- 'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட பாணியில், நாடு முழுதும், 200 நகர்ப்புற காடுகள் உருவாக்கப்படுகின்றன. வரும் 2025க்குள், நாடு முழுதும், நகர் வன திட்டத்தின் கீழ், 200 நகர்ப்புற காடுகள் உருவாக்கப்படுகின்றன.
- மத்திய வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், இதற்கு முனைப்பு காட்டி வருகிறது. நகர்மயமாதல் பெருகி வரும் நிலையில், நகரங்களில், காற்று மாசு பெருகி வருகிறது. வனங்களில் மட்டுமின்றி, நகரங்களிலும் பல்லுயிர்ப் பெருக்கம் அவசியமாகிறது.
- இந்தாண்டு கடைபிடிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தினத்தில் (ஜூன் 5), 'பல்லுயிரைக் கொண்டாடு' என்ற அறைகூவல் விடுக்கப்பட்டது.
- நகர்மயமாதலால், உணவுச்சங்கிலியில் ஏற்படும் நிலையில்லா தன்மையைக் குறைத்து, சுற்றுச்சூழலைக் காப்பதே நகர் வன திட்டத்தின் குறிக்கோள்.
- வேம்பு, வில்வம், ஆல், அரசு, புங்கன், வேங்கை, மருதம், நாவல், நெல்லி, கொய்யா, மாதுளை, சிசு, மலைவேம்பு, பூவரசு உள்ளிட்ட 59 வகையான நாட்டு மரக்கன்றுகள் நடப்படுகின்றன.
- நகர்ப்புறக் காடுகள் 'மியாவாகி' முறையில் அமைய உள்ளன. இந்த இடங்கள், பூங்காக்களாகவும் உருவாக்கப்படும். திருப்பூரில் செயல்படுத்தப்பட்டு வரும், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம், தேசிய அளவில் பாராட்டு பெற்று வருகிறது.
- நகர் வனத்திட்டத்திற்கு, இது முன்னுதாரணமாக விளங்குகிறது. திருப்பூர் பாணியை பின்பற்றி, கோவை, சேலம் உட்பட பல்வேறு நகரங்களிலும், இதேபோன்ற திட்டத்தை செயல்படுத்துவதில், தன்னார்வலர்களும், அரசு நிர்வாகத்தினரும் முயற்சி செய்து வருகின்றனர்.
வனத்துக்குள் திருப்பூர் திட்டம்
July 04, 2020
0
Tags