Type Here to Get Search Results !

28h JUNE 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

6 மாநிலங்களின் கல்விக்காக ரூ.3,700 கோடி கடன்: உலக வங்கி ஒப்புதல்
    • மாநிலங்களில் பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்தவும் 'அனைவருக்கும் கல்வி' என்ற அரசின் லட்சியத்துக்கு ஆதரவு அளிக்கவும் கடந்த 1994-ஆம் ஆண்டில் இருந்து உலக வங்கியுடன் இந்திய அரசு இணைந்து செயல்பட்டு வருகிறது.
    • இந்நிலையில், உலக வங்கியின் நிா்வாக இயக்குநா்கள் குழு கூட்டம், கடந்த 24-ஆம் தேதி நடைபெற்றது. இதில், இந்தியாவில் 6 மாநிலங்களில் பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்த ரூ.3,700 கோடி கடனுதவி அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மாநிலங்களின் கற்றல்-கற்பித்தலை வலுப்படுத்தும் (ஸ்டாா்ஸ்) திட்டத்தின் கீழ் இந்த கடனுதவி அளிக்கப்படவுள்ளது.
    • இந்த திட்டத்தின் கீழ் ஹிமாசல பிரதேசம், கேரளம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ஒடிஸா, ராஜஸ்தான் ஆகிய 6 மாநிலங்கள் பயன்பெறவுள்ளன. மேலும், 15 லட்சம் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 17 வயதுக்குள்பட்ட 25 கோடி மாணவ, மாணவிகளும் ஒரு கோடி ஆசிரியா்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவா்.
    • மாணவா்கள் கற்கும் திறனை மதிப்பிடும் முறையை மேம்படுத்துவது, வகுப்பறை கற்பித்தல் முறை வலுப்படுத்துவது, பள்ளிக் கல்வியை முடித்து பணிக்குச் செல்வதற்கு உகந்த சூழலை உருவாக்குவது போன்ற பணிகளுக்கும் ஸ்டாா்ஸ் திட்டம் உதவியாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஜம்மு-காஷ்மீா், உத்தரகண்டில் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு கூடுதலாக ரூ.1,691 கோடி மத்திய அரசு ஒப்புதல்
    • ஜம்மு-காஷ்மீரில் எல்லை சாலைகள் அமைப்பு சாா்பில் மேற்கொள்ளப்படும் நெடுஞ்சாலை பணிகளுக்கு கூடுதலாக ரூ.1,351.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் உத்தரகண்டில் அந்த அமைப்பு மேற்கொள்ளும் நெடுஞ்சாலை பணிகளுக்கு ரூ.340 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • இதேபோல் தமிழகம், ஜம்மு-காஷ்மீா், லடாக், சிக்கிமில் பொதுப்பணித்துறை சாா்பில் மேற்கொள்ளப்படும் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு கூடுதலாக ரூ.71 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • இதுதவிர நாகாலாந்தில் மேற்கொள்ளப்படும் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு ரூ.1,955 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    கொரோனா காலத்தில் சேவை ஸ்டார்ஸ் ஆப் கோவிட் வேர்ல்ட் ஹுமானிட்டேரியென் டிரைவ் அமைப்பு கவுரவிப்பு
    • லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் World Humanitarian Drive (வேர்ல்ட் ஹுமானிட்டேரியென் டிரைவ் WHD) என்ற சர்வதேச அமைப்பு சார்பில் கொரோனா காலத்தில் சேவையாற்றிய 100 பேர் கவுரவிக்கப்பட்டுள்ளனர்.
    • உலகளவில் தேர்வு செய்யப்பட்ட 100 நபர்களில் தமிழகத்தில் இருந்து விஜய் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்., பாலகிருஷ்ணா ஐ.பி.எஸ்., இளம் மருத்துவர் ஹக்கீம் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.
    • காணொலி மூலம் நடைபெற்ற பாராட்டு விழா நிகழ்ச்சியில் கொசோவா நாட்டின் முன்னாள் அதிபர் மற்றும் நேபாள் முன்னாள் பிரதமர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    • கொரோனா காலத்தில் சேவையாற்றிய மகத்தான மனிதர்களை பாராட்டும் பொருட்டு ஸ்டார்ஸ் ஆப் கோவிட் என்ற நிகழ்ச்சி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
    • மனிதம் போற்றும் உயரியவர்களை கவுரவிக்கவேண்டும் என்ற நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுக்கு 34-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 1600 பெயர்கள் பரிந்துரைக்கு சென்றிருந்தன. அதில் 100 நபர்களை மட்டும் அடையாளம் கண்டு அவர்களை கவுரவித்துள்ளது 
    • மேலும், வேர்ல்ட் ஹுமானிட்டேரியென் டிரைவ் அமைப்பின் தலைவர் அப்துல் பாசித் சையத் எழுதிய "STARS OF COVID" மற்றும் "RE ENGINEERING HAPPINESS" ஆகிய இரு நூல்களையும் அவர்கள் வெளியிட்டனர்.
    • இதில் மக்கள் பிரதிநிதிகள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த நவாஸ் கனி எம்.பிக்கும், அரசு அதிகாரிகள் மற்றும் நிர்வாக சேவை பிரிவில் விஜய் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்., பாலகிருஷ்ணா ஐ.பி.எஸ் ஆகியோருக்கும், மருத்துவத்துறை சார்பில் திருச்சியை சேர்ந்த இளம் மருத்துவர் ஹக்கீம் என்பவருக்கும் விருதுகள் அளிக்கப்பட்டன. 
    • இதில் ஹக்கீம் என்பவர், காது கேளாதோர் வாய் பேச முடியாதவர்களுக்கு பிரத்தியேகமாக முகக்கவசம் வடிவமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Post a Comment

    0 Comments
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

    Top Post Ad

    Below Post Ad

    Hollywood Movies

    close

    Join TNPSC SHOUTERS Telegram Channel

    Join TNPSC SHOUTERS

    Join Telegram Channel