- சமூக நலத்திட்டத்தின் கீழ் மாநில அரசால் வழங்கப்படும் 'மது பாபு பென்ஷன் யோஜனா' ஓய்வூதிய திட்டத்தில் திருநங்கைகளையும் சேர்பதாக ஒடிசா அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரும் பயனடைந்து வருகின்றனர்.
- இந்நிலையில் இதில் மூன்றாம் பாலினத்தவர்களை சேர்க்க முதல்வர் நவீன் பட்நாயக் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் அவர்களின் வயதுக்கேற்ப ரூ.500 முதல் ரூ.900 வரை ஓய்வூதியம் கிடைக்கும் என்று மாநில அமைச்சர் அசோக் பாண்டா தெரிவித்துள்ளார்.
- இந்த திட்டத்தின் கீழ் 6000 திருநங்கைகள் பயன்பெருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளாது. இதற்கு தேவையான நிதியுதவி ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பயனர்களுக்கு விரைவில் பணம் கிடைக்கும் என்றும் ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.
- மேலும் ஓய்வூதியத்தை பெற விரும்பும் திருநங்கைகள் MBPY அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மது பாபு பென்ஷன் யோஜனா திட்டம் / Madhu Babu Pension Yojana Scheme - MBPY
July 06, 2020
0