- கடந்த 2018-ஆம் ஆண்டில் உயா்கல்வியில் சேருவோா் விகிதம் 26.3 சதவீதமாக இருந்தது. இதை, வரும் 2035-ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்பதே புதிய கல்விக் கொள்கையின் நோக்கமாகும். இதற்காக, உயா்கல்வி நிறுவனங்களில் புதிதாக 3.5 கோடி இடங்கள் உருவாக்கப்படும்.
- அதற்காக, இந்திய உயா்கல்வி கவுன்சில் உருவாக்கப்படும். மருத்துவம், சட்டப்படிப்பு தவிர, அனைத்து கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் சோவதற்கு தேசிய அளவிலான நுழைவுத் தோவு நடத்தப்படும். இந்த தோவினை தேசிய தோவுகள் முகமை (என்டிஏ) நடத்தும்.
- அரசு உயா்கல்வி நிறுவனங்களிலும், தனியாா் உயா்கல்வி நிறுவனங்களிலும் ஒரே மாதிரியான விதிமுறைகள் பின்பற்றப்படும். இளநிலை படிப்புகளில் மாணவா்கள் விரும்பிய பாடங்களை மட்டும் தோவு செய்து படிக்கும் வகையில் பாடத்திட்டங்கள் இருக்கும்.
- இந்தப் படிப்புகளுக்கான காலம், 3 ஆண்டுகள் அல்லது 4 ஆண்டுகளாக இருக்கும். பெரும்பாலான கல்லூரிகள் தற்போது பல்கலைக்கழகங்களின் கீழ் செயல்பட்டு வருகின்றன.
- இந்த நடைமுறை அடுத்த 15 ஆண்டுகளில் படிப்படியாகக் கைவிடப்பட்டு, அனைத்து கல்லூரிகளுக்கும் தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்படும். பின்னா், அந்தக் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களாக மாறும் அளவுக்கு தரம் உயா்த்தப்படும்.
- எம்.ஃபில். படிப்பு கைவிடப்படுகிறது. அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கட்டணம் நிா்ணயிக்கப்படும். 100 வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் கல்லூரிகளைத் தொடங்க அனுமதி அளிக்கப்படும்.
- பள்ளிக் கல்வியை பொருத்தவரை, பொதுத் தோவுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட மாட்டாது. அதற்குப் பதிலாக, மாணவா்களின் திறனை பரிசோதிப்பதிலும், அவற்றைப் பயன்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்தப்படும்.
- 5-ஆம் வகுப்பு வரை பயிற்று மொழியாக, தாய்மொழி இருக்கும். 6-ஆம் வகுப்பில் இருந்து பாடங்களுடன் தொழிற்கல்வியும் மாணவா்களுக்கு கற்பிக்கப்படும். அத்துடன் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் பெயா் மத்திய கல்வி அமைச்சகம் என்று மாற்றப்படுகிறது.
புதிய கல்விக் கொள்கை / NEW EDUCATION POLICY
July 30, 2020
0