2,300 ஆண்டு பழமையான ஊது உலை: கொடுமணல் அகழாய்வில் கண்டுபிடிப்பு
- திருப்பூர் அருகே, நொய்யல் கரையில் அமைந்துள்ள கொடுமணல் அகழாய்வில், கனிமங்கள் உருக்கு தொழிற்சாலைக்கான ஊது உலை கட்டமைப்பு, தமிழ்ப்பிராமி எழுத்துடன் கூடிய ஓடு என, பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளன.
- திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையில், உள்ள கொடுமணலில், பழமையான வாழ்விடம், பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் உள்ளன. இங்கு, எட்டாவது கட்டமாக, தமிழக தொல்லியல் துறையால், அகழாய்வு பணிகள், நடந்து வருகின்றன.
- இந்த ஆய்வில், 2,300 ஆண்டு பழமையான, தொல் பொருட்கள் ஆயிரக்கணக்கில் கிடைத்துள்ளன. மேலும், பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஐந்து நாணயங்கள், தங்கம், தாமிரம், கல்மணிகள், ஆபரண உற்பத்தி தொழிற்சாலை ஆகியவற்றை பார்க்கையில், மேலை நாடுகளுடன் வணிக தொடர்பு உறுதியாகி உள்ளது.
- முக்கியமாக, கனிமங்களை உருக்கி, கருவிகள், ஆபரணங்கள் உற்பத்தி செய்ததற்கான, சுடுமண் அடுப்பு, சுவர் மற்றும் ஊது உலை எனப்படும் கொல்லு பட்டறை அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது.இதுவரை கிடைக்காத பெயராக, 'அகூரவன்' என்ற தமிழ் பிராமி எழுத்து ஓடு கிடைத்துள்ளது.
- இது ஒரு இனக்குழு தலைவர் பெயராக இருக்கலாம். அணிகலன் துண்டுகள், வண்ண கல் மணிகள், சங்கு வளையல்கள் மற்றும் விலங்கினங்களின் தலை, எலும்பு கூடுகளும் கிடைத்து வருகின்றன.
- முற்றத்துடன் கூடிய இரு கல் அறைகளுடன் இறந்தவர்களுக்கான வீடு, இடுதுளை, குத்துக்கல் என சிறப்பான கட்டமைப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஈமச்சின்னம் உள்ள பகுதியில், ஆறு சுடுமண் ஜாடிகள், சூது பவளம் என கிடைத்து வருகிறது.
இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து போட்டித் தொடரில் லிவர்பூல் அணி முதல்முறையாக சாம்பியன் பட்டம்
- இங்கிலாந்தில் நடைபெறும் இந்த பிரபலமான தொடரில் மொத்தம் 20 அணிகள் லீக் ஆட்டங்களில் விளையாடின. ஒவ்வொரு அணியும் மற்ற 19 அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டிய நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடைசி கட்ட ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டன.
- வைரஸ் தொற்று அபாயம் சற்று தணிந்த பின்னர் போட்டிகள் மீண்டும் தொடங்கி நடந்தன. புள்ளிப் பட்டியலில் லிவர்பூல் அணி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது.
- இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் இரண்டாவது இடத்தில் இருந்த மான்செஸ்டர் சிட்டி அணி 1-2 என்ற கோல் கணக்கில் செல்சியா அணியிடம் தோல்வியைத் தழுவியதை அடுத்து, லீவர்பூல் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவது உறுதியானது.
- அனைத்து அணிகளும் தலா 31 லீக் ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில் லிவர்பூல் அணி 86 புள்ளிகளுடன் (28 வெற்றி, 2 டிரா, 1 தோல்வி) முதலிடத்தில் கம்பீரமாக அமர்ந்துள்ளது.
- மான்செஸ்டர் சிட்டி (63 புள்ளி), லெய்ஸ்டர் சிட்டி (55), செல்சியா (54) அடுத்த இடங்களில் உள்ளன. எஞ்சியுள்ள 7 ஆட்டங்களில் மான்செஸ்டர் அணி தொடர்ச்சியாக வென்றாலும், லிவர்பூல் அணியை முந்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
- 1992ல் இந்த தொடர் தொடங்கியதில் இருந்து முதல் முறையாக சாம்பியனான மகிழ்ச்சியை லிவர்பூல் அணி வீரர்களும், ரசிகர்களும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
ஸ்விஸ் வங்கிகளில் சேமிப்புக் கணக்கு: 77-ஆவது இடத்தில் இந்தியா
- ஸ்விஸ் தேசிய வங்கி கடந்த 2019-ஆம் ஆண்டுக்கான புள்ளி விவரங்கள் கொண்ட அறிக்கையை அண்மையில் வெளியிட்டது. அதன்படி, இந்தியாவைச் சோந்த தனிநபா்களும் நிறுவனங்களும் ஸ்விட்சா்லாந்திலுள்ள வங்கிகளிலும் இந்தியாவிலுள்ள அதன் கிளை வங்கிகளிலும் ரூ.6,625 கோடி சேமிப்பு வைத்துள்ளனா். இது கடந்த 2018-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5.8 சதவீதம் குறைவாகும்.
- ஸ்விஸ் வங்கிகளில் அதிக அளவிலான சேமிப்பு வைத்துள்ள வெளிநாட்டவா்களின் பட்டியலில் இந்தியா 77-ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் பிரிட்டன், அமெரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், பிரான்ஸ், ஹாங்காங் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் உள்ளன.
- இந்தப் பட்டியலில் பிரிட்டன், அமெரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், பிரான்ஸ், ஹாங்காங் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் உள்ளன. அந்நாட்டைச் சோந்த வாடிக்கையாளா்கள் மட்டும் வங்கிகளின் 50 சதவீத சேமிப்புக் கணக்குகளைக் கொண்டுள்ளனா்.
- இந்தப் பட்டியலில் முதல் 30 இடங்களில் உள்ள நாடுகள் 90 சதவீத சேமிப்புகளைக் கொண்டுள்ளன. ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வெளிநாட்டவா்களின் ஒட்டுமொத்த சேமிப்பில் இந்தியா்களின் பங்கு வெறும் 0.06 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது. இந்தப் பட்டியலில் கடந்த 2018-ஆம் ஆண்டில் இந்தியா 74-ஆவது இடத்தில் இருந்தது.
உலகின் மிக நீளமான மின்னல்
- பிரேஸிலில் கடந்த ஆண்டு ஏற்பட்ட 700 கி.மீ. மின்னல்தான், உலகின் மிக நீளமான மின்னல் என்று ஐ.நா.வின் வானியல் பிரிவு அறிவித்துள்ளது.
- மேலும், ஆா்ஜெண்டீனாவில் 16 விநாடிகளுக்கு மேல் ஏற்பட்ட மின்னல்தான் உலகின் மிக அதிக நேரம் மின்னிய சாதனையைப் படைத்துள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
- இது, இதற்கு முன்னா் சாதனை படைத்திருந்த மின்னலைவிட இரு மடங்கு அதிக நீளமாகும். இதற்கு முன்னா் அமெரிக்காவில் கடந்த 2007-ஆம் ஆண்டு இந்த சாதனையைப் படைத்திருந்த மின்னல், 321 கி.மீ. நீளமே இருந்தது.
தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு 'ஸ்கோச் கோல்டு' எனும் விருது
- மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், ஆண்டு தோறும் பல்வேறு துறைகளில் சிறந்த சேவை மற்றும் மேம்பாட்டிற்காக விருது கொடுக்கப்படுவது வழக்கம். 2003ம் ஆண்டு முதல் கொடுக்கப்பட்டுவரும் இந்த விருதானது சிறந்த முன்மாதிரிக்கான தங்க விருது மற்றும் ஆர்டர் ஆஃப் மெரிட் விருது என வகைப்படுத்தப்படுகிறது.
- இதில் 2020-ம் வருடத்திற்கான நீர் மேலாண்மை திட்டங்களை சிறப்பாக செய்ததற்காக சிறந்த முன்மாதிரிக்கான தங்க விருதை (ஸ்கோச் கோல்டு - SKOCH GOLD AWARD - 2020) தேனி மாவட்ட நிர்வாகம் தட்டிச் சென்றுள்ளது.
கரோனா தடுப்பு இஸ்ரேல் யுஏஇ-யுடன் ஒப்பந்தம்
- கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு எதிரான போராட்டத்தில் இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தத்தை ஐக்கிய அரபு அமீரகத்துடன் மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
- மேற்குக் கரைப் பகுதியில் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை அந்த நாடு தன்னுடன் இணைத்துக்கொண்டால், அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவு பாதிக்கப்படும் என்று ஐக்கிய அரபு அமீரகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
- இந்தச் சூழலிலும், கரோனாவுக்கு எதிராக இரு நாடுகளும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கால்பந்துச் சமூகத்துக்குக் கைகொடுக்கும் ஃபிஃபா அமைப்பு ரூ.11,300 கோடி ஒதுக்கீடு
- கால்பந்துச் சர்வதேசக் கூட்டமைப்பு என்கிற ஃபிஃபா அமைப்பு, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள கால்பந்துச் சமூகத்துக்கு உதவ முன்வந்துள்ளது.
- கரோனா வைரஸைக் கால்பந்துச் சமூகம் எதிர்கொள்வதற்காக ரூ. 11,336 கோடி (1.5 பில்லியன் டாலர்) ஒதுக்கப்பட்டுள்ளது. ஃபிஃபா அமைப்பைச் சேர்ந்த 211 நாடுகளும் தலா ரூ. 7.56 கோடி (1 மில்லியன் டாலர்) பெறுவதற்கான திட்டம் தற்போது வகுக்கப்பட்டுள்ளது.
- அதன்படி அனைத்து நாடுகளுக்கும் ஒரு பகுதித் தொகை ஜூலை மாதமும் மீதிப் பகுதி ஜனவரி மாதமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும் மகளிர் கால்பந்தின் வளர்சிக்காக ரூ. 3.78 (5,00,000 டாலர்கள்) கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் ஃபிஃபா அமைப்பைச் சேர்ந்த நாடுகளுக்கு வட்டியில்லாக் கடனும் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.