Type Here to Get Search Results !

3rd JULY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

பிரான்ஸ் புதிய பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ்
 • ஐரோப்பிய நாடான பிரான்சின் பிரதமராக பதவி வகித்த, எட்வர்டு பிலிப், 49, கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளில், சரியாக செயல்படவில்லை என்ற கருத்து நிலவுகிறது. 
 • மார்ச், ஏப்., மாதங்களில், அந்நாட்டு மக்களுக்கு, முக கவசம் மற் றும் மருத்துவ உபகரணங்களில் பற்றாக்குறை ஏற்பட்டதுடன், பரிசோதனைகளும் முறையாக நடைபெறவில்லை என்ற புகாரும் எழுந்தது.
 • இதன் எதிரொலியாக, 28ம் தேதி நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், அதிபர், இமானுவேல் மேக்ரோன் தலைமையிலான அரசு, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. இதனால், பிரதமர், எட்வர்டு பிலிப் தன் பதவியை ராஜினாமா செய்தார்.
 • இதையடுத்து வைரஸ் பிரச்னையில், தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்ட, ஜீன் காஸ்டெக்ஸ், 55, புதிய பிரதமராக பொறுப்பேற்பார் என, இமானுவேல் மேக்ரோன் அறிவித்தார்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோவு வாரிய தலைவராக டிஜிபி தமிழ்செல்வன் நியமனம்
 • தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோவு வாரியத்தின் தலைவராக இருந்த டிஜிபி சுனில்குமாா் கடந்த செவ்வாய்க்கிழமை மாநில மனித உரிமை ஆணையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
 • இதனால் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோவு வாரியத்தின் தலைவா் பதவி காலியாக இருந்தது. இந்நிலையில் அந்த பணியிடத்துக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தின் லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஜிபியாக இருந்த என்.தமிழ்செல்வனை நியமனம் செய்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம்
 • 'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட பாணியில், நாடு முழுதும், 200 நகர்ப்புற காடுகள் உருவாக்கப்படுகின்றன. வரும் 2025க்குள், நாடு முழுதும், நகர் வன திட்டத்தின் கீழ், 200 நகர்ப்புற காடுகள் உருவாக்கப்படுகின்றன. 
 • மத்திய வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், இதற்கு முனைப்பு காட்டி வருகிறது. நகர்மயமாதல் பெருகி வரும் நிலையில், நகரங்களில், காற்று மாசு பெருகி வருகிறது. வனங்களில் மட்டுமின்றி, நகரங்களிலும் பல்லுயிர்ப் பெருக்கம் அவசியமாகிறது. 
 • இந்தாண்டு கடைபிடிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தினத்தில் (ஜூன் 5), 'பல்லுயிரைக் கொண்டாடு' என்ற அறைகூவல் விடுக்கப்பட்டது.
 • நகர்மயமாதலால், உணவுச்சங்கிலியில் ஏற்படும் நிலையில்லா தன்மையைக் குறைத்து, சுற்றுச்சூழலைக் காப்பதே நகர் வன திட்டத்தின் குறிக்கோள்.
 • வேம்பு, வில்வம், ஆல், அரசு, புங்கன், வேங்கை, மருதம், நாவல், நெல்லி, கொய்யா, மாதுளை, சிசு, மலைவேம்பு, பூவரசு உள்ளிட்ட 59 வகையான நாட்டு மரக்கன்றுகள் நடப்படுகின்றன.
 • நகர்ப்புறக் காடுகள் 'மியாவாகி' முறையில் அமைய உள்ளன. இந்த இடங்கள், பூங்காக்களாகவும் உருவாக்கப்படும். திருப்பூரில் செயல்படுத்தப்பட்டு வரும், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம், தேசிய அளவில் பாராட்டு பெற்று வருகிறது.
 • நகர் வனத்திட்டத்திற்கு, இது முன்னுதாரணமாக விளங்குகிறது. திருப்பூர் பாணியை பின்பற்றி, கோவை, சேலம் உட்பட பல்வேறு நகரங்களிலும், இதேபோன்ற திட்டத்தை செயல்படுத்துவதில், தன்னார்வலர்களும், அரசு நிர்வாகத்தினரும் முயற்சி செய்து வருகின்றனர்.
ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ் நிறுவனத்தில் அமெரிக்காவைச் சோந்த இன்டல் கேப்பிட்டல் ரூ.1,894 கோடி முதலீடு
 • ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ் நிறுவனத்தில் 0.39 சதவீத பங்குகளை கையகப்படுத்த இன்டெல் கேப்பிட்டல் திட்டமிட்டுள்ளது. இதற்காக, அந்நிறுவனம் ஜியோவில் ரூ.1,894.50 கோடியை முதலீடு செய்யவுள்ளது. 
 • தற்போதைய நிலையில், நிறுவன மதிப்பு ரூ.5.16 லட்சம் கோடியாகவும், பங்கு மதிப்பு ரூ.4.91 லட்சம் கோடியாகவும் உள்ளன.
 • ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ் நிறுவனத்தில் அண்மையில் முதலீடு செய்த 12-ஆவது நிறுவனம் இன்டெல் கேப்பிட்டல் ஆகும்.
 • இதையடுத்து, ஜியோவில் மேற்கொள்ளப்ப்பட்ட மொத்த முதலீடு ரூ.1,17,588.45 கோடியை எட்டியுள்ளது என அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மங்கோலியாவில் மீட்கப்பட்ட புத்தமதக் கையெழுத்துப் பிரதி ஒப்படைப்பு
 • இந்தியாவில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு மங்கோலியாவில் பல நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வரும் புத்தமதக் கையெழுத்துப் பிரதி நடைபெறும் தர்மசக்கர உபதேச தின விழாவில் இந்தியக் குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
 • இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சர்வதேச புத்தமதக் கூட்டமைப்பு ஜூலை 4, 2020 அன்று அசதா பௌர்ணமியை தர்மசக்கரா தினமாகக் கொண்டாடுகிறது.
 • உத்தரப்பிரதேசத்தின் வாராணாசிக்கு அருகில் உள்ள தற்போது சாரநாத் என்று அழைக்கப்படும் ரிசிபட்டனாவில் அமைந்துள்ள மான் பூங்காவில் தனது முதல் 5 சீடர்களுக்கு புத்தர் முதன் முதலாக உபதேசம் செய்த நாளாக இந்தப் பௌர்ணமி தினம் அனுசரிக்கப்படுகிறது.
 • இந்த தினத்தை உலகமெங்கிலும் உள்ள புத்த மதத்தினர் தர்ம சக்கரா பர்வட்டனா அல்லது தர்ம சக்கர உபதேச தினமாக கொண்டாடுகின்றனர். இந்த தினத்தை புத்த மதத்தினர் மற்றும் இந்துக்கள் என இருவருமே குரு பூர்ணிமா என்று தங்களின் குருக்களுக்கு மரியாதை செய்யும் விதமாக கொண்டாடுகின்றனர்.
 • புத்தரின் அறிவொளி, அவரின் தர்ம போதனைகள் மற்றும் மகாபரி நிர்வாணம் ஆகியன நிகழ்ந்த இடம் இந்தியா என்ற வரலாற்றுப் பெருமையைக் கருத்தில் கொண்டு மாண்புமிகு குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் ராஷ்டிரபதி பவனில் இருந்து தர்மசக்கரா தினத்தைத் தொடங்கி வைப்பார். 
 • இந்தத் தருணத்தில் புத்தரின் அமைதி மற்றும் நீதி தொடர்பான போதனைகளை வலியுறுத்தியும், புலன்களால் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுதலை பெற அவர் காட்டிய நிர்வாணத்தை அடையும் எட்டு வழிப் பாதையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றுவார்.
 • கலாச்சார அமைச்சர் பிரகலாத் பட்டேல் மற்றும் சிறுபான்மையினர் உறவுகள் இணையமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரும் தொடக்க நிகழ்வில் உரையாற்றுகின்றனர். 
 • இந்த நிகழ்வில் மங்கோலிய அதிபரின் சிறப்பு உரையும் வாசித்துக் காட்டப்படுவதோடு இந்தியாவில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு மங்கோலியாவில் பல நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வரும் மதிப்புமிகுந்த புத்தமதக் கையெழுத்துப் பிரதியும் இந்தியக் குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்படும்.
 • உலகின் பல பகுதிகளிலும் இருக்கின்ற புத்தமத உயர்நிலைத் தலைவர்கள், மாஸ்டர்கள் மற்றும் நிபுணர்கள் ஆகியோரின் உரைகள் சாரநாத் மற்றும் புத்தகயாவில் இருந்து ஒலிபரப்பப்படும்.
லடாக்கில் உள்ள நிம்மு பகுதியில் ராணுவத்தினரிடையே பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோதி
 • இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே ஜூன் மாத மத்தியில் எல்லைப் பகுதியில் நடந்த மோதலின் பின்பு இந்திய பிரதமர் நரேந்திர மோதி லடாக் ஒன்றிய பிரதேசத்துக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டார்.
 • பலகீனமாக உள்ளவர்களால் அமைதிக்கான முயற்சியை ஒருபோதும் தொடங்க முடியாது. உலகப் போரோ அல்லது அமைதியோ, எப்போதெல்லாம் தேவை எழுகிறதோ அப்போதெல்லாம் நமது வீரர்களின் வெற்றியையும் அமைதியை நோக்கிய நமது முயற்சியையும் இந்த உலகம் கண்டுள்ளது. நாம் மனிதகுலத்தின் மேன்மைக்காக பணியாற்றியுள்ளோம்.
 • கல்வான் பள்ளத்தாக்கில் உயிர் நீத்த ராணுவத்தினருக்காக மீண்டும் நான் மரியாதை செலுத்துகிறேன். சுயச்சார்பு இந்தியாவுக்கான முயற்சி உங்களின் தியாகத்தால் வலுவடைகிறது.
 • ராணுவத்தினர் சமீபத்தில் வெளிப்படுத்திய வீரம், இந்த உலகத்திற்கான இந்தியாவின் வலிமை குறித்த செய்தியாக இருந்தது. நீங்கள் பணி செய்யும் இடத்தின் உயரத்தைக் காட்டிலும் உங்களின் தைரியம் உயர்ந்து நிற்கிறது. 
 • உங்கள் தைரியம் மற்றும் வீரம் குறித்துதான் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் எதிரொலித்துக் கொண்டுள்ளது. பாரத மாதாவின் எதிரிகள் உங்களின் தீர்க்கத்தை பார்த்துவிட்டனர்.
 • ஆக்கிரமிப்புகளுக்கான காலம் முடிந்துவிட்டது. இது வளர்ச்சிக்கான காலம். ஆக்கிரமிப்புகளில் ஈடுபடும் சக்திகள் தோற்று போவதையோ அல்லது திருப்பி அனுப்பப்படுவதையோ வரலாறு கண்டுள்ளது.
 • லடாக்கில் உள்ள நிம்மு பகுதியில் ராணுவத்தினரிடையே பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோதி 'மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்` என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியுள்ளார்
 • லடாக்கில் உள்ள நிம்மு பகுதியில் அவர் ராணுவத்தினருடன் உரையாற்றினார் போது, வீரம், மானம், மாட்சிமைபெற்ற வழிவந்த நன்னடத்தை, தெளிவு - ஆகிய நான்கு குணங்களும் பகையை எதிர்த்து நிற்க, படைக்கு உதவுகின்றன என்று பொருள்தரும் இந்த திருக்குறளை இன்று மேற்கோள்காட்டி பேசியுள்ளார்.
உபாசி கோல்டன் லீப் விருதுகள்
 • நீலகிரி மாவட்டம் குன்னூர், தேயிலை வாரியத்துடன் இணைந்து 'உபாசி, தென்னிந்திய அளவில், சிறந்த தேயிலைக்கான கோல்டன் லீப் இந்தியா' விருதுகள், 16 ஆண்டுகளாக வழங்குகிறது. 
 • நீலகிரி, ஆனைமலை, வயநாடு, திருவாங்கூர், மூணார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த எஸ்டேட்கள் மற்றும் சிறு தேயிலை தொழிற்சாலைகளின் சிறந்த தேயிலை தூள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 
 • 16வது ஆண்டு விருதுக்கான முதற்கட்ட தேர்வு கடந்த மார்ச் மாதம் குன்னூரிலும், 2ம் நிலை தொழில்நுட்ப பகுப்பாய்வு சமீபத்தில் ஆய்வகங்களிலும் நடந்தது.
 • முதல் முறையாக 'கோவிட்- 19 காரணமாக, தேயிலை சுவை, மனம், தரம் குணங்கள் அறியும் தேர்வு கவுகாத்தி, கொச்சி, கொல்கத்தாவில் நடந்தது.
 • தேர்வு செய்யப்பட்ட, 62 வகை தேயிலை தூள்களில், 14 நிறுவனங்களின் 37 வகையான தேயிலை தூள் தேர்வு செய்யப்பட்டது. இதில் ஹாரிசன் மலையாளம் லிமிடெட், யுனைடெட் நீல்கிரிஸ் டீ எஸ்டேட் ஆகியவை தலா, 5 விருதுகள் பெற்றன.
பிரேரக் தவுர் சம்மான்  விருது / Prerak Dauur Samman Award
 • வருடாந்திரத் தூய்மைப்பணிக் கணக்கெடுப்பு 2021-ஐ ஒட்டி, ஊக்கமளிக்கும் மரியாதை என்ற பொருள்படும் 'பிரேரக் தவுர் சம்மான்' (Prerak Dauur Samman) எனப்படும் புதிய விருது ஒன்று அறிமுகப்படுத்தப்படுவதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்தார்.
 • வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையில் நடத்தப்படும் நகர்ப்புற இந்தியாவின் வருடாந்திரத் தூய்மைப் பணிக் கணக்கெடுப்பான ஸ்வச் சர்வேக்சன் 2021-க்கான ஆறாவது கணக்கெடுப்புப் பணிகளைத் தொடங்கி வைத்துப் பேசிய மத்திய வீட்டுவசதி மற்றும் நகரப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி, இந்த வருடாந்திரக் கணக்கெடுப்புப் பணி, பழக்க வழக்க மாற்றங்களுக்கு தாக்குப் பிடிக்கச் செய்யும் வகையில், கணக்கெடுப்பு மேலும் வலுவானதாக அமைவதை உறுதி செய்யும் விதமாக, ஆண்டுதோறும் புதுமையான முறையில் மறுவடிவமைப்பு செய்யப்படுகிறது என்றார்.
 • துப்புரவு மதிப்புச் சங்கிலியின் நிலைத்தன்மையை உறுதி செய்ய வேண்டுமென்ற இத்துறையின் முயற்சிகளை மனதிற்கொண்டு, கடந்த ஆண்டைப் போலவே, வருடாந்திர தூய்மைப்பணிக் கணக்கெடுப்பு 2021-க்கான குறிகாட்டிகள், கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் மறுபயன்பாடு என்ற அளவுகோலைக் கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
 • பிளாட்டினம், தங்கம், வெள்ளி, வெண்கலம் மற்றும் ஆர்வத்துடன் பணியாற்றுவோர் என்ற 5 பிரிவுகளின் கீழ் இந்த விருது வழங்கப்படுவதுடன், ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று நகரங்கள் அங்கீகரிக்கப்படும். மக்கள் தொகை அடிப்டையில் நகரங்களை மதிப்பீடு செய்யும் தற்போதைய நடைமுறை கைவிடப்பட்டு, குறிகாட்டிச் செயல்பாடுகள் அடிப்படையில் நகரங்கள் தேர்வு செய்யப்பட உள்ளன
 • இணையவழிக் கருத்தரங்கில் பங்கேற்றவர்களிடையே உரையாற்றிய அமைச்சர், வருடாந்திர தூய்மைக் கணக்கெடுப்பு என்பது, உண்மையான 'மக்கள் இயக்கம்' என்ற உணர்வுடன் குடிமக்கள் பங்கேற்பதற்கான ஒரு சாதனமாக மாறியுள்ளது என்றார்.
 • குடிமக்களின் கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளித்தல், புதிதாகத் தொடங்கப்படும் தொழில்கள், தொழில்முனைவோர் மற்றும் தூய்மைப்பணி முன்னோடிகள் போன்ற பல்வேறு குறிகாட்டிகளை அறிமுகப்படுத்தியிருப்பதன் மூலம், மக்கள் பங்கேற்புக்கு கவனம் செலுத்தப்படுவது இந்த ஆண்டு உச்சத்திற்கு சென்றுள்ளது. 
 • இந்த நிகழ்ச்சியில், ஒருங்கிணைக்கப்பட்ட தூய்மை இந்தியா இயக்கம்-நகர்ப்புற கணினிவழித் தகவல் இணையதளமும் தொடங்கிவைக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அகரம் அகழாய்வில் நீள வடிவ பச்சை வண்ண பாசிகள் கண்டெடுக்கப்பட்டன
 • திருப்புவனம் அருகே கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணி பிப்.19-ம் தேதி நடந்து வருகிறது. கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன.
 • அவற்றில் செங்கல் கட்டுமானம், விலங்கு எலும்பு, மனித எலும்புகள், மண் பானைகள், ஓடுகள், சிறிய உலைகலன் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன.
 • அகரத்தில் ஆறு குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. இங்கு நீள வடிவ பச்சை நிற பாசிகள் கண்டெடுக்கப்பட்டன. இதுவரை கீழடி பகுதியில் நடந்த அகழாய்வுகளில் வட்ட மற்றும் உருண்டை வடிவ பாசிகள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டன.
 • இந்நிலையில் முதன்முறையாக நீள வடிவ பாசிகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த நீளவடிவ பாசிகள் ராஜஸ்தான் மாநிலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளன.
இரு இந்தியர்களுக்கு 'சிறந்த குடியேறிகள்' விருது
 • அமெரிக்காவின், கார்னிஜ் கார்ப்பரேஷன் நிறுவனம்,கொரோனா பாதிப்பை தடுக்கும் முயற்சிகளை சிறப்பாக மேற்கொண்ட, வெளிநாட்டு வம்சாவளியைச் சேர்ந்த, 38 பேருக்கு, 'இந்தாண்டின் சிறந்த குடியேறிகள்' என்ற விருதை அறிவித்து உள்ளது. 
 • இந்த விருதுக்கு, பத்மஸ்ரீ, புலிட்சர் விருது கள் பெற்ற, உயிரியல் அறிஞர், சித்தார்த்த முகர்ஜி, ஹார்வர்டு பல்கலையின் பொருளாதார துறை பேராசிரியர், ராஜ் செட்டி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
 • சமூக இடைவெளி, முக கவசம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை, ஊடங்களில் உணர்த்தியதற்காக, சித்தார்த்த முகர்ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கான வழிகளை கூறியதற்காக, ராஜ் செட்டிக்கு விருது வழங்கப்பட உள்ளது.
2.8 கி.மீ., நீளமுள்ள ரயிலை இயக்கி இந்திய ரயில்வே சாதனை
 • தென்கிழக்கு மத்திய ரயில்வேயின் நாக்பூர் கோட்டத்தில் நிலக்கரி, இரும்புத் தாது ஏற்றிச் செல்ல பயன்படும் சரக்கு பெட்டிகளைக் கொண்ட 4 ரயில்களை ஒன்றாக இணைத்து 2.8 கி.மீ., கொண்ட ரயிலினை உருவாக்கினர். 
 • நான்கு ஜோடி மின்சார என்ஜின்கள், 4 கார்டு வேன் ஆகியவற்றைக் கொண்ட இந்த ரயிலில் 251 காலி சரக்கு பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. 
 • சேஷ்னாக் என பெயரிடப்பட்ட இந்த நீளமான ரயிலை தென்கிழக்கு மத்திய ரயில்வே இயக்கி சாதனை படைத்தது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel