Type Here to Get Search Results !

27th JULY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF


ஐக்கிய நாடுகளின் பருவநிலை இளம் ஆலோசகா்கள் குழுவில் இந்தியப் பெண் அா்ச்சனா சோரங்
  • பருவ நிலை பாதிப்புகளுக்கு யோசனைகள், தீா்வுகளை அளிக்கும் இளம் ஆலோசகா்கள் குழுவில் இந்திய பெண்மணியான சூழலியல் செயற்பாட்டாளா் அா்ச்சனா சோரங் இடம்பெற்றுள்ளாா்.
  • இவருடன் பல்வேறு நாடுகளைச் சோந்த 18 முதல் 28 வயதுக்கு உள்பட்ட மேலும் 6 இளைஞா்கள் கொண்ட குழுவை ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டரெஸ் தோவு செய்துள்ளாா்.
  • உள்நாட்டு சமூகங்களின் கலாசார பழக்கவழக்கங்கள், பாரம்பரிய தகவல்களை வெளிக்கொணா்தல், ஆவணப்படுத்துதல், பாதுகாத்தல் மற்றும் ஆலோசனை, ஆராய்ச்சி ஆகியவற்றில் அா்ச்சனா சோரங் அனுபவம் வாய்ந்தவா் என ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அா்ச்சனா சோரங் தவிர, சூடானின் நஸ்ரீன் எல்சாய்ம், ஃபிஜி தீவின் ஏா்னஸ்ட் கிப்சன், மால்டோவாவின் விளாடிஸ்லாவ் கைம், அமெரிக்காவின் சோபியா கியானி, பிரான்ஸின் நாதன் மெட்டினியா், பிரேசிலின் பலோமா கோஸ்டா ஆகியோா் இளம் ஆலோசகா்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனா்.
500 விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் பிராட்
  • வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக மான்செஸ்டரில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், கிரேக் பிராத்வெய்ட்டின் (19 ரன்) விக்கெட்டை எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்த்தினார். இது ஸ்டூவர்ட் பிராட்டின் 500-வது டெஸ்ட் விக்கெட்டாக அமைந்தது.
  • இதன் மூலம் 500 விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர்களின் வரிசையில் ஸ்டூவர்ட் பிராட் 7-வது வீரராக இணைந்துள்ளார். மேலும் இந்த மைல்கல்லை குறைந்த வயதில் (34) எட்டிய 2-வது பவுலர் என்ற பெருமையையும் பெற்றார். 
  • இலங்கை சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன் அவரை விட குறைந்த வயதில் (31) இந்த சாதனையை செய்து முதலிடத்தில் உள்ளார்.
25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்; ரூ.2,368 கோடி முதலீட்டில் 8 புதிய தொழில் திட்டங்கள்: முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
  • தமிழக தொழில் துறை சார்பில் ரூ.2,368 கோடி முதலீட்டில் அமைக்கப்பட உள்ள 8 நிறுவனங்களின் தொழில் திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இத்திட்டங்களின் மூலம் 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
  • தமிழகத்தில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 25 நிறுவனங்களுடன் தமிழக அரசு செய்துகொண்ட ஒப்பந்தங்கள் மூலம் ரூ.25,527 கோடி முதலீடுகள் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
  • செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் ரேடியல் சாலையில் ரூ.1,500 கோடி முதலீட்டில் 23 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கேபிடலேண்ட் நிறுவனத்தின் இன்டர்நேஷனல் டெக்பார்க் தகவல் தொழில்நுட்ப பூங்கா.
  • செங்கல்பட்டு மாவட்டம் மஹிந்திரா வேர்ல்டு சிட்டி தொழிற்பூங்காவில் ரூ.100 கோடி முதலீட் டில் டினெக்ஸ் நிறுவனத்தின் டீசல் இன்ஜின்களுக்கான எக்சாஸ்ட் உற்பத்தி திட்டம். இதன் மூலம் 300 பேருக்கு வேலைவாய்ப்பு கிட்டும்.
  • காஞ்சிபுரத்தில் ரூ.150 கோடி முதலீட்டில் 300 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் ஸ்டீல் ஷாப்பி நிறுவனத்தின் வாகன தொழிற்சாலைக்கான எஃகு பாகங்கள் உற்பத்தி திட்டம்.
  • திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள மஹிந்திரா ஆரிஜின்ஸ் தொழிற்பூங்காவில் ரூ.105 கோடியில் 160 பேருக்கு வேலை அளிக்கும் வகை யில் ஜப்பானின் நிசே எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மின்சார, மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டம்.
  • அதே தொழிற்பூங்காவில் ரூ.100 கோடி முதலீட்டில் 100 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் ஜப்பானின் உசுய் சுசிரா நிறுவனத்தின் மோட்டார் வாகன உற்பத்தி தொழிற்சாலை.
  • கடலூர் மாவட்டம் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.350 கோடி முதலீட்டில் 300 பேருக்கு வேலை அளிக்கும் டாடா கெமிக்கல் நிறுவனத்தின் சிலிக்கா உற்பத்தி தொழிற்சாலை.
  • அதே தொழிற்பூங்காவில் ரூ.47 கோடி முதலீட்டில் 550 பேருக்கு வேலை அளிக்கும் எம்ஆர்சி மில்ஸ் நிறுவனத்தின் டெக்ஸ்டைல்ஸ் புராசஸிங் திட்டம்.
  • விழுப்புரம் மாவட்டம் கம்பூர் கிராமத்தில் ரூ.16 கோடி முதலீட்டில் 160 பேருக்கு வேலை அளிக்கும் ராஜராஜேஸ்வரி லைஃப்கேர் நிறுவனத்தின் மருந்து, மருத்துவப் பொருட்கள் உற்பத்தித் திட்டம். இந்நிறுவனம் கரோனா நிவாரண மருந்துப் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட உள்ளது. மேற்கண்ட 8 திட்டங்கள் மூலம் ரூ.2,368 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 24,870 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
  • காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூரில் உள்ள வானூர்தி பூங்காவில், டிட்கோ - டைடல் நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் ரூ.250 கோடி முதலீட்டில் அமைய உள்ள வானூர்தி உற்பத்தி சார்ந்த 'ஏரோ ஹப்' உயர்நுட்ப தொழில் மையத்துக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
  • தொடர்ந்து, 2019-20 ஆண்டுக்கான தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் (டிட்கோ) பங்கு ஈவுத்தொகை ரூ.37 கோடி, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவன (சிப்காட்) இடைக்கால பங்கு ஈவுத்தொகை ரூ.40 கோடிக்கான காசோலைகளை முதல்வர் பழனிசாமியிடம் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.
இங்லிஷ் பிரிமீயர் லீக் கால்பந்து லிவர்பூல் பயிற்சியாளர் ஜர்கன் க்ளோப் சிறந்த பயிற்சியாளருக்கு விருது
  • லிவர்பூல் அணி முதல் முறையாக இங்லிஷ் பிரிமீயர் லீக் கால்பந்து கோப்பையை கைப்பற்றக் காரணமான பயிற்சியாளர் ஜர்கன் க்ளோப் சிறந்த பயிற்சியாளருக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
  • கடந்த 30 ஆண்டுகளாக இங்லிஷ் பிரிமியர் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் தவித்து வந்த லிவர்பூல் அணி, இந்த ஆண்டு முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. 
  • இதற்கு முக்கிய காரணம் அணியின் பயிற்சியாளர் ஜர்கன் க்ளோப் (53). ஜெர்மனி கால்பந்து வீரரான இவர் 2015ம் ஆண்டு முதல் லிவர்பூல் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார்.
  • ஐரோப்பிய கால்பந்து கிளப்களுக்கு இடையிலான யுஈஎப்ஏ சாம்பியன் லீக்கில் நடப்பு சாம்பியனாக லிவர்பூல் இருப்பதற்கும் இவர்தான் காரணம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel