- சர்வதேச புலிகள் தினம், இன்று கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, நாட்டில் உள்ள, 50 புலிகள் காப்பகங்கள் குறித்த அறிக்கை, நேற்று வெளியிடப்பட்டது.
- சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் பபுல் சுப்ரியோ உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அறிக்கையை வெளியிட்டு பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது கடந்த, 1973ல், நாட்டில், ஒன்பது புலிகள் காப்பகங்களே இருந்தன.
- தற்போது அது, 50 ஆக உயர்ந்துள்ளது. கடந்த, 2006ல் நாட்டில் புலிகளின் எண்ணிக்கை, 1,411 ஆக இருந்தது. அது, 2019ல், 2,967ஆக உயர்ந்துள்ளது.உலக அளவில் புலிகள் காப்பகங்களுக்கான நிலத்தில், 2.5 சதவீதம் குறைவாகவே நம்மிடம் உள்ளது.
- அதேபோல், மழையளவில், 4 சதவீதம் குறைவாகவே பெற்றுள்ளோம். மனித மக்கள் தொகையில், 16 சதவீதம் அதிகம் உள்ளோம். இவ்வளவு பிரச்னைகள் இருந்த போதும், புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
- நடவடிக்கைதற்போது உலகெங்கும், இந்தியா உட்பட, 13 நாடுகளே, புலிகளை பாதுகாத்து வருகின்றன. வங்கதேசம், பூட்டான், சீனா, இந்தோனேஷியா, மலேஷியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து, அவற்றுக்கு தலைமை ஏற்று, புலிகள் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கத் தயாராக உள்ளோம்.
நாட்டில் உள்ள புலிகள் காப்பகங்கள் குறித்த அறிக்கை / REPORT ON INDIA'S TIGER PRESERVATIVES
July 29, 2020
0
Tags