- மனிதர்கள் - யானைகள் குறுக்கீடுகள் குறித்த இணையதளத்தின் நவீன வடிவமைப்பை (பீட்டா வெர்சன்) திரு. ஜவடேகர், திரு சுப்ரியோ மற்றும் அமைச்சகத்தின் அதிகாரிகள் தொடங்கி வைத்தனர். “Surakhsya” எனப்படும் மனிதர்கள் - யானைகள் குறுக்கீடு குறித்த தேசிய முனையத்தில், உடனடியாக தகவல்களை சேகரித்தல் மற்றும் சூழ்நிலைகளைக் கையாள உடனடியாக ஆலோசனை பெறும் நடைமுறைகள் உள்ளன.
- தகவல் பரிமாற்ற வழிமுறைகள் மற்றும் தகவல் கணிப்பு உபகரணங்கள் மூலமாக எச்.இ.சி. தகவல் தொகுப்பை பயன்படுத்தி பயனுள்ள கொள்கைகளை உருவாக்க முடியும். மனிதர்கள் - விலங்குகள் இடையே குறுக்கீடுகள் ஏற்படுவதைத் தடுப்பதற்கான செயல் திட்டங்களை உருவாக்க இது உதவிகரமாக இருக்கும். இப்போது இந்த இணையதளத்தின் நவீன வடிவமைப்புப் பரிசோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ளது.
- மாநிலங்கள் ஏற்றுக் கொண்ட பிறகு முழு அளவில் இந்தியா முழுவதிலும் இந்த நவீன வடிவமைப்பு இணையதளம் தொடங்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் அது நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 12 ஆம் தேதி சர்வதேச அளவில் வருடாந்திர நிகழ்வாக உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
- யானைகளைப் பாதுகாத்தல் என்ற கருத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதாக இந்த நிகழ்ச்சி இருக்கும். யானைகளைப் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் காடுகளில் உள்ள மற்றும் தனியார் பராமரிப்பில் உள்ள யானைகளை நல்ல முறையில் கையாளுதல் மற்றும் பராமரிப்புக்கு நல்ல வழிமுறைகளை உருவாக்குதல் மற்றும் அவை குறித்த அறிவைப் பகிர்ந்து கொள்வது ஆகியவற்றுக்கு இந்த நாளில் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
SURAKHSYA -தேசிய போர்டல் தொடங்கப்பட்டது
August 11, 2020
0
Tags