Type Here to Get Search Results !

சன்சத் ரத்னா விருது / SANSAD RATNA AWARD 2020

 • கடந்த 2010-ம் ஆண்டு சென்னையில் உள்ள ப்ரைம் பாயின்ட் பவுண்டேஷன் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனமும், இந்த நிறுவனம் வெளியிடும் 'ப்ரீசென்ஸ்' இணைய மாத இதழும் சன்சத் ரத்னா விருது திட்டத்தை ஏற்படுத்தின.
 • நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கும் எம்.பி.க்களுக்கு விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும் நோக்கம் என்ற திட்டத்தை உருவாக்கி சன்சத் ரத்னா விருது விழா நடத்திடத் தூண்டுகோலாக இருந்தது.
 • 2010-ம் ஆண்டில் முதல் விருது விழாவை முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் தொடங்கி வைத்தார். விருதுகள் பெறுபவர்கள் சிறந்த நாடாளுமன்ற வாதிகளால் வெளிப்படைத் தன்மையுடன் மக்களவைச் செயலகமும் பி.ஆர்.எஸ். இந்தியா எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனமும் அளிக்கும் தரவுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர்.
 • பிரைம் பாயின்ட் பவுண்டேஷன் மற்றும் சன்சத் ரத்னா விருதுகள் குழுவின் தலைவர் கே.சீனிவாசன் கருத்துப்படி, தேர்வு குழு மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை சன்சத் மகா ரத்னா விருதுக்கு பரிந்துரைத்துள்ளது.
 • 16வது மக்களவையின் செயல்திறன் தரத்தின் அடிப்படையில் இந்த மதிப்புமிக்க விருது வழங்கப்படுள்ளது. இந்த விருது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்படுகிறது. 
 • 17ம் மக்களவையின் உறுப்பினர்களின் செயல் திறன் அடிப்படையில், சன்சத் ரத்னா விருது 2020 பெற 8 மக்களவை உறுப்பினர்களும், 2 மாநிலங்களவை உறுப்பினர்களும், ஒரு நாடாளுமன்ற நிலைகுழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
 • 2020-ம் ஆண்டுக்கான சன்சத் ரத்னா விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட எம்.பி.க்களின் பட்டியலை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் வெளியிட்டார்.
 • இந்த தேர்வு குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான என்.கே. பிரேம சந்திரன் (கேரளா) மற்றும் ஸ்ரீ ரங் அப்பா பார்னே (மகாராஷ்ட்ரா) ஆகியோரும் உள்ளனர். மூவரும் ஏற்கெனவே நாடாளுமன்றப் பணிப் பங்களிப்பைப் போற்றத்தக்க வகையில் வழங்கி கடந்த மக்களவையில் சன்சத் ரத்னா விருதுகள் பெற்று உயர்ந்தவர்கள் என்பது நினைவு கூறத்தக்கது.
சன்சத் மகா ரத்னா விருதுகள்
 1. பார்த்ருஹரி மஹ்தாப் (பி.ஜே.டி, கட்டாக், ஒடிசா)
 2. சுப்ரியா சூலே (என்.சி.பி, பாரமதி, மகாராஷ்டிரா)
 3. ஷ்ரீ ரங் அப்பா பார்னே (சிவசேனா, மாவல், மஹராஷ்டிரா)
 • ஆகிய மூவருக்கும் 16- வது மக்களவையில் தொடர்ச்சியான தரமான செயல்திறனுக்காக ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுரை வழங்கப்படும் 'சன்சத் மகா ரத்னா' விருது வழங்கப்படுகிறது. .
நிலைக்குழு
 • வேளாண்மை துறை தொடர்பான நிலைக்குழுவுக்கு சன்சத் ரத்னா விருது 2020 வழங்கப்படுகிறது. இந்த நிலைக்குழு நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையிலும் மற்றும் இந்த குழு நடத்திய அமர்வுகளின் அடிப்படையிலும் இந்த குழு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பி சி காடிகவுடர் (பாஜக, பாகல்கோட் கர்நாடகா) இந்த குழுவின் தலைவராக உள்ளார்.
மக்களவை
 • 17 ஆம் ஆண்டு மக்களவையின் முதல் ஆண்டின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு எட்டு மக்களவை உறுப்பினர்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் சன்சத் ரத்னா விருதுகள் 2020 ஐப் பெறுவார்கள்.
 • சுப்ரியா சுலே (என்.சி.பி, பாரமதி, மகாராஷ்டிரா) 17 வது மக்களவையின் முதல் ஆண்டில் விவாதங்கள், கேள்விகள் மற்றும் தனியார் மசோதாக்களில் தனது ஒட்டுமொத்த செயல்திறனுக்காக சன்சத் ரத்னா 2020 விருதைப் பெறுகிறார்.
 • டாக்டர் ஹீனா கேவிட் (பி.ஜே.பி, நந்தூர்பார் , மகாராஷ்டிரா ) பெண் உறுப்பினர்களில் சிறந்த பணியாற்றியதற்கான சன்சத் ரத்னா விருதினை பெறுகிறார்.
 • டாக்டர் அமோல் ராம்சிங் கோலி (தேசியவாத காங்கிரஸ், ஷிர்பூர், மகாராஷ்டிரா) மற்றும் டாக்டர் சுபாஷ் ராமராவ் பாம்லே (பாஜக, தூலே,மகாராஷ்டிர ) ஆகியோர் முதல்முறை உறுப்பினர்கள் மற்றும் அதிக கேள்விகள் பிரிவில் சன்சத் ரத்னா விருதுகள் பெறுகிறார்கள்.
 • இவர்களை தவிர சசி தரூர் (காங்கிரஸ், திருவனந்தபுரம், கேரளா), நிஷிகாந்த் துபே (பாஜக, கோடா, ஜார்கண்ட்), அஜய் மிஸ்ரா (பாஜக, கேரி, உத்தரப்பிரதேசம்) மற்றும் ராம் மோகன் நாயுடு (தெலுங்கு தேசம், ஸ்ரீகாகுளம், ஆந்திரா) ஆகியோர் ஒட்டுமொத்த தரமான செயல்திறன் மற்றும் தனிப்பட்ட முயற்சிகளுக்காக சன்சத் ரத்னா சிறப்பு விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
மாநிலங்களவை
 • விஷம்பர் பிரசாத் நிஷாந்த் (உ.பி. சமாஜ்வாதி கட்சி), மற்றும் சாயா வர்மா (சத்தீஸ்கர், காங்கிரஸ்) ஆகியோர் மாநிலங்களவையில் கடந்த ஓராண்டில் ஆற்றிய பல்முனைத் திறன்களுகாக சன்சத் ரத்னா விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel