- சா்வதேச புலிகள் தினம் ஆண்டுதோறும் ஜுலை 29-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. வளமான காட்டின் குறியீடாகக் கருதப்படும் புலிகளின் எண்ணிக்கை 18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலக அளவில் ஒரு லட்சமாக இருந்தது. அவற்றில் 80 சதவீதம் இந்தியாவில் இருந்தன.
- சீனாவின் பாரம்பரிய மருத்துவத் தேவைக்கு புலிகளின் எலும்பு மற்றும் உடல் உறுப்புகள் தேவைப்பட்டதால், உலகம் முழுவதும் தீவிரமாக வேட்டையாடப்பட்டன. மேலும், காடுகள் அழிக்கப்பட்டு வாழ்விடங்கள் பாதிப்புக்கு உள்ளானதால், புலிகளின் அழிவு தொடங்கியது.
- இதனால் 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 40 ஆயிரமாகக் குறைந்தது. தொடர்ந்து புலிகள் கொல்லப்பட்டதால் 1972-ல் வெறும் 1,827 புலிகள் மட்டுமே நாட்டில் இருந்தன.
- அப்போது விழித்துக் கொண்ட மத்திய அரசு, புலிகளைக் காக்க 'ப்ராஜக்ட் டைகர்' என்ற திட்டத்தை உருவாக்கி, நாடு முழுவதும் புலிகள் காப்பகங்களை அமைத்தது.
- வேட்டையும் தடை செய்யப்பட்டது. 2008-ல் 1,411-ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2010-ல் 1,706, 2014-ல் 2,226, 2018-ல் 2,967என உயர்ந்தது.
- 9 வகையான புலி இனங்களில், தற்போது,தென் சீனப் புலிகள், மலேய புலிகள், இந்தோ-சீனப் புலிகள், சைபீரியப் புலிகள், வங்கப் புலிகள், சுமத்ரா புலிகள் ஆகிய 6 இனங்கள் மட்டுமே உள்ளன.
- மனித நடமாட்டத்தால் பாதுகாப்பற்ற சூழலை உணரும் புலிகள், மன அழுத்தத்தால்பாதிக்கப்படுகின்றன. இவ்வாறு பாதிக்கப்பட்ட புலியின் உடலில் 'கார்ட்டிசால் ஹார்மோன்' சுரப்பு அதிகமாகி, உயிரணுக்கள் குறைந்து, இனப்பெருக்கமும் குறைவதாக ஆய்வில் கண்டறிப்பட்டுள்ளது.
உலக புலிகள் தினம் / WORLD TIGER DAY
July 29, 2020
0
Tags