Type Here to Get Search Results !

5th JULY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF


இலவச ரேஷன் பொருட்கள் வழங்க ரூ.257 கோடி நிதி ஒதுக்கீடு
  • தமிழகத்தில் குடும்ப அட்டைகளுக்கு ஜூலை மாதம் இலவச அரிசி உள்ளிட்ட பொது விநியோகத் திட்ட பொருட்களை வழங்கரூ.256 கோடியே 91 லட்சத்து 13ஆயிரத்து 420 நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் 6-ம் கட்டமாகஜூலை 31 வரை ஊரடங்குநீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கு இலவசஅரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் ஆகியவை ஜூலை மாதத்துக்கும் வழங்கப்பட உள்ளது.
  • இந்த பொருட்களைப் பெறஇன்றுமுதல் 9-ம் தேதிவரை குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே வந்து டோக்கன் வழங்கப்படுகிறது.
  • இதன்படி, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் இலவச அரிசி, குடும்பஉறுப்பினர்கள் அடிப்படையில் வழங்கப்படும் சர்க்கரை ஆகியவற்றுடன் ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் பாமாயில் ஆகியவை வழங்கப்பட உள்ளன.
கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான, உலகின் மிகப்பெரிய மையம், டில்லியில் திறப்பு
  • கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான, உலகின் மிகப்பெரிய மையம், டில்லியில், 10 நாட்களில் கட்டுமானம் முடிக்கப்பட்டு, நேற்று முதல் செயல்பாட்டிற்கு வந்தது. இங்கு ஒரே நேரத்தில், 10 ஆயிரம் பேர் சிகிச்சை பெற படுக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளது. 
  • டில்லியில், முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 
  • இதனால், டில்லியின் தெற்கு பகுதியில் உள்ள சரத்பூரில், சர்தார் படேல் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. அறிகுறிகள் இல்லாத மற்றும் லேசான பாதிப்பு உள்ளவர்களுக்கு, இங்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
  • டில்லியின் தெற்கு மாவட்ட நிர்வாகம், மத்திய உள்துறை அமைச்சக உதவியுடன், இந்த மையத்தின் கட்டுமான பணிகளை, 10 நாட்களில் நிறைவு செய்தது. உலக நாடுகளில், மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையமாக, இது அமைந்துள்ளதாக, அதிகாரிகள் கூறியுள்ளனர்.
  • இதே போல, 1000 படுக்கை வசதிகளுடன் கூடிய, சர்தார் படேல் கோவிட் மருத்துவமனையும், துவக்கப்பட்டுள்ளது. டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அருகே, விமானப்படைக்கு சொந்தமான இடத்தில், 12 நாட்களில், டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், இந்த மருத்துவமனையை அமைத்துள்ளது. 
  • இதில், ஐ.சி.யு., எனப்படும், தீவிர சிகிச்சை பிரிவில், 250 படுக்கை வசதி உள்ளது. சிறப்பு கொரோனா சிகிச்சை மையத்தை, டில்லியின் துணை நிலை கவர்னர், அனில் பைஜல், நேற்று தொடங்கி வைத்தார்.
  • இதையடுத்து, வைரசால் பாதிக்கப்பட்டோரை, அங்கு அனுமதிக்கும் பணிகள் துவங்கின.சிறப்பு மையத்தை, மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா, ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங் ஆகியோரும் பார்வையிட்டனர்.
  • இந்த மையம் 1,700 அடி நீளம் மற்றும், 700 அடி அகலத்தில், 20 கால்பந்து விளையாட்டு திடல்களின் பரப்பில் அமைந்துள்ளது. இங்கு ஒரே நேரத்தில், 10 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படும் வகையில் படுக்கை வசதிகள் கொண்டு உள்ளது. 
  • இதன் நிர்வாக பணிகளை டில்லி அரசும், சிகிச்சை அளிப்பதை, இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை மருத்துவ பிரிவினரும் கவனிக்க உள்ளனர். முதல்கட்டமாக, 2,000 படுக்கைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளை, இந்திய திபெத்திய எல்லை பாதுகாப்பு படை பிரிவினர் கையாள்வர்.
  • இதற்காக, 170 டாக்டர்கள் மற்றும் சிறப்பு நோய் நிபுணர்களும், 700 நர்ஸ்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மையம் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 
  • முதல் பிரிவில் நோயாளிகளுக்கும், அடுத்த பிரிவில் டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் உள்ளிட்டவர்களுக்கும், மூன்றாவது பிரிவு, பொது பயன்பாட்டுக்களுக்கானது என, பிரிக்கப்பட்டு உள்ளது.
  • நோயாளிகளுக்கான பிரிவு, தலா, 88 படுக்கைகளுடன், 119 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள, 100 படுக்கைகளில், 'வென்டிலேட்டர்,' பொருத்தப்பட்டு உள்ளது. 
  • இங்கு, 18 ஆயிரம், 'டன்' சக்தியுள்ள, குளிர்சாதன வசதியுடன், தரைப்பகுதியில், 'கார்பெட்' மற்றும் மேல் தளத்தில் எளிதில் சுத்தம் செய்யும் வகையில், 'வினைல்' தகடுகள் பொருத்தப்பட்டு உள்ளன. 
  • இங்கு, தனித்தனியாக 900கழிப்பறைகளும், 70 தற்காலிக கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. சிகிச்சை பெறுவோருக்காக, நுாலகம், பல்வேறு விளையாட்டு வசதிகள் உள்ளன.
பார்முலா 1 கார்பந்தயம் பின்லாந்து வீரர் போட்டாஸ் வெற்றி
  • கொரோனா அச்சத்தால் 3 மாதங்களுக்கு மேலாக தடைப்பட்டிருந்த பார்முலா1 கார்பந்தயம் நேற்று தொடங்கியது. இந்த சீசனுக்கான முதல் பந்தயமான ஆஸ்திரியா கிராண்ட்பிரி அங்குள்ள ஸ்பில்பேர்க் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டியில் ரசகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
  • 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்த இந்த போட்டியில் முதல் வரிசையில் இருந்து புறப்பட்ட மெர்சிடஸ் அணி வீரர் வால்டெரி போட்டாஸ் (பின்லாந்து) 306.452 கிலோமீட்டர் இலக்கை 1 மணி 30 நிமிடம் 55.739 நிமிடங்களில் கடந்து வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அவருக்கு 25 புள்ளிகள் கிடைத்தது.
ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலையான ஐ.சி.எப். 4200 ரயில் பெட்டிகளை தயாரித்து சாதனை படைத்துள்ளது.
  • சென்னை ஐ.சி.எப்.பில் தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகள் இந்திய ரயில் போக்குவரத்துக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 
  • அதாவது இலங்கை, மலேசியா, ஆப்கானிஸ்தான், வியட்நாம், அங்கோலா, ஜாம்பியா, தான்சானியா, நைஜீரியா உட்பட 14 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
  • 'ரயில் - 18' திட்டத்தில் 'வந்தே பாரத்' அதிவேக ரயிலுக்கு ஐ.சி.எப்.பில் நவீன தொழில் நுட்பத்தில் உலகத்தரத்தில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. ரயில் பெட்டிகள் தயாரிப்பில் ஐ.சி.எப். தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.
  • 2017 -- 18ல் 2503 பெட்டிகள்; 2018 -19ல் 3650 பெட்டிகள்; 2019 --20ல் 4200 பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது.இவ்வாண்டு முதல் முறையாக நேபாளத்துக்கு டீசலில் இயங்கும் ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன.அதிவேக 'வந்தே பாரத்' ரயில் பெட்டிகளை மேலும் தயாரிக்க ஐ.சி.எப். ரயில்வே வாரியத்தின் அனுமதியை எதிர்பார்த்துள்ளது.
ராஜஸ்தானில் பல்கலை. தேர்வுகள் அனைத்தும் ரத்து
  • 'கொரோனா நோய் தொற்று பரவுதல் அச்சம் காரணமாக மாநிலத்தில் அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இளங்கலை மற்றும் முதுகலை தேர்வுகளை ரத்து செய்வது என ராஜஸ்தான்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
  • அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெறுகின்றனர். அடுத்த சில நாட்களில் கல்வி துறை அமைச்சகம் வழங்கும் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மாணவர்கள் மதிப்பெண்கள் பெறுவார்கள், என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜெர்மன் கோப்பை கால்பந்து 20வது முறையாக பேயர்ன் மியூனிச் சாம்பியன்
  • பெர்லின் ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் பேயர் லெவர்குசன் அணியுடன் மோதிய பேயர்ன் மியூனிச் அணி 4-2 4ன்ற கோல் கணக்கில் போராடி வென்று கோப்பையை முத்தமிட்டது. 
  • கடந்த வாரம் தொடர்ந்து 8வது முறையாக பண்டெஸ்லிகா சாம்பியன் பட்டத்தை வென்ற பேயர்ன் மியூனிச், ஜெர்மன் கோப்பையையும் 20வது முறையாக கைப்பற்றி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மது பாபு பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் திருநங்கைகளுக்கு ஓய்வூதியம்
  • சமூக நலத்திட்டத்தின் கீழ் மாநில அரசால் வழங்கப்படும் 'மது பாபு பென்ஷன் யோஜனா' ஓய்வூதிய திட்டத்தில் திருநங்கைகளையும் சேர்பதாக ஒடிசா அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரும் பயனடைந்து வருகின்றனர்.
  • இந்நிலையில் இதில் மூன்றாம் பாலினத்தவர்களை சேர்க்க முதல்வர் நவீன் பட்நாயக் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் அவர்களின் வயதுக்கேற்ப ரூ.500 முதல் ரூ.900 வரை ஓய்வூதியம் கிடைக்கும் என்று மாநில அமைச்சர் அசோக் பாண்டா தெரிவித்துள்ளார்.
  • இந்த திட்டத்தின் கீழ் 6000 திருநங்கைகள் பயன்பெருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளாது. இதற்கு தேவையான நிதியுதவி ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பயனர்களுக்கு விரைவில் பணம் கிடைக்கும் என்றும் ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. 
  • மேலும் ஓய்வூதியத்தை பெற விரும்பும் திருநங்கைகள் MBPY அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் லாக்டவுன் விதிமுறைகள் ஓராண்டுக்கு நீட்டிப்பு
  • இந்தியாவில் முதல் மாநிலமாக கேரளாவில் லாக்டவுன் விதிமுறைகள் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஓராண்டுக்கு மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், மாஸ்க் அணிய வேண்டும் என்று விதிமுறைகளை கேரளா அரசு வெளியிட்டுள்ளது.
  • இதன்படி அடுத்த ஓராண்டிற்கு கேரளாவில் மக்களை கூட்டி பெரிய கூட்டங்கள் நடத்த அனுமதியில்லை.
கிராம பொருளாதாரத்தை மேம்படுத்த மாட்டு சாணத்தை கிலோ ரூ.1.50க்கு கொள்முதல் செய்ய சட்டீஸ்கர் அரசு முடிவு
  • சட்டீஸ்கரில் கடந்த ஜூன் 25ம் தேதி 'Gaudhan Nyay Yojana' என்ற திட்டத்தை முதல்வர் பூபேஷ் பாகல் தொடங்கி வைத்தார். நகரங்களில் கால்நடைகள் விபத்துகளால் உயிரிழக்கின்றன. 
  • அதுமட்டுமல்லாமல் பசுக்கள் பால் கொடுப்பதை நிறுத்திய பின்னர் மாட்டின் உரிமையாளர்களால் அவை கைவிடப்படுகின்றன. அதனால் பசு வளர்ப்பை லாபகரமான தொழிலாக மாற்றுவதற்கு முதல்வர் அறிவுறுத்தினார். 
  • அதன் அடிப்படையில் இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் மற்றும் கால்நடைகள் உரிமையாளர்களிடம் இருந்து மாட்டு சாணத்தை கொள்முதல் செய்ய அம்மாநில வேளாண்துறை முடிவெடுத்துள்ளது.
  • மாநிலத்தில் கால்நடை வளர்ப்பை ஊக்குவிப்பதும், அவற்றால் விவசாயிகள் பயனனடைவதும்தான் இந்த திட்டத்தின் நோக்கம். ஜூலை 20 முதல் ஒரு கிலோ மாட்டு சாணத்துக்கு ரூ.1.50 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வேளாண்துறை கூறியுள்ளது. 
  • மாட்டு சாணம் வீடு வீடாக சென்று சேகரிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. கால்நடைகளை பாதுகாத்தல், மண்புழு உற்பத்தியை ஊக்குவித்தல் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாட்டு சாணத்தை கொள்முதல் செய்ய முடிவெடுத்துள்ளதாக மாநில வேளாண் துறை தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அகரம் அகழாய்வில் ஒரே குழியில் 6 பானைகள் கண்டெடுக்கப்பட்டன
  • திருப்புவனம் அருகே கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வுப் பணி பிப்.19-ம் தேதி நடந்து வருகிறது. கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன. அவற்றில் செங்கல் கட்டுமானம், விலங்கு எலும்பு, மனித எலும்புகள், மண் பானைகள், ஓடுகள், சிறிய உலைகலன், எடைக் கற்கள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன.
  • அகரத்தில் ஆறு குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. இங்கு சில தினங்களுக்கு முன்பு நீள வடிவ பச்சை நிறப் பாசிகள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது ஒரே குழியில் 6 பானைகள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் இப்பகுதி சமையற்கூடமாக இருந்திருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
மதுரையில் கி.மு. மூன்றாம் ஆம் நூற்றாண்டு தமிழி எழுத்துப் பொறிக்கப்பட்ட கல்தூண் கண்டெடுப்பு
  • மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே அமைந்துள்ளது கிண்ணிமங்கலம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள ஏகநாதசுவாமி மடத்தில் இருந்த கல்தூண் ஒன்றில் கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்நிலையில் அந்த கல்தூண் ஆண்டிப்பட்டி அருகே புலிமான் கோம்பையில் கண்டெடுக்கப்பட்ட நடுகல்லுக்கு இணையானது எனவும், கல் தூணில் இதுபோன்ற தமிழி எழுத்துப் பொறிப்பு காணப்படுவது மிக முக்கியமான கண்டுபிடிப்பு எனவும் தொல்லியல் அறிஞர்கள் தெரிவித்தனர். 
  • கல்தூணில் தமிழி எழுத்து என்பது அந்த காலகட்டத்தில் தமிழர்கள் பின்பற்றிய சமயம், பண்பாடு கட்டடக்கலை ஆகியவற்றை குறிப்பிடுவதாக உள்ளது. 
  • அதுமட்டுமன்றி கல்தூணில் உள்ள தமிழி எழுத்துக்களை ஏகன் ஆதன் கோட்டம் எனவும் கூறுகின்றனர். கோட்டம் என்ற சொல் தமிழ் இலக்கியங்களில் மட்டுமின்றி பிராமி வடிவில் கிடைத்திருப்பதாகவும் கூறுகின்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel