Type Here to Get Search Results !

TNPSC NOTES -மாவட்டம் பிரிப்பு


  • *நவம்பர் 2019*-இல் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து 1.செங்கல்பட்டு மாவட்டம்.
  • *விழுப்புரம்* மாவட்டத்தைப் பிரித்து-2.கள்ளக்குறிச்சி மாவட்டம்
  • *திருநெல்வேலி* மாவட்டத்தைப் பிரித்து-3.தென்காசி மாவட்டம்
  • *வேலூர்* மாவட்டத்தைப் பிரித்து 4.இராணிப்பேட்டை மாவட்டம் மற்றும் 5.திருப்பத்தூர் மாவட்டம் என *5 புதிய* மாவட்டங்கள் நிறுவப்பட்டன.
  • இப்புதிய *மாவட்டங்களுக்கு 16 நவம்பர் 2019 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்*.
  • *பின்னர் மார்ச் 24, 2020* அன்று *நாகப்பட்டினம்* மாவட்டத்தைப் பிரித்து, புதியதாக 6.மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
1947 ஆகத்து மாதம் இந்திய விடுதலை பெற்ற பின்னர்:
  • பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணமானது சென்னை மாநிலம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. 1953 முதல் 1956 வரையிலான மாநில எல்லைகள் சீரமைப்புகளின் வாயிலாக தற்போதைய எல்லைகள் உருவாக்கப்பட்டன. சென்னை மாநிலமானது, 1969ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு என மறுபெயரிடப்பட்டது. *முந்தைய சென்னை மாகாணமானது 13 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது*. அவையாவன: செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, மெட்ராஸ், மதுரை, நீலகிரி, வட ஆற்காடு, இராமநாதபுரம், சேலம், தென் ஆற்காடு, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி ஆகியனவாகும். இம்மாவட்டங்கள் கீழ்க்காணும் வகையில் பிரிக்கப்பட்டு தற்போதைய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

  • *1966: சேலம்* மாவட்டத்தைப் பிரித்து தருமபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
  • 1974: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைப் பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
  • *1979: கோயம்புத்தூர்* மாவட்டத்தைப் பிரித்து ஈரோடு மாவட்டம் உருவாக்கப்பட்டது.
  • *1985: மதுரை மற்றும் இராமநாதபுரம்* மாவட்டங்களைப் பிரித்து புதிதாக சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
  • *1985: மதுரை* மாவட்டத்தைப் பிரித்து திண்டுக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
  • *1986: திருநெல்வேலி* மாவட்டத்தைப் பிரித்து தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
  • *1989: வட ஆற்காடு* மாவட்டத்தைப் பிரித்து புதிதாக வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
  • *1991: தஞ்சாவூர்* மாவட்டத்தைப் பிரித்து புதிதாக நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
  • *1993: தென் ஆற்காடு* மாவட்டம், புதிதாக விழுப்புரம், கடலூர் ஆகிய இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது.
  • *1995: திருச்சிராப்பள்ளி* மாவட்டத்தைப் பிரித்து புதிதாக கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
  • *1996: மதுரை* மாவட்டத்தைப் பிரித்து புதிதாக தேனி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
  • *1997: சேலம்* மாவட்டத்தைப் பிரித்து புதிதாக நாமக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
  • *1997: முந்தைய செங்கல்பட்டு* மாவட்டமானது, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது.
  • *2004: தர்மபுரி* மாவட்டத்திலிருந்து புதிதாக கிருட்டிணகிரி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
  • *2007: பெரம்பலூர்* மாவட்டத்தைப் பிரித்து புதிதாக அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
  • *2009: கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு* மாவட்டங்களிலிருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு புதிதாக திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
  • *2019: விழுப்புரம்* மாவட்டத்தைப் பிரித்து புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டம், (2019, சனவரி 8 ஆம் நாள் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரித்து, தமிழகத்தின் 33 வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது) மற்றும் *காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து புதிதாக செங்கல்பட்டு மாவட்டமும் (2019 ஆம் ஆண்டு சூலை மாதம் 18 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது) மற்றும் *திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து புதிதாக தென்காசி மாவட்டமும் 2019 ஆம் ஆண்டு சூலை மாதம் 18 ஆம் தேதி  உருவாக்கப்பட்டது. *வேலூர் மாவட்டத்தைப் பிரித்து புதியதாக திருப்பத்தூர் மாவட்டமும் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டமும் 2019* ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதி உருவாக்கப்பட்டது.
  • *2020: நாகப்பட்டினம்* மாவட்டத்திலிருந்து புதியதாக மயிலாடுதுறை மாவட்டம் ஆனது மார்ச் 24, 2020 அன்று உருவாக்கப்பட்டது.

மாவட்டம் பிரிப்பு கோரிக்கை:
  • அதிகரிக்கும் *மக்கள்தொகையை கணக்கில் கொண்டும்* மற்றும் நிர்வாக வசதிகளுக்காகவும் மாவட்டம் பிரிப்பு கோரிக்கை அதிகரித்துள்ளது.
  • *கோயம்புத்தூர்*மற் றும் *திருப்பூர்* மாவட்டங்களை பிரித்து *பொள்ளாச்சியை* தலைமையிடமாக கொண்டு உருவாக்க வேண்டும்.
  • அதேபோல் *ஈரோடு* மாவட்டத்தை பிரித்து *கோபிச்செட்டிப்பாளையம்* தலைமையகமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
  • *கும்பகோணத்தை* தலைமையிடமாக கொண்டு கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் மற்றும் கும்பகோணம் ஆகிய நகரங்களை உள்ளடக்கி புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும். 
  • *தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம்* மத்திய பிராந்தியத்தில் மூன்றாவது பெரிய நகரமாகவும், *150 ஆண்டுகள் பழமையான நகராட்சியில் ஒரு தலைமை நீதித்துறை நீதிமன்றம் மற்றும் முக்கிய அரசாங்க அலுவலுகங்கள் உள்ளன*.
  • *திருவண்ணாமலை* மாவட்டத்தை இரண்டாக பிரித்து ஆரணி, போளூர், வந்தவாசி, சேத்துப்பட்டு, செய்யார், வெம்பாக்கம், சமுனாமரத்தூர் ஆகிய தாலுகாக்களை உள்ளடக்கி *ஆரணி தலைமையில்* விரைவில் புதிய மாவட்டம் உருவாக்கப்படும் ...என *இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்* தெரிவித்தார்.
  • *வடக்கு சென்னை* மக்கள் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சென்னையை இரண்டாக பிரித்து, *வடசென்னையை* புதிய மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி வருகிறது.
  • *சேலம்* மாவட்டத்திலிருந்து பிரித்து *எடப்பாடியை* தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
  • *திருவள்ளூர்* மாவட்டத்தை பிரித்து *பொன்னேரி தலைமையில்* புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
  • *தஞ்சாவூர்* மாவட்டத்தை பிரித்து *பட்டுக்கோட்டை தலைமையில்* புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என *பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் கோரிக்கை வைத்துள்ளார்.
  • *திருவாரூர்* மாவட்டத்தை பிரித்து மன்னார்குடி, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய பகுதிகளை உள்ளடக்கி *மன்னார்குடி தலைமையில்* புதிய மாவட்டம் அறிவிப்பு வெளியிட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel