Type Here to Get Search Results !

ONLINE TEST TNPSC UNIT – IV: HISTORY AND CULTURE OF INDIA-தென்னிந்திய வரலாறு -2


  • Indus valley civilization – Guptas, Delhi Sultans, Mughals and Marathas – Age of Vijayanagaram and Bahmani Kingdoms – South Indian history.
  • Change and Continuity in the Socio – Cultural History of India.
  • Characteristics of Indian culture, Unity in diversity – Race, language, custom.
  • India as a Secular State, Social Harmony.

ONLINE TEST TNPSC UNIT – IV: HISTORY AND CULTURE OF INDIA-தென்னிந்திய வரலாறு 

Question 1
சாதவாகனர் கீழ்க்காணும் எந்த பகுதியை உள்ளடக்கிய நிலப்பரப்பில் ஒரு வலுவான அரசை நிறுவினார்?
  1. ஆந்திர பிரதேசம்
  2. தெலுங்கானா
  3. மகாராஷ்டிரம்
  4. கர்நாடகா
A
I, II, III மட்டும் சரி
B
I, III, IV மட்டும் சரி
C
II, III, IV மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 1 Explanation: 
(குறிப்பு - தக்காணப் பகுதியில் பொ.ஆ.மு முதல் நூற்றாண்டில் இன்றைய தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பெரும் பகுதியை உள்ளடக்கிய நிலப்பரப்பில் சாதவாகனர் ஒரு வலுவான அரசை நிறுவினார்)
Question 2
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
  1. கூற்று 1 - அரச மரபினரான சேர, சோழ, பாண்டியர் சாதவாகனரின் சமகாலத்தவர் ஆவர்.
  2. கூற்று 2 - பொ.ஆ.மு இரண்டாம் நூற்றாண்டை சார்ந்த அசோகரின் கல்வெட்டுகளில் மூவேந்தர்களைப் பற்றிய குறிப்பு அடங்கியிருக்கிறது.
  3. கூற்று 3 - இந்த இரு பகுதிகளை சேர்ந்த அரசியல் முறை மற்றும் சமூகங்களிடையே பல பொதுவான அம்சங்கள் இருந்தன.
A
கூற்று 1, 2 மட்டும் சரி
B
கூற்று 2, 3 மட்டும் சரி
C
கூற்று 1, 3 மட்டும் சரி
D
எல்லா கூற்றுகளும் சரி
Question 2 Explanation: 
(குறிப்பு - தக்காணப் பகுதியில் பொ.ஆ.மு. முதல் நூற்றாண்டில் இன்றைய தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் பெரும் பகுதியை உள்ளடக்கிய நிலப்பரப்பில் சாதவாகனர் ஒரு வலுவான அரசை நிறுவினார். இவர்களும் தெற்கே தமிழகத்தின் வளமான பகுதிகளை ஆண்டு வந்த தமிழ் அரச மரபினர் ஆண்ட சேர சோழ பாண்டியர்களும் சமகாலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்)
Question 3
ஸ்தூபி என்பதற்கான தவறான பொருள் என்ன?
A
புதை மேடுகளின் மேல் களிமண்ணால் கட்டப்பட்டது.
B
இறந்தவர்களின் எரித்த சாம்பல் இங்கு வைக்கப்படும்.
C
புத்தரின் அஸ்தி 7 ஸ்தூபிகளில் வைக்கப்பட்டன.
D
அரைக் கோள வடிவம் உள்ள ஸ்தூபி பேரண்டத்தை குறிக்கிறது.
Question 3 Explanation: 
(குறிப்பு - புத்தரின் அஸ்தி 8 ஸ்தூபிகளில் வைக்கப்பட்டுள்ளது. அரைக்கோள வடிவமுள்ள ஸ்தூபி பேரண்டத்தை குறிக்கிறது.புத்தர் ஆன்மீக உலகின் பேரரசர் என்பதை குறிக்கிறது. ஸ்தூபிகளை சுற்றி அமைக்கப்பட்டுள்ள சுற்றுவட்டப்பாதையில் பக்தர்கள் வலம் வருவர்.)
Question 4
சாதவாகனர் குறித்த சான்றுகள் இந்தியாவிற்கு வெளியே கீழ்க்காணும் எந்த இடங்களில் கிடைத்துள்ளன?
  1. பெரெனிக்கே
  2. குவாஸிர் அல் காதம் (எகிப்து)
  3. குவாங்லுக் (தாய்லாந்து)
  4. கோர் ரோரி (ஓமன்)
A
I, II, III மட்டும் சரி
B
I, III, IV மட்டும் சரி
C
II, III, IV மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 4 Explanation: 
(குறிப்பு - தமிழக பகுதியில் கிடைத்துள்ள மண்பாண்டங்கள், மோதிரம், கற்கள் ஆகியவற்றில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள், இந்தியாவிற்கு வெளியே பெரெனிக்கே, எகிப்து, ஓமன், தாய்லாந்து போன்ற இடங்களில் காணப்படும் ஆவணங்கள் சாதவாகனர் காலத்தைப் பற்றிய குறிப்புகளை கூறுகின்றன)
Question 5
சாதவாகனர் காலத்து இலக்கியச் சான்றுகளாக விளங்குவன எவை?
    1. சங்க நூல்களும் சங்கமருவிய இலக்கியங்களும்.
    2. பொருளாதாரம், அரசாட்சி கலை ஆகிய குறித்து கவுடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரம்.
    3. மகாவம்சம் முதலான பௌத்த வரலாற்று நூல்கள்
A
I, II மட்டும்
B
I, III மட்டும்
C
II, III மட்டும்
D
இவை அனைத்தும்
Question 5 Explanation: 
(குறிப்பு - சங்க நூல்களும் சங்கமருவிய இலக்கியங்களும், பொருளாதாரம் அரசாட்சி கலை ஆகியன குறித்து கவுடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரம், சாதவாகனர் வம்சாவழி வரலாற்றினை குறிப்பிடும் புராணங்கள், மகாவம்சம் முதலான பௌத்த வரலாற்று நூல்கள் சாதவாகனர் காலத்து இலக்கிய சான்றுகளாக விளங்குகின்றன)
Question 6
சாதவாகன அரசர் காதாசப்தசதி என்ற நூலை எந்த மொழியில் எழுதினார்?
A
தெலுங்கு
B
பிராகிருதம்
C
சமஸ்கிருதம்
D
பாலி
Question 6 Explanation: 
(குறிப்பு - சாதவாகன அரசர் பிராகிருத மொழியில் எழுதிய நூல் காதாசப்தசதி என்பதாகும்.)
Question 7
தமிழின் மிகப்பழமையான இலக்கண நூலாகக் கருதப்படுவது எது?
A
தொல்காப்பியம்
B
எட்டுத்தொகை நூல்கள்
C
பத்துப்பாட்டு நூல்கள்
D
இது எதுவும் அல்ல
Question 7 Explanation: 
(குறிப்பு - தமிழ் செவ்வியல் இலக்கிய தொகுப்பானது தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றை கொண்டுள்ளது. தமிழின் மிகப்பழமையான இலக்கண நூலான தொல்காப்பியம் கவிதையியலை பற்றி மட்டும் பேசாமல் அக்காலத்து சமூக பண்பாட்டையும் பேசுகிறது.)
Question 8
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் ஐம்பெரும்காப்பியங்களும் எந்த காலத்தைச் சார்ந்தவை ஆகும்?
A
பொ. ஆ. நான்காம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை
B
பொ. ஆ. மூன்றாம் நூற்றாண்டு முதல் ஏழாம் நூற்றாண்டு வரை
C
பொ. ஆ. நான்காம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டு வரை
D
பொ. ஆ. மூன்றாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரை
Question 8 Explanation: 
(குறிப்பு - சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் ஐம்பெரும்காப்பியங்களும் பொ. ஆ. நான்காம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரையிலான கால சமூக பண்பாட்டுச் சூழலை சார்ந்தவையாகும்)
Question 9
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு கொண்டுள்ள பாடல்களின் எண்ணிக்கை என்ன?
A
3000
B
2400
C
1800
D
1200
Question 9 Explanation: 
(குறிப்பு - எட்டுத்தொகை மற்றும் பத்துபாட்டு ஏறத்தாழ 2400 பாடல்கள் கொண்ட இலக்கிய கருவூலம் ஆகும். 3 முதல் 800 அடி அளவு கொண்ட இப்பாடல்கள் பாணர்களாலும், புலவர்களாலும் இயற்றப்பட்டதாகும்)
Question 10
கீழ்க்காணும் எட்டுத்தொகை நூல்களுள் தவறானது எது?
A
நற்றிணை
B
குறுந்தொகை
C
முல்லைப்பாட்டு
D
பதிற்றுப்பத்து
Question 10 Explanation: 
(குறிப்பு - நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு மற்றும் புறநானூறு ஆகியவை எட்டுத்தொகை நூல்கள் ஆகும்)
Question 11
கீழ்காணும் பத்துப்பாட்டு நூல்களின் தவறானது எது?
A
திருமுருகாற்றுப்படை
B
சிறுபாணாற்றுப்படை
C
மதுரைக்காஞ்சி
D
குறிஞ்சித்திணை
Question 11 Explanation: 
(குறிப்பு - திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை மற்றும் மலைபடுகடாம் ஆகியவை பத்துப்பாட்டு நூல்கள் ஆகும்)
Question 12
முதன்மை காப்பியங்கள் என்று அழைக்கப்படுவது எது?
  1. சிலப்பதிகாரம்
  2. மணிமேகலை
  3. சீவக சிந்தாமணி
A
I, II மட்டும்
B
I, III மட்டும்
C
II, III மட்டும்
D
இவை அனைத்தும்
Question 12 Explanation: 
(குறிப்பு - சிலப்பதிகாரமும் மணிமேகலையும் பண்பாடு மற்றும் மத வரலாற்றுக்கு சிறந்த சான்றுகளாக பயன்படுபவை. இவை இரண்டும் முதன்மை காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன)
Question 13
பொருத்துக
  1. கிரேக்கம் - a) இயற்கை வரலாறு
  2. பிளினி - b) ஜியோகிராபி
  3. தாலமி - c) பீயூட்டெஞ்செரியன்
  4. ரோமானியர் - d) பெரிப்ளஸ்
A
I-d, II-a, III-b, IV-c
B
I-a, II-c, III-b, IV-d
C
I-d, II-a, III-c, IV-b
D
I-b, II-d, III-a, IV-c
Question 13 Explanation: 
(குறிப்பு - மேற்கண்ட கிரேக்க இலத்தீன் சான்றுகள் தொலைதூர வணிகப் பண்பாட்டுத் தொடர்புகள் குறித்த செய்திகளைத் தெரிவிக்கின்றன)
Question 14
அசோகரின் இரண்டாம் பாறைகல்வெட்டு மூலம் யாரைப் பற்றி அறிய முடிகிறது?
  1. சோழர்
  2. பாண்டியர்.
  3. கேரள புத்திரர்
  4. சத்திய புத்திரர்
A
I, II, III மட்டும் சரி
B
I, III, IV மட்டும் சரி
C
II, III, IV மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 14 Explanation: 
(குறிப்பு - அசோகரின் இரண்டாம் பாறைக் கல்வெட்டில் மௌரிய அரசின் எல்லைக்கு அப்பால் அமைந்த அண்டை அரசுகளான தமிழகத்தில் ஆட்சி புரிந்த அரச மரபுகள் ஆன சோழர், பாண்டியர், கேரள புத்திரர், சத்திய புத்திரர் ஆகியோரை குறிப்பிடுகின்றார்.)
Question 15
மௌரியப் பேரரசின் கீழ் இருந்த பகுதிகள் எது?
  1. கர்நாடகம்
  2. ஆந்திராவின் வடபகுதி
  3. தமிழகம்
A
I, II மட்டும்
B
I, III மட்டும்
C
II, III மட்டும்
D
இவை அனைத்தும்
Question 15 Explanation: 
(குறிப்பு - மௌரிய பேரரசு கர்நாடகா, ஆந்திராவின் பல பகுதிகளையும் கொண்டிருந்தது. தமிழக அரசுகள் சுதந்திரமான அண்டை நாடுகள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளன)
Question 16
சங்க பாடல்களில் தொகுப்பிற்கு பங்களித்த புலவர்கள்களின் எண்ணிக்கை என்ன?
A
450
B
250
C
150
D
200
Question 16 Explanation: 
(குறிப்பு - சங்கப் பாடல்களின் தொகுப்பிற்கு பங்களித்த 450க்கும் மேற்பட்ட புலவர்களின் 30 பெண்பாற் புலவர்களும் அடங்குவர்)
Question 17
கீழ்காணும் புலவர்களுள் பெண்பாற்புலவர் அல்லாதவர் யார் எது?
A
நல்வெளியார்
B
காக்கைபாடினியார்
C
ஒட்டக்கூத்தர்
D
காவற்பெண்டு
Question 17 Explanation: 
(குறிப்பு - அவ்வையார், அள்ளூர் நன்முல்லையார், காக்கைபாடினியார், காவற்பெண்டு, நல்வெளியார், ஒக்கூர் மாசாத்தியார், பாரிமகளிர் ஆகியோர் மிகமுக்கிய பெண்பாற் புலவர்கள் ஆவர்)
Question 18
சாதவாகனர் எந்த நதிக்கரையில் தனது தலைநகரை நிறுவினார் ?
A
கோதாவரி
B
கிருஷ்ணா
C
காவிரி
D
நர்மதா
Question 18 Explanation: 
(குறிப்பு - அண்மைக் காலத் தொல்லியல் ஆய்வுகளின் படி தெலுங்கானா பகுதிகளில் ஆட்சியை தொடங்கிய சாதவாகனர் மகாராஷ்டிர பகுதிகளுக்கு நகர்ந்து கோதாவரி நதி தீரத்தில் தனது தலைநகரை நிறுவினார்)
Question 19
சாதவாகனர் தலைநகரம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
A
இந்துஸ்தான்
B
பர்மிஸ்தான்
C
பிரதிஸ்தான்
D
பிரதிஷ்டஸ்தான்
Question 19 Explanation: 
(குறிப்பு - கோதாவரி நதி தீரத்தில் பிரதீஸ்தான்( மகாராஷ்டிராவில் பைத்தன்) என்னும் நகரை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்தனர். பின்னர் கிழக்கு நோக்கி நகர்ந்து ஆந்திராவின் கடற்கரை பகுதிகளை கட்டுப்படுத்தினார்)
Question 20
சாக அரசர் நாகாபனா என்பவரை தோற்கடித்த சாதவாகன அரசர் யார்?
A
கௌதமபுத்திர சாதகர்ணி
B
கௌதமபுத்திர பாலஸ்ரீ
C
கௌதமபுத்திர பகல்வர்
D
இவர்கள் யாரும் அல்ல
Question 20 Explanation: 
(குறிப்பு - சாதவாகன அரசர்கள் கௌதமபுத்திர சதகர்ணி பெரும் அரசன் ஆவார். சாக அரசர் நாகபனாவை வென்ற அவர் நாகபனாவின் நாணயங்களை தன் அரச முத்திரையோடு மீண்டும் வெளியிட்டார்)
Question 21
கௌதமிபுத்ர சதகர்னிக்கு பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர் யார்?
A
வசிஷ்டபுத்ர புலுமாவி
B
கௌதம பாலஸ்ரீ
C
கௌதமபுத்ர யக்னஸ்ரீ
D
இவர்கள் யாரும் அல்ல
Question 21 Explanation: 
(குறிப்பு - கௌதமிபுத்திர சதகர்னிக்கு பின்னர் ஆட்சி பொறுப்பேற்ற அவர் வசிஷ்டபுத்திர புலுமாவி என்பவர் ஆவார். கௌதமிபுத்ர சாதகர்னியின் தாய் கௌதம பாலஸ்ரீ என்பவராவார்.)
Question 22
சாதவாகனப் பேரரசின் கீழ் வராத பகுதி எது?
A
கல்யாண்
B
பிரதிஸ்தானம்
C
கலிங்கம்
D
அனுபம்
Question 22 Explanation: 
(குறிப்பு - அனுபம், நாசிக், கல்யாண், சோபரா, முலுகா, பிரதிஸ்தானம், அஸ்மாகா போன்றவை சாதவாகனப் பேரரசின் கீழ் இருந்த பகுதிகள் ஆகும்)
Question 23
கப்பலின் வடிவம் பதிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்ட சாதவாகன அரசர் யார்?
A
கௌதமிபுத்ர சதகர்ணி
B
கௌதம பாலஸ்ரீ
C
யக்னஸ்ரீ சதகர்னி
D
இவர்கள் யாரும் அல்ல
Question 23 Explanation: 
(குறிப்பு - யக்னஸ்ரீ சதகர்னி, தனது ஆட்சியின் வெளிநாட்டு வணிகத்தின் முக்கியத்துவத்தை காட்டும் வகையில் கப்பலின் வடிவம் பதிப்பிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்டார்.)
Question 24
சாதவாகனர்களின் பேரரசு எந்த நூற்றாண்டில் வீழ்ச்சியடைந்தது?
A
பொ.ஆ. இரண்டாம் நூற்றாண்டு
B
பொ.ஆ. மூன்றாம் நூற்றாண்டு
C
பொ.ஆ. நான்காம் நூற்றாண்டு
D
பொ.ஆ. ஐந்தாம் நூற்றாண்டு
Question 24 Explanation: 
(குறிப்பு - சாதவாகனப் பேரரசு மூன்றாம் நூற்றாண்டில் வீழ்ச்சியடைந்தது. அவர்களைத் தொடர்ந்து ஆந்திரப் பகுதியில் இக்ஷ்வாகு, பட கர்நாடகப் பகுதிகளில் கடம்பர் ஆகியோர் ஆட்சி புரிந்தனர்)
Question 25
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
  1. கூற்று 1 - சாதவாகன அரசர் ஹால 700 காதற் பாடல்களைக் கொண்ட காதா சப்த சதி என்ற நூலை இயற்றினார்.
  2. கூற்று 2 - மகாராஷ்டிர பிராகிருத மொழியில் எழுதப்பட்ட இந்த நூலின் கருப்பொருள் சங்க இலக்கியத்தின் அகப்பொருளை ஒத்துள்ளன.
A
கூற்று 1 மட்டும் சரி
B
கூற்று 2 மட்டும் சரி
C
இரண்டு கூற்றுகளும் சரி
D
இரண்டு கூற்றுகளும் தவறு
Question 25 Explanation: 
(குறிப்பு - சாதவாகன அரசர் ஹால பிராகிருத மொழியில் எழுதிய காதா சப்த சதி என்னும் நூல் சாதவாகனர் காலத்து இலக்கியச் சான்றாக விளங்குகிறது.)
Question 26
கீழ்காணும் கூற்றுகளில் எது சரி?
  1. கூற்று 1 - நில மானியம் வழங்குவது சாதவாகனர் காலத்தின் முக்கிய அம்சமாகும்.
  2. கூற்று 2 - சாதவாகனர் காலத்தில் நிலமானியத்தின் பயனாளிகள் பெரும்பாலும் பௌத்தர்களும், பிராமணர்களும் ஆவர்.
A
கூற்று 1 மட்டும் சரி
B
கூற்று 2 மட்டும் சரி
C
இரண்டு கூற்றுகளும் சரி
D
இரண்டு கூற்றுகளும் தவறு
Question 26 Explanation: 
(குறிப்பு - பௌத்த துறவிகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. இவ்வாறு மத குருமார்களை கொண்ட குழுக்கள் செல்வாக்குப் பெற்று உயரிடத்தை வகிக்கத்தொடங்கியதை காணமுடிகிறது.)
Question 27
பௌத்த துறவிகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டதை குறிப்பிடும் கல்வெட்டு எது?
A
அசோகரின் இரண்டாம் பாறை கல்வெட்டு
B
நனிகாட் கல்வெட்டு
C
கேரளா குகைகளில் காணப்படும் தமிழ் பிராமி கல்வெட்டு
D
ஆந்திரப் பகுதியில் உள்ள சாதவாகனர் கல்வெட்டு,
Question 27 Explanation: 
(குறிப்பு - பௌத்த துறவிகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டதை நனிகாட் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. நிலங்களைக் கொடையாக வழங்கும் இந்த முறை நிலங்களில் வேளாண்மை செய்யாமல், நிலங்களுக்கு உரிமையாளராக மாறிய ஒரு பிரிவினரை உருவாக்கியது)
Question 28
சாதவாகனர் காலத்தைப் பற்றிய கூற்றுகளில் எது சரியானது?
  1. கூற்று 1 - முதன் முதலாக தக்காணத்தின் பெரும் பகுதியை உள்ளடக்கிய ஒரு பெரிய அரசு நிறுவப்பட்டது.
  2. கூற்று 2 - பௌத்த சங்கங்களுக்கு என்றே பல குடைவரைக்குகைகள் உருவாக்கப்பட்டன.
  3. கூற்று 3 - சாதவாகனர் பேரரசு பொ.ஆ. நான்காம் நூற்றாண்டில் வீழ்ச்சி அடைந்தது.
A
கூற்று 1, 3 மட்டும் சரி
B
கூற்று 1, 2 மட்டும் சரி
C
கூற்று 2, 3 மட்டும் சரி
D
எல்லா கூற்றுகளும் சரி
Question 28 Explanation: 
(குறிப்பு - சாதவாகனர் பேரரசு பொ.ஆ. மூன்றாம் நூற்றாண்டில் வீழ்ச்சியடைந்தது. பௌத்த சங்கங்களுக்கு என்று பல குடைவரைக் குகைகள் உருவாக்கப்பட்டன. அவை உள்நாட்டு பகுதிகளையும், கொங்கன கடற்கரை பகுதியையும், உள்நாட்டு வணிகப் பாதைகளை யும் இணைக்கும் புள்ளிகளாக அமைக்கப்பட்டு இருந்தமைக்கான சான்றுகளை கொண்டுள்ளன)
Question 29
சங்க காலம் என்பது கீழ்காணும் காலங்களில் எது?
A
பொ.ஆ. முதல் ஐந்து நூற்றாண்டுகள்
B
பொ.ஆ. முதல் இரண்டு நூற்றாண்டுகள்
C
பொ.ஆ. முதல் மூன்று நூற்றாண்டுகள்
D
பொ.ஆ. முதல் நான்கு நூற்றாண்டுகள்
Question 29 Explanation: 
(குறிப்பு - பொ. ஆ. முதல் மூன்று நூற்றாண்டுகளில் சங்ககாலம் என்பது பெரும்பாலானோர் ஒத்துக்கொள்ளும் காலவரையறை ஆகும். இக்காலம் பற்றிய செய்திகள் அனைத்தும் சங்க இலக்கியங்களில் இருந்து பெறப்படுகின்றன. இலக்கிய சான்றுகள் தவிர தெளிவான கல்வெட்டுச் சான்றுகளும் தொல்பொருளியல் சான்றுகளும் கிடைக்கப் பெறுவதால் இக்காலம் ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே தொடங்குகிறது எனக் கூறலாம்)
Question 30
அசோகர் கல்வெட்டுகளில் மூவேந்தர்களும் இடம்பெற்றுள்ள சத்திய புத்திரர் என்பது யாரைக் குறிக்கிறது?
A
அதியமான்
B
கடம்பன்
C
இக்சவாகு
D
இவர்கள் யாரும் இல்லை
Question 30 Explanation: 
(குறிப்பு - மூவேந்தர்கள் என்று அறியப்பட்ட சேர சோழ பாண்டியர்கள் பெரும்பாலான வேளாண் நிலங்களையும், வணிக பெருவழிகளையும், நகரங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அசோகர் கல்வெட்டுகளில் மேற்சொல்லப்பட்ட மூவேந்தர்களோடு இடம்பெற்றுள்ள சத்தியபுத்திரர் என்பது அதியமான் என்னும் வேளிரை குறிப்பதாக உள்ளது)
Question 31
சோழர்களின் ஆட்சியின் மையப் பகுதியாக இருந்த இடம் எது?
A
காவிரி ஆற்றின் கழிமுகப் பகுதி
B
தாமிரபரணி ஆற்றின் கழிமுகப் பகுதி
C
வைகை ஆற்றின் கழிமுகப் பகுதி
D
கிருஷ்ணா ஆற்றின் கழிமுகப் பகுதி
Question 31 Explanation: 
(குறிப்பு - சோழர்கள் தமிழகத்தின் மத்திய மற்றும் வட பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டிருந்தனர். அவர்களது ஆட்சியின் மையமாக இருந்த பகுதி காவிரி ஆற்றின் கழிமுகப் பகுதி ஆகும். இதுவே பின்னர் சோழமண்டலம் என்று அழைக்கப்பட்டது)
Question 32
சோழர்களின் தலைநகரான உறையூர் எந்த நகரத்திற்கு அருகே அமைந்துள்ளது?
A
திருச்சிராப்பள்ளி
B
புதுக்கோட்டை
C
கரூர்
D
ஈரோடு
Question 32 Explanation: 
(குறிப்பு - சோழர்களின் தலைநகராக விளங்கிய ஊர் உறையூர் ஆகும். இது திருச்சிராப்பள்ளி நகரத்திற்கு அருகே அமைந்துள்ளது. காவிரிப்பூம்பட்டினம் இந்துமாகடலின் பல பகுதிகளை சேர்ந்த வணிகர்களை தன் பால் ஈர்த்தது)
Question 33
சங்க கால சோழ அரசர்களில் ஒருவரான கரிகாலன் யாருடைய மகன் ஆவார்?
A
இளஞ்சேட்சென்னி
B
ராஜேந்திர சோழன்
C
விஜயாலய சோழன்
D
குலோத்துங்க சோழன்
Question 33 Explanation: 
(குறிப்பு - இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான் கரிகாலன் சங்க கால சோழ அரசர்களில் தலைவராக அறியப்படுகிறார். பட்டினப்பாலை என்னும் நூல் கரிகாலனுடைய ஆட்சியைப் பற்றி விரிவாகக் கூறுகிறது)
Question 34
பட்டினப்பாலை என்னும் நூலை எழுதியவர் யார்?
A
ஒக்கூர் மாசாத்தியார்
B
பட்டினத்தார்
C
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
D
அள்ளூர் நன்முல்லையார்
Question 34 Explanation: 
(குறிப்பு - கரிகாலனின் ஆட்சியின்போது காவிரிப்பூம்பட்டினத்தில் நடைபெற்ற ஆரவாரமான வணிக நடவடிக்கைகள் குறித்து கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப் பாலை என்னும் நூலில் விரிவாக விளக்குகிறார்)
Question 35
வெண்ணிப் போர்க்களத்தில் சேரர்களையும் பாண்டியர்களையும் வெற்றி கொண்ட சோழ அரசர் யார்?
A
கரிகாலச்சோழன்
B
குலோத்துங்கச் சோழன்
C
இளஞ்சேட்சென்னி
D
ராஜேந்திர சோழன்
Question 35 Explanation: 
(குறிப்பு - கரிகாலனுடைய தலையாய போர் வெற்றி என்பது வெண்ணிப் போர்க்களத்தில் சேரரையும் பாண்டியனையும் அவர்களுக்கு உதவிய 11 வேளிர் குல தலைவர்களையும் வெற்றி கொண்டது ஆகும். இதைப்பற்றி உருத்திரங்கண்ணனார் என்பவர் எழுதிய பட்டினப்பாலை என்னும் நூல் விளக்குகிறது.)
Question 36
வேத வேள்வி யான ராஜசூய யாகத்தில் நடத்திய சோழ அரசன் யார்?
A
விஜயாலய சோழன்
B
பெருநற்கிள்ளி
C
இளஞ்சேட்சென்னி
D
கரிகால சோழன்
Question 36 Explanation: 
(குறிப்பு - பெருநற்கிள்ளி என்னும் பெயருடைய சோழ அரசர் வேத வேள்வி யான ராஜசூய யாகத்தில் நடத்தியுள்ளார். கரிகாலனின் மறைவைத் தொடர்ந்து உறையூர் மற்றும் புகார் அரச குடும்பத்தினர் இடையே வாரிசுரிமை தொடர்பான மோதல் ஏற்பட்டதற்கு சான்றுகள் இருக்கின்றன)
Question 37
சேரர்கள் ஆண்ட பகுதிகளில் தவறானது எது?
  1. மத்திய கேரள பகுதிகள்
  2. வடக்கு கேரள பகுதிகள்
  3. தமிழ்நாட்டின் கொங்கு பகுதிகள்
  4. தமிழ்நாட்டின் காவிரிநதி படுகை பகுதிகள்
A
III மட்டும் தவறு
B
IV மட்டும் தவறு
C
I, IV மட்டும் தவறு
D
II, III மட்டும் தவறு
Question 37 Explanation: 
(குறிப்பு - சேரர்கள் மத்திய கேரள பகுதிகள், வடக்கு கேரள பகுதிகள், தமிழ்நாட்டின் கொங்கு பகுதிகளை ஆட்சி செய்தனர்)
Question 38
சேரர்களின் தலைநகரமான வஞ்சி தற்போது தமிழகத்தின் எந்த ஊராக அடையாளம் காணப்படுகிறது?
A
பூம்புகார்
B
திருப்பூர்
C
கரூர்
D
கோயம்புத்தூர்
Question 38 Explanation: 
(குறிப்பு - சேரர்களின் தலைநகராக வஞ்சி நகரம் இன்றைய தமிழகத்தின் கரூர் என்று அடையாளம் காணப்படுகிறது. எனினும் சில அறிஞர்கள் கேரளத்திலுள்ள திருவஞ்சைக்களம் என்னும் ஊரே வஞ்சி என்று அடையாளம் காண்கின்றனர்.)
Question 39
சேரர்களின் கடற்கரை துறைமுகங்களாக விளங்கியது எது?
  1. தொண்டி துறைமுகம்
  2. முசிறி துறைமுகம்
  3. புகார் துறைமுகம்
A
I, II மட்டும் சரி
B
II, III மட்டும் சரி
C
I, III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 39 Explanation: 
(குறிப்பு - மேலைக் கடற்கரை துறைமுகங்களான முசிறி துறைமுகமும், தொண்டி துறைமுகமும் சேரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. சேரர்களில் பொறையர் என்னும் கிளையினர் தமிழ்நாட்டில் கரூர் நகரில் இருந்து ஆட்சிபுரிந்தனர் என பல அறிஞர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்)
Question 40
எட்டு சேர அரசர்கள் குறித்தும் அவர்கள் ஆண்ட பகுதிகள் குறித்தும் பேசும் நூல் எது?
A
பதிற்றுப்பத்து
B
ஐங்குறுநூறு
C
புறநானூறு
D
பரிபாடல்
Question 40 Explanation: 
(குறிப்பு - எட்டு சேர அரசர்கள் குறித்தும் அவர்கள் ஆண்ட பகுதிகள், அவர்களது சாதனைகள் குறித்தும் பதிற்றுப்பத்து என்னும் நூல் பேசுகிறது. பதிற்றுப்பத்து என்பது ஒரு எட்டுத்தொகை நூல் ஆகும்)
Question 41
தன் பெயரில் நாணயங்களை வெளியிட சேர மன்னர் யார்?
A
சேரன் செங்குட்டுவன்
B
சேரல் இரும்பொறை
C
சேரல் இளஞ்சேட்சென்னி
D
நெடுஞ்சேரலாதன்
Question 41 Explanation: 
(குறிப்பு - கரூர் நகருக்கு அருகேயுள்ள புகளூரில் உள்ள கல்வெட்டு மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த சேர அரசர்களை குறிப்பிடுகின்றது)
Question 42
கடற் கொள்ளையர்களை அடக்கி அதன் மூலம் முக்கிய துறைமுகமான கொடுங்களூரை காப்பாற்றிய சேர மன்னர் யார்?
A
சேரன் செங்குட்டுவன்
B
சேரல் இரும்பொறை
C
சேரல் இளஞ்சேட்சென்னி
D
நெடுஞ்சேரலாதன்
Question 42 Explanation: 
( இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், செங்குட்டுவன் போன்றோர் முக்கிய சேர அரசர்கள் ஆவர். சேரன் செங்குட்டுவன் பல குறுநில மன்னர்களை வெற்றி கண்டுள்ளார். கடற் கொள்ளையர்களை அடக்கி அதன் மூலம் முக்கிய துறைமுகமான முசிறியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தினார் என வரலாற்று சான்றுகள் கூறுகின்றன)
Question 43
சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் ____________ மாபெரும் வட இந்திய படையெடுப்பு சங்க இலக்கியங்களில் சொல்லப்படவில்லை.
A
செங்குட்டுவனின்
B
சேரல் இரும்பொறையின்
C
நெடுஞ்சேரலாதனின்
D
இமயவரம்பனின்
Question 43 Explanation: 
(குறிப்பு - சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் செங்குட்டுவனின் மாபெரும் வட இந்திய படையெடுப்பு சங்க இலக்கியங்களில் சொல்லப்படவில்லை. இவர் 56 ஆண்டுகள் ஆட்சி செய்ததாகவும் வைதீக, அவைதீக மதங்களை ஆதரித்ததாகவும் கூறப்பட்டுள்ளது)
Question 44
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
  1. கூற்று 1 - சேரர்கள் செப்பு மற்றும் ஈய நாணயங்களை வெளியிட்டனர்.
  2. கூற்று 2 - சேரர்களின் நாணயத்தில் தமிழ் பிராமியில் புராண குறிப்புகளைக் கொண்டுள்ளன நாணயங்கள் ரோம நாணயங்கள் போல உள்ளன.
A
கூற்று 1 மட்டும் சரி
B
கூற்று 2 மட்டும் சரி
C
இரண்டு கூற்றுகளும் சரி
D
இரண்டு கூற்றுகளும் தவறு
Question 44 Explanation: 
(குறிப்பு - சேரர் காலத்து நாணயங்களில், எழுத்துக்கள் எவையும் இல்லாமல் சேரர்களின் வில் அம்பு சின்னங்களைத் தாங்கிய சேர நாணயங்களும் தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்துள்ளன.)
Question 45
பாண்டியர்களின் தலைநகராக விளங்கியது எது?
A
திருச்சிராப்பள்ளி
B
தஞ்சாவூர்
C
மதுரை
D
இது எதுவும் அல்ல
Question 45 Explanation: 
(குறிப்பு - பாண்டியர்களின் தலைநகராக மதுரை இருந்தது. பாண்டியர்களின் சின்னமாக மீன் இருந்தது)
Question 46
பாண்டியர்களின் துறைமுகமாக விளங்கியது?
A
முசிறி துறைமுகம்
B
தொண்டி துறைமுகம்
C
பூம்புகார் துறைமுகம்
D
கொற்கை துறைமுகம்
Question 46 Explanation: 
(குறிப்பு - தாமிரபரணி நதி வங்காள விரிகுடா கடலில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ள கொற்கை துறைமுகம் பாண்டியர்களின் முக்கிய துறைமுகமாக விளங்கியது. இது முத்துக்குளிப்பு இருக்கும் சங்குகள் சேகரிப்பிற்கும்க்கும் பெயர் பெற்ற துறைமுகம் ஆகும்)
Question 47
பெரிப்ளஸின் குறிப்புகளில் சொல்லப்பட்டிருக்கும் துறைமுகம் எது?
A
முசிறி துறைமுகம்
B
தொண்டி துறைமுகம்
C
பூம்புகார் துறைமுகம்
D
கொற்கை துறைமுகம்
Question 47 Explanation: 
(குறிப்பு - பெரிப்ளஸ் குறிப்புகளில் கொற்கை துறைமுகம் கொல்கொய் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது)
Question 48
கேரளத்தின் தெற்கு பகுதிகளில் மீது போர் தொடுத்து கோட்டத்திற்கு அருகே உள்ள நெல்கிண்டா துறைமுகத்தை கைப்பற்றியவர்கள் யார்?
A
சேரர்கள்
B
பாண்டியர்கள்
C
சோழர்கள்
D
பல்லவர்கள்
Question 48 Explanation: 
(குறிப்பு - பாண்டியர்களின் நாணயங்களில் ஒரு புறம் யானையின் வடிவமும் மற்றொருபுறம் புதிய பாணியில் மீன் உருவமும் பொறிக்கப்பெற்றுள்ளன. மரபுவழிச் செய்தியின் படி பாண்டியர் தமிழ் சங்கங்களை ஆதரித்து சங்க நூல்களை தொகுப்பித்தனர்.)
Question 49
மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டு கீழ்க்காணும் எந்த அரசரைப் பற்றி குறிப்பிடுகிறது?
A
நெடுஞ்செழியன்
B
நெடுஞ்சேரலாதன்
C
சேரல் இரும்பொறை
D
சேரன் செங்குட்டுவன்
Question 49 Explanation: 
(குறிப்பு - மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டு பொ.ஆ.மு.இரண்டாம் நூற்றாண்டை சார்ந்த பாண்டிய அரசன் நெடுஞ்செழியனை குறிப்பிடுகிறது.)
Question 50
மதுரைக் காஞ்சி என்னும் நூல் கீழ்க்காணும் எந்த பாண்டிய மன்னர்களை பற்றி குறிப்பிடுகிறது?
  1. காஞ்சி முதுகுடுமிப் பெருவழுதி.
  2. தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்
  3. முப்பெரும் வழுதி
A
I, II மட்டும் சரி
B
I, III மட்டும் சரி
C
II, III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 50 Explanation: 
(குறிப்பு - மதுரைக்காஞ்சி என்னும் நூல் ஒரு பத்துப்பாட்டு நூல் ஆகும். இதில் மன்னர்களான காஞ்சி முதுகுடுமிப் பெருவழுதி மற்றும் நெடுஞ்செழியனான தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் மற்றும் பல பாண்டிய மன்னர்களையும் குறிப்பிடுகிறது)
Question 51
முதுகுடுமிப் பெருவழுதி பற்றிக் கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
  1. இவர் பிராமணர்களுக்கு நிலங்களை தானமாக வழங்கினார்.
  2. இவர் பல வேத வேள்வி சடங்குகளை நடத்தினார்.
  3. இவர் பெருவழுதி என்ற பெயரில் புராணகதை பொறுப்புகளை கொண்ட நாணயங்களை வெளியிட்டுள்ளார்.
  4. இவரைப் பற்றிய பாடல்கள் பட்டினப்பாலை என்னும் நூலில் காணப்படுகிறது.
A
I, II, IV மட்டும் சரி
B
II, III, IV மட்டும் சரி
C
I, II, III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 51 Explanation: 
(குறிப்பு - காஞ்சி முதுகுடுமிப் பெருவழுதி பற்றிய குறிப்புகள் பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைக் காஞ்சி என்னும் நூலில் காணப்படுகிறது.)
Question 52
முதுகுடுமிப் பெருவழுதி என்பவரால் தலையாலங்கானத்து போரில் வீழ்த்தப்பபெற்ற ஐந்து வேளிர் குல சிற்றரசர்களுள் தவறானவர் யார்?
  1. திதியன்
  2. எழினி
  3. எருமையூரான்
  4. வண்டியூரான்
  5. பொருநன்
A
I மட்டும் தவறு
B
II மட்டும் தவறு
C
III மட்டும் தவறு
D
IV மட்டும் தவறு
Question 52 Explanation: 
(குறிப்பு - நெடுஞ்செழியன், சேரர், சோழர், ஐந்து வேளிர் குல சிற்றரசர்கள்( திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநன் )ஆகியோரின் கூட்டுப் படைகளை தலையானங்கானத்து போரில் வெற்றி வெற்றி கொண்டதாக முதுகுடுமிப் பெருவழுதி பாராட்டப்படுகிறார்)
Question 53
முதுகுடுமிப் பெருவழுதி பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
  1. கொற்கையின் தலைவன் என்று அழைக்கப்பட்டார்.
  2. தென்பகுதி பரதவர்களின் தலைவன் என்று அழைக்கப்பட்டார்.
  3. எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த வேள்விக்குடி செப்பேடுகளில் இவர் பிராமணர்களுக்கு நிலங்களை தானமாக வழங்கினார் என குறிப்பிடப்படுகிறது.
A
I, II மட்டும் சரி
B
I, III மட்டும் சரி
C
II, III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 53 Explanation: 
(குறிப்பு - திருநெல்வேலி கடற்கரை பகுதியில் வாழும் மீன் பிடிக்கும், போர் புரியும் திறன் பெற்ற தென்பகுதி பரதவர்களின் தலைவன் என்று இவர் புகழப்படுகிறார். மேலும் சிற்றரசர்கள் இடமிருந்து மிலலை, முத்தூர் என்னும் இடங்களை கைப்பற்றிய பெருமை இவரையே சாரும்)
Question 54
கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையை தேர்ந்தெடு.
A
சேரர்கள் - காவிரிப்பூம்பட்டினம்
B
சோழர்கள் - காவிரி ஆற்றின் கழிமுகப் பகுதி
C
பாண்டியர்கள் - கொற்கை துறைமுகம்
D
கரிகாலன் - பட்டினப்பாலை
Question 54 Explanation: 
(குறிப்பு - காவிரிப்பூம்பட்டினம் என்பது சோழர்களின் முக்கிய துறைமுகம் ஆகும். சேரர்களின் முக்கிய துறைமுகமாக விளங்கியது, முசிறி துறைமுகம் மற்றும் தொண்டி துறைமுகம் ஆகும்)
Question 55
முத்து குளிப்பிற்கும் சங்குகள் சேகரிப்புக்கும் பெயர் பெற்ற துறைமுகம் எது?
A
பூம்புகார் துறைமுகம்
B
கொற்கை துறைமுகம்
C
முசிறி துறைமுகம்
D
தொண்டி துறைமுகம்
Question 55 Explanation: 
(குறிப்பு - தாமிரபரணி நதி வங்காள விரிகுடா கடலில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ள கொற்கை துறைமுகம் பாண்டியர்களின் முக்கிய துறைமுகம் ஆகும். இது முத்து குளிப்பதற்கும் சங்குகள் சேகரிப்பதற்கும் பெயர் பெற்ற துறைமுகம் ஆகும்)
Question 56
பொருத்துக
  1. குறிஞ்சி - a) வயலும் வயல் சார்ந்த இடம்
  2. முல்லை - b) கடலும் கடல் சார்ந்த இடம்
  3. மருதம் - c) மலையும் மலை சார்ந்த இடம்
  4. நெய்தல் - d) காடு சார்ந்த இடம்
A
I-c, II-d, III-a, IV-b
B
I-c, II-b, III-a, IV-d
C
I-c, II-a, III-b, IV-d
D
I-d, II-b, III-a, IV-c
Question 56 Explanation: 
(குறிப்பு - திணைக் கோட்பாட்டில் பின்புலத்தில் தமிழகம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை இன்னும் ஐந்து முக்கிய நிலப்பரப்புகளாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு நிலத்திற்கும் தெய்வம், மக்கள், சூழல் சார்ந்த பண்பாட்டு வாழ்க்கை என தனித் தன்மைகளைக் கொண்டு இருந்தது)
Question 57
பொருத்துக
  1. குறிஞ்சி - a) மீன்பிடித்தல் மற்றும் உப்பு சேகரித்தல்
  2. முல்லை - b) வேட்டையாடுதல்
  3. மருதம் - c) கால்நடை மேய்த்தல்
  4. நெய்தல் - d) வேளாண்மை செய்தல்
A
I-b, II-c, III-d, IV-a
B
I-c, II-b, III-a, IV-d
C
I-c, II-a, III-b, IV-d
D
I-d, II-b, III-a, IV-c
Question 57 Explanation: 
(குறிப்பு - பாலை நிலம் மணலும் மணல் சார்ந்த வறண்ட நிலப்பகுதி ஆகும். இங்கு வேளாண்மை சாத்தியமில்லை என்பதால் மக்கள் கால்நடை திருட்டையும் கொள்ளையடிப்பதும் தொழிலாகக் கொண்டனர்)
Question 58
தமிழ் அரசமைப்புகளில் காணப்பட்ட ஆட்சியாளர்களின் வகைகளுள் சரியானது எது?
  1. கிழார்
  2. வேளிர்
  3. வேந்தன்
A
I, II மட்டும்
B
I, III மட்டும்
C
II, III மட்டும்
D
எல்லாமே சரி
Question 58 Explanation: 
(குறிப்பு - ஆட்சியாளர்களின் மூன்று வகைப்பட்ட தலைமைத்துவம் கொண்டவர்களை காணமுடிகிறது. அவை கிழார், வேளிர் மற்றும் வேந்தன் என்பனவாம். ஒருவகையில் திணை சார் பாகுபாடு சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் நிலவிய சமச்சீரற்ற வளர்ச்சியை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது என்றும் சொல்லப்படுகிறது)
Question 59
கிழார் என்பவரை பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
  1. கிழார் என்பவர் கிராமங்களில் அல்லது ஒரு சிறிய பகுதியில் தலைவராக இருந்து பின்னர் நாடு என்று அறியப்பட்ட நிர்வாகப் பிரிவில் தலைவர் ஆவார்.
  2. இவர்கள் குறிப்பிட்ட இடங்களில் வாழும் பழங்குடி சமூகங்களில் தலைவர்கள் ஆவர்.
A
I மட்டும் சரி
B
II மட்டும் சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 59 Explanation: 
(குறிப்பு - கிழார் என்பவர்கள் ஒரு கிராமங்களின் தலைவராக இருந்து பின்னர் ஒரு சிறிய பகுதியில் தலைவராக இருந்து பின்னர் நாடு என்று அறியப்பட்ட நிர்வாகப் பிரிவின் தலைவராக படிப்படியாக உயர்ந்தவர்கள் ஆவர்)
Question 60
வேந்தர் எனப்படுபவர்களைப் பற்றிய கீழ்க்காணும் கூற்றுக்களுள் எது சரியானது?
  1. கூற்று 1 - வேந்தர் எனப்பட்டவர் மிகப்பெரும் வளமான நிலப்பகுதியை கட்டுப்படுத்திய அரசர்கள் ஆவர்.
  2. கூற்று 2 - சேரர்கள், சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் ஆகியோர் வேந்தர்கள் ஆவர்.
  3. கூற்று 3 - அதியமான், பாரி, இருங்கோ போன்றவர்கள் வேந்தர்களுக்கு எடுத்துக்காட்டு ஆவர்.
A
கூற்று 1, 3 மட்டும் சரி
B
கூற்று 1, 2 மட்டும் சரி
C
கூற்று 2, 3 மட்டும் சரி
D
எல்லா கூற்றுகளும் சரி
Question 60 Explanation: 
(குறிப்பு - இரும்பு காலகட்டத்தில் தோன்றிய தலைவர்களில் இருந்து தொடக்க வரலாற்று கால வேந்தர்கள் உருவாகினர். ஒரு சிலர் மேய்ச்சல் நிலங்களின் மீதும், வேளாண் நிலங்களின் மீதும் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தினர்.)
Question 61
வேளிர் குறித்து கீழ்காணும் கூற்றுகளில் சரியானது எது?
  1. கூற்று 1 - அதியமான், பாரி, ஆய், இருங்கோ போன்றவர்கள் வேளிர் ஆவர்.
  2. கூற்று 2 - இவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கென இயற்கை வளம் மிக்க ஒரு பகுதியை ஆண்டனர்.
  3. கூற்று 3 - ஆநிரை கவர்தல் காரணமாக இவர்கள் இடையே அடிக்கடி மோதல்கள் நடைபெற்றன.
A
கூற்று 1, 3 மட்டும் சரி
B
கூற்று 1, 2 மட்டும் சரி
C
கூற்று 2, 3 மட்டும் சரி
D
எல்லா கூற்றுகளும் சரி
Question 61 Explanation: 
(குறிப்பு - வேளிர் என்போர் பல்வேறு புவியியல் தன்மைகளைக் கொண்ட, குறிப்பாக மூவேந்தர்களின் வளம் நிறைந்த பகுதிகளில் இடையே அமைந்திருந்த மலைப்பாங்கான காட்டுப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டிருந்தனர்.)
Question 62
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
  1. கூற்று 1 - கிழார்களையும், வேளிர் குல தலைவர்களையும் வேந்தர்கள் அடிபணிய செய்ததோடு தங்களுக்குள்ளும் போரிட்டுக் கொண்டனர்.
  2. கூற்று 2 - சங்ககாலத்தை சேர்ந்த வேந்தர்கள் தங்களது வலிமையை பறைசாற்றிய கொள்வதற்காக சிறப்புப் பட்டங்களை சூடிக்கொண்டனர்.
  3. கூற்று 3 - அசோகன் கல்வெட்டுகளில் சத்தியபுத்திர என்று குறிப்பிடப்பட்டுள்ளவர் பாரி ஆவார்.
A
கூற்று 1, 3 மட்டும் சரி
B
கூற்று 1, 2 மட்டும் சரி
C
கூற்று 2, 3 மட்டும் சரி
D
எல்லா கூற்றுகளும் சரி
Question 62 Explanation: 
(குறிப்பு - இரும்பு காலகட்டத்தில்(பொ.ஆ.மு 1100-300) தோன்றிய தலைவர்களில் இருந்து தொடக்க வரலாற்று கால வேந்தர்கள் உருவாகினர். தலைவர்களில் ஒருசிலர் மேய்ச்சல் நிலங்களின் மீதும், வேளாண் நிலங்களின் மீதும் தங்கள் முழுமையான கட்டுப்பாட்டை வைத்ததன் மூலம் உயர் நிலையை(வேந்தர்) அடைந்தனர்)
Question 63
வானவரம்பன், பெருவழுதி, கடுங்கோ, இமயவரம்பன் போன்ற பட்டங்களை சூட்டி கொண்டவர்கள் யார்?
A
கிழார்
B
வேந்தர்கள்
C
வேளிர்
D
பேரரசர்கள்
Question 63 Explanation: 
(குறிப்பு - மேற்கண்ட பட்டப் பெயர்களை சூட்டி கொள்வதன் மூலம் வேந்தர்கள் தங்களை ஏனைய மக்களிடம் இருந்தும் வேளிர் குல தலைவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டிக் கொண்டனர்)
Question 64
பட்டினப்பாலை நூலை இயற்றிய கடியலூர் உருத்திரங்கண்ணனார்க்கு யார் பொன் அளித்த சான்றுகள் பெருமளவில் உள்ளன?
A
இளஞ்சேட்சென்னி
B
நெடுஞ்செழியன்
C
கரிகாலன்
D
சேரல் இரும்பொறை
Question 64 Explanation: 
(குறிப்பு - வேந்தர்கள் புலவர்களையும் கலைஞர்களையும் ஆதரித்து அவர்களை தங்களது அரசவையில் அமர வைத்துக் கொண்டது ஒரு வகையில் தங்களையும் தங்கள் நாட்டையும் புகழ்ந்து பாடுவதற்காக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.)
Question 65
சங்ககாலத்தில் செய்யப்பட்ட கைவினை தொழில்களாக கருதப்படுபவை கீழ்க்கண்டவற்றுள் எது?
  1. சங்கு வளையல் செய்தல்.
  2. கண்ணாடி செய்தல்
  3. மட்பாண்டம் செய்தல்
  4. உலோக பாண்டம் செய்தல்
A
I, II, III மட்டும் சரி
B
I, III, IV மட்டும் சரி
C
II, III, IV மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 65 Explanation: 
(குறிப்பு - சங்ககாலத்தில் கைவினை தொழில்களான உலோக பாண்டம் செய்தல், மணி மற்றும் தங்க அணிகலன் செய்தல், சங்கு வளையல் செய்தல், அணிகலன் செய்தல், கண்ணாடி மற்றும் இரும்பு வேலை, மண்பாண்டம் செய்தல் போன்ற உற்பத்தி நடவடிக்கைகள் குறித்த சான்றுகள் உள்ளன)
Question 66
சங்க காலத்தில் உற்பத்தி மையங்களாக விளங்கிய இடங்கள் கீழ்க்கண்டவற்றுள் எது?
  1. அரிக்கமேடு, உறையூர்
  2. காஞ்சிபுரம், மதுரை
  3. காவிரிப்பூம்பட்டினம், கொற்கை
  4. கேரளத்தின் பட்டணம்
A
I, II, III மட்டும் சரி
B
I, III, IV மட்டும் சரி
C
II, III, IV மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 66 Explanation: 
(குறிப்பு - மேற்கண்ட இடங்களில் கைவினைப் பொருள் உற்பத்தி வழமையாக நடந்துள்ளன. மதுரைக்காஞ்சி பகல் மற்றும் இரவு நேர கடைவீதிகளையும் அங்கு விற்பனையாகும் பல வகைப்பட்ட கைவினைப் பொருட்கள் பற்றியும் பேசுகிறது)
Question 67
மராத்திய எந்திர பொறியாளர்கள் தமிழக கைவினைஞர்களோடு இணைந்து பணியாற்றிய தாக கூறும் நூல் எது?
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
மதுரைகாஞ்சி
D
பட்டினப்பாலை
Question 67 Explanation: 
(குறிப்பு - மகத கைவினைஞர்கள், மாளவ உலோக பணியாளர்கள் மற்றும் மராத்திய எந்திர பொறியாளர்கள் போன்றோர் தமிழக கைவினை பொருள் செய்பவர்களோடு இணைந்து பணியாற்றியதற்கான சான்றுகள் மணிமேகலை என்னும் நூலில் கிடைத்துள்ளன)
Question 68
சங்ககாலத்தில் உப்பு வணிகர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
A
உமணர்
B
நிகம
C
சாத்தன்
D
உசிலன்
Question 68 Explanation: 
(குறிப்பு - தமிழ் பிராமி கல்வெட்டுகளில் வணிகத்தோடு தொடர்புடைய வணிகன், சாத்தன், நிகம போன்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன. உப்பு வணிகர்கள் உமணர் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் மாடுகள் பூட்டிய வண்டிகளில் குடும்பத்தோடு வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டனர்)
Question 69
இடம் விட்டு இடம் சென்று வணிகம் செய்பவர்களை குறிக்கும் சொல் எது?
A
சாத்து
B
நிகம
C
வணிக
D
வியாபாரி
Question 69 Explanation: 
(குறிப்பு - ஷாப்பிங் என்னும் சொல் இடம் விட்டு இடம் சென்று வணிகம் செய்பவர்களை குறிப்பதாகும். சங்ககாலத்தில் வணிகத்தில் நாணயங்கள் பயன்படுத்தப்பட்டாலும் பண்டமாற்று முறையை அதிக அளவில் புழக்கத்தில் இருந்தது)
Question 70
சங்ககால வணிகத்தின் போது பயன்படுத்தப்பட்ட ரோமானிய தங்க வெள்ளி நாணய குவியல்கள் கண்டெடுக்கப்பட்ட இடம் எது?
A
கோயம்புத்தூர்
B
திருச்சிராப்பள்ளி
C
அரியலூர்
D
திருப்பூர்
Question 70 Explanation: 
(குறிப்பு - அம்போரா என்னும் ரோம நாட்டு ஜாடிகள், கண்ணாடிப் பொருள்கள், கடல்கடந்த வணிக நடவடிக்கைகளில் சுட்டுகின்றன. அயல்நாட்டு வணிகர்களின் வருகை ஆகியவை குறித்து தொல்பொருள் சான்றுகள் இலக்கியச் சான்றுகளும் உள்ளன. ரோமானிய தங்க வெள்ளி நாணயங்கள் கோயம்புத்தூர் பகுதிகளிலும் தென் இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் கண்டறியப்பட்டுள்ளன)
Question 71
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
  1. முறைப்படுத்தப்பட்ட மத நடவடிக்கைகளின் தோற்றம் அசோகர் காலத்தில் இருந்து தென்பட தொடங்குகிறது.
  2. இந்தக் காலகட்டத்தில்தான் பௌத்தமதம் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் பரவியிருந்தது.
  3. அசோகரின் மகள் போதி மரத்தை இலங்கைக்கு கொண்டு சென்றதாக கருதப்படுகிறது.
A
I, II மட்டும் சரி
B
I, III மட்டும் சரி
C
II, III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 71 Explanation: 
(குறிப்பு - சாதவாகனர்களும், சங்ககாலத்து அரசர்களும், இக்சவாக்குகளும் வேத வேள்விகளை ஆதரித்தனர். பிராமணருடைய வருகை குறித்தும் வேத சடங்குகள் நடைபெற்றமைக்கும் சங்க இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன)
Question 72
கீழ்க்காணும் எந்த நதிகளின் கழிமுகப் பகுதிகள் பல பௌத்த மையங்களை கொண்டுள்ளன?
  1. கிருஷ்ணா.
  2. கோதாவரி
  3. நர்மதா
A
I, III மட்டும்
B
II, III மட்டும்
C
I, II மட்டும்
D
இவை அனைத்தும்
Question 72 Explanation: 
(குறிப்பு - பௌத்த மதம் தொடர்பான சான்றுகள் தமிழகத்தில் பரவலாக காணப்படுகின்றன. ஆந்திராவில் கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிகளின் கழிமுகப் பகுதிகள் பல பௌத்த மையங்களை கொண்டுள்ளன)
Question 73
தமிழகத்தில் பௌத்த ஸ்தூபிகள் இருந்தமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன?
A
காஞ்சிபுரம்
B
திருச்சிராப்பள்ளி
C
அரிக்கமேடு
D
கும்பகோணம்
Question 73 Explanation: 
(குறிப்பு - ஆந்திராவில் அமராவதி, நாகார்ஜுன கொண்டா ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் பௌத்த மதம் வேரூன்றி இருந்தமைக்கான சான்றுகளை அளிக்கிறது. தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், காவிரிபூம்பட்டினம் ஆகிய இடங்களில் பௌத்த ஸ்தூபிகள் இருந்தமைக்கான சான்றுகள் உள்ளன)
Question 74
சங்க கால புத்தர் சிலை கீழ்க்காணும் எந்த இடத்தில் கிடைத்துள்ளது?
A
நாகார்ஜுன கொண்டா
B
அமராவதி
C
காஞ்சிபுரம்
D
எல்லாமே தவறு
Question 74 Explanation: 
(குறிப்பு - பௌத்த மதத்தை காட்டிலும் சமண மதம் செல்வாக்குடன் விளங்கியுள்ளது. வணிகர்களும் சாதாரண மக்களும் சமணத் துறவிகளுக்கு பாறை மறைவில் படுக்கைகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். சங்கம் மருவிய காலத்தில் சமணர் தமிழ் இலக்கியத்திற்கு அளப்பரிய சேவை செய்து உள்ளனர்)
Question 75
களப்பிரர் காலம் என்று அறியப்படும் காலம் எது?
A
பொ.ஆ. 300 - 500
B
பொ.ஆ. 300 - 600
C
பொ.ஆ. 500 - 800
D
பொ.ஆ. 400 - 700
Question 75 Explanation: 
(குறிப்பு - சங்க காலத்திற்கும், பல்லவர், பாண்டியர் காலத்திற்கும் இடைப்பட்ட காலமே தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம் என்று அறியப்படுகிறது. களப்பிரர் என்போர் தமிழகத்தைக் கைப்பற்றி தமிழகத்தின் பாரம்பரிய அரசுகளான மூவேந்தர்களையும் தோற்கடித்த அவர்கள் ஆவர்)
Question 76
திருக்குறளும் அதோடு ஏனைய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் இயற்றப்பட்ட காலமாக கருதப்படுவது எது?
A
சங்க காலம்
B
சங்கமருவியகாலம்
C
இடை சங்க காலம்
D
இது எதுவும் அல்ல
Question 76 Explanation: 
(குறிப்பு - தமிழ் பண்பாட்டின் பல சிறந்த கூறுகள் சங்கமருவியகாலம் என்று அழைக்கப்படும் களப்பிரர்களின் காலத்தின் போதே தோன்றியிருக்கிறது. இக்காலத்தில்தான் உன்னதமான தமிழ் இலக்கியமான திருக்குறளும் அதோடு ஏனைய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் இயற்றப்பட்டன.)
Question 77
ஐந்தாம் நூற்றாண்டின் இடைப் பகுதியை சேர்ந்த சேந்தன், கூற்றன் என்ற இரு அரசர்களின் பெயர்களை கொண்ட கல்வெட்டு கீழ்க்காணும் எந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது?
A
பூலாங்குறிச்சி
B
பாஞ்சாலங்குறிச்சி
C
நடுவக்குறிச்சி
D
அரவக்குறிச்சி
Question 77 Explanation: 
(குறிப்பு - சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி இல் கண்டுபிடிக்கப்பட்ட ஐந்தாம் நூற்றாண்டின் இடைப் பகுதியை சேர்ந்த கல்வெட்டுகளில் ஒன்று சேந்தன், கூற்றன் என்ற இரு அரசர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறது. இவர்கள் களப்பிர அரசர்களாக இருக்கக்கூடும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel