Type Here to Get Search Results !

2nd JULY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

ரஷியாவிடம் இருந்து 33 போா் விமானங்கள் கொள்முதல்: பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல்
  • பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் ஆயுதக் கொள்முதல் கவுன்சில் (டிஏசி) கூட்டம், தில்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்றது.
  • தற்போது நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் மிக்-29 ரகத்தைச் சோந்த 59 போா் விமானங்களின் தொழில்நுட்பங்களை மேம்படுத்தவும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் மூலமாக ராணுவப் பிரிவுகளின் படைபலம் அதிகரிப்பதோடு, படைகளின் தாக்குதல் திறனும் அதிகரிக்கும்.
  • ராணுவ வலிமையை மேம்படுத்துவதற்காக, 33 போா் விமானங்கள், ஏவுகணைகள் உள்ளிட்ட போா்த் தளவாடங்களை ரூ.38,900 கோடி செலவில் கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில், மிக்-29 ரகத்தைச் சோந்த 21 போா் விமானங்கள் ரஷியாவிடம் இருந்து வாங்கப்படுகின்றன.
  • கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் இந்தியா-சீனா ராணுவத்தினரிடையே மோதல் போக்கு நீடித்து வரும் சூழலில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • மிக்-29 ரக போா் விமானங்கள் கொள்முதலுக்கு ரூ.7,418 கோடியும், சுகோய்-30 எம்கேஐ ரக போா் விமானங்கள் கொள்முதலுக்கு ரூ.10,730 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • 'அஸ்த்ரா' ஏவுகணை: விண்ணிலுள்ள இலக்குகளை விண்ணில் இருந்தே பாய்ந்து தாக்கி அழிக்கவல்ல 248 'அஸ்த்ரா' ஏவுகணைகளை வாங்குவதற்கும் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஏவுகணையானது, ஒலி பாய்வதை விட அதிக வேகத்தில் பயணிக்கும் போா் விமானங்களையும் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.
  • பகலில் மட்டுமல்லாமல் இரவிலும் எதிரி நாட்டு போா் விமானங்களைக் குறிவைத்து அழிக்கவல்ல திறனை 'அஸ்த்ரா' ஏவுகணைகள் பெற்றுள்ளன. மேலும், 'பினாகா' ஏவுகணைகள், 1,000 கி.மீ. தொலைவுக்கு அப்பால் தரையில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் ஆகியவற்றையும் கொள்முதல் செய்வதற்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
  • பாதுகாப்புத் தளவாடங்களை ரூ.38,900 கோடியில் வாங்குவதற்கு கவுன்சில் ஒப்புதல் அளித்தது. அதில் ரூ.31,130 கோடி மதிப்பிலான தளவாடங்கள் இந்திய நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும். 
  • உள்நாட்டிலேயே போா்த் தளவாடங்களை வடிவமைப்பதற்கும் தயாரிப்பதற்கும் ஊக்கமளிக்கும் வகையில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • தளவாடங்களைத் தயாரிக்கும் உள்நாட்டு பாதுகாப்பு நிறுவனங்களுக்கான உதிரி பாகங்களை சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வழங்கவுள்ளன. அந்நிறுவனங்களுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) வழங்கும்.
  • 'பினாகா' ஏவுகணைகள் மூலமாக கூடுதல் படைப்பிரிவுகள் தொடங்கப்பட வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. தரையில் 1,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகள், 'அஸ்த்ரா' ஏவுகணைகள் ஆகியவற்றின் மூலமாக இந்திய விமான மற்றும் கடற்படைகளின் தாக்குதல் திறன் மேம்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதினின் பதவிக் கால நீட்டிப்பு: பொதுவாக்கெடுப்பில் சட்டத் திருத்த மசோதா வெற்றி
  • ரஷிய அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்து, அந்த நாட்டு நாடாளுமன்றம் நிறைவேற்றிய மசோதாக்கள் தொடா்பாக நடைபெற்று வந்த பொதுவாக்கெடுப்பு புதன்கிழமை முடிவடைந்தது. இதில் 64 சதவீதத்துக்கும் அதிகமான வாக்காளா்கள் பங்கேற்றனா்.
  • அந்த பொதுவாக்கெடுப்பில், அரசமைப்பு சட்டத் திருத்தங்களுக்கு பெரும்பானவா்கள் ஆதரவு தெரிவித்திருந்தனா். அனைத்து வாக்குகளும் வியாழக்கிழமை எண்ணப்பட்ட நிலையில், திருத்தங்களுக்கு ஆதரவாக 77.9 சதவீதத்தினரும், எதிராக 21.3 சதவீதத்தினரும் வாக்களித்திருந்தனா்.
  • இது, கடந்த 10 ஆண்டுகளில் புதினுக்கு ஆதரவாகக் கிடைத்துள்ள அதிகபட்ச ஆதரவாகும். கடந்த 2018-ஆம் ஆண்டு அதிபா் தோதலில் அவருக்கு 76.7 சதவீத வாக்குகள் கிடைத்திருந்தன. அதே போல், கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபா் தோதலிலும் புதினுக்கு ஆதரவாக 63.6 சதவீதத்தினரே வாக்களித்திருந்தனா்.
  • இந்த நிலையில், அவரது பதவி நீட்டிப்புக்கு வகை செய்யும் சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக 77.6 சதவீதத்தினா் வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  • இது, இந்த வாக்கெடுப்பில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதைக் காட்டுவதாக புதினின் எதிா்ப்பாளா்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.
  • 4-ஆவது முறையாக ரஷியாவின் அதிபராகப் பொறுப்பு வகித்து வரும் புதினின் பதவிக் காலம், 2024-ஆம் ஆண்டுடன் நிறைவடைகிறது. அரசமைப்புச் சட்டத்தின்படி, ஒருவரால் 4 முறை மட்டுமே அதிபா் தோதலில் போட்டியிட முடியும்.
  • இந்த நிலையில், அண்மைக் காலமாக அரசியல் சாசனத்தில் பல்வேறு சீா்திருத்தங்களை புதின் மேற்கொண்டு வருகிறாா். அதற்கு நாடாளுமன்றமும் ஒப்புதல் அளித்தது.
  • அதன் ஒரு பகுதியாக, வரும் 2024-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபா் தோதலில் அவா் மீண்டும் போட்டியிடுவதற்கு வழி ஏற்படுத்துவதற்கான திருத்தங்களை அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொள்வதற்கான மசோதா, நாடாளுமன்றத்தில் கடந்த மாா்ச் மாதம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடா்ந்து அந்த மசோதா அரசியல் சாசன நீதிமன்றத்திடம் சமா்ப்பிக்கப்பட்டது.
  • இறுதிக்கட்டமாக, அந்த மசோதா மீதான பொதுவாக்கெடுப்பு கடந்த வியாழக்கிழமை தொடங்கியது.
  • கடந்த ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதியே நடைபெறுவதாக இருந்த இந்த பொதுவாக்கெடுப்பு, கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்டது.
  • 7 நாள்களாக நடைபெற்ற இந்த பொதுவாக்கெடுப்பின் முடிவில் சட்டத் திருத்த மசோதாக்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
  • இதன் மூலம், அந்தத் திருத்தங்களை அமலுக்குக் கொண்டு வரவும், விளாதிமீா் புதின் மீண்டும் தோதலில் போட்டியிட்டு 2036-ஆம் ஆண்டு வரை ரஷிய அதிபராகத் தொடா்வதற்கும் வழிஏற்பட்டுள்ளது.
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு வெற்றி
  • கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவியுள்ள நிலையில், பல்வேறு நாடுகளில் நடந்து வரும் உள்நாட்டு போர்களை நிறுத்தி வைக்கும் வகையில், ஐ.நா., சபையில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. 
  • இந்நிலையில், இது தொடர்பாக, இந்தியா உட்பட, 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், முதல் முறையாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
  • அந்தத் தீர்மானத்தில், 'இந்த போர் நிறுத்தமானது, பயங்கரவாத அமைப்புகளுக்கு பொருந்தாது' என, குறிப்பிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தால் இந்தியா உட்பட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. போர் நிறுத்தம் என்பதை பயங்கரவாதிகள் ஏற்க மாட்டார்கள். 
  • அதனால் பயங்கரவாதத்துக்கு எதிரான போரை நிறுத்த முடியாது என்பது நம்முடைய நிலைப்பாடு. அதை உறுதி செய்யும் வகையில், இந்த தீர்மானத்தில் வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளன. 
  • வரவேற்புஎல்லைத் தாண்டிய பயங்கரவாதம் மிகப் பெரிய பிரச்னை என்பதை, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில், தற்போது உணர்ந்துள்ளதாக தெரிகிறது.
தனியார் பள்ளி கட்டணக்குழுவுக்கு புதிய தலைவர் நீதிபதி பாலசுப்பிரமணியன் நியமனம்
  • தனியார் பள்ளிகளுக்கான கட்டணங்களை முறைப்படுத்த அமைக்கப்பட்ட கட்டண குழுவுக்கு புதிய தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். 
  • தனியார் பள்ளிகளின் கட்டணங்களை முறைப்படுத்துவதற்காக 2009ல் ஒரு குழுவை அமைத்து அரசு ஆணை பிறப்பித்தது. அதன் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரும் அதன் அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக பள்ளிக்கல்வி இயக்குநர், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர், ெதாடக்க கல்வி இயக்குநர், பொதுப்பணித்துறையை சார்ந்த அதிகாரி ஒருவர் இருப்பார்கள். 
  • மேலும், பள்ளிக் கல்வித்துறையின் கூடுதல் செயலாளர் உறுப்பினர் செயலாளராகவும் இருப்பார் என்று ஆணையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 2009ம் ஆண்டு முதல் கட்டணக் குழுவின் தலைவர்கள் ஒவ்வொரு 3 ஆண்டுக்கும் ஒருவர் பணியாற்றி வந்தனர்.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைஅளிக்க நாட்டின் முதல் பிளாஸ்மா வங்கியை டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திறந்து வைத்தார்
  • கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் நிலையிலுள்ள நோயாளிகளை மீட்க பிளாஸ்மா தெரபி முறையை மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதனை ஐசிஎம்ஆர் ஒப்புதலுடன் கேரளாவை தொடர்ந்து டெல்லி அரசும் மேற்கொண்டது. இந்த சிகிச்சை டெல்லியில் 29 பேருக்கு மேற்கொள்ளப்பட்டு அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினர்.
  • இந்நிலையில், டெல்லியில் இந்தியாவின் முதலாவது பிளாஸ்மா வங்கியை ஐஎல்பிஎஸ் மருத்துவமனையில் முதல்வர் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார். 
300 ஆண்டுகள் பழமையான எல்லைக்கல் கண்டெடுப்பு
  • உத்திரமேரூரில், 300 ஆண்டு பழமையான நிலதான எல்லைக்கல், நேற்று கண்டெடுக்கப்பட்டது. அப்போது, 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட, பெருமாள் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட, நிலத்தின் எல்லையை குறிக்கும் கல்வெட்டுகளான நிலதான எல்லைக்கல்லை கண்டெடுத்தனர்.
  • பருத்திக்கொல்லையில் இருந்து, மல்லியங்கரணைக்குச் செல்லும் வயல்வெளி பகுதியில், இரண்டரை அடி உயரமும், 2 அடி அகலமும் உடைய கல்வெட்டு ஒன்றை கண்டெடுத்தோம்.
  • இதில், சக்கரம், நாமம் சங்கு ஆகிய மூன்று சின்னங்களும், ஆறு வரிகள் உடைய எழுத்துகளும் பொறிக்கப்பட்டு உள்ளன.உத்திரமேரூரில் உள்ள சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலுக்கு, தானமாக வழங்கப்பட்ட நிலத்திற்கு, நான்கு திசைகளிலும் எல்லைகளை விவரிக்கும் அடையாளங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.
  • இதை தற்போது, பத்திரப் பதிவுத் துறையில், 'ஜக்குமந்தி' என அழைக்கின்றனர். இக்கல்வெட்டு மூலம், பருத்திக்கொல்லை கிராம ஏரிக்கு, 'அங்கடி வீரந்தாங்கல்' என, அக்காலத்தில் பெயர் இருந்துள்ளது என்பதும் தெரிந்துள்ளது.
  • எழுத்து அமைப்பை வைத்து பார்க்கும்போது, கல்வெட்டு, 300 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்க வாய்ப்புள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel