பிரிவில், புனே பொறியியல் கல்லுாரி, முதலிடத்தை பிடித்துள்ளது.
- அடுத்த இடங்களில், கர்நாடகாவின், பி.இ.எஸ்., பொறியியல் கல்லுாரி, தமிழகத்தின், கோவை தொழில்நுட்ப மையம் ஆகியவை பிடித்துள்ளன.
- தனியார் பல்கலை பிரிவில், ஒடிசாவின் கலிங்கா தொழில்நுட்ப மையம், முதலிடத்தையும்; அடுத்த இரு இடங்களை, தமிழகத்தைச் சேர்ந்த, எஸ்.ஆர்.எம்., அறிவியல் தொழில்நுட்ப மையம், வேலுார் தொழில்நுட்ப மையம் ஆகியவை பிடித்துள்ளன.
பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவாக ஏ.ஆர்.ஐ.ஐ.ஏ விருது / ARIIA AWARD 2020
August 19, 2020
0
Tags