Type Here to Get Search Results !

15th JULY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF


ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா, சத்திஸ்கர், ஹரியானா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் 14 ஜூலை, 2020 வரை 3,15,636 ஹெக்டேர் நிலப்பரப்பில் வெட்டுக்கிளிக் கட்டுப்பாடு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டன.
  • 11 ஏப்ரல், 2020 முதல் 14 ஜூலை, 2020 வரை, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்திரப்பிரதேசம் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் 1,68,315 ஹெக்டேர் நிலப்பரப்பில் வெட்டுக்கிளி வட்டார அலுவலகங்களால் கட்டுப்பாடு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டன. ஜூலை 14, 2020 வரை, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா, சத்திஸ்கர், ஹரியானா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் 1,47,321 ஹெக்டேர் நிலப்பரப்பில் மாநில அரசுகளால் கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
  • மருந்து தெளிப்பான் கருவிகள் பொருத்தப்பட்ட வாகனங்களுடன் 70 கட்டுப்பாட்டுக் குழுக்களும், 200-க்கும் அதிகமான மத்திய அரசுப் பணியாளர்களும், 50 தொழில்நுட்ப அலுவலர்களும் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் 22 ஓட்டுநர்களும் வெட்டுக்கிளிக் கட்டுப்பாடு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 15 புதிய உல்வாமாஸ்ட் தெளிப்பான்கள் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்துள்ளன.
  • அதோடு, ராஜஸ்தானில் உள்ள பார்மர், ஜெய்சால்மர், பிகானெர், நாகவுர் மற்றும் பலோடி ஆகிய இடங்களில் உயரமான மரங்கள் மற்றும் அணுகமுடியாத இடங்களில் இருக்கும் வெட்டுக்கிளிகளின் செயல்மிகு கட்டுப்படுத்துதலுக்காக 15 ஆளில்லாத விமானங்களுடன் 5 குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. பட்டியலிடப்பட்ட பாலைவனப் பகுதியில் தேவைக்கேற்ப பயன்படுத்துவதற்காக ஒரு பெல் ஹெலிகாப்டரும் அனுப்பப்பட்டுள்ளது. எம் ஐ-17 ரக ஹெலிகாப்டரைப் பயன்படுத்தி இந்திய விமானப்படையும் வெட்டுக்கிளிக்கு எதிரான நடவடிக்கையில் சோதனைகளைச் செய்து கொண்டிருக்கிறது.
  • குஜராத், உத்திரப்பிரேதசம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, சத்திஸ்கார், பீகார் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் குறிப்பிடத்தகுந்த அளவில் பயிர்ச் சேதம் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை. எனினும், ராஜஸ்தானில் சில மாவட்டங்களில் சில சிறிய அளவிலான பயிர்ச் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு; கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ் படித்தவர்களுக்கும் வாய்ப்பு - முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
  • தமிழகத்தில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்புகளில் சேர்வது குறைவாக இருப்பதை கருத்தில்கொண்டு, 6 முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள்ஒதுக்கீடு அளிப்பதற்கான அவசரச் சட்டம் கொண்டுவரப்படும் என்று முதல்வர் பழனிசாமி ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
  • இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், ஓய்வுபெற்ற நீதிபதி பொன்.கலையரசன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து, பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமீபத்தில் முதல்வர் பழனிசாமியிடம் வழங்கினர். 
  • அதில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்க பரிந்துரை அளித்திருந்ததாக கூறப்பட்டது. இந்த அறிக்கை தொடர்பாக அவசரச் சட்டம் பிறப்பிக்க அரசு முடிவு செய்திருந்தது.
  • இந்நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடந்தது. அதன்படி, நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. 
  • தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் (ஆர்டிஇ) 1 முதல் 8-ம் வகுப்பு வரை படித்து, அதன்பின் 9 முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் படித்து தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கும் இந்த 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் வாய்ப்பு வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு, பிற வகுப்பு மாணவர்களுக்கு 2.30 நிமிடம் சிறப்பு கல்வி நிகழ்ச்சி முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்
  • தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பள்ளிகள் திறக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்தநிலையில், 10ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், கல்வி தொலைக்காட்சியின் வாயிலாக திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணிநேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பையும் மற்றும் பிற வகுப்புகளின் பாடங்களுக்கான ஒளிபரப்பினையும் முதல்வர் தொடங்கி வைத்தார். 
  • அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார்.
  • இதைத்தொடர்ந்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்கள் லேப்டாப்பில் கல்வி பயில மென் உருவிலான பாடங்களை உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் வாயிலாக தரவிறக்கம் செய்யும் திட்டத்தையும் முதல்வர் துவக்கி வைத்தார்.
  • மேலும், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2020-21ம் கல்வியாண்டிற்கான கல்வி மற்றும் கற்பித்தல் ஆகியவற்றில் ஏற்படும் சிரமங்களை எதிர்கொள்ள தேவையான ஆலோசனைகள் வழங்கிட தமிழக அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் அறிக்கையை, வல்லுநர் குழுவின் தலைவரான பள்ளி கல்வி ஆணையர் சிஜிதாமஸ் வைத்யன் முதல்வர் எடப்பாடியிடம் சமர்ப்பித்தார்.
சா்வதேச உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து அறிக்கை 2020
  • இந்தியாவில் கடந்த 2004-06 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 21.7 சதவீதம் போ ஊட்டச்சத்து குறைபாடு உடையவா்களாக இருந்தனா். 
  • இது 2017-19 காலகட்டத்தில் 14 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உடையோா் எண்ணிக்கை சுமாா் 6 கோடி குறைந்துள்ளது.
  • நாட்டில் ஒட்டுமொத்தமாக 18.92 கோடி போ ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளனா். நாட்டில் உள்ள சிறுவா்களில் சிலரே வளா்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆனால், உடல் பருமனால் அதிக அளவிலான சிறுவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
  • நாட்டில் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞா்களின் (18 வயதுக்கு மேல்) எண்ணிக்கை கடந்த 2012-ஆம் ஆண்டில் 2.52 கோடியாக இருந்தது. இது கடந்த 2016-ஆம் ஆண்டில் 3.43 கோடியாக அதிகரித்துள்ளது. 
  • பிறந்த பிறகு முதல் 5 மாதங்கள் வரை தாய்ப்பாலை மட்டுமே உணவாகப் பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த 2012-ஆம் ஆண்டில் 1.12 கோடியாக இருந்தது. இது கடந்த 2019-ஆம் ஆண்டில் 1.39 கோடியாக அதிகரித்துள்ளது.
  • ஐந்து வயதுக்குள்பட்ட சிறுவா்களில் வளா்ச்சி குறைந்து காணப்படுவோா் எண்ணிக்கை கடந்த 2012-ஆம் ஆண்டில் 6.2 கோடியிலிருந்து கடந்த ஆண்டில் 4.03 கோடியாகக் குறைந்துள்ளது. 
  • நாட்டில் ரேஷன் கடைகள் மூலமாக உணவுப் பொருள்கள் மக்களுக்கு விநியோகிக்கப்படுவது ஏழ்மையைக் குறைக்க உதவியுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக இளைஞர் திறன் தினம்
  • திறன் இந்தியா திட்டம் கடந்த 2015-ம் ஆண்டு துவக்கப்பட்டது. 2022க்குள், நாடு முழுவதும், 40 கோடி இளைஞர்களின் திறனை அதிகரிக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு துவக்கப்பட்ட இத்திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
  • இந்நிலையில் ஆண்டு தோறும் ஜூலை 15-ம் தேதி உலக இளைஞர் திறன் தினம் கொண்டாடப்படுகிறது.
மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட பிரக்யதா வழிகாட்டுதல்கள் ஆன்லைன் வகுப்புகளுக்கு விதிமுறை: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டது.
  • நாடு முழுவதும் பள்ளிகளில் நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் விதிமுறைகளை வகுத்து வெளியிட்டுள்ளது.
  • புது தில்லி: நாடு முழுவதும் பள்ளிகளில் நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் விதிமுறைகளை வகுத்து வெளியிட்டுள்ளது.கரோனா தொற்றில் இருந்து காக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகள் குறித்து பெற்றோர் உள்பட பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் எழுந்தன.சில பள்ளிகளில், வழக்கமான பள்ளி நேரம் வரை வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுவதாகவும், இதனால் மாணவ, மாணவிகளுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படுவதால், ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குபடுத்துமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
  • இந்த கோரிக்கைகளை ஏற்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை வகுத்து இன்று வெளியிட்டுள்ளது.இன்று வெளியிடப்பட்டிருக்கும் விதிமுறைகளில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இன்று வெளியிட்டிருக்கும் விதிமுறைகளில், எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளுக்கு ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தலா 45 நிமிடங்கள் என இரண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம்.அதே போல 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தினமும் தலா 45 நிமிடங்கள் என 4 ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.இதனை நெறிபடுத்தும் வகையில், பள்ளிகளில் எந்தெந்த வகுப்புகளுக்கு எத்தனை ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம் என்ற விதிமுறையை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.901 கோடி ஒதுக்கீடு
  • பஞ்சாயத்து ராஜ் சட்டங்களின்படி மத்திய அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேரடியாக மானியங்களை வழங்கி வருகிறது. இந்த மானியங்கள் ஒதுக்கீடு 15-ஆவது நிதி ஆணையம் அளிக்கும் பரிந்துரைகளின்படி அளிக்கப்படுகிறது. 
  • இதில் கூடுதலாக ஜல் ஜீவன் மிஷன், தூய்மை இந்தியா திட்டம் போன்றவைகளில் 2020-21 ஆம் ஆண்டுகளுக்கான இலக்குகளை நிறைவேற்றும் பொருட்டு மத்திய ஜல் சக்தி மற்றும் மத்திய குடிநீா் துறை ஆகிய அமைச்சகங்கள் அளித்த ஆலோசனைகளின் அடிப்படையிலும் மத்திய நிதியமைச்சகம் இந்த நிபந்தனை மானியத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.
  • இதில் 27மாநிலங்களுக்கு முதல் தவணையாக மொத்தம் ரூ. 15,177 கோடி புதன்கிழமை (ஜூலை 15) விடுவித்துள்ளது. இதில் தமிழகத்திற்கு ரூ. 901.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் கா்நாடகத்துக்கு ரூ.804.25 கோடியும் ஆந்திரத்துக்கு ரூ. 656.25 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. 
  • அதிகபட்சமாக உத்தர பிரதேசத்துக்கு ரூ. 2,438 கோடி மானியம் அளிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் இந்த நிதியைப் பெற்ற நாளிலிருந்து 10 தினங்களுக்குள் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு வழங்கவேண்டும் என்றும் மத்திய நிதியமைச்சகம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.
ரூ.300 கோடியில் உடனடியாக ஆயுதங்கள் வாங்கி கொள்ள இந்திய ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரம்
  • பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டிஏசி எனப்படும் தேசிய பாதுகாப்பு கொள்முதல்கவுன்சில் கூட்டம் புதன்கிழமை நடந்தது. 
  • இந்த கூட்டத்தில் இநதியாவின் வடக்கு எல்லைப்பகுதிகளில் நிலவும் பதற்றமான சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, அங்கு எல்லைகளை பாதுகாப்பதற்கு ஆயுதங்களை வலுப்படுத்த வேண்டும் என்று ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டது.
  • இதையடுத்து அவசர காலத்திட்டப்படி ரூ.300 கோடி ரூபாய் மதிப்பில் ஆயுதங்களை உடனே கொள்முதல் செய்து கொள்ள பாதுகாப்பு துறை அமைச்சகம் இந்திய ராணுவத்திற்கு அனுமதி அளித்தது.
ஜியோ நிறுவனத்தில் கூகுள் நிறுவனம் ரூ.33,373 கோடி முதலீடு
  • ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ் நிறுவனத்தில் ஃபேஸ்புக், இண்டெல், குவால்கம் உள்ளிட்ட 12 நிறுவனங்கள் ஏற்கெனவே முதலீடு செய்துள்ளன. இந்நிலையில், கூகுள் நிறுவனமும் ரூ.33,373 கோடியை ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. 
  • இதன் மூலமாக ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ் நிறுவனத்தில் அந்நிய நிறுவனங்களின் ஒட்டுமொத்த முதலீடு ரூ.1.52 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதுவரை ஜியோ நிறுவனம் தன் 32.84 சதவீதப் பங்குகளை விற்ன் மூலமாக ரூ.1.52 லட்சம் கோடிக்கு அதிகமாக முதலீடுகளை ஈா்த்துள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கி துணை தலைவராக இந்திய தேர்தல் ஆணையர் அசோக் லவாசா நியமனம்
  • ஆசிய அபிவிருத்தி வங்கியின் துணை தலைவராக இந்திய தேர்தல் ஆணையர் அசோக் லவாசா நியமிக்கப்பட்டுள்ளார். தனியார் பொதுத்துறை வங்கியான ஆசிய அபிவிருத்தி வங்கி 1966-ல் நிறுவப்பட்டது. 
  • இதில் 68-க்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இவ்வங்கியின் துணை தலைவராக தலைமை தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவாசா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • 1980-ம் ஆண்டு அரியானா மாநில ஐ.ஏ.எஸ். கேடரான அசோக் லவாசா கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இவர் தற்போதைய தலைமை தேர்தல் ஆணையராக உள்ள சுனில் ஆரோரா ஓய்வு பெற்றபின் சீனியரிட்டி படி அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக வரவுள்ளார்.
இந்தியா - ஐரோப்பிய யூனியன் 15-வது உச்சி மாநாடு காணொலி காட்சி மூலம் தொடங்கியது
  • அப்போது பேசிய பிரதமர் மோடி; இந்தியாவும்-ஐரோப்பிய நாடுகளும் இயற்கையான கூட்டாளிகள். சுதந்திரம், மனிதாபிமானம் உள்ளிட்ட பல விஷயங்களில் இரு நாடுகளும் ஒரே மாதிரியானவை. உலகின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு நமது கூட்டுப் பங்களிப்பு முக்கியமானது. 
  • இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க ஐரோப்பிய முதலீடு, தொழில்நுட்பத்தை எதிர்பார்க்கிறோம் என கூறினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel