- இந்தியாவில் கடந்த 2004-06 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 21.7 சதவீதம் போ ஊட்டச்சத்து குறைபாடு உடையவா்களாக இருந்தனா்.
- இது 2017-19 காலகட்டத்தில் 14 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உடையோா் எண்ணிக்கை சுமாா் 6 கோடி குறைந்துள்ளது.
- நாட்டில் ஒட்டுமொத்தமாக 18.92 கோடி போ ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளனா். நாட்டில் உள்ள சிறுவா்களில் சிலரே வளா்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆனால், உடல் பருமனால் அதிக அளவிலான சிறுவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
- நாட்டில் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞா்களின் (18 வயதுக்கு மேல்) எண்ணிக்கை கடந்த 2012-ஆம் ஆண்டில் 2.52 கோடியாக இருந்தது. இது கடந்த 2016-ஆம் ஆண்டில் 3.43 கோடியாக அதிகரித்துள்ளது.
- பிறந்த பிறகு முதல் 5 மாதங்கள் வரை தாய்ப்பாலை மட்டுமே உணவாகப் பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த 2012-ஆம் ஆண்டில் 1.12 கோடியாக இருந்தது. இது கடந்த 2019-ஆம் ஆண்டில் 1.39 கோடியாக அதிகரித்துள்ளது.
- ஐந்து வயதுக்குள்பட்ட சிறுவா்களில் வளா்ச்சி குறைந்து காணப்படுவோா் எண்ணிக்கை கடந்த 2012-ஆம் ஆண்டில் 6.2 கோடியிலிருந்து கடந்த ஆண்டில் 4.03 கோடியாகக் குறைந்துள்ளது.
- நாட்டில் ரேஷன் கடைகள் மூலமாக உணவுப் பொருள்கள் மக்களுக்கு விநியோகிக்கப்படுவது ஏழ்மையைக் குறைக்க உதவியுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
International Food Safety and Nutrition Report 2020 / சா்வதேச உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து அறிக்கை 2020
July 15, 2020
0
Tags