- நீலகிரி மாவட்டம் குன்னூர், தேயிலை வாரியத்துடன் இணைந்து 'உபாசி, தென்னிந்திய அளவில், சிறந்த தேயிலைக்கான கோல்டன் லீப் இந்தியா' விருதுகள், 16 ஆண்டுகளாக வழங்குகிறது.
- நீலகிரி, ஆனைமலை, வயநாடு, திருவாங்கூர், மூணார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த எஸ்டேட்கள் மற்றும் சிறு தேயிலை தொழிற்சாலைகளின் சிறந்த தேயிலை தூள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
- 16வது ஆண்டு விருதுக்கான முதற்கட்ட தேர்வு கடந்த மார்ச் மாதம் குன்னூரிலும், 2ம் நிலை தொழில்நுட்ப பகுப்பாய்வு சமீபத்தில் ஆய்வகங்களிலும் நடந்தது.
- முதல் முறையாக 'கோவிட்- 19 காரணமாக, தேயிலை சுவை, மனம், தரம் குணங்கள் அறியும் தேர்வு கவுகாத்தி, கொச்சி, கொல்கத்தாவில் நடந்தது.
- தேர்வு செய்யப்பட்ட, 62 வகை தேயிலை தூள்களில், 14 நிறுவனங்களின் 37 வகையான தேயிலை தூள் தேர்வு செய்யப்பட்டது. இதில் ஹாரிசன் மலையாளம் லிமிடெட், யுனைடெட் நீல்கிரிஸ் டீ எஸ்டேட் ஆகியவை தலா, 5 விருதுகள் பெற்றன.
உபாசி கோல்டன் லீப் விருது / UPASI GOLDEN AWARD 2020
July 04, 2020
0
Tags