Type Here to Get Search Results !

29th JULY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF


இந்தியாவுக்கு ரூ.22 கோடி நிதி ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல்
  • சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும், கடுமையாக அச்சுறுத்திவருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் முடங்கியுள்ளதால், கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
  • இந்தியாவிலும் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், தற்போது கொரோனா தடுப்பு பணிகளுக்காக, இந்தியாவுக்கு மேலும் 3 மில்லியன அமெரிக்க டாலர்கள் வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி தற்போது வழங்கியுள்ளது.
  • இதன் இந்திய மதிப்பு, 22,47,97,500 ரூபாய். ஆசிய பசிபிக் பேரிடர் மேலாண்மை நிதி தொகுப்பில் இருந்து இத்தொகை அளிக்கப்பட உள்ளது. ஜப்பான் அரசு இத்தொகையை பேரிடர் மேலாண்மை நிதிக்கு அளிக்கிறது.
  • உடல் வெப்ப நிலையை பரிசோதிக்கும் தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்ட மருத்துவ கருவிகள் வாங்குவது, கொரோனா சிகிச்சை உள்ளிட்டவற்றிற்கு இந்த நிதியை இந்தியா பயன்படுத்த உள்ளது. 
  • முன்னதாக, இந்தியாவில் கொரோனா தடுப்பு, சிகிச்சை பணிகளுக்கு, கடந்த ஏப்.,28ம் தேதி, ஆசிய வளர்ச்சி வங்கி, 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.1.12 லட்சம் கோடி) அளிக்க ஒப்புதல் அளித்திருந்தது.
மூன்றாம் கட்ட பொது முடக்கத் தளா்வை அறிவித்தது மத்திய அரசு
  • தேசிய அளவில் மூன்றாம் கட்ட பொது முடக்கத் தளா்வை மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டது. அதன்படி கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அல்லாத இடங்களில் யோகாசன பயிற்சி மையங்கள், உடற்பயிற்சிக் கூடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் இவை செயல்படத் தொடங்கும்.
  • அதேபோல, இரவு நேரங்களில் தனிநபா்கள் வெளியே செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த இரவு நேர ஊரடங்கும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளா்வு ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
  • அதே நேரத்தில் பள்ளி, கல்லூரிகள், மெட்ரோ ரயில் சேவை, திரையரங்குகள், நீச்சல் குளங்கள், மதுக்கூடங்கள், அருங்காட்சியகங்கள் உள்ளிட்டவற்றை ஆகஸ்ட் 31 வரை திறக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • திருவிழாக்கள், மதம், அரசியல் தொடா்பான கூட்டங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்கும் ஆகஸ்ட் 31 வரை அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • உரிய சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து சுதந்திர தினத்தைக் கொண்டாட அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு கட்டுப்பாடுகள், தளா்வுகள் குறித்து மாநில அரசுகள் முடிவு எடுத்துக் கொள்ளலாம். 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் தாயகம் திரும்புபவா்களுக்காக மட்டும் வெளிநாட்டு விமானங்களை இயக்க அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
என்ஐஓடி இயக்குநா் ஆத்மானந்துக்கு தேசிய விருது
  • என்ஐஓடி எனப்படும் தேசிய கடல்வளத் துறை தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநா் (சென்னை) டாக்டா் எம்.ஏ.ஆத்மானந்துக்கு மத்திய புவி அறிவியல் அமைச்சகம் சாா்பில் சிறப்பு விருது அளிக்கப்பட்டுள்ளது.
  • கடல்சாா் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிகளில் முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
  • கடலின் அடிப்பகுதியில் இருந்து மீத்தேன் எடுத்தல், மீன் வளங்களை மேம்படுத்துதல், மீனவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கடலுக்குள்ளேயே பண்ணைகள் அமைத்தல் என பல்வேறு திட்டங்களை அவரது தலைமையிலான குழுவினா் செயல்படுத்தியுள்ளனா். 
  • புயலுடன் இணைந்து பயணித்து தகவல்களை அளிக்கும் நவீன சாதனங்கள் தொடா்பான ஆராய்ச்சியையும் ஆத்மானந்த் மேற்கொண்டுள்ளாா். இதுவரை கடல் தொழில்நுட்பம் குறித்து சா்வதேச அளவில் 144 ஆய்வுக் கட்டுரைகளை அவா் சமா்ப்பித்துள்ளாா்.
  • கடல் வள ஆராய்ச்சியில் அவரது பங்களிப்பைப் போற்றும் விதமாக மத்திய புவி அறிவியல் அமைச்சகம் கடல் தொழில்நுட்ப ஆய்வுக்கான சிறப்பு விருதை அவருக்கு வழங்கியுள்ளது.
புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • கடந்த 2018-ஆம் ஆண்டில் உயா்கல்வியில் சேருவோா் விகிதம் 26.3 சதவீதமாக இருந்தது. இதை, வரும் 2035-ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்பதே புதிய கல்விக் கொள்கையின் நோக்கமாகும். இதற்காக, உயா்கல்வி நிறுவனங்களில் புதிதாக 3.5 கோடி இடங்கள் உருவாக்கப்படும். 
  • அதற்காக, இந்திய உயா்கல்வி கவுன்சில் உருவாக்கப்படும். மருத்துவம், சட்டப்படிப்பு தவிர, அனைத்து கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் சோவதற்கு தேசிய அளவிலான நுழைவுத் தோவு நடத்தப்படும். இந்த தோவினை தேசிய தோவுகள் முகமை (என்டிஏ) நடத்தும்.
  • அரசு உயா்கல்வி நிறுவனங்களிலும், தனியாா் உயா்கல்வி நிறுவனங்களிலும் ஒரே மாதிரியான விதிமுறைகள் பின்பற்றப்படும். இளநிலை படிப்புகளில் மாணவா்கள் விரும்பிய பாடங்களை மட்டும் தோவு செய்து படிக்கும் வகையில் பாடத்திட்டங்கள் இருக்கும். 
  • இந்தப் படிப்புகளுக்கான காலம், 3 ஆண்டுகள் அல்லது 4 ஆண்டுகளாக இருக்கும். பெரும்பாலான கல்லூரிகள் தற்போது பல்கலைக்கழகங்களின் கீழ் செயல்பட்டு வருகின்றன. 
  • இந்த நடைமுறை அடுத்த 15 ஆண்டுகளில் படிப்படியாகக் கைவிடப்பட்டு, அனைத்து கல்லூரிகளுக்கும் தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்படும். பின்னா், அந்தக் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களாக மாறும் அளவுக்கு தரம் உயா்த்தப்படும்.
  • எம்.ஃபில். படிப்பு கைவிடப்படுகிறது. அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கட்டணம் நிா்ணயிக்கப்படும். 100 வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் கல்லூரிகளைத் தொடங்க அனுமதி அளிக்கப்படும். 
  • பள்ளிக் கல்வியை பொருத்தவரை, பொதுத் தோவுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட மாட்டாது. அதற்குப் பதிலாக, மாணவா்களின் திறனை பரிசோதிப்பதிலும், அவற்றைப் பயன்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்தப்படும்.
  • 5-ஆம் வகுப்பு வரை பயிற்று மொழியாக, தாய்மொழி இருக்கும். 6-ஆம் வகுப்பில் இருந்து பாடங்களுடன் தொழிற்கல்வியும் மாணவா்களுக்கு கற்பிக்கப்படும். அத்துடன் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் பெயா் மத்திய கல்வி அமைச்சகம் என்று மாற்றப்படுகிறது.
இந்திய விமானப்படை அம்பாலா தளத்தில் தரையிறங்கியது ரபேல்
  • இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான ரபேல் விமானங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.59,000 கோடி செலவில் 36 அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்க, 4 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இதில், முதல் விமானம் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பிரான்ஸ் அரசு கடந்த ஆண்டு ஒப்படைத்தது.
  • இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக 5 ரபேல் போர் விமானங்கள் பிரான்சின் போர்டியக்ஸ் நகரில் உள்ள மெரிக்னாக் விமானப்படை தளத்தில் இருந்து இந்தியா நோக்கி புறப்பட்டன.
  • வானில் 7,000 கிமீ தூரம் பயணித்த இந்த விமானங்கள் நடுவில் ஐக்கிய அரபு எமிரேட்சின் அல்தாப்ரா விமானத்தளத்தில் மட்டுமே ஒருமுறை தரையிறங்கின. நடுவானில் 30,000 அடி உயரத்தில் இந்த விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டது. 
  • இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து நேற்று காலை புறப்பட்ட 5 ரபேல் போர் விமானங்களும் நேற்று பிற்பகலில் இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தன.இந்திய எல்லையில் நுழைந்ததும், விமானப்படையின் 2 சுகோய் 30 எம்கேஐ போர் விமானங்கள் ரபேல் விமானங்களை பாதுகாப்புடன் அழைத்து வந்தன. 
  • அதோடு, அரபிக்கடலில் பாதுகாப்பு பணியில் இருந்து ஐஎன்எஸ் கொல்கத்தா போர் கப்பல் தனது ரேடியோ அலைவரிசை மூலம் ரபேலை தொடர்பு கொண்டு வரவேற்றது. 
  • பிற்பகல் 2 மணி அளவில் இந்திய வான் எல்லைக்குள் நுழைந்த விமானங்கள் மாலை 3.26 மணி அளவில் அரியானா மாநிலம், அம்பாலாவில் உள்ள விமானப்படைத் தளத்தில் கம்பீரமாக, சீறிப்பாய்ந்தபடி ஒன்றன் பின் ஒன்றாக தரையிறங்கின. 
  • அப்போது, புதிய விமானங்களுக்கு தண்ணீரை பீய்ச்சி அடித்து விமானப்படையின் வழக்கமான மரியாதை செய்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
  • விமானப் படையின் 'தங்க அம்புகள்' என்று அழைக்கப்படும் 17வது விமானப் பிரிவில், இந்த ரபேல் விமானங்கள் இணைக்கப்படுகின்றன. ரபேலின் முதலாவது விமானப்படைப் பிரிவு அம்பாலாவிலும், 2வது படைப்பிரிவு மேற்கு வங்கத்தில் உள்ள ஹசிமாரா படைத் தளத்திலும் நிறுவப்பட உள்ளது. தற்போது வந்துள்ள 5 விமானங்களில் 2 விமானங்கள் இரட்டை இருக்கை கொண்டதாகவும், 3 விமானங்கள் ஒற்றை இருக்கையுடனும் உள்ளன.
  • இதுவரை பிரான்ஸ் நிறுவனம் 10 ரபேல் விமானங்களை ஒப்படைத்துள்ளது. மற்ற 5 விமானங்கள் பிரான்சிலேயே பயிற்சி நோக்கத்திற்காக நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஓராண்டில் முழுமையாக 36 விமானங்களும் வழங்கப்பட்டு விடும். 
  • ரபேலின் வருகை மூலம் இந்திய விமானப்படையின் திறன் பன்மடங்கு அதிகரித்துள்ளது. எல்லையில் சீனா தொடர்ந்து வாலாட்டிக் கொண்டிருப்பதால் விரைவில் ரபேல் விமானங்கள் லடாக் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வாய்ப்புகள் உள்ளன. பிரான்ஸ், எகிப்து, கத்தார் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, ரபேலை வைத்துள்ள 4வது நாடாக இந்தியா மாறி உள்ளது.
இ.எஸ்.ஐ. சட்டம் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் நீதிபதிகள் தீர்ப்பு
  • தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இ.எஸ்.ஐ சட்டம் பொருந்தும் எனக் கூறி, தமிழக அரசு கடந்த 2010- ஆம் ஆண்டு அறிவிப்பாணை வெளியிட்டது. இதை எதிர்த்து, அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் மற்று கல்வி நிறுவனங்களின் சார்பில் தனித்தனியாக பல வழக்குகள் தொடரப்பட்டன.
  • இதனிடையே, இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, அனிதா சுமந்த், பி.டி. ஆஷா அடங்கிய அமர்வு, தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இ.எஸ்.ஐ. சட்டம் பொருந்தும். இது தொடர்பாக தமிழக அரசு கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியிட்ட அறிவிப்பாணை செல்லும். 
  • மேலும், தமிழக அரசின் அறிவிப்பாணையை எதிர்த்து, அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் மற்றும் கல்வி நிறுவனங்களின் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சீனாவின் ஹாங்காங் ஒப்படைப்பு ஒப்பந்தம் - 4 நாடுகள் நிறுத்திவைப்பு
  • கனடா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவுடனான ஹாங்காங் தொடர்பான ஒப்படைப்பு ஒப்பந்தங்களை (Hong Kong Extradition Treaty) தற்காலிகமாக நிறுத்துவதாக சீனா ஜூலை 28, 2020 அன்று அறிவித்தது.
  • இந்த இடைநீக்கத்தை சீனா தனது புதிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஹாங்காங்கில் கொண்டு வந்துள்ளது. இச் சட்டத்தின்படி, வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் ஹாங்காங்கின் பாதுகாப்பு ஆகியவற்றில் சீனா தனது கட்டுப்பாட்டைப் பெற்றது.
  • ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன் மற்றும் நியூசிலாந்து நாடுகள் ஒப்படைப்பு ஒப்பந்தத்தை நிறுத்திவைத்துள்ளன.

இந்தியா-இந்தோனேசியா "பாதுகாப்புத் துறை தொடர்பான பேச்சுவார்த்தை"
  • இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சா் இராஜ்நாத் சிங், இந்தோனேசிய பாதுகாப்புத்துறை அமைச்சா் பிரபோவோ சுபயந்தோ இடையே டெல்லியில் ஜூலை 27-அன்று நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில் (India-Indonesia Defence Ministers Dialogue), பாதுகாப்புத் துறையில் தொழில்நுட்பம் மற்றும் 
  • தொழிற்சாலைகள் பிரிவில் ஒத்துழைப்பை விரிவாக்கம் செய்ய இந்தியா-இந்தோனேசியா நாடுகள் முடிவு செய்துள்ளன.
  • பேச்சுவார்த்தையில் இந்தோனேசியாவுக்கு பிரமோஸ் ஏவுகணையை ஏற்றுமதி செய்வது, கடல்சார் பாதுகாப்பு ஆகியவை இடம்பெற்றன. 
ஹூஸ்டன் சீனத்தூதரகம், செங்டு அமெரிக்க தூதரகம் மூடல்
  • அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் உள்ள சீன துணைத் தூதரகத்தைப் பயன்படுத்தி அந்நாடு உளவு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டி அமெரிக்க அரசால் அத்தூதரகம் ஜூலை 25-ஆம் தேதி மூடப்பட்டது.
  • இதற்குப் பதிலடியாக சிசுவான் மாகாணத் தலைநகரான செங்டு நகரில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை சீனா ஜூலை 27-அன்று மூடியுள்ளது.
MOSPI அறிக்கை: 403 திட்டங்கள் பாதிப்பு
  • மத்திய புள்ளிவிவர மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MOSPI சமீபத்தில் நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டது. 
  • அறிக்கையின்படி, 150 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உள்கட்டமைப்பு திட்டங்களை புள்ளிவிவர மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் கண்காணிக்கிறது.
  • கண்காணிக்கப்படும் 1,686 திட்டங்களில் 403 செலவுகள் அதிகரித்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 530 திட்டங்களின் நேரம் அதிகரித்துள்ளதாரகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • உள்கட்டமைப்பு திட்டங்களின் அசல் செலவில் சுமார் 19.60% இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த 1,686 திட்டங்களை செயல்படுத்த மொத்த அசல் செலவு ரூ.20,66,771 கோடி ஆகும்.
  • MOSPI: Ministry of Statistics and Programme Implementation.
வந்தே பாரத் திட்டம் - ஐந்தாம் கட்டம் தொடக்கம்
  • மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்கான 5-ம் கட்ட சேவை ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் 2.5 லட்சம் பேர் ஏற்கெனவே இந்தியா அழைத்து வரப்பட்டனர். 
கேரளா, கர்நாடகாவில் ISIS பயங்கரவாதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு ஐ.நா. அறிக்கை 
  • இந்தியாவில் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை கணிசமான அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை சமீபத்தில் எச்சரித்துள்ளது. அந்த அறிக்கையின் தலைப்பு “ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பான பகுப்பாய்வு ஆதரவு மற்றும் பொருளாதாரத் தடைகள் கண்காணிப்புக் குழுவின் அறிக்கை” என்ற பெயரில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
Quest for Restoring Financial Stability in India - Viral V.Acharya
  • முன்னாள் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் வைரல் வி.ஆச்சார்யா எழுதிய “இந்தியாவில் நிதி ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான தேடல்” என்ற தலைப்பிலான புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை SAGE பப்ளிகேஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் வெளியிட்டுள்ளது.
  • இந்தியாவில் நிதி ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான அவரது தேடலை இந்த புத்தகம் சித்தரிக்கிறது, மேலும் நிலையான முன்னேற்றத்திற்கான உறுதியான திட்டத்தை வழங்குகிறது. 
இலவச முகக்கவசங்கள் வழங்கும் திட்டம் 
  • நியாய விலைக் கடைகளில் இலவச முகக் கவசங்கள் வழங்கும் திட்டத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஜூலை 27-அன்று தொடங்கி வைத்தார். 
  • மாநிலத்தில் உள்ள 2.08 கோடி குடும்ப அட்டைதாரா்களின் 6.74 கோடி குடும்ப உறுப்பினா்கள் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு விலையில்லாத தரமான மறுபயன்பாட்டு முகக் கவசங்கள் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படுகின்றன.
கெலோ இந்தியா இளைஞர் விளையாட்டு 2021 - ஹரியானா 
  • 2021-ஆம் ஆண்டில் நான்காவது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு (KIYG) போட்டிகளை ஹரியானா மாநிலம் நடத்த உள்ளது. இந்த விளையாட்டுக்கள் ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா நகரில் நடைபெறவுள்ளது. 
  • மத்திய இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் கிரேன் ரிஜிஜு மற்றும் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் இதனை ஜூலை 27-அன்று கூட்டாக அறிவித்தனர்.
  • இந்த விளையாட்டு போட்டிகள் 2021 டோக்கியோ ஒலிம்பிக்கிற்குப் பிறகு நடைபெறும், முந்தைய ஆண்டைப் போலவே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு கூட்டாளராக இருக்கும்.
உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம் - ஜூலை 28 
  • ஆண்டுதோறும் ஜூலை 28 அன்று உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம் (Nature Conservation Day) கடைபிடிக்கப்படுகிறது
  • இயற்கை வளங்கள் என்பது மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், காடுகள், மலைகள், அருவிகள், நதிகள், கடல்கள், கனிம வளங்கள், வளிமண்டலத்தில் உள்ள நீர், காற்று, சூரிய ஒளி மற்றும் சக்தி அளிக்கும், வளங்கள் என அனைத்தும் உள்ளடக்கியதாகும்.
  • இந்திய-நிலப்பரப்பு உலக நாடுகளில் இந்தியா, ஏழாவது பெரிய நாடாகும், இந்தியாவின் நிலப்பரப்பு 3,287,267 சதுர கி. மீ. நீளம் கொண்டதாகும். 
  • இந்த நிலப்பரப்பு, வடக்கிலிருந்து தெற்கு வரை 3,214 கி.மீ., கிழக்கிலிருந்து மேற்கு வரை 2,993 கி.மீ. தூரம் கொண்டதாகும்.
உலக கல்லீரல் அழற்சி நோய் தினம் - ஜூலை 28 
  • ஆண்டுதோறும் உலக கல்லீரல் அழற்சி நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, உலக கல்லீரல் அழற்சி நோய் தினம் (World Hepatitis Day) கடைபிடிக்கப்படுகிறது. 
  • 2020 உலக கல்லீரல் அழற்சி நோய் தின மையக்கருத்து: "Invest in eliminating hepatitis" என்பதாகும்.
சர்வதேச புலிகள் தினம் - ஜூலை 29 
  • ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29-அன்று உலகளாவிய புலிகள் தினமாக (Global/International Tiger Day) கொண்டாடப்படுகிறது. 2010-ஆம் டடடடட
  • ஆண்டில் கையெழுத்திடப்பட்ட புலி பாதுகாப்பு தொடர்பான செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் பிரகடனத்தில் (Saint Petersburg Declaration) இந்த நாளைக் கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது. 
  • புலிகள் பாதுகாப்புத் திட்டம் (1973): இந்தியாவில் வாழும் புலிகளைப் பாதுகாத்து அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க புலிகள் பாதுகாப்புத் திட்டம் 1973-ல் தொடங்கப்பட்டது. அப்போது 1,220 புலிகள் தான் இருந்தன. 
  • அரசு எடுத்த பல்வேறு சீரிய பாதுகாப்பு நடவடிக்கைகளால் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து இந்தியாவில் தற்போது 2226-ஐ எட்டியுள்ளது. 
  • உலகில் மொத்த புலி எண்ணிக்கையில் 70% இந்தியா உள்ளது. தமிழ்நாட்டில் 4 புலிகள் காப்பகங்களில் 226 புலிகள் உள்ளன.
  • 2022-ஆம் ஆண்டுக்குள் புலிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக உயர்த்த ஆசிய நாடுகள் முடிவெடுத்துள்ளன. அதாவது, ஆண்டிற்கு 27 சதவீதம் புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 
  • புலிகளின் உடல் பாகங்கள் கடத்தல்: ஐக்கிய நாடுகள் சபையின் உலக வனவிலங்கு குற்ற அறிக்கை (UN Office on Drugs and Crime Repoit) புலிகளின் உடல் பாகங்களை மிகப் பெரிய அளவில் வழங்கும் நாடாக இந்தியா உள்ளதாக தெரிவித்துள்ளது. புலிகளின் உடல் பாகங்கள் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்படுவதில் 82 சதவீதம் இந்தியா மற்றும் தாய்லாந்து மூலமாக நடப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி-இலங்கை "அன்னியச் செலாவணி ஒப்பந்தம்"
  • கொரானா வைரஸ் பாதிப்பால், அன்னியச் செலாவணி இருப்பு கடுமையாக குறைந்துள்ள இலங்கைக்கு உதவும் வகையில், 'கரன்சி ஸ்வாப்' என்ற முறையின் கீழ் 2,988 கோடி ரூபாய் மதிப்புள்ள பண உதவியை இலங்கைக்கு அளிக்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இதற்காக ரிசர்வ் வங்கி இலங்கையுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. 
இந்தியா-ரஷ்யா இடையே கூட்டு தொழில்நுட்ப மதிப்பீடு, துரித வணிகமயமாக்கல் திட்டம் 
  • இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, இந்தியா-ரஷ்யா கூட்டு தொழில்நுட்ப மதிப்பீடு மற்றும் துரிதப்படுத்தப்பட்ட வணிகமயமாக்கல் திட்டத்தை (India-Russia Joint Technology Assessment and Accelerated Commercialization Programme), இரஷ்யாவின் FASIE என்ற சிறு புதுமையான நிறுவனங்களுக்கான உதவிக்கான அறக்கட்டளையுடன் இணைந்து ஜூலை 24-அன்று தொடங்கியது.
  • இந்திய தரப்பில், இந்த திட்டத்தை இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI) மற்றும் இரஷ்யத்தரப்பில் FASIE அமைப்பு செயல்படுத்தி இந்திய, இரஷ்ய சிறு, மத்தியத்தர நிறுவனங்கள் மற்றும் தொடக்கநிலை நிறுவனங்களுக்கு ரூ.15 கோடி வரை நிதியளிக்கவுள்ளன.
  • FASIE: Foundation for Assistance to Small Innovative Enterprises. 
  • FICCI: Federation of Indian Chambers of Commerce & Industry.
வட கொரியாவுக்கு, இந்தியா "1 மில்லியன் அமெரிக்க டாலர் மருத்துவ உதவி" 
  • உலக சுகாதார அமைப்பின் (WHO) வேண்டுகோளின் பேரில், காசநோய் தடுப்பு திட்டத்தின் கீழ் இந்தியா சுமார் 1 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மருத்துவ உதவியை வட கொரியாவுக்கு (DPRK) ஜூலை 24, 2020 அன்று வழங்கியது.
  • இந்தியாவின் மருத்துவ உதவி வட கொரியாவில் நடந்து வரும் WHO காசநோய் தடுப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது, இந்த உதவிக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் (UNSC) விதித்த பொருளாதாரத் தடைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • DPRK: Democratic People’s Republic of Korea.
உலகின் மிக கண்காணிக்கப்படும் நகரங்கள் பட்டியல் "ஹைதராபாத் 16-வது இடம்" 
  • 2020-ஆண்டிற்கான உலகின் மிக கண்காணிக்கப்படும் நகரங்கள் குறித்த புதிய பகுப்பாய்வை காம்பாரிடெக் நிறுவனம் (Comparitech) உலகெங்கிலும் உள்ள 150 முக்கிய நகரங்களில் மேற்கொண்டது. 
  • இந்த பட்டியலில் சீனாவின் தையுவான் நகரம் முதலிடம் பிடித்துள்ளது. இந்திய நகரம் ஹைதராபாத் 16-ஆம் இடம் பிடித்துள்ளது. 
  • சென்னை 21-வது இடமும், டெல்லி 33-வது இடமும் பெற்றுள்ளன. 
  • உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட 20 நகரங்களில் டெல்லி 2-வது இடத்திலும் டோக்கியோ முதலிடத்திலும் உள்ளது.
  • CCTV: Closed-circuit television.
இந்தியாவில் இரட்டை-அடுக்கு கொள்கலன்களை இயக்கும் "உலகின் முதல் மின்மயமாக்கப்பட்ட ரயில் சுரங்கப்பாதை"
  • உலகில் முதல்: இரட்டை அடுக்கு கொள்கலன்களை இயக்கக்கூடிய ஒரு கிலோமீட்டர் நீளமுள்ள "உலகின் முதல் மின்மயமாக்கப்பட்ட ரயில் சுரங்கப்பாதை"யை (World’s first electrified rail tunnel) இந்தியா உருவாக்குகிறது
  • இந்த சுரங்கப்பாதை ஹரியானா மாநிலத்தின் சோஹ்னா நகருக்கு அருகில் மேற்குப்பகுதி சரக்குவழிப்பாதையை (WDFC) இடையே வெட்டி அமைக்கப்படுகிறது.
  • சுரங்கப்பாதை உடைத்தல் பணிகள் ஜூலை 24-அன்று நிறைவடைந்தது. அடுத்த 12 மாதங்களுக்குள் இந்த திட்டம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • பரிமாணம்: இந்த சுரங்கப்பாதை ஹரியானாவின் மேவாட் மற்றும் குர்கான் மாவட்டங்களை இணைக்கிறது. சுரங்கத்தின் ஒரு முனை ஹரியானாவின் ரேவாரியிலும், மறு முனை உத்தரப்பிரதேசத்தின் தாத்ரியிலும் உள்ளது.
  • இது 14.5 மீட்டர், 10.5 மீட்டர் உயரம் (நேரான பகுதி) மற்றும் 15 மீட்டர் அகலம் மற்றும் 12.5 மீட்டர் உயரம் கொண்ட இந்த D-வடிவ சுரங்கப்பாதை, 150 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இரட்டை அடுக்காக மேல்நிலையில் அமைக்கப்படுகிறது. 
  • இது இந்தியாவின் மிகப்பெரிய ரயில்வே சுரங்கமாகவும் கருதப்படுகிறது.
விரிக்சரோபன் அபியான் 2020 - மரம் வளர்ப்பு இயக்கம்
  • மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் "விக்ஷரோபன் அபியான் 2020" (Vriksharopan Abhiyan) என்ற மரம் வளர்ப்பு இயக்கத்தை ஜூலை 23 அன்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைத்தார்.
  • நிலக்கரி / லிக்னைட் வெட்டியெடுக்கும் 10 மாநிலங்களில் உள்ள சுமார் 38 மாவட்டங்களில் 130-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. 600 ஏக்கரில் 6 லட்சம் நாற்றுகள் நடப்பட்டுகின்றன.
வன விளைபொருட்களுக்கான "தேசிய போக்குவரத்து பாஸ் அமைப்பு பைலட் திட்டம்"
  • மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், புதுதில்லியில் இந்திரா பரியவரன் பவனிலிருந்து ஜூலை 23-அன்று, தேசிய போக்குவரத்து பாஸ் அமைப்பு (NTPS) என்ற இணைய போக்குவரத்து முறையிலான பைலட் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
  • இந்த பைலட் திட்டம் மத்திய பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் செயல்படுகிறது, இந்த தீபாவளி முதல் இந்தியா முழுவதும் செயல்படவுள்ளது.
  • மரம், மூங்கில் மற்றும் பிற சிறு வன உற்பத்திப் பொருட்களின் இயக்கத்தை எளிதாக்குவதற்கு இந்த இணைய போக்குவரத்து முறை மேற்கொள்ளப்படுகிறது. 
  • மக்கள் வனத்துறை அலுவலகங்களுக்கு நேரடியாக செல்லாமல் மொபைல் செயலி மூலம் வன விளைபொருட்களை அனுப்ப இ-பாஸ்களை இதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
  • NTPS: National Transit Pass System.
கடற்படையின் மிகப்பெரிய சூரிய மின் ஆலை எழிமாலாவில் திறப்பு
  • கேரளாவின் எழிமலா பகுதியில் உள்ள இந்திய கடற்படை அகாடமியில் 3 மெகாவாட் (MW) மதிப்பிலான மிகப்பெரிய சூரிய மின் நிலையத்தை தெற்கு 
  • கடற்படை கட்டளை அதிகாரி வைஸ் அட்மிரல் அனில் குமார் சாவால் ஜூலை 22-அன்று, தொடங்கிவைத்தார்.
  • இந்த திட்டம் 2022-ஆம் ஆண்டில் 100 ஜிகாவாட் (GW) சூரியசக்தி இலக்கை அடையும் தேசிய சூரிய மிஷன் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
அறிவியல் அடிப்படையிலான இலக்குகள் திட்டத்தில் பதிவுபெறும் முதல் இந்திய துறைமுகம் "APSEZ"
  • அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனம் (APSEZ), அறிவியல் அடிப்படையிலான இலக்குகள் திட்டத்தில் (SBTi) பதிவுசெய்யும் முதல் இந்திய துறைமுகமாகவும், உலகளவில் 7-வது துறைமுகமாகவும் திகழ்கிறது.
  • SBTi உறுதிப்பாட்டுக் கடிதத்தில் கையொப்பமிட்டதன் மூலம், புவியியல் வெப்பமயமாதலை தொழில்வளர்ச்சி காலத்தின் முந்தைய நிலைகளை விட 1.5 ° C ஆக வைத்திருக்கும் அறிவியல் அடிப்படையிலான உமிழ்வு குறைப்பு இலக்குகளை மேற்கொள்ள APSEZ உறுதிபூண்டுள்ளது.
  • காலநிலை தொடர்பான நிதி வெளிப்பாடு (TCFD) தொடர்பான பணிக்குழுவின் ஆதரவாளராகவும் APSEZ கையெழுத்திட்டுள்ளது.
  • APSEZ: Adani Ports and Special Economic Zone Ltd
  • SBTi: Science-Based Targets initiative.
  • TCFD: Task Force on Climate Related Financial Disclosure.
முதலாவது இந்திய கல்வி மதிப்பீட்டு தேர்வு "Ind-SAT 2020"
  • மனிதவள மற்றும் மேம்பாட்டு அமைச்சகம், 2020 ஜூலை 22-அன்று இந்தியாவில் படிப்போம் (study in India Programme) திட்டத்தின் கீழ், முதலாவது இந்திய கல்வி மதிப்பீட்டு தேர்வை (Ind-SAT 2020) நடத்தியது. 
  • தேசிய சோதனை நிறுவனத்தால் (National Testing Agency) இணையவழியில் இந்த தேர்வு நடத்தப்பட்டது.
  • Ind-SAT தேர்வு என்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கான சேர்க்கை மற்றும் உதவித்தொகை வழங்குவதற்காக நடத்தப்படுகிறது.
  • Ind-SAT: Indian Scholastic Assessment.
குஜராத் மாநிலத்தில் உலகத் தரம் வாய்ந்த தேன் சோதனை ஆய்வகம் - திறந்து வைப்பு
  • மத்திய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், குஜராத் மாநிலத்தின் ஆனந்த் நகரில் "உலகத்தரம் வாய்ந்த தேன் பரிசோதனை ஆய்வகத்தை" திறந்து வைத்தார். இது இந்தியாவின் முதல் அரசு தேன் பரிசோதனை ஆய்வகமாக கருதப்படுகிறது.
  • குஜராத்தின் ஆனந்தில் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தில் (NDDB) இந்த சோதனை ஆய்வகத்தை தேசிய தேனீ வாரியம் (National Bee Board) ஆதரவுடன் நிறுவியது.
  • தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் நடத்திய "அறிவியல் தேனீ உற்பத்தி குறித்த இரண்டு நாட்கள் இணையதள யிற்சித் திட்டத்தையும்" தோமர் திறந்து வைத்தார்.
  • NDDB: National Dairy Development Board.
டி. பி. சிங் குழு அமைப்பு
  • மாணவர்கள் உயர் படிப்புகளுக்காக இந்தியாவில் தங்குவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குவதற்காக பல்கலைக்கழக மானியக்குழுத் தலைவர் டி பி சிங் தலைமையில் (D P Singh Committee) ஒரு குழுவை த்திய மனிதவள மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் அமைத்துள்ளது.
  • இந்தியாவில் அதிகமான மாணவர்கள் தங்கியிருப்பதற்கும் அவர்களின் உயர் படிப்பைத் தொடர்வதற்கும் வழிகாட்டுதல்களை உருவாக்குவதே இக்குழுவின் பணி ஆகும்.
லெஜண்ட் ஆஃப் அனிமேஷன் விருது 2020 - அர்னாப் சவுத்ரி (மறைவு)
  • மறைந்த அர்னாப் சவுத்ரி (Arnab Chaudhuri) அவர்களுக்கு, லெஜண்ட் ஆஃப் அனிமேஷன் விருது 2020 (Legend of Animation award 2020), வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. 
  • இந்த விருதை டூன்ஸ் மீடியா குழுமம் (Toonz Media Group), மெய்நிகர் பதிப்பாக நடத்தப்பட்ட 2020 அனிமேஷன் முதுநிலை உச்சிமாநாட்டின் போது வழங்கப்பட்டது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புதிய நிர்வாக இயக்குநர் - பார்த்தா பிரதிம் சென்குப்தா
  • பார்த்தா பிரதிம் சென்குப்தா இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஜூலை 24, 2020 அன்று, இந்திய வெளிநாட்டு வங்கி (ஐஓபி) திரு. பார்த்தா பிரதிம் சென்குப்தாவை அதன் , மேலும் அவரது பதவிக்காலம் டிசம்பர் 31, 2022-க்குள் அல்லது மேலதிக உத்தரவுகள் வரை முடிவடைகிறது.
பிரிக்ஸ் வர்த்தக, கைத்தொழில் சம்மேளன கௌரவ ஆலோசகர் "சாஹில் சேத்"
  • இந்திய வருவாய் சேவை அதிகாரி சாஹில் சேத், பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் (BRICS-CCI) கௌரவ ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். 
  • BRICS-CCI: Chamber of Commerce and Industry.
உலகின் மிகப்பெரிய குளோபல் ஃபிண்டெக் விழா-2020
  • உலகின் மிகப்பெரிய முதலாவது உலகளாவிய ஃபிண்டெக் விழா (Global Fintech Fest), ஜூலை 22-23 தேதிகளில் இணையவழியாக நடைபெற்றது; 
  • இது இந்திய கொடுப்பனவு கவுன்சில் ஆஃப் இந்தியா (NPCI) மற்றும் ஃபிண்டெக் கன்வெர்ஜென்ஸ் கவுன்சில் (PCI) ஆகியவற்றால் இந்த நிதி தொடர்பான விழா "Fintech : With and Beyond COVID" என்ற கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் UPI AutoPay, RuPay வணிக அட்டை & OCEN நெறிமுறை ஆகியவை தொடங்கி வைக்கப்பட்டது
  • ஓசென் நெறிமுறை: நந்தன் நிலேகனி OCEN என்ற ஒரு புதிய கடன் நெறிமுறை உள்கட்டமைப்பை அறிமுகப்படுத்தினார், இந்த ஓசென் நெறிமுறையை மென்பொருள் துறையின் சிந்தனைக் குழுவான "இந்திய மென்பொருள் தயாரிப்பு தொழில் ரவுண்ட்டேபிள் (iSpirit) அமைப்பு" உருவாக்கியுள்ளது.
  • iSpirit: Indian Software Product Industry RoundTable.
  • OCEN: Open Credit Enablement Network.
The India Way: Strategies for an Uncertain World - Dr.S Jaishankar
  • இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் எழுதிய “தி இந்தியா வே: நிச்சயமற்ற உலகத்திற்கான உத்திகள்” என்ற ஆங்கில மொழிப் புத்தகம் ஹார்பர்காலின்ஸ் இந்தியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது
  • மூன்று சுமைகள்: இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சுமக்கும் மூன்று சுமைகளைப் பற்றி இந்தப் புத்தகம் விளக்குகிறது.
  • மூன்று சுமைகளாக என்பதாக, பகிர்வு, தாமதமான பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் அணுசக்தி விருப்பத்தை நீண்டகாலமாகப் பயன்படுத்துதல் ஆகியவை இந்தப் புத்தகத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.
ஐ.நா. குளிரூட்டும் உமிழ்வு மற்றும் கொள்கை தொகுப்பு அறிக்கை-2020
  • காலநிலை நட்பு குளிரூட்டல் (Climate-friendly Cooling) மூலம் 460 ஜிகா டன் பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைக்கலாம் ஐக்கிய நாடுகளின் குளிரூட்டும் உமிழ்வு மற்றும் கொள்கை தொகுப்பு அறிக்கை (Cooling Emissions and Policy Synthesis Report) தெரிவிக்கிறது.
  • அதிக மாசுபடுத்தும் குளிர்பதனப் பொருட்களிலிருந்து விலகி மாறுவதோடு ஆற்றல் திறன் மேம்பாடுகளை இணைப்பதன் மூலம், உலகம் ஒட்டுமொத்த பசுமை இல்ல வாயு உமிழ்வை (Greenhouse Gas Emissions), அடுத்த நான்கு தசாப்தங்களில் 210-460 ஜிகாடோன்கள் அளவுக்கு சமமான கார்பன் டை ஆக்சைடு (GtCO2e) உமிழ்வை தவிக்கலாம் என்று, ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) மற்றும் சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA) ஆகியவை இணைந்து வெளியிட்ட அறிக்கை கூறுகிறது, 
இருமுறை ஆஸ்கார் வென்ற நடிகை "ஒலிவியா டி ஹவில்லேண்ட்"
  • இரண்டு முறை ஆஸ்கார் விருதும் நடிகையான ஒலிவியா டி ஹவில்லேண்ட் (Olivia de Havilland) தனது 104 வயதில் பிரான்சின் பாரிஸில் ஜூலை 24-அன்று காலமானார். இவர் ஒரு டோ-ஐட் நடிகை (doe-eyed actress) என்று அறியப்பட்டவர். 
  • ஜப்பானின் டோக்கியோவில் 1916 ஜூலை 1 ஆம் தேதி பிறந்த இவர் ‘கான் வித் தி விண்ட்’ திரைப்படத்தின் கடைசி முன்னணி கதாபாத்திரத்தில் பணியாற்றினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel