2020 | GSAT-30 | Replacement of INSAT-4A. |
EOS-01 | Space-based synthetic aperture imaging radar. | |
CMS-01 | Extended C-band coverage for mainland India, Lakshadweep and Andaman & Nicobar Islands. | |
2021 | Sindhu Netra | Earth observation satellite used by Indian Navy for surveillance over the Indian Ocean. |
SDSat | This Nanosatellite was developed by Space Kidz India to study radiations. It carried 25,000 names and a copy of Bhagavad Gita into space. | |
JITSat | Developed by JIT as part of UNITYSat constellation. | |
GHRCESat | Developed by GHRCE as part of UNITYSat constellation. | |
Sri Shakthi Sat | Developed by SIET as part of UNITYSat constellation. | |
EOS-03 | India's first real-time Earth observation satellite and first satellite of the GISAT constellation. | |
Upcoming Satellites | ||
2022 | RISAT-1A | Radar imaging satellite to facilitate high-quality images and additional security to Indian borders. |
OCEANSAT-3 | Earth observation satellite for oceanographic and atmospheric studies. | |
GSAT-20 | Communication satellite to add data transmission capacity required by Smart Cities Mission of India. | |
GISAT-2 | Multispectral and hyperspectral Earth-imaging satellite. | |
Aditya-L1 | Solar coronal observation spacecraft. | |
GSAT-32 | Communications satellite. | |
TDS-01 | A technology demonstrator for TWTA and atomic clock. | |
SPADEX x 2 | Demonstration of rendezvous space docking and berthing of spacecraft. | |
GSAT-7R | Military communications satellite. | |
DRSS-1 | Communications satellite comprising two satellites in the initial stage-- CMS-04 and IDRSS-2 in GEO. | |
DRSS-2 | ||
X-ray Polarimeter Satellite | Space observatory to study polarization of cosmic X-rays. | |
INSAT 3DS | Military communications satellite. | |
2022-23 | GSAT-7C | Military communications satellite. |
AstroSat-2 | It is a space telescope and successor of AstroSat-1. | |
2023 | NISAR | A joint mission between ISRO and NASA is a dual-frequency synthetic aperture on an Earth observation satellite. |
2024 | Lunar Polar Exploration Mission | Joint lunar exploration mission between ISRO and JAXA. |
2024-25 | Mangalyaan-2 | India's second Mars exploration mission. |
2025 | DISHA | Twin aeronomy satellite mission. |
2024-26 | Shukrayaan-1 | Venus exploration satellite. |
- திருவனந்தபுரத்திற்கு அருகே அமைந்துள்ள தும்பாவில் உள்ள அம்பா நிலநடுக்கோட்டு விண்கலன் செலுத்தும் மையத்தில் இந்திய விண்வெளித் திட்டம் முதன் முதலில் துவங்கியது.
- 1963 ஆம் ஆண்டு நவம்பர் 21 அன்று தும்பாவிலிருந்து முதல் ஆய்வு விண்கலன் செலுத்தப்பட்டது.
- நைக்-அப்பாச்சி எனும் இந்த முதல் விண்கலமானது, அமெரிக்காவிலிருந்து வாங்கப்பட்டதாகும்.
- ஆய்வு விண்கலன் என்பது உயர் வளிமண்டலத்தின் இயற்பியல் அளவுருக்களை மதிப்பிடுவதற்காக வடிவமைக்கப்பட்ட விண்கலன் ஆகும்.
- 1967 ஆம் ஆண்டு ஜனவரி 01 அன்று செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு புவி மையமானது அகமதாபாத்தில் அமைக்கப்பட்டது.
- இந்தியாவின் உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்பட்ட முதல் ஆய்வு விண்கலனான RH-75 ஆனது 1967 ஆம் ஆண்டு நவம்பர் 20 அன்று விண்ணில் செலுத்தப்பட்டது.
- இந்தியாவின் முதல் செயற்கைக் கோளான ஆர்யபட்டாவானது, X – கதிர் வானியல் மற்றும் சூரிய இயற்பியல் ஆய்விற்காக சோவியத் ஒன்றியத்தால் 1975 ஆம் ஆண்டு செலுத்தப்பட்டது.
- 1975 – 76 காலகட்டத்தில் இஸ்ரோவானது நாசாவுடன் இணைந்து விண்வெளித் தகவல் தொடர்பு முறையை தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை உருவாக்கியது.
- இதன் விளைவாக, செயற்கைக் கோள் வழியான தொலைக்காட்சி பரிசோதனை என்ற திட்டம் உருவாக்கப்பட்டது.
- 1977 ஜனவரி 01 முதல் 1979 ஜனவரி 08 வரையிலான காலங்களில் பிரான்ஸ் – ஜெர்மன் சிம்பொனி செயற்கைக் கோளைப் பயன்படுத்தி இஸ்ரோ மற்றும் அஞ்சல் & தந்தி துறையின் கூட்டுத் திட்டமான செயற்கைக்கோள் தொலைத் தொடர்பு பரிசோதனை திட்டமானது மேற்கொள்ளப்பட்டது.
- புவிக் கண்காணிப்பிற்கான சோதனை செயற்கைக் கோளான பாஸ்கரா – 1 ஆனது 1979 ஆம் ஆண்டு ஜுன் 07 அன்று செலுத்தப்பட்டது.
- ரோகிணி தொழில்நுட்ப ஆய்வுக் கருவிகளுடன் கூடிய SLV-3இன் முதல் சோதனை ஏவுதல் 1979 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 அன்று திட்டமிடப் பட்டது. ஆனால் இந்தச் செயற்கைக் கோளை சுற்றுவட்டப் பாதையில் நிறுத்த இயலவில்லை.
- செயற்கைக் கோள் ஏவு வாகனம் (SLV) – 3 ஆனது இந்தியாவின் முதல் செலுத்து வாகனம் ஆகும்.
- ரோகிணி செயற்கைக் கோளுடன் கூடிய SLV-3-ன் இரண்டாம் சோதனை ஏவுதல் வெற்றியடைந்து 1980 ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று அது விண்ணின் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
- சோதனை நிலை புவிநிலைத் தகவல் தொடர்பு செயற்கைக் கோளான ஏரியன் பயணியர் ஆய்வுக் கருவி சோதனை (ஆப்பிள்) ஆனது 1981 ஆம் ஆண்டு ஜுன் 19 அன்று வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
- இது எதிர்கால தகவல் தொடர்பு செயற்கைக் கோள் அமைப்பின் முன்னோடியாக மாறியது.
- இந்திய தேசிய செயற்கைக் கோள் அமைப்பு (இன்சாட்) – 1A ஆனது 1982 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 அன்று விண்ணில் செலுத்தப்பட்டது.
- இந்த அமைப்பானது தகவல் தொடர்பு, ஒளிபரப்பு மற்றும் வானிலை ஆய்விற்கானதாகும்.
- 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் 02 அன்று இந்தோ-சோவியத்தின் முதல் மனித விண்வெளிப் பயணம் தொடங்கப்பட்டது.
- விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய குடிமகன் ராகேஷ் சர்மா ஆவார்.
- மூன்று உறுப்பினர்களைக் கொண்ட சோவியத்-இந்தியக் குழுவினரில் ஒருவராக சோவியத்தின் சோயுஸ் டி-11 ராக்கெட் மூலம் இவர் பயணித்தார்.
- 1987, மார்ச் 24 அன்று குறைந்த செலவில் SLV-3ஐ விட அதிக எடையைச் சுமந்து செல்லும் மேம்படுத்தப்பட்ட செயற்கைக் கோள் செலுத்து வாகனத்தின் முதல் செலுத்துதல் நிகழ்த்தப்பட்டது. இது குறைந்த செலவு கொண்டதாக கருதப்பட்டது.
- முதல் செயல்பாட்டு இந்திய தொலையுணர் செயற்கைக் கோளான IRS 1-A ஆனது 1988 ஆம் ஆண்டு மார்ச் 17 அன்று செலுத்தப்பட்டது.
- இரண்டாவது IRS-P2 உடனான மேம்படுத்தப்பட்ட துருவ செலுத்து வாகனத்தின் செலுத்துதல் 1994 ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று நடைபெற்றது.
- இந்தச் செயற்கைக் கோளானது வெற்றிகரமாக சூரிய ஒத்திசைவிற்கான துருவ சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
- புவி ஒத்திசைவு செயற்கைக்கோள் செலுத்து வாகனமான GSLV-D1 இன் GSAT-1 உடனான மேம்படுத்தப்பட்ட முதலாவது ஏவுதலானது 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 அன்று ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து நிகழ்த்தப்பட்டது.
- இது அதிக எடையுடைய மற்றும் அதிக தேவைகளைக் கொண்ட புவி ஒத்திசைவு செயற்கைக் கோள்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது.
- தெற்காசிய செயற்கைக் கோள் (GSAT-9) என்பது இஸ்ரோவால் தெற்காசிய கூட்டிணைவு நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பின் பகுதிக்கென்று செலுத்தப்பட்ட புவி ஒத்திசைவு தகவல் தொடர்பு செயற்கைக் கோளாகும்.
- இந்தச் செயற்கைக் கோளானது 2017 ஆம் ஆண்டு மே 05 அன்று செலுத்தப்பட்டது.
- 2130 கிலோ எடை கொண்ட இன்சாட்-4CR செயற்கைக் கோளானது 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 02 அன்று GSLV-F04 மூலம் செலுத்தப்பட்டது. அந்நாள் வரை இந்தியாவிலிருந்து செலுத்தப்பட்ட அதிக எடையுடைய செயற்கைக் கோள் இதுவேயாகும்.
- PSLV – C11 ஆனது சந்திரயான் – 1 விண்கலத்தை ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதியன்று வெற்றிகரமாக செலுத்தியது.
- சந்திரயான் – 1 ஆனது இந்தியாவின் முதல் கோள் அறிவியல் மற்றும் ஆய்வுப் பணிக்கான திட்டமாகும். இது 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 வரை சுமார் 312 நாட்கள் செயல்பட்டு வந்தது.
- 2013 ஆம் ஆண்டு நவம்பர் 05 அன்று PSLV-C25 ஆனது செவ்வாய் சுற்றுப் பாதை விண்கலன் திட்ட (மங்கள்யான்) விண்கலனை வெற்றிகரமாக செலுத்தியது.
- 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 அன்று, இஸ்ரோவின் PSLV-37 ஆனது தனது 39வது பயணத்தில், இஸ்ரோவின் 714 கிலோ எடை கொண்ட கார்டோசாட் தொகுப்பு செயற்கைக் கோளையும், INS-1A & INS-1B எனும் இரு நானோ செயற்கைக் கோள்களையும் 6 நாடுகளைச் சேர்ந்த 101 நானோ செயற்கைக் கோள்களையும் வெற்றிகரமாக ஒரு சூரிய ஒத்திசைவு சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தியது.
- 2017 ஆம் ஆண்டு ஜுன் 23 ஆம் தேதியன்று ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து PSLV-C38/கார்டோசாட்- 2 வரிசை செயற்கைக் கோள் திட்டம் செலுத்தப்பட்டது.
- 2017 ஆம் ஆண்டு ஜுன் 23 ஆம் தேதியன்று, இந்தியாவின் துருவ செயற்கைக் கோள் செலுத்து வாகனமானது தனது 40வது திட்டத்தில் (PSLV-C38) புவிக் கண்காணிப்பிற்காக கார்டோசாட் – 2 தொகுப்பின் ஒரு செயற்கைக் கோளையும் மற்ற 30 செயற்கைக் கோள்களையும் 505 கி.மீ உயரம் கொண்ட ஒரு சூரிய ஒத்திசைவு சுற்றுப் பாதையில் செலுத்தி நிலை நிறுத்தியது.
- இந்தியாவின் சமீபத்திய தகவல் தொடர்பு செயற்கைக் கோளான GSAT-17 ஆனது 2017 ஆம் ஆண்டு ஜுன் 29 அன்று பிரெஞ்சு கயானாவின் கவுரூ ஏவுதளத்திலிருந்து ஏரியன் – 5 VA-238 மூலம் செலுத்தப்பட்டு இன்சாட் / GSAT தொகுப்பில் சேர்க்கப்பட்டது.
- இந்த GSAT – 17 ஆனது பல்வேறு தகவல் தொடர்பு சேவைகளை வழங்குவதற்காக சாதாரண சி-வரிசை, விரிவாக்கப்பட்ட சி-வரிசை மற்றும் எஸ்-வரிசை ஆகியவற்றின் கருவிகளைக் கொண்டு சென்றது.
- மேலும் இது முந்தைய இன்சாட் செயற்கைக் கோள்களில் வழங்கப்பட்ட வானிலைத் தரவு ஒளிபரப்பு, செயற்கைக் கோள் அடிப்படையிலான தேடல் மற்றும் மீட்பு ஆகிய சேவைகளுக்குத் தேவையான உபகரணங்களையும் கொண்டு சென்றது.
- இந்தியாவின் துருவ செயற்கைக்கோள் செலுத்து வாகனமானது தனது 42வது பயணத்தில் (PSLV – C40) புவிக் கண்காணிப்பிற்காக கார்டோசாட் – 2 தொகுப்பின் செயற்கைக் கோளையும் மற்ற 30 துணை செயற்கைக் கோள்களையும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது
- இந்த PSLV-C40 / கார்டோசாட் – 2 தொகுப்பு செயற்கைக் கோள் திட்டமானது 2018 ஆம் ஆண்டு ஜனவரி 12 அன்று செலுத்தப்பட்டது.
- GSLV-F08 / GSAT 6A திட்டமானது 2018 ஆம் ஆண்டு மார்ச் 29 அன்று செலுத்தப்பட்டது.
- இது புவி ஒத்திசைவு செயற்கைக் கோள் செலுத்து வாகனத்தின் (GSLV) 12-வது மற்றும் உள்நாட்டு கிரையோஜெனிக் நிலையுடன் கூடிய ஆறாவது பயணமாகும்.
- இந்தியாவின் துருவ செயற்கைக் கோள் செலுத்து வாகனமானது 43-வது (PSLV–C41) பயணத்தில் XL உள்ளமைவுடன் வடிவமைக்கப்பட்ட IRNSS-1I செயற்கைக் கோளை செலுத்தியது.
- இந்த XL உள்ளமைப்பானது PSLV-இல் இருபதாவது முறையாக பயன்படுத்தப்பட்டது.
- நாவிக் இடங்காட்டி செயற்கைக்கோள் தொகுதியில் எட்டாவதாக இணைந்த இந்த IRNSS-1I ஆனது 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 அன்று செலுத்தப்பட்டது.
- ஸ்ரீஹரிக்கோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்திலிருந்து PSLV – C43 செலுத்து வாகனமானது 2018 ஆம் ஆண்டு நவம்பர் 29 அன்று இந்தியாவின் ஹைபர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் செயற்கைக் கோள் (ஹைசிஸ்) மற்றும் 30 சர்வதேச துணை செயற்கைக் கோள்களுடன் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
- இந்தியாவின் அடுத்தத் தலைமுறைக்கான உயர் செயல்திறன் கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோளான GSAT – 11 ஆனது 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 05 அன்று பிரஞ்சு கயானாவின் கவுரூ ஏவுதளத்திலிருந்து ஏரியன்– 5 VA-246 மூலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
- சுமார் 5854 கிலோ எடை கொண்ட இந்த GSAT-11 ஆனது இஸ்ரோவால் இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிக அதிக எடை கொண்ட செயற்கைக் கோளாகும்.
- 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 19 அன்று இஸ்ரோவின் 39-வது தகவல் தொடர்பு செயற்கைக் கோளான GSAT – 7Aஐ ஸ்ரீஹரிக்கோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து GSLV-F11 வெற்றிகரமாக செலுத்தியது.
- GSLV-F11 இந்தியாவின் துருவ செயற்கைக் கோள் செலுத்து வாகனத்தின் 13வது மற்றும் உள்நாட்டு கிரையோஜெனிக் மேல் அடுக்கு நிலையுடன் கூடிய ஏழாவது பயணமாகும்.
- GSLV-F11 ஆனது இஸ்ரோவின் 3 நிலைகளுடன் கூடிய 4-வது தலைமுறை செலுத்து செலுத்து வாகனமாகும். இது கு (ku) அலைவரிசையின் தகவல் தொடர்பு பரிமாற்றிகளைக் கொண்டுச் செல்லும் புவிநிலை செயற்கைக் கோளாகும்.
- இந்தச் செயற்கைக் கோளானது இந்தியப் பிராந்தியத்தில் உள்ள பயனர்களுக்கு தகவல் தொடர்பு திறனை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டதாகும்.
- இந்தியாவின் தொலைத் தொடர்பு செயற்கைக் கோளான GSAT – 31 ஆனது 2019 பிப்ரவரி 6 அன்று பிரெஞ்சு கயானாவின் கவுரூ ஏவுதளத்திலிருந்து ஏரியன் – 5 VA 247 மூலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
- 2019 மார்ச் 27 அன்று டாக்டர் APJ அப்துல் கலாம் தீவு வளாக ஏவுதளத்திலிருந்து இந்தியா தனது செயற்கைக் கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனையான மிஷன் சக்தியை செயல்படுத்தியது.
- இது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தால் உள்நாட்டின் தொழில்நுட்பத்தைக் கொண்டு நடத்தப்பட்ட தொழில்நுட்ப திட்டமாகும்.
- அத்திட்டத்தால் தாக்கி அடிக்கப்பட்ட மைக்ரோசாட் – R ஆனது தாழ்புவி சுற்றுவட்டப் பாதையில் இருந்த இந்தியாவின் செயல்படாத ஒரு செயற்கைக் கோளாகும்.
- இந்த சோதனையின் மூலம் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவை மட்டுமே உள்ளடக்கிய விண்வெளிச் சாதனைகளின் ஒரு பிரத்தியேக குழுவில் இந்தியாவும் இணைந்தது.
- இந்தியாவின் PSLV-C46 ஆனது ஸ்ரீஹரிக்கோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ரிசாட்–2B செயற்கைக் கோளை 22, மே 2019 அன்று வெற்றிகரமாக செலுத்தியது.
- இது வேளாண்மை, வனவியல் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய தளங்களுக்கு சேவைகளை வழங்கும் நோக்கமுடையது.
- சந்திரயான் – 2 விண்கலத்தைச் சுமந்து செல்லும் புவி ஒத்திசைவு செலுத்து வாகனமான GSLV- மார்க்-III M1 என்ற வாகனமானது ஸ்ரீஹரிக்கோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து 2019 ஆம் ஆண்டு ஜூலை 22 அன்று செலுத்தப்பட்டது.
- சந்திரயான் 2 ஆனது சந்திரனுக்கான இந்தியாவின் இரண்டாவது பயணமாகும்.
- இது முழுவதும் உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்பட்ட சுற்றுப் பாதை வாகனம், தரையிறங்கு வாகனம் (விக்ரம்), ஊர்ந்து செல்லும் வாகனம் (பிரக்யான்) ஆகியவற்றை உள்ளடக்கியது.
- ஊர்ந்து செல்லும் பிரக்யான் ஆனது தரையிறங்கு வாகனமான விக்ரமிற்குள் வைக்கப்பட்டுள்ளது.
- சந்திரனின் தோற்றம் மற்றும் பரிணாமம் குறித்த விரிவான புரிதலைப் பெறுவதற்காக சந்திரயான் 2 ஆனது பல அறிவியல் ஆய்வுக் கருவிகளைக் கொண்டுள்ளது.
- ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து துருவ செயற்கைக்கோள் செலுத்து வாகனம் (PSLV-XL) மூலம் 2019-2020 ஆம் ஆண்டில் சூரியனுக்கான முதல் பயணத் திட்டமான ஆதித்யா – எல் 1 ஐ இஸ்ரோ செலுத்த உள்ளது.
- சூரியனைக் குறித்துப் பிரத்தி யேகமாக ஆய்வு மேற்கொள்வதற்காக இந்தியாவால் அனுப்பப்படும் முதல் பயணம் இதுவாக இருக்கும்.
- 1500 கிலோ எடை கொண்ட ஆதித்யா எல்–1 செயற்கைக் கோளை சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள ஒரு புள்ளியான லெக்ராஞ்சியன் 1(L1) என்ற புள்ளியைச் சுற்றியுள்ள ஈர்ப்பு விசையற்ற சுற்றுப் பாதையில் நிலை நிறுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
- இந்தியாவின் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முதல் திட்டமான ககன்யான் ஆனது 2022 ஆம் ஆண்டில் இஸ்ரோவால் தொடங்கப்படள்ளது.
- ககன்யான் திட்டத்தின் கீழ் 3 விண்கலன்கள் சுற்றுவட்டப் பாதைக்கு அனுப்பப்படும்.
- இந்த மூன்று விண்கலன்களில் இரண்டு மனிதர்கள் இன்றியும் ஒன்று ஒரு மனிதரைக் கொண்ட விண்வெளிப் பயணத் திட்டமாகவும் இருக்கும்.
- சுற்றுப் பாதை தொகுதி என்றழைக்கப்படும் இந்த மனித விண்வெளி பயணத் திட்டத்தில் ஒரு பெண் உட்பட மூன்று இந்திய விண்வெளி வீரர்கள் இருப்பர்.
- இந்த ஆய்வுக் கலம் பின்வருவனவற்றைக் கொண்டிருக்கும்.
- மனிதர்களைச் சுமந்து செல்லும் பெட்டகம்
- இரண்டு திரவ உந்து விசை எந்திரங்களால் இயங்கும் செயல்பாட்டுப் பெட்டகம்
- இது அவசர கால தப்பித்தல் மற்றும் அவசர கால பயண நிறுத்தம் ஆகிய வசதிகளையும் கொண்டிருக்கும்.
- GSLV-MK III ஆனது இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கான திறனைக் கொண்டிருப்பதால் அது இப்பயணத்திற்கு பயன்படுத்தப்படும்.
- இந்தத் திட்டமானது அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளை அடுத்து மனித விண்வெளிப் பயணத்தை தொடங்கும் நான்காவது நாடாக இந்தியாவை மாற்றும்.
- PSLV - C11 - CHANDRAYAN 1 -2008
- PSLV - C20 - 25.02.13 - SARAL
- PSLV - C21 - 9.9.2012 - SPOT 6 (FRANCE ) - INDIAS 100th satellite
- PSLV - C22 - 01.07.2013- IRNSS 1A
- PSLV - C23 - 30.06.2014 - 4 countries satellites
- PSLV - C24 - 04.04.2014- IRNSS 1B
- PSLV - C25 -05.11.2013 - MANGALYAAN
- PSLV - C26 - 16.10.2014 - IRNSS 1C
- PSLV - C27 - 28.03.2015- IRNSS 1D
- PSLV - C28 - 10.07.2015- DMC 3- ENGLAND 5 SATELLITES
- PSLV - C30 - 28.09.2015- ASTROSAT
- GSAT 7- AREIAN SELA - 30.08.2013 - RUKMINI (FIRST NAVY FORCE SATELLITE )
- GSLV D5 - GSAT 14- 05.01.2014
- GSAT 16- AREIAN 5- 06.12.2014
- GSLV D6 - GSAT 6 -27.08.2015( 6 மீ விட்டம் உள்ள பெரிய ஆண்டெனா அமைக்கபட்டுள்ளது)
முக்கிய ஏவுகணைகள் மற்றும் அதன் இலக்கு
- அக்னி -1 ---> 1-700 கி.மீ
- அக்னி -2 ---> 2000 கி.மீ வரை
- அக்னி -3 ---> 2500 - 3000 கி.மீ
- அக்னி -4 ----> 3500-4000 கி.மீ
- அக்னி -5 ----> 5000 கி.மீ வரை
தகவல் துளிகள்
- செவ்வாய் கிரகத்தில் நைட்ரஜன் வாயு உள்ளதை கண்டறிந்த ஆய்வுகலம் - கியூரியாசிட்டி ரோவர்
- உலகின் முதல் எலக்ட்ரானிக் மோட்டருடன் கூடிய செயற்க்கைகோள் - space x ( பால்கன் 9 ராக்கெட் ,அமெரிக்கா)
- உலகின் மிகச்சிறிய இலகுவகை ரக போர்விமானம் தேஜாஸ் 17.01.2015 இந்திய விமானபடையில் இணைக்கப்பட்டது. (மிக் 2 ரக போர் விமானத்திற்கு பதிலாக)
- பெண்கள் பாதுகாப்பிற்கான கைப்பேசி மென்பொருள் - ஹிம்மத்
- இயற்கை எரிவாயுவில் இயங்கும் இந்தியாவின் முதல் ரயில் ரிவாரி முதல் ரோஷ்டக் வரை இயக்கப்பட்டது.
- அதிவேக அகன்ற அலைவரிசை இணைப்பை முழுமையாக பெற்ற நாட்டின் முதல் மாவட்டம் - இடுக்கி , கேரளா
- விண்வெளியில் அமைக்கபட உள்ள உலகின் அதிசக்தி தொலைநோக்கி - ATLAS ( லண்டன்)
- உணவு மற்றும் மனித கழிவினால் இயக்கபடும் முதல் பேருந்து எங்கு அறிமுகபடுத்தபட்டது- பிரிட்டன்
- வை-பை வசதி பெற்ற முதல் இந்திய ரயில் நிலையம்- பெங்களூரு
- சிறுவிவசாயிகள் பயன்பாட்டிற்கான கையடக்க கணிணி - GREEN PHABLET
- உலகின் முதல் சூரிய சக்தி ஆற்றல் விமானம் - சோலார் இம்பல்ஸ் 2
- ரோட்டோ வைரஸிற்கு எதிரான தடுப்பூசி - ரோட்டோவோக்
- செவ்வாய் கிரகத்தில் உள்ள நீரோட்டங்களை நாசாவினால் 2005 ல் அனுப்பபட்ட MRO (MARS RECONNAISSANCE ORBITERS) கண்டுபிடித்துள்ளது.
- ரயில் மார்க்கமாக அனுப்பபடும் சரக்குகளின் நிலையை கண்காணிக்க ரயில்வே துறையினரால் அறிமுகபடுத்தபட்டுள்ள கைப்பேசி செயலி - பாரிச்சலன்
- இ-பிரகதி திட்டத்தை அறிமுகபடுத்திய மாநிலம் - ஆந்திரா
- செவ்வாய் கிரகத்தில் தரையிரங்கி அங்குள்ள மண் மாதிரிகளை சேகரித்து வெற்றிகரமாக மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் நாசா அமைப்பினால் எதிர்வரும் 2022 ல் செயல்படுத்தபட உள்ள திட்டம் - ரெட் டிராகன் திட்டம்
- மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் அப்பலோ மருத்துவமனை நிறுவனத்துடன் இணைந்து நிறுவியுள்ள திட்டம் - SEHAT
- நிலவில் நியான் வாயுக்கள் உள்ளிட்ட அரிமன் வாயுக்கள் (rare gases) இருப்பதை நாசாவின் LADEE விண்கலம் கண்டுபிடித்துள்ளது.
- நாசா மற்றும் இஸ்ரோ கூட்டுமுயற்சியால் உருவாக உள்ள செயற்கைகோள்- NISAR MISSION (Nasa Isro Synthetic Aperture Radar Mission)
- கப்பல்களுக்கு வழிகாட்டும் GAGAN (GPS Aided Geo Augumented Navigation) எனப்படும் தொழில்நுட்பம் சார்ந்த வழிகாட்டும் தொழில்நுட்பம் அறிமுகம்.
- புளூட்டோவிற்கு மிக அருகில் சென்று அதன் புகைப்படங்களை அனுப்பிய விண்கலம் - நியூ ஹொரைசன்ஸ்
- ஆகாஷ் ஏவுகணை 10.07.2015 அன்று இந்திய விமானபடையில் சேர்க்கபட்டது.
- ஹெலினா (நாக்) ஏவுகணை வெற்றிகரமாக 12.07.15 அன்று வெற்றிகரமாக சோதிக்கபட்டது.
- டிஜிட்டல் இந்தியா திட்டத்தை முன்னெடுத்து செல்ல உதவும் தொழில்நுட்பம் - White-fi தொழில்நுட்பம்
- இந்தியாவின் முதல் பூகம்ப முன்னெறிச்சிக்கை மையம் டெஹ்ராடூனில் அமைக்கபட்டுள்ளது.
- சீனாவினால் கட்டமைக்கபடும் உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கி - FAST (Five hundred metre aperture spherical telescope)
- விண்வெளியில் அதிக நாள்கள் தங்கி சாதனை படைத்தவர் - கென்னடி பால்கர்
- இந்தியாவின் முதல் டிஜிட்டல் மாநிலம் - கேரளா
- நாட்டின் முதல் சூரியசக்தி விமான நிலையம் - கொச்சின்
- தாயிடமிருந்து எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் நோய் சேய்க்கு பரவாமல் தடுத்த உலகின் முதல் நாடு - கியூபா
- புது டில்லிக்கும் ஆக்ராவிற்கும் இடையே புதிதாக இயக்கபட உள்ள இந்தியாவின் முதல் அதிவேக ரயில் (02.06.2015) - காட்டிமன் எக்ஸ்பிரஸ் (160 கி.மீ)
- செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கிடையே உள்ள குறுங்கோள்களை ஆராய அனுப்பட்ட விண்கலம் - DAWN
- Wi-fi யை விட பலமடங்கு வேகமான li-fi யொழில்நுட்பம் கண்டுபிபிப்பு.
- உலகின் முதல் நிலைத்த நீடித்த மின்நகரம் - கார்டிப் (பிரிட்டன்)
- ஸ்ட்ராடோஸ்பியர் வரை சென்ற முதல் இந்தியர்- சூரேஷ் குமார்
- உலகின் அதிவேக ரயில் - மேகலவ் (ஜப்பான், 603 கி.மீ)
- உலகின் முதல் எச்.ஐ.வி சுயபரிசோதனை சாதனம் இங்கிலாந்தில் அறிமுகம்
- இந்தியாவின் மிகப்பெரிய தொலைநோக்கி MAST (Multi Application Solar Telescope) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் அமைக்பட்டுள்ளது.
- மண்ணின் ஈரப்பதத்தையும் நீர்வளத்தையும் ஆராய நாசா அனுப்பிய செயற்கைகோள்- SMAP (Soil Moisture Active Passive)
- விண்வெளி எரிகல் 316201 ற்கு மலாலா யூசப்சாய் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- சிறுகோள் 4538(விஸ்யானந்த்) ற்கு விஸ்வநாதன் ஆனந்த் பெயர் சூட்டப்பட்டுள்ளது.