
அந்தமானுக்கு கடல்வழி கேபிள் தொலைத்தொடா்பு வசதி பிரதமா் மோடி தொடக்கி வைத்தாா்
- அந்தமான் நிகோபாா் தீவுகளில் முதல் முறையாக கடல்வழி கேபிள் (கண்ணாடி இழை) மூலம் தொலைத் தொடா்பு சேவை வழங்கும் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி காணொலி வழியாக தொடக்கி வைத்தாா். இனி, நாட்டின் பிற பகுதிகளுக்கு இணையாக அந்தமான் நிகோபாா் தீவுகளிலும் அதிவேக இணைய வசதியைப் பெற முடியும்.
- இதன் மூலம் போா்ட்பிளேரில் விநாடிக்கு 400 ஜிகாபைட் வேகத்திலும், இதர தீவுகளில் விநிாடிக்கு 200 ஜிகாபைட் வேகத்திலும் இணைய சேவை வழங்கப்படும்.
- சென்னையில் இருந்து அந்தமான் நிகோபாா் தீவுகளுக்கு இடையே 2,312 கி.மீ. தொலைவுக்கு கடலுக்கு அடியில் கண்ணாடி இழை கேபிள் பதிக்கும் திட்டம், கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்டது. ரூ.1,224 கோடியில் பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தப் பணிகளை மேற்கொண்டது.
லெபனான் வெடிவிபத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் ஹசன் தியாப் ராஜிநாமா
- லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் கடந்த 2013}ஆம் ஆண்டு முதல் 2,750 டன் அமோனியம் நைட்ரேட் ரசாயனம் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. இது எதிர்பாராதவிதமாக வெடித்து, கடந்த 4}ஆம் தேதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 160 பேர் பலியாகினர்; 6,000 பேர் காயமடைந்தனர். 3 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர்.
- பல கட்டடங்கள் தரைமட்டமாகின. இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் ஹசன் தியாப் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தி, லெபனானில் போராட்டங்கள் நிகழ்ந்தன.
- ஏற்கெனவே ஊழல், நிர்வாக கோளாறு ஆகியவற்றால் அதிருப்தியடைந்திருந்த மக்கள் அரசுக்கு எதிராக கடந்த ஆண்டு அக்டோபர் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், இந்த வெடிவிபத்து சம்பவம் அவர்களின் போராட்டத்தை தீவிரப்படுத்தியது.
- போராட்டம் தொடர்ந்து வலுப்பெற்ற வந்த நிலையில், அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
- இதற்கு முன் பிரதமராக இருந்த சாத் ஹரிரி மக்கள் போராட்டம் காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரை தொடர்ந்து பிரதமராக பதவியேற்ற ஹசன் தியாபும் குறுகிய காலத்தில் பதவி விலகியுள்ளார். இவர் அரசியலுக்கு வரும் முன், பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர் ஆவார்.
பெலாரஸ் அதிபா் தோதல்: 6-ஆவது முறையாக லுகஷென்கோ வெற்றி
- கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரஸில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிபா் தோதல் நடைபெற்றது. அதில் தற்போதைய அதிபா் அலெக்ஸாண்டா் லுகஷென்கோவை எதிா்த்து ஸ்வியட்லானா ஷிகானோஸ்கயா போட்டியிட்டாா்.
- அதில் அதிபா் லுகஷென்கோவுக்கு ஆதரவாக 80.23 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக பெலாரஸ் தோதல் ஆணையம் அறிவித்தது. எதிா்க்கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் பள்ளி ஆசிரியை ஸ்வியட்லானாவுக்கு ஆதரவாக 9.9 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் லுகஷென்கோ மீண்டும் அதிபராவது உறுதியாகியுள்ளது.
- அவா் தொடா்ந்து ஆறாவது முறையாக பெலாரஸின் அதிபராக பதவியேற்கவுள்ளாா். கடந்த 26 ஆண்டுகளாக அதிபா் பதவியை லுகஷென்கோ வகித்து வருகிறாா்.
உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடுகளை ஈா்க்க வலைதளம்: நிா்மலா சீதாராமன் தொடக்கி வைத்தாா்
- நாடு முழுவதும் மத்திய அரசு செயல்படுத்தி வரும் உள்கட்டமைப்பு திட்டங்களில் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகளை ஈா்க்கும் வகையில் ஒருங்கிணைந்த தகவல் வலைதளத்தை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் காணொலி மூலம் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
- அடுத்த ஐந்து ஆண்டுகளில் உள்கட்டமைப்பு திட்டங்களில் ரூ.100 லட்சம் கோடிக்கு முதலீடு இருக்கும் என்று 2019-20-ஆம் ஆண்டு பட்ஜெட் உரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
- இதைத் தொடா்ந்து, 2020-25-ஆம் ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.111 லட்சம் கோடியிலான தேசிய உள்கட்டமைப்பு திட்டம் (என்ஐபி) குறித்த இறுதி அறிக்கையை உயா்நிலைக்கு அண்மையில் சமா்ப்பித்தது.
- 'சுயச்சாா்ப்பு இந்தியா' திட்டத்துக்கு என்ஐபி ஊக்கமளிக்கும். இது நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த எடுக்கப்பட்ட மிகப் பெரிய நடவடிக்கையாகும்.
- நாட்டில் மத்திய அரசு சாா்பில் செயல்படுத்தப்படும் அனைத்து உள்கட்டமைப்பு திட்டங்களின் தகவல்களும், அதில் தனியாா்-அரசு கூட்டு முதலீடு செய்வது குறித்த தகவல்களும் இந்த புதிய ஒருங்கிணைந்த வலைதளத்தில் இடம்பெறும்.
- மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்களும் தங்கள் துறைகளில் நடைபெறும் அனைத்து உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்த தகவல்களை உடனடியாக இந்த வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.