Type Here to Get Search Results !

ONLINE TEST TNPSC UNIT - V: INDIAN POLITY-அரசியல் அறிவியலின்

  • Constitution of India – Preamble to the Constitution – Salient features of the Constitution – Union, State and Union Territory.
  • Citizenship, Fundamental rights, Fundamental duties, Directive Principles of State Policy.
  • Union Executive, Union legislature – State Executive, State Legislature – Local governments, Panchayat Raj.
  • Spirit of Federalism: Centre – State Relationships.
  • Election – Judiciary in India – Rule of law.
  • Corruption in public life – Anti-corruption measures – Lokpal and LokAyukta – Right to Information – Empowerment of women – Consumer protection forums, Human rights charter.
INDIAN POLITY-அரசியல் அறிவியலின் :

Question 1

'பொலிஸ் 'என்னும் நகர அரசு என பொருள்படும் சொல் கீழ்காணும் எந்த மொழியினுடையது ஆகும்?

A
கிரேக்கம்
B
இலத்தீன்
C
பிரெஞ்ச்
D
ஆங்கிலம்
Question 1 Explanation: 
(குறிப்பு - அரசியல் என்ற சொல் கிரேக்க மொழியில் நகர அரசு என்று பொருள்படும் "பொலிஸ்"(Polis) என்ற சொல்லோடு நெருங்கிய தொடர்புடையது ஆகும்)
Question 2

அரசியல் பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

  1. அரசியலை கற்பது என்பதை பொ..மு ஐந்தாம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் வாழ்ந்த பிளாட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் ஆகிய அரசியல் தத்துவ ஞானிகளின் அளப்பரிய பங்களிப்பினால் தொடங்கப்பட்டதாகும்.
  2. அரசியல் என்பது அடிப்படையில் நன்னெறியை பற்றிய கல்வி ஆகும்.
  3. இருபதாம் நூற்றாண்டுக்கு முன்பு வரையிலும் அரசியலை கற்றறிவது என்பது வரலாறு மற்றும் தத்துவம் போன்ற பிற துறைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு இருந்தது.
A
I, II மட்டும் சரி
B
II, III மட்டும் சரி
C
I, III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 2 Explanation: 
(குறிப்பு - 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் அரசியல் பாடத்தின் பார்வையானது சுதந்திரம் மற்றும் சமத்துவம் ஆகிய இரண்டுக்கும் இடையே ஆன பிரச்சினைகளை சுற்றியே இருந்து வந்தது. இருபத்தி ஓராம் நூற்றாண்டில் அரசியல் படத்தின் மையக்கரு சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு ஆகிய இரண்டிற்கும் இடையேயான மோதல்கள் பற்றியதாகவே இருந்தது)
Question 3

அரசியல் அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

A
பிளாட்டோ
B
அரிஸ்டாட்டில்
C
மாக்கியவல்லி
D
புனித அகஸ்டின்
Question 3 Explanation: 
(குறிப்பு - அரசியல் அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவரும் மாபெரும் கிரேக்க சிந்தனையாளருமான அரிஸ்டாட்டில் அரசியல் பற்றிய உண்மைகள் மற்றும் அரசுக்கும் மக்களுக்கும் உள்ள உறவு முறைகளையும் முறைப்படி படித்து அறிந்து கொள்வதே அரசியல் பாடத்தின் முக்கியமான பணி என்கிறார்)
Question 4

கடவுளின் நகரம் என்னும் நூல் கீழ்கண்ட யாரால் படைக்கப்பட்டதாகும்?

A
அரிஸ்டாட்டில்
B
பிளாட்டோ
C
புனித அகஸ்டின்
D
மாக்கியவல்லி
Question 4 Explanation: 
(குறிப்பு - புனித ரோமானியப் பேரரசின் காலத்தில் அரசியல் அதிகாரம் முழுவதும் பேராலயங்களின் கட்டுப்பாட்டில் இருந்ததால் அரசியல் பற்றி பேசும் இடமாக பேராலயம் மட்டுமே இருந்தது.புனித அகஸ்டின் போன்ற தத்துவ ஞானியின் நூலான கடவுளின் நகரம்(The City of God) என்னும் படைப்பில் அரசியல் தத்துவம் என்பது ஒரு மதத்தின் ஒரு அங்கமாகவே வலியுறுத்தப்பட்டுள்ளது)
Question 5

கீழ்கண்டவர்களில் இத்தாலியைச் சேர்ந்த தத்துவஞானி யார்?

A
அரிஸ்டாட்டில்
B
பிளாட்டோ
C
புனித அகஸ்டின்
D
மாக்கியவல்லி
Question 5 Explanation: 
(குறிப்பு - இத்தாலிய மறுமலர்ச்சிக் காலத்தின் போது நிக்காலோ மாக்கியவல்லி (Nicolo Machiaveli) என்பவர்தான் செயல் அறிவான கூர்நோக்குதல் மற்றும் அரசியல் நடத்தைகள் பற்றிய தனது மதச்சார்பற்ற அணுகுமுறையின் மூலம் நவீன அரசியல் பிரிவில் பாடத்திற்கு அடிகோலினார் என கூறலாம்)
Question 6

"அரசியல் அறிவியல் என்பது, யார், எப்போது, எதனை, எப்படி அடைகிறார்கள் என்பதாகும்" என்னும் கூற்று கீழ்கண்டவர்களில் யாருடையதாகும்?

A
அரிஸ்டாட்டில்
B
மாக்கியவல்லி
C
ஹெரால்ட் லாஸ்வெல்
D
புனித அகஸ்டின்
Question 6 Explanation: 
(குறிப்பு - எல்லா சமூகங்களும் வேறுபட்ட தங்களின் விருப்பங்களையும் தேடல்களையும் அடைவதற்கு முயற்சிப்பதும் இந்த வேறுபட்ட தேடலின் விளைவாக எழும் மோதல்களை ஒழுங்குபடுத்த உருவானதே அரசியல் என்பதும் லாஸ்வெல் என்பவரின் கருத்தாகும்)
Question 7

அரசியல் என்பது அரசியல் அதிகாரம் மற்றும் வகுப்பு மோதல்கள் பற்றியதாகும் என்னும் கூற்று யாருடையதாகும்?

A
மாக்கியவல்லி
B
ஹெரால்டு லாஸ்வெல்
C
காரல் மார்க்ஸ்
D
டேவிட் ஈஸ்டன்
Question 7 Explanation: 
(குறிப்பு - தற்கால சமூகங்களில் காணப்படும் பற்றாக்குறை மூலவளங்களை அதிகமான தேவைகளுக்கு முறையாக மற்றும் திறமையாக பகிர்ந்து அளிப்பது அரசியல் எந்திரம் என்பது உணரப்பட வேண்டிய செய்தியாகும்)." விழுமியங்களை அதிகாரபூர்வமாக ஒதுக்கீடு செய்தல்" என்று டேவிட் ஈஸ்டன் என்பவர் கூறுகிறார்)
Question 8

மனிதன் என்பவன் இயற்கையாகவே ஒரு அரசியல் விலங்கு என்னும் கூற்று கீழ்க்கண்டவர்களில் யாருடையதாகும்?

A
மாக்கியவல்லி
B
ஹெரால்டு லாஸ்வெல்
C
அரிஸ்டாட்டில்
D
பிளாட்டோ
Question 8 Explanation: 
(குறிப்பு - தற்காலத்தில் அரசியல் என்ற பாடம் அரசியல் அறிவியல் என்ற பெயரில் புதியதொரு தனித்து இயங்கும் பாடமாக மாறியுள்ளது. பண்டைய கிரேக்கத்தின் சிறிய நகர அரசுகளின் விவகாரங்களை குறிப்பது அரசியல் என்ற சொல்லாகும்)
Question 9
  • "படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
  • உடையான் அரசருள் ஏறு"
  • என்னும் குறள் மூலம் ஒரு அரசன் சிறந்து விளங்குவதற்கு தேவையான அடிப்படை கூறுகள் அமைந்திருக்க வேண்டும் என திருவள்ளுவர் கூறுகிறார். அவற்றுள் சரியானது எது?
  1. சிறந்த படை மற்றும் அறிவார்ந்த அமைச்சர்கள்
  2. நல்ல குடிமக்கள் மற்றும் பாதுகாப்பு மிக்க அரண்கள்
  3. நல்ல மூலவளங்கள் மற்றும் நட்பு நாடுகளின் ஆதரவு
A
I, II மட்டும் சரி
B
II, III மட்டும் சரி
C
I, III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 9 Explanation: 
(குறிப்பு - மேற்கண்ட ஆறு அடிப்படை கூறுகள் ஒரு அரசன் சிறந்து விளங்குவதற்கு தேவையானவை என்று திருவள்ளுவர் கூறுகிறார் (குறள் எண் -381)
Question 10
  • " அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
  • எஞ்சாமை வேந்தர்க் கியல்பு"
  • என்னும் குறளில், அரசர் பெற்றிருக்க வேண்டிய குணநலன்களாக சொல்லப்படாதது எது?
A
துணிவு
B
ஈகைக்குணம்
C
பொதுஅறிவு
D
போர்க்குணம்
Question 10 Explanation: 
(குறிப்பு - ஒரு அரசன் என்பவன் துணிவு, ஈகை குணம், பொதுஅறிவு, செயல் ஊக்கம் ஆகியவற்றுடன் விளங்க வேண்டியது அவசியம் என திருவள்ளுவர் மேற்காணும் திருக் குறளில் கூறுகிறார் (குறள் எண் -382))
Question 11

கீழ்காணும் கூற்றுகளில் சரியானது எது?

  1. கூற்று 1 - பண்டைய கிரேக்கத்தின் சிறிய நகர அரசுகளின் விவகாரங்களை குறிப்பது அரசியல் என்ற சொல்லாகும்.
  2. கூற்று 2 - அரசியல் என்ற சொல் "அரசாங்கங்களின் தற்கால பிரச்சனைகளை பற்றியது " என்பது ஆடம் கில்கிறிஸ்ட் என்பவரின் கூற்று ஆகும்.
  3. கூற்று 3 - ஒரு நாட்டின் அரசியல் என்பது மற்றொரு நாட்டின் அரசியலில் இருந்து வேறுபட்டதாகும்.
A
கூற்று 1, 2 மட்டும் சரி
B
கூற்று 2, 3 மட்டும் சரி
C
கூற்று 1, 3 மட்டும் சரி
D
எல்லா கூற்றுகளும் சரி
Question 11 Explanation: 
(குறிப்பு - அரசியல் என்பது நாட்டுக்கு நாடு வேறுபடும். ஆனால் அரசியல் அறிவியல் என்பது உலகம் முழுவதும் ஒரே பொருளில் அறியப்படுகிறது.)
Question 12

அரசியல் அறிவியல் பாடத்திற்கு என தனியாக ஒரு துறையை உருவாக்கியவர் கீழ்கண்டவர்களில் யார்?

A
ஜான் W.பர்ஜெஸ்
B
ராபர்ட் மிக்செல்ஸ்
C
டேவிட் ஈஸ்டன்
D
ஆடம் கில்கிறிஸ்ட்
Question 12 Explanation: 
(குறிப்பு - அரசியல் அறிவியல் என்னும் பாடத்தினை ஒரு தனித்தியங்கும் துறைசார்ந்த பாடமாக மாற்றியமைத்த பெருமை அமெரிக்க ஐக்கிய நாட்டில் சாரும். 1880ஆம் ஆண்டு ஜான் W.பர்ஜெஸ் என்பவர் கொலம்பிய பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியல் பாடத்திற்கு என தனியாக ஒரு துறையை உருவாக்கினார்)
Question 13

அரசியல் பாடத்தினை சமுதாயப் பிரச்சினைகளைப் பற்றிப் படிக்கும் பாடமாக மாற்றியமைக்க வலியுறுத்திய அமெரிக்க ஜனாதிபதி யார்?

A
உட்ரோ வில்சன்
B
ஜிம்மி கார்ட்டர்
C
ரொனால்டு ரீகன்
D
ரிச்சர்ட் நிக்சன்
Question 13 Explanation: 
(குறிப்பு - நிலையான நிறுவனங்கள் சார்ந்த படிப்பாக மட்டுமே இருந்த அரசியல் பாடத்தினை சமுதாய பிரச்சனைகளை பற்றி படிக்கும் பாடமாக மாற்றியமைக்க அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி உட்ரோ வில்சன் என்ற அறிஞரும் பிரான்ஸ் குட்நவ் என்ற அறிஞரும் பெரும் முயற்சிகளை எடுத்துக் கொண்டனர்)
Question 14

அரசியல் அதிகாரம் என்னும் நூலை எழுதியவர் கீழ்க்கண்டவரில் யார்?

A
பிரான்ஸ் குட்நவ்
B
ஆர்த்தர் பென்ட்லி
C
சார்லஸ் E.மெர்ரியம்
D
ஹெரால்டு லாஸ்வெல்
Question 14 Explanation: 
(குறிப்பு - அரசியல் அதிகாரம் என்னும் நூலை எழுதியவர் சார்லஸ் E.மேரியம் என்பவராவார். ஹெரால்டு லாஸ்வெல் என்பாரின் "அரசியல் யார், எப்போது, எதனை, எப்படி, அடைகிறார்கள்? " என்னும் நூலும் அரசியலின் மையக்கருத்தாக அதிகாரம் என்னும் அமைப்பினை உருவாக்கின)
Question 15

நடத்தையியல் புரட்சியினை தொடக்கி வைத்ததாக கருதப்படுபவர் யார்?

A
பிரான்ஸ் குட்நவ்
B
ஆர்த்தர் பென்ட்லி
C
டேவிட் ஈஸ்டன்
D
ஹெரால்டு லாஸ்வெல்
Question 15 Explanation: 
(குறிப்பு - நடத்தையியல் என்ற சொல் உளவியல் பாடத்தில் இருந்து பெறப்பட்டதாகும். அதன்பிறகு 1960களில் பின் தோன்றிய நடத்தையியல் என்ற புதிய பாடமும் பிறந்தது)
Question 16

அரசியல் அறிவியல் பற்றி அறிஞர்களின் கீழ்க்காணும் கூற்றுகளில் தவறான இணை எது?

A
கார்னர் - அரசிடம் ஆரம்பித்து அரசிடமே முடியும் பாடம்
B
லீக்காக் - அரசாங்கத்தினை பற்றி படிக்கும் பாடம்.
C
லாஸ்வெல் - அதிகாரம் மற்றும் செல்வாக்கு ஆகியவைகளைப் பற்றிய படிப்பு.
D
சீலே - அரசிடம் ஆரம்பித்து அரசிடமே முடியும் ஒரு பாடம்
Question 16 Explanation: 
(குறிப்பு - அரசியல் அறிவியல் என்பது அரசாங்கத்தினை பற்றி படிக்கும் பாடம் என்பது லீக்காக் மற்றும் சீலே என்பவர்களின் கூற்றாகும். கார்னர் என்பவர் அரசியல் அறிவியல் என்பது ஒரு அரசிடம் ஆரம்பித்து அரசிடமே முடியும் பாடம் என்கிறார்)
Question 17

எதிர்காலத்தை நம்பிக்கையோடு சந்திப்போம் என்னும் உரை கீழ்க்கண்டவர்களில் யாரால் நிகழ்த்தப்பட்டது?

A
சர்தார் வல்லபாய் பட்டேல்
B
மகாத்மா காந்தி
C
ஜவகர்லால் நேரு
D
அம்பேத்கர்
Question 17 Explanation: 
(குறிப்பு - ஜவஹர்லால் நேருவின் வரலாற்றுப் புகழ்மிக்க உரையான "எதிர்காலத்தினை நம்பிக்கையோடு சந்திப்போம்" என்ற உரை 14வது ஆகஸ்ட், 1947 அன்று இந்து நாளிதழில் வெளியானது)
Question 18

ஜவஹர்லால் நேருவின் " எதிர்காலத்தை நம்பிக்கையோடு சந்திப்போம்" என்னும் உரையில் சொல்லப்பட்டிருப்பவைகளில் கீழ்க்கண்டவற்றில் சரியானது எது?

A
பழமையிலிருந்து புதுமையை நோக்கி பயணிக்க தயாராகிவிட்டோம்
B
நீண்டகாலம் ஒடுக்கி வைக்கப்பட்ட ஒரு தேசத்தின் ஆன்மா உயிர்ப்பித்திருக்கிறது
C
உலகின் அனைத்து தேசங்கள் மற்றும் மக்கள் ஒன்றாக இருப்பதால் தனித்து இயங்குவதை கற்பனைகூட செய்ய முடியாது
D
இவை அனைத்தும் சரி
Question 18 Explanation: 
(குறிப்பு - ஜவகர்லால் நேருவின் எதிர்காலத்தை நம்பிக்கையோடு சந்திப்போம் என்னும் உரை இந்து நாளிதழில் 14ஆவது ஆகஸ்ட் 1947 ஆம் ஆண்டு வெளியானது. அதில் மேற்கண்ட அனைத்து கூற்றுகளும் உள்ளன)
Question 19

அரசியல் அறிவியலின் தன்மை குறித்த கீழ்க்காணும் கூற்றுக்களில் சரியானது எது?

  1. கூற்று 1 - மனிதன் என்பது ஒரு சமூக விலங்கு ஆவான். மனிதன் தனிமையை விட பிறருடன் இருப்பதையே விரும்புகிறான்.
  2. கூற்று 2 - சமூகத்தின் ஒரு அங்கமாக விளங்கும் மனிதர்கள் பொதுவான நடத்தை விதிகளை கடைபிடித்து வாழ வேண்டியுள்ளது.
  3. கூற்று 3 - சமுதாயம் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளதால் அதனை ஏற்பது மிகவும் நன்றாகும்.
A
கூற்று 1, 2 மட்டும் சரி
B
கூற்று 2, 3 மட்டும் சரி
C
கூற்று 1, 3 மட்டும் சரி
D
எல்லா கூற்றுகளும் சரி
Question 19 Explanation: 
(குறிப்பு - இவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்ட சமுதாயம், அரசு, சட்டம், தனி மனித உரிமைகள், குழுவில் உள்ள உரிமைகள் ஆகியவற்றைப் பற்றியே அக்கறை கொண்டுள்ளது. இவ்வாறாக அரசியல் அறிவியல் என்பது மனித இனத்திற்கு அரசு மற்றும் அரசாங்கத்துடனான தொடர்பினை முக்கியமாக விளக்குகிறது)
Question 20

1948ஆம் ஆண்டு நடந்த பன்னாட்டு அரசியல் அறிவியல் சங்க மாநாடு கீழ்காணும் எந்த பரப்பெல்லைகளை குறிப்பிட்டது?

  1. அரசியல் கோட்பாடு
  2. அரசியல் நிறுவனங்கள்
  3. அரசியல் இயக்கவியல்
  4. பன்னாட்டு உறவுகள்
A
I, II, III மட்டும்
B
II, III, IV மட்டும்
C
I, III, IV மட்டும்
D
இவை அனைத்தையும்
Question 20 Explanation: 
(குறிப்பு - அரசியல் அறிவியல் பாடத்தின் பரப்பெல்லை என்பது இந்த பாடத்தின் வரம்பு மற்றும் பாட உள்ளடக்கங்கள் பற்றியதாகும். இது அடிப்படையில் அரசு என்பதை பற்றி படிப்பது மிகவும் பரந்த பகுதிகளைக் கொண்டதாகும்)
Question 21

கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

  1. கூற்று 1 - அரசியல் என்பது அரசு என்பதைப் பற்றி மட்டும் படிப்பதாக கூறுகிறார் பிளான்ட்சிலி.
  2. கூற்று 2 - அரசியல் அறிவியல் என்பது அரசாங்கங்களை பற்றி மட்டுமே படிப்பது என்பது கார்ல் டாஷ் என்பவரின் கூற்றாகும்.
  3. கூற்று 3 - அரசியல் அறிவியல் என்பது அரசுகள் மற்றும் அரசாங்கங்கள் ஆகிய இரண்டையும் படிப்பதாக கூறுகிறார் ஹெரால்ட் லாஸ்கி.
A
கூற்று 1, 2 மட்டும் சரி
B
கூற்று 2, 3 மட்டும் சரி
C
கூற்று 1, 3 மட்டும் சரி
D
எல்லா கூற்றுகளும் சரி
Question 21 Explanation: 
(குறிப்பு - அரசு மற்றும் அரசாங்கம் ஆகிய இரண்டுக்கும் அடிப்படையான வேறுபாடுகள் இருந்தாலும் அவைகளின் பரப்பெல்லைகளை ஆயும்போது ஒன்றினை விட்டு மற்றதை தனியாக படிக்க முடியாது)
Question 22
அரசியல் அறிவியல் என்பது ஒரு கலை பாடம் எனக் கருதுபவர்கள் கீழ்க்கண்டவர்களில் யார்?
  1. அகஸ்ட் கோம்டே
  2. பிளான்ட்சிலி
  3. மைட்லேன்ட்
A
I, II மட்டும் சரி
B
I, III மட்டும் சரி
C
II, III மட்டும் சரி
D
இவை எல்லாமே சரி
Question 22 Explanation: 
(குறிப்பு - அகஸ்டே கோம்டே, மைட்லேன்ட் போன்றவர்கள் அரசியல் அறிவியல் என்பது ஒரு கலை பாடம் என்று கருதுகின்றனர். பிளான்ட்சிலி, மான்டேஸ்க்க்யூ போன்றவர்கள் அரசியல் அறிவியல் என்பது ஒரு அறிவியல் பாடம் என்கின்றனர்)
Question 23

அரசியல் அறிவியல் என்பது ஒரு அறிவியல் பாடம் என்று கூறியவர்களில் அல்லாதவர் கீழ்க்கண்டவருள் யார்?

A
மாண்டெஸ்க்க்யூ
B
போடின்
C
ஹாப்ஸ்
D
அகஸ்டே கோம்டே
Question 23 Explanation: 
(குறிப்பு - அரசியல் அறிவியல் என்பது ஒரு அறிவியல் பாடமே என்று அரிஸ்டாட்டில் என்பவர்தான் முதன்முதலாக அழைத்தார். பின்னர் பிளான்ட்சிலி, மாண்டெஸ்கியூ, போடின், ஹாப்ஸ் போன்ற அறிஞர்கள் இந்தக் கருத்தினை ஒப்புக்கொண்டு இப்பாடம் ஒரு அறிவியல் பாடம் என்றனர்)
Question 24

நீ அரசியலின் மீது ஆர்வம் இல்லாமல் கூட இருக்கலாம்.ஆனால் அரசியல் உன்மீது ஆர்வமாக இருக்கிறது என்னும் கூற்று கீழ்க்கண்டவர்களில் யாருடையது ஆகும்?

A
மார்ஷல் பெர்மென்
B
பிளண்ட்சிலி
C
மான்டேஸ்க்யூ
D
இவர்கள் யாரும் அல்ல
Question 24 Explanation: 
(குறிப்பு - நீ யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். நீ எப்படியாக வேண்டுமானாலும் மாற விரும்பலாம், நீ அரசியலின் மீது ஆர்வம் இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் அரசியல் உன்மீது ஆர்வமாக இருக்கிறது என்பது மார்ஷல் பர்மன் என்பவருடைய புகழ்மிக்க கூற்றாகும்)
Question 25

தத்துவார்த்த அணுகுமுறை சிந்தனையாளர் அல்லாதவர் யார்?

A
பிளாட்டோ
B
அரிஸ்டாட்டில்
C
மாக்கியவல்லி
D
லியோ ஸ்டிராஸ்
Question 25 Explanation: 
(குறிப்பு - பழங்கால பாரம்பரிய அணுகுமுறையான தத்துவார்த்த அணுகுமுறை சிந்தனையாளர்கள் அரிஸ்டாட்டில், பிளாட்டோ, லியோ ஸ்ட்ராஸ் போன்றவர்கள் ஆவர்)
Question 26

சட்டப்பூர்வ அணுகுமுறை சிந்தனையாளர் அல்லாதவர் யார்?

A
சீசேரோ
B
ஜீன் போடின்
C
ஜான் ஆஸ்டின்
D
சபைன்
Question 26 Explanation: 
(குறிப்பு - பழங்கால பாரம்பரிய அணுகுமுறையாக சட்டபூர்வ அணுகுமுறை சிந்தனையாளர்கள் சீசேரோ, ஜீன் போடின், ஜான் ஆஸ்டின் போன்றவர்கள் ஆவர். சபைன் என்பவர் வரலாற்று அணுகுமுறை சிந்தனையாளர் ஆவார்)
Question 27
அரசியல் அறிவியல் அணுகுமுறை மற்றும் அதன் சிந்தனையாளர்களை பொருத்துக
  1. தத்துவ அணுகுமுறை - a) ஆர்தர் பென்ட்லீ
  2. வரலாற்று அணுகுமுறை - b) மாக்கியவல்லி
  3. சட்டபூர்வ அணுகுமுறை - c) அரிஸ்டாட்டில்
  4. நிறுவன அணுகுமுறை - d) ஜான் ஆஸ்டின்
A
I-c, II-b, III-d, IV-a
B
I-d, II-a, III-c, IV-b
C
I-b, II-a, III-c, IV-d
D
I-a, II-d, III-b, IV-c
Question 27 Explanation: 
(குறிப்பு - தத்துவார்த்த அணுகுமுறை, வரலாற்று அணுகுமுறை, சட்டபூர்வ அணுகுமுறை, நிறுவன அணுகுமுறை இவை நான்கும் அரசியல் அறிவியலை படிப்பதற்கான பழங்கால பாரம்பரிய அணுகு முறைகள் ஆகும்)
Question 28

அரசியல் அறிவியலை படிப்பதற்கான நவீன அணுகுமுறைகளில் அல்லாதது எது?

A
சமூகவியல் அணுகுமுறை
B
பொருளியல் அணுகுமுறை
C
நடத்தையியல் அணுகுமுறை
D
நிறுவன அணுகுமுறை.
Question 28 Explanation: 
(குறிப்பு - அரசியல் அறிவியலை படிப்பதற்கான நவீன அணுகுமுறைகள் ஆவன, சமூகவியல் அணுகுமுறை, உளவியல் அணுகுமுறை, பொருளியல் அணுகுமுறை, நடத்தையியல் அணுகுமுறை மற்றும் மார்க்சிய அணுகுமுறை ஆகும்.)
Question 29
பொருத்துக
  1. சமூகவியல் அணுகுமுறை - a) காரல் மார்க்ஸ்
  2. உளவியல் அணுகுமுறை - b) விளாடிமிர் லெனின்
  3. பொருளியல் அணுகுமுறை - c) டேவிட் ட்ரூமன்
  4. மார்க்சிய அணுகுமுறை - d) மேக் ஐவர்
A
I-d, II-c, III-a, IV-b
B
I-d, II-a, III-c, IV-b
C
I-b, II-a, III-c, IV-d
D
I-a, II-d, III-b, IV-c
Question 29 Explanation: 
(குறிப்பு - அரசியல் அறிவியலை படிப்பதற்கான அணுகுமுறைகளை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். பாரம்பரிய அணுகுமுறைகள் என்பன அனுமானங்கள் மற்றும் கருத்தறிவு அடிப்படையிலானவை. தற்கால அணுகுமுறைகள் என்பவை அனுபவ அறிவு மற்றும் அறிவியல் தன்மையை அடிப்படையாகக் கொண்டவை ஆகும்)
Question 30

அரசியலை கற்பதற்கான மிகவும் பழமையான அணுகுமுறையாக கருதப்படுவது எது?

A
வரலாற்று அணுகுமுறை
B
சட்டபூர்வ அணுகுமுறை
C
தத்துவார்த்த அணுகுமுறை
D
நிறுவன அணுகுமுறை
Question 30 Explanation: 
(குறிப்பு - தத்துவார்த்த அணுகுமுறை என்பது தான் அரசியலை கற்பதற்கான மிகவும் பழமையான அணுகுமுறையாகும். இதனை அனுமானங்கள் மற்றும் மனோதத்துவ அல்லது நன்னெறி சார்ந்த அணுகுமுறை என்றும் கூறலாம்)
Question 31

அரசியலின் முறையான அமைப்புகளான சட்டமன்றம், நீதித்துறை மற்றும் செயலாட்சித்துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகளின் அடிப்படையில் அரசியல் அறிவியலை அணுகுவது கீழ்க்கண்டவற்றுள் எது?

A
தத்துவார்த்த அணுகுமுறை
B
சட்டபூர்வ அணுகுமுறை
C
நிறுவனம் சார்ந்த அணுகுமுறை
D
மார்க்சிய அணுகுமுறை
Question 31 Explanation: 
(குறிப்பு - அரசியலின் முறையான அமைப்புகளான சட்டமன்றம், நீதித்துறை மற்றும் செயலாட்சிதுறை ஆகிய துறைகளின் செயல்பாடுகளின் அடிப்படையில் அரசியல் அறிவியலை அணுகுவது நிறுவனம் சார்ந்த அணுகுமுறை ஆகும். இந்த அணுகுமுறையை கட்டமைப்பு அணுகுமுறை என்றும் சிலர் கூறுகிறார்கள்)
Question 32

சமூகவியல், சட்டம் மற்றும் பொருளியல் காரணிகளை புறந்தள்ளும் அணுகுமுறையாக கருதப்படுவது எது?

A
சமூகவியல் அணுகுமுறை
B
உளவியல் அணுகுமுறை
C
பொருளியல் அணுகுமுறை
D
நடத்தையியல் அணுகுமுறை
Question 32 Explanation: 
(குறிப்பு - உளவியல் அணுகுமுறையானது அரசியல் மற்றும் சமூக நிறுவனங்கள் உளவியல் விதிமுறைகளின் அடிப்படையில் இயங்கவேண்டியதின் அவசியத்தை விளக்குகின்றன. இந்த அணுகுமுறை அரசியல் தலைவர்களைப் பற்றிய உளவியல் பகுப்பாய்வு அரசியலைப்பற்றி குறிப்பிடத்தகுந்த அறிவு வெளிப்படுவதாக அனுமானிக்கிறது)
Question 33

மார்க்சிய அணுகுமுறை கீழ்க்கண்டவற்றில் எதை விளக்குகிறது?

A
சமூக உறுப்பினர்களின் அரசியல் நடத்தையை சமூக சூழலில் புரிந்து கொள்ளுதல்
B
சமூக நிறுவனங்கள் உளவியல் விதிமுறைகளின் அடிப்படையில் இயங்க வேண்டும்.
C
அரசியல் மற்றும் பொருளியல் சக்திகள் இரண்டையும் பிரிக்க முடியாது.
D
ஒரு அரசின் கீழ் வாழும் மனிதர்களின் மனப்பாங்கு மற்றும் முன்னுரிமைகளை விளக்குதல்.
Question 33 Explanation: 
(குறிப்பு - பிற தற்கால அணுகுமுறைகளை காட்டிலும் மார்க்சிய அணுகுமுறை அடிப்படையில் மிகவும் வேறுபட்டதாகும். இது அரசியல் மற்றும் பொருளியல் சக்திகள் ஆகியவை ஒன்றோடு ஒன்று உட்செயல்பாட்டிலான தொடர்பு கொண்டவை என்பதனையும் இவை இரண்டையும் ஒன்றைவிட்டு ஒன்றினை பிரிக்க முடியாது என்பதனையும் விளக்குகிறது)
Question 34

கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

  1. அரசும் அதன் நிறுவனங்களும் வரலாற்றின் படிப்படியான வளர்ச்சியால் உருவானவையாகும்.
  2. அரசு தனக்குரிய பல பொதுவான சட்டங்களையும் கொள்கைகளையும் வரலாற்று உண்மைகளின் அடிப்படையிலேயே கண்டறிந்துள்ளது.
  3. அரசியல் வரலாறு என்பது அரசியல் நிகழ்வுகளையும் அரசியல் இயக்கங்களையும் விவரிப்பது ஆகும்.
A
I, II மட்டும் சரி
B
II, III மட்டும் சரி
C
I, III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 34 Explanation: 
(குறிப்பு - ஃபிரீமேன் (Freeman) என்பவரின் கூற்றுப்படி வரலாறு என்பது கடந்த கால அரசியல், அரசியல் என்பது நிகழ்காலத்தின் வரலாறு என்பது ஒரு சரியான மற்றும் பொருத்தமான விளக்கமாகும்)
Question 35

"அரசியல் அறிவியல் இல்லாத வரலாறு பழமே இல்லாத ஒரு மரம்" என்னும் புகழ்மிக்க கூற்று யாருடையது ஆகும்?

A
ஃபிரீமேன்
B
ஜான் சீலே
C
ராபர்ட் ஏ தால்
D
விளாடிமிர் லெனின்
Question 35 Explanation: 
(குறிப்பு - அரசியல் அறிவியல் இல்லாத வரலாறு பழமே இல்லாத ஒரு மரம் என்றும் அதே போல வரலாறு இல்லாத அரசியல் அறிவியல் என்பது வேரில்லாத ஓர் மரம் ஆகும் என்று ஜான் சீலே (John Seeley) என்னும் அறிஞர் விளக்குகிறார்)
Question 36

_________ என்பது அரசியல் அறிவியலின் ஒரு கிளை பிரிவு என்று பண்டைய கிரேக்கர்கள் கருதினார்கள்.

A
தத்துவம்
B
வரலாறு
C
பொருளியல்
D
நடத்தையியல்
Question 36 Explanation: 
(குறிப்பு - பொருளியல் என்பது அரசியல் அறிவியலின் ஒரு கிளை பிரிவு என்று பண்டைய கிரேக்கர்கள் கருதினார்கள். அவர்கள் அரசியல் அறிவியல் பாடத்தை, அரசியல் பொருளாதாரம் என்று அழைத்தனர்.)
Question 37

கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

  1. அறவியல் என்பது அரசியலோடு நெருங்கிய தொடர்புடைய சமுதாயத்தில் தனி மனிதனுடைய நடத்தையை கட்டுப்படுத்தும் விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளை உருவாக்குவதாகும்.
  2. அறவியல் என்பது நீதி முறைமையின் அறிவியலாகும்.
A
I மட்டும் சரி
B
II மட்டும் சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 37 Explanation: 
(குறிப்பு - அரசியல் அறிவியல் மற்றும் அறவியல் ஆகிய இரண்டு பாடல்களும் மனித சமுதாயத்தை மிகவும் சரியான மற்றும் அன்பான வாழ்வினை நோக்கி நெறிப்படுத்துவனவாகும்)
Question 38

கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

  1. கூற்று 1 - அரசியல் அறிவியலும், சமூகவியலும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்புடைய பாடங்கள் ஆகும்.
  2. கூற்று 2 - அரசு மற்றும் பிற அரசியல் நிறுவனங்கள் அனைத்தும் எவ்வாறு தோன்றி வளர்ந்தன என்பதன் அடிப்படை தகவல்களை சமூகவியல் பாடமே நமக்கு தர முடியும்.
  3. கூற்று 3 - அரசியல் அறிவியல் பாடத்தினை கொள்கை அறிவியல் பாடம் என்று அழைக்கலாம்.
A
கூற்று 1, 2 மட்டும் சரி
B
கூற்று 2, 3 மட்டும் சரி
C
கூற்று 1, 3 மட்டும் சரி
D
எல்லா கூற்றுகளும் சரி
Question 38 Explanation: 
(குறிப்பு - சமூகவியல் அறிவு இல்லாமல் எந்த ஒரு நாட்டின் அரசியலையும் சிறப்பாக நடத்த முடியாது. அதேபோல சமூகவியலுக்கு அரசியல் அறிவியலானது அரசின் அமைப்பு மற்றும் பணிகள், அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் சமுதாயத்தை எவ்வாறு பெருமளவில் பாதிக்கிறது என்பன பற்றிய தகவல்களை தருகிறது)
Question 39

மனிதர்களின் பல புதிரான நடவடிக்கைகளை பற்றி அறிந்துகொள்ளும் விடை பகுதி உளவியல் பாடத்தில் உள்ளது என்னும் கூற்று கீழ்கண்டவர்களில் யாருடையதாகும்?

A
ஜான் சீலே
B
ஃபிரீமேன்
C
மார்ஷல் பெர்மேன்
D
பார்க்கர்
Question 39 Explanation: 
(குறிப்பு - உளவியல் என்பது மனித நடத்தையின் அனைத்து அம்சங்களையும் பற்றி படிக்கும் ஒரு பாடமாகும். அரசியல் அறிவியல் என்பது மனிதர்களின் அரசியல் நடவடிக்கைகளைப் பற்றிய ஒரு பாடமாகும்)
Question 40

அரசியல் அறிவியல் பாடம் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

  1. அரசியல் அறிவியல் பாடம் என்பது ஆளுகை என்பதனை முறையாக படிக்க உதவும் ஒரு பாடமாகும்.
  2. அரசியல் அறிவியல் பாடத்தில் அறிவியல்பூர்வமான முறைகளும், செயலறிவிலான பகுப்பாய்வும் செயல்படுத்தப்படுகின்றன.
  3. அரசியல் அறிவியலானது அரசு அதன் அங்கங்கள் மற்றும் நிறுவனங்களை ஆராய்கிறது.
A
I, II மட்டும் சரி
B
II, III மட்டும் சரி
C
I, III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 40 Explanation: 
(குறிப்பு - அரசியல் அறிவியல் பாடத்தில் சமூகம், பண்பாடு, பொருளாதாரம் மற்றும் உளவியல் காரணிகள் அதிகம் கலந்துள்ளன. பிற சமூக அறிவியல் பாடங்கள் அனைத்திலிருந்தும் அரசியல் அறிவியல் பாடம் நிறைய கருத்துக்களையும் தகவல்களையும் பெற்றிருந்தாலும் அதிகாரத்தின் மீதான அதன் தனி கவனம் அதனை துறைகளிடம் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது)
Question 41

கௌடில்யரால் எழுதப்பட்ட அர்த்தசாஸ்திரம் கீழ்காணும் எந்த நூற்றாண்டினை சார்ந்தது ஆகும்?

A
முதலாம் நூற்றாண்டு
B
மூன்றாம் நூற்றாண்டு
C
ஆறாம் நூற்றாண்டு
D
ஒன்பதாம் நூற்றாண்டு
Question 41 Explanation: 
(குறிப்பு - அர்த்தசாஸ்திரம் என்பது அரசியல் பொருளியல் மற்றும் நிர்வாக ஆளுகை பற்றிய நூலாகும். இது கௌடில்யர் என்பவரால் எழுதப்பட்டது. இது மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தது ஆகும். கௌடில்யர், சாணக்கியர் என்றும் அழைக்கப்பட்டார்)
Question 42

சமூகத்தில் ஒரு சிலருக்கு பாரம்பரியம், உள்ளுணர்வு, அதிக அறிவு போன்றவைகளின் அடிப்படையில் மற்றவர்களை விடவும் சிறப்பு தகுதிகளையும் அதிகாரங்களையும் வழங்குவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A
அரசியல் நடத்தை
B
வர்க்க முரண்பாடு
C
அதிகாரத்துவம்
D
உயர்குடியினவாதம்
Question 42 Explanation: 
(குறிப்பு - சமூகத்தின் ஒருசிலருக்கு பாரம்பரியம், உள்ளுணர்வு, அதிக அறிவு, செல்வம், சிறப்புத் திறமைகள், அனுபவம் போன்றவைகளின் அடிப்படையில் மற்றவர்களை விடவும் சிறப்பு தகுதிகளையும் அதிகாரங்களையும் வழங்குவது உயர்குடியினவாதம் (Elitism) என்றழைக்கப்படுகிறது)
Question 43

ஒரு பேரரசு அல்லது நாடு தனது ஆதிக்க அதிகார வரம்பினை வேறொரு நாட்டின் மீது செலுத்தி அதனை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A
முற்றதிகாரம்
B
ஏகாதிபத்தியம்
C
காலனி ஆதிக்கம்
D
பிரபுக்களாட்சி
Question 43 Explanation: 
(குறிப்பு - காலனி ஆதிக்கம் என்பது ஒரு நாடு தனது கட்டுப்பாட்டில் உள்ள மற்றொரு நாட்டின் மீதோ அல்லது அந்த நிலப்பரப்பின் மீதோ அல்லது மக்களின் மீது கட்டுப்பாடு செலுத்தி அதனை ஆட்சி செய்வது ஆகும்)
Question 44

கருத்தறிவு என்பதற்கான சரியான விளக்கம் கீழ்க்கண்டவற்றுள் எது?

A
சரியான நடத்தையின் அடிப்படையில் அனுமானித்து எடுக்கப்படும் தரநெறியிலான கருத்து முடிவாகும்
B
சரியான பேச்சின் அடிப்படையில் அனுமானித்து எடுக்கப்படும் தரநெறியிலான கருத்து முடிவாகும்.
C
சரியான எழுத்தின் அடிப்படையில் அனுமானித்து எடுக்கப்படும் தரநெறியிலான கருத்து முடிவாகும்
D
இவை அனைத்தும் சரியானது ஆகும்
Question 44 Explanation: 
(குறிப்பு - கருத்தறிவு (Normative) என்பது சரியான நடத்தை, பேச்சு, எழுத்து ஆகியவைகளின் அடிப்படையில் அனுமானித்து எடுக்கப்படும் தரநெறியிலான கருத்து முடிவாகும்)
Question 45

அரசியல் நிறுவனங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கும் தன்மை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A
அரசியல் நிலைத்தன்மை
B
அரசியல் இயக்கவியல்
C
அரசியல் நடத்தையியல்
D
அரசியல் பொருளியல்
Question 45 Explanation: 
(குறிப்பு - அரசியல் இயக்கவியல் (Political Dynamics ) என்பது அரசியல் நிறுவனங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கும் தன்மையை குறிப்பதாகும். நாட்டின் நிர்வாகம் மற்றும் அதன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உறவுகள் பற்றியும் ஆளுகை பற்றியும் படிக்க உதவும் கலை அரசியல் என்பதாகும்)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel