Type Here to Get Search Results !

27th JUNE 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF



2023 ஆம் ஆண்டில் விண்வெளி நடைப்பயணத்தில் முதல் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்ல ரஷ்யா அறிவித்துள்ளது.
  • அமெரிக்காவின் கூட்டாளருடனான புதிய ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ், 2023 ஆம் ஆண்டில் விண்வெளிப் பாதையில் முதல் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்வதாக ரஷ்யாவின் எனர்ஜியா விண்வெளி நிறுவனம் அறிவித்துள்ளது. எனர்ஜியா விண்வெளி சாகசங்களுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

கூட்டுறவு வங்கி அவசர சட்டம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்
  • நாடு முழுதும், 1,482 நகர கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன. இவற்றில், 8.6 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களின், 4.85 லட்சம் கோடி ரூபாய், 'டிபாசிட்' உள்ளது. 
  • இவற்றின் நிர்வாகம், அந்தந்த மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. சமீப காலமாக, பஞ்சாப் மற்றும் மஹாராஷ்டிர மாநிலங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் முறைகேடு நடந்தது. இதனால், அந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள், தங்கள் பணத்தை எடுக்க முடியாமல் பாதிக்கப்பட்டனர்.இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கூட்டுறவு வங்கிகளின் நிர்வாகத்தை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு, வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் செய்து, சமீபத்தில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
  • இந்த அவசர சட்டத்துக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.
  • கூட்டுறவு வங்கிகளின் நிர்வாகத்தை மேம்படுத்தவும், வாடிக்கையாளர்களின் நலனை பாதுகாக்கவும், இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • அதேநேரத்தில், மாநில அரசுகளின் கூட்டுறவு சட்டத்தின் கீழ் இயங்கும் மாநில பதிவாளர் கூட்டுறவு சங்கத்தின் அதிகாரத்துக்கு, இந்த சட்டம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
ஹரிதா ஹராம் திட்டத்தின் மூலம் பசுமை தெலுங்கானா உருவாக்க திட்டம்
  • தெலுங்கானாவில் மரங்களை அதிகமாக வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் ஹரிதா ஹராம் திட்டம் துவங்கப்பட்டு, தற்போது மாநிலத்தில் பலரும் மரக்கன்றுகளை வளர்க்க துவங்கியுள்ளனர்.
  • தெலுங்கானா மாநிலம் பசுமையாக இருக்கவும், மாநிலத்தின் வனப்பகுதியை அதிகரிக்கும் பொருட்டு, அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் ஹரிதா ஹராம் திட்டத்தை துவக்கினார். இந்த திட்டத்தின் மூலமாக 5 கட்டங்களாக 182 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டது. 
  • இந்நிலையில் கோலப்பள்ளி மண்டலத்தின் இஸ்ரஜ்பள்ளியில் கிராம வனப்பூங்காவிற்கு மாநில நலத்துறை அமைச்சர் கொப்புலா ஈஸ்வர் அடித்தளம் நாட்டினார். அவர் கூறுகையில், மரங்கள் வளர்ப்பதை மக்கள் தங்கள் சமூக பொறுப்பாக கருத வேண்டும்.
  • மேலும் வனப்பகுதியை 33 சதவீதமாக உயர்த்துவதே மாநில அரசின் நோக்கம். தற்போது 6 வது கட்டத்தில் 30 கோடி மரங்கள் நடவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க Dexamethasone மருந்துகளை பயன்படுத்த ஒப்புதல்
  • கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க மலிவான ஸ்டீராய்டு மருந்து டெக்ஸாமெதாசோனைப் பயன்படுத்த மத்திய அரசாங்கம் அனுமதித்துள்ளது. 
  • கொரோனா நோயாளிகள் டெக்ஸாமெதாசோன் (Dexamethasone) என்ற மருந்தின் பயன்பாட்டிலிருந்து மீண்டு வருகிறார்கள் என்பதற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக இங்கிலாந்தில் உள்ள விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 
  • டெக்ஸாமெதாசோன் என்ற ஸ்டீராய்டு மூலம் தீவிர நோயாளிகளின் இறப்பு விகிதம் மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது என்று கூறபப்டுகிறது. இந்த மருந்து பற்றி விரைவில் ஒரு ஆய்வுக் கட்டுரையும் வெளியிடப்படும்.
கீழ்பென்னாத்தூர் அடுத்த நீலந்தாங்கல் கிராமத்தில் பழங்கால ஓவியம் கண்டுபிடிப்பு
  • கீழ்பென்னாத்தூர் அடுத்த நீலந்தாங்கல் கிராமத்தில் பழங்கால ஓவியம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பண்டைய கால ஓவியம் சொரட்டுக்கோள் மலை அடிவார பாறை பகுதியில், சிவப்பு மற்றும் வெள்ளை பூச்சுகளால் ஆன பழைய ஓவியங்கள் வரையப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். 
  • இங்கு கிடைத்த சிவப்புநிற ஓவியங்கள் புதியகற்கால பாணியை ஒத்துள்ளது. இந்த ஓவிய தொகுப்பிலேயே பெருங்கற்காலத்தைச் சேர்ந்த வெள்ளை நிற பூச்சுகளால் ஆன ஒவியங்களும் உள்ளன.
  • அதில், விலங்குகளை வேட்டையாடும் உருவம், ஆயுதம் வைத்துள்ள வேட்டையாடும் மனிதன் உள்ளிட்ட பல ஓவியங்களும், கோலம் மற்றும் எழுத்துக்களைப் போன்ற பிற்கால ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன. 
  • வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த பல ஓவியங்கள் இப்பகுதியில் கிடைத்துவருகின்றன. செத்தவரை, பன்னியூர், வேட்டவலம் போன்ற புகழ்பெற்ற ஓவியங்கள் உள்ள பகுதிகளின் வரிசையில் நீலந்தாங்கல் ஒவியமும் தொல்லியல் முக்கியத்துவம் பெறுகின்றது. 
  • இது போன்ற ஓவியங்களை பாதுகாத்து, அடுத்து வரும் தலைமுறைகள் அறியும்படி செய்ய வேண்டும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel