Type Here to Get Search Results !

ONLINE TEST TNPSC UNIT – IV: HISTORY AND CULTURE OF INDIA-குப்தர்கள்


  • Indus valley civilization – Guptas, Delhi Sultans, Mughals and Marathas – Age of Vijayanagaram and Bahmani Kingdoms – South Indian history.
  • Change and Continuity in the Socio – Cultural History of India.
  • Characteristics of Indian culture, Unity in diversity – Race, language, custom.
  • India as a Secular State, Social Harmony.
HISTORY AND CULTURE OF INDIA-குப்தர்கள்

Question 1
குப்தர்களின் காலம் ________ என்று அழைக்கப்படுகிறது.
A
பொற்காலம்
B
செவ்வியல் கலைகளின் காலம்
C
பண்பாட்டு மலர்ச்சியின் காலம்
D
மேற்கூறிய அனைத்தும்
Question 1 Explanation: 
குறிப்பு: குப்தர்களின் காலம் பொற்காலம், செவ்வியல் கலைகளின் காலம் மற்றும் பண்பாட்டு மலர்ச்சியின் காலம் என்றழைக்கப்படுகிறது.
Question 2
முத்ராராட்சசம் என்ற நூலை எழுதியவர்
A
கௌடில்யர்
B
தொல்காப்பியர்
C
விசாகதத்தர்
D
தாலமி
Question 2 Explanation: 
குறிப்பு: விசாகதத்தரின் தேவிசந்திரகுப்தம், முத்ராராட்சசம் ஆகியவை குப்தரின் எழுச்சி குறித்த விவரங்களை அளிக்கின்றன.
Question 3
இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வருகை தந்த சீனப் பயணி
A
மெகஸ்தனிஸ்
B
பாஹியான்
C
பிளினி
D
தாலமி
Question 3 Explanation: 
குறிப்பு: இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வருகை தந்த சீனப் பயணி பாஹியான் குறிப்புகளில் குப்தர்களைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
Question 4
மெஹ்ரோலி இரும்புத்தூண் கல்வெட்டு யாருடைய சாதனைகளைக் குறிக்கிறது?
A
முதலாம் சந்திரகுப்தர்
B
இரண்டாம் சந்திரகுப்தர்
C
ஶ்ரீகுப்தர்
D
சமுத்திரகுப்தர்
Question 4 Explanation: 
குறிப்பு: முதலாம் சந்திரகுப்தரின் சாதனைகளைப் பற்றி மெஹ்ரோலி இரும்புத்தூண் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
Question 5
சமுத்திரகுப்தரின் ஆட்சி, அவரது ஆளுமை மற்றும் சாதனைகள் பற்றி விளக்கும் கல்வெட்டு
A
மெஹ்ரோலி இரும்புத்தூண் கல்வெட்டு
B
அலகாபாத்தூண் கல்வெட்டு
C
அசோகர் கல்வெட்டுகள்
D
ஸ்தூபிகள்
Question 5 Explanation: 
குறிப்பு: அலகாபாத்தூண் கல்வெட்டைப் பொறித்தவர் ஹரிசேனர்.
Question 6
முதலாம் சந்திரகுப்தர் குமாரதேவி என்ற ___________ இளவரசியை மணந்தார்.
A
அலகாபாத்
B
தக்காணம்
C
லிச்சாவி
D
நேபாளம்
Question 6 Explanation: 
குறிப்பு: குப்தவம்சத்தின் மூன்றாவது ஆட்சியாளரான முதலாம் சந்திரகுப்தர் குமாரதேவி என்ற லிச்சாவி இளவரசியை மணந்தார். லிச்சாவி என்பது வடக்கு பீகாரில் இருந்த பழமையான கணசங்கமாகும். அது கங்கைக்கும் நேபாள தெராய்க்கும் இடைப்பட்ட பகுதியாகும்.
Question 7
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
  1. சந்திரகுப்தரின் ஒப்பற்ற புதல்வர் சமுத்திரகுப்தர்
  2. சமுத்திரகுப்தரின் பிரயாகை (இன்றைய அலகாபாத்) தூண்கல்வெட்டின்படி, அவர் பிரயாகைக்கு மேற்கே மதுரா வரையுள்ள செழிப்பான நிலங்கள் முழுவதையும் கைப்பற்றினார்.
  3. கலிங்கம் வழியாகத் தெற்கே, பல்லவர்களின் தலைநகரமான காஞ்சிபுரம் வரை வெற்றிகரமான படையெடுப்பையும் சமுத்திரகுப்தர் நடத்தினார்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1, 2 சரி
D
அனைத்தும் சரி
Question 7 Explanation: 
குறிப்பு: மகதம், அலகாபாத், அவுத் ஆகியவற்றை குப்தர்களின் பகுதிகளாகப் புராணங்கள் குறிப்பிடுகின்றன.
Question 8
குப்த வம்சத்தின் முதல் அரசர்
A
கடோத்கஜர்
B
முதலாம் சந்திரகுப்தர்
C
சமுத்திரகுப்தர்
D
ஶ்ரீ குப்தர்
Question 8 Explanation: 
குறிப்பு: குப்தவம்சத்தின் முதல் அரசர் ஸ்ரீகுப்தர் (பொ.ஆ. 240–280). இவரைத் தொடர்ந்து இவரது புதல்வர் கடோத்கஜர் (பொ.ஆ. 280–319) ஆட்சிக்கு வந்தார். கல்வெட்டுகளில் ஸ்ரீகுப்தர், கடோத்கஜர் ஆகிய இருவரும் மகாராஜா என்று குறிக்கப்படுகிறார்கள்.
Question 9
குப்தப் பேரரசின் முதல் பேரரசர் யார்?
A
முதலாம் சந்திரகுப்தர்
B
கடோத்கஜர்
C
ஹரிசேனர்
D
சமுத்திரகுப்தர்
Question 9 Explanation: 
குறிப்பு: கடோத்கஜரின் புதல்வரான முதலாம் சந்திரகுப்தர் பொ.ஆ. 319 முதல் 335 வரை ஆட்சிபுரிந்தார். இவர் குப்தப் பேரரசின் முதல் பேரரசராகக் கருதப்படுகிறார்.
Question 10
மகாராஜா– அதிராஜா என்ற பட்டத்தை ஏற்றவர்
A
முதலாம் சந்திரகுப்தர்
B
கடோத்கஜர்
C
ஹரிசேனர்
D
சமுத்திரகுப்தர்
Question 10 Explanation: 
குறிப்பு: மகாராஜா– அதிராஜா என்ற பட்டத்தை ஏற்றவர் கடோத்கஜரின் புதல்வரான முதலாம் சந்திரகுப்தர்.
Question 11
எந்த ஆண்டில் முதலாம் சந்திரகுப்தர் தனது புதல்வர் சமுத்திரகுப்தரைத் தனது வாரிசாக நியமித்தார்?
A
பொ.ஆ. 200
B
பொ.ஆ. 235
C
பொ.ஆ. 300
D
பொ.ஆ. 335
Question 11 Explanation: 
குறிப்பு: பொ.ஆ. 335ல் முதலாம் சந்திரகுப்தர் தனது புதல்வர் சமுத்திரகுப்தரைத் தனது வாரிசாக நியமித்தார்.
Question 12
சமுத்திரகுப்தர் மௌரிய வம்சத்தில் வந்ததாகக் கூறும் கல்வெட்டு
A
மெஹ்ரோலி இரும்புத்தூண் கல்வெட்டு
B
அலகாபாத்தூண் கல்வெட்டு
C
அசோகர் கல்வெட்டு
D
ஸ்தூபிகள்
Question 12 Explanation: 
குறிப்பு: அசோகர் கல்வெட்டு சமுத்திரகுப்தர் நாடு முழுவதும் படையெடுத்துச் சென்ற போது அவருக்கு அடிபணிந்த அரசர்கள், ஆட்சிப் பகுதிகள் ஆகியன குறித்த மிகப் பெரும் பட்டியலைத் தருகிறது.
Question 13
கயாவில் பௌத்தமடம் கட்ட சமுத்திரகுப்தரிடம் அனுமதி கோரிய அரசர்
A
அதியமான்
B
மேகவர்மன்
C
கரிகாலன்
D
பெருநற்கிள்ளி
Question 13 Explanation: 
குறிப்பு: இலங்கை அரசர் மேகவர்மன் பரிசுகளை அனுப்பி, கயாவில் ஒரு பௌத்தமடம் கட்ட சமுத்திரகுப்தரிடம் அனுமதி கோரியுள்ளார்.
Question 14
சமுத்திரகுப்தரின் ஆட்சிக்காலம் எத்தனை ஆண்டுகள்?
A
20
B
30
C
40
D
50
Question 14 Explanation: 
குறிப்பு: சமுத்திரகுப்தரின் ஆட்சிக்காலம் 40 ஆண்டுகள் வரை இருந்தது.
Question 15
தனது ராணுவ வெற்றிகளைப் பிரகடனம் செய்ய அசுவமேதயாகம் நடத்திய குப்தப்பேரரசர் யார்?
A
முதலாம் சந்திரகுப்தர்
B
கடோத்கஜர்
C
ஹரிசேனர்
D
சமுத்திரகுப்தர்
Question 15 Explanation: 
குறிப்பு: தனது ராணுவ வெற்றிகளைப் பிரகடனம் செய்ய சமுத்திரகுப்தர் அசுவமேதயாகம் நடத்தினார்.
Question 16
ஹரிசேனர், வசுபந்து போன்ற கவிஞர்களையும், அறிஞர்களையும் ஆதரித்த குப்தப்பேரரசர் யார்?
A
முதலாம் சந்திரகுப்தர்
B
கடோத்கஜர்
C
ஹரிசேனர்
D
சமுத்திரகுப்தர்
Question 16 Explanation: 
குறிப்பு: சமுத்திரகுப்தர் அறிஞர்களையும், ஹரிசேனர் போன்ற கவிஞர்களையும் ஆதரித்தார். இதன் மூலம் சமஸ்கிருத இலக்கியத்தை வளர்ப்பதில் பங்காற்றினார். வைணவத்தை அவர் தீவிரமாகப் பின்பற்றினார் என்றாலும் வசுபந்து என்ற மாபெரும் பௌத்த அறிஞரையும் ஆதரித்தார்.
Question 17
கவிராஜா என்ற பட்டத்தைப் பெற்றவர்
A
முதலாம் சந்திரகுப்தர்
B
கடோத்கஜர்
C
ஹரிசேனர்
D
சமுத்திரகுப்தர்
Question 17 Explanation: 
குறிப்பு: கவிதை, இசைப் பிரியரான இவருக்குக் கவிராஜா என்ற பட்டம் வழங்கப்பட்டது. குப்தர் நாணயங்களில் அவர் வீணை வாசிப்பது போன்ற சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.
Question 18
விக்ரமாதித்யன் என்று அழைக்கப்பட்டவர்
A
முதலாம் சந்திரகுப்தர்
B
ஹரிசேனர்
C
சமுத்திரகுப்தர்
D
இரண்டாம் சந்திரகுப்தர்
Question 18 Explanation: 
குறிப்பு: தனது தாத்தா பெயரையே சூடிய இரண்டாம் சந்திரகுப்தர் மிகத்திறமையான அரசர். அவர் பொ.ஆ. 375 முதல் 415 வரை 40 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.
Question 19
இரண்டாம் சந்திரகுப்தரின் சகோதரர் யார்?
A
முதலாம் சந்திரகுப்தர்
B
ஶ்ரீ குப்தர்
C
ராம குப்தர்
D
சமுத்திரகுப்தர்
Question 19 Explanation: 
குறிப்பு: இரண்டாம் சந்திர குப்தர் தனது சகோதரரான ராமகுப்தருடன் பொ.ஆ. (370–375) வாரிசுரிமைக்குப் போராடி ஆட்சிக்கு வந்தார்.
Question 20
இரண்டாம்சந்திரகுப்தர் எந்த இடத்தை தலைதகராகக் கொண்டு ஆட்சி புரிந்தார்?
A
முசிறி
B
பாடலிபுத்திரம்
C
கொற்கை
D
காவிரி பூம்பட்டினம்
Question 20 Explanation: 
குறிப்பு: பாடலிபுத்திரத்தைத் தலைநகரமாகக் கொண்ட இரண்டாம் சந்திரகுப்தர் தனது அரசின் எல்லைகளைப் போர்கள், திருமண உறவுகள் ஆகியனவற்றின் மூலம் விரிவுபடுத்தினார்.
Question 21
சமஸ்கிருதத்தில் பல பெரிய படைப்புக்கள் யாருடைய காலத்தில் தோன்றின?
A
சோழப் பேரரசு
B
குஷாணப் பேரரசு
C
குப்தப் பேரரசு
D
மௌரியப் பேரரசு
Question 21 Explanation: 
குறிப்பு: குப்தப் பேரரசு காலத்தில் சமஸ்கிருதத்தில் பல பெரிய படைப்புக்கள் தோன்றின.
Question 22
கங்கைச் சமவெளியில் மேற்குப்பகுதியில் ஒன்பது அரசர்களை படை பலத்தால் வென்றவர்
A
முதலாம் சந்திரகுப்தர்
B
ஶ்ரீ குப்தர்
C
ராம குப்தர்
D
சமுத்திரகுப்தர்
Question 22 Explanation: 
குறிப்பு: கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ள இடங்களைப் பார்க்கும்போது, சமுத்திரகுப்தரின் படையெடுப்பு கிழக்குக் கடற்கரையோரம் காஞ்சிபுரம் வரை நீண்டதாகத் தெரிகிறது. கங்கைச் சமவெளியின் மேற்குப் பகுதியில் ஒன்பது அரசர்களைப் படைபலத்தால் வென்றார்.
Question 23
400 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த சாக அரசர்களை படையெடுப்பின் மூலம் வென்றவர்
A
இரண்டாம் சந்திரகுப்தர்
B
ஶ்ரீ குப்தர்
C
ராம குப்தர்
D
சமுத்திரகுப்தர்
Question 23 Explanation: 
குறிப்பு: மேற்கு இந்திய அரசுகள் மீதான படையெடுப்பின் போது மேற்கு மாளவம், குஜராத் ஆகிய பகுதிகளை 400 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த சாக அரசர்களை இப்படையெடுப்பின் மூலம் இரண்டாம் சந்திரப்குப்தர் வென்றார்.
Question 24
நாணயங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டாம் சந்திரகுப்தரின் வேறு பெயர்கள்
A
விக்ரமன், தேவகுப்தன்,
B
தேவராஜன், சிம்ஹவிக்ரமன்
C
விக்ரமாதித்யன், சகாரி
D
மேற்கூறிய அனைத்தும்
Question 24 Explanation: 
குறிப்பு: விக்ரமன், தேவகுப்தன், தேவராஜன், சிம்ஹவிக்ரமன், விக்ரமாதித்யன், சகாரி ஆகியன இரண்டாம் சந்திரகுப்தரின் வேறு பெயர்களாகும். இவை நாணயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
Question 25
ஹுணர், காம்போஜர், கிராதர் போன்ற வடநாட்டு அரசுகளை வென்ற அரசர்
A
இரண்டாம் சந்திரகுப்தர்
B
ஶ்ரீ குப்தர்
C
ராம குப்தர்
D
சமுத்திரகுப்தர்
Question 25 Explanation: 
குறிப்பு: கிழக்கு மற்றும் மேற்கு இந்தியாவை வென்ற பின்னர், இரண்டாம் சந்திரகுப்தர் ஹுணர், காம்போஜர், கிராதர் போன்ற வடநாட்டு அரசுகளை வென்றார். அவர் மிகப் பெரிய வெற்றி வீரராக மட்டுமின்றி, சிறந்த நிர்வாகியாகவும் திகழ்ந்தார்.
Question 26
நவரத்தினங்கள் எனப்பட்ட ஒன்பது அறிஞர்கள் யாருடைய அவையில் இருந்தனர்?
A
இரண்டாம் சந்திரகுப்தர்
B
ஶ்ரீ குப்தர்
C
ராம குப்தர்
D
சமுத்திரகுப்தர்
Question 26 Explanation: 
குறிப்பு: கலை, இலக்கியம், அறிவியல் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கிய நவரத்தினங்கள் எனப்பட்ட ஒன்பது அறிஞர்கள் இரண்டாம் சந்திரகுப்தரின் அவையில் இருந்தனர்.
Question 27
வெள்ளி நாணயங்களை வெளியிட்ட முதல் குப்த அரசர்
A
ஶ்ரீ குப்தர்
B
ராம குப்தர்
C
சமுத்திரகுப்தர்
D
இரண்டாம் சந்திரகுப்தர்
Question 27 Explanation: 
குறிப்பு: வெள்ளி நாணயங்களை வெளியிட்ட முதல் குப்த அரசர் இரண்டாம் சந்திரகுப்தர். இவரது ஆட்சிக்காலத்தில் தான் பேரரசின் விரிவாக்கம் உச்சத்தை எட்டியது.
Question 28
பொருத்துக.
  • (1) காளிதாஸர் - மருத்துவர்
  • (2) ஹரிசேனர் - அகராதியை உருவாக்கியவர்
  • (3) அமரசிம்மர் - சமஸ்கிருதப் புலவர்
  • (4) தன்வந்திரி - சமஸ்கிருத கவிஞர்
A
4 2 3 1
B
4 3 2 1
C
3 4 2 1
D
2 1 4 3
Question 28 Explanation: 
குறிப்பு: நவரத்தினங்கள் எனப்பட்ட ஒன்பது அறிஞர்கள் இரண்டாம் சந்திரகுப்தரின் அவையில் இருந்தனர். இவர்களில் மாபெரும் சமஸ்கிருதக் கவிஞர் காளிதாஸர், சமஸ்கிருதப் புலவர் ஹரிசேனர், அகராதியை உருவாக்கிய அமரசிம்மர், மருத்துவர் தன்வந்திரி ஆகியோர் அடங்குவர்.
Question 29
நாளந்தா பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவர்
A
சமுத்திர குப்தர்
B
ஸ்கந்த குப்தர்
C
முதலாம் குமாரகுப்தர்
D
விஷ்ணு குப்தர்
Question 29 Explanation: 
குறிப்பு: இரண்டாம் சந்திரகுப்தருக்குப் பின்னர் அவரது புதல்வர் முதலாம் குமாரகுப்தர் பொ.ஆ. 455 வரை ஆட்சி செய்தார்.
Question 30
குப்த வம்சத்தின் கடைசிப் பேரரசர்
A
ஸ்கந்த குப்தர்
B
சமுத்திர குப்தர்
C
விஷ்ணு குப்தர்
D
முதலாம் சந்திரகுப்தர்
Question 30 Explanation: 
குறிப்பு: குப்த வம்சத்தின் கடைசிப் பேரரசரான ஸ்கந்தகுப்தர் முதலாம் குமாரகுப்தரின் புதல்வராவார்.
Question 31
சக்ராதித்யர் என்றழைக்கப்பட்டவர்
A
ஸ்கந்த குப்தர்
B
சமுத்திர குப்தர்
C
விஷ்ணு குப்தர்
D
முதலாம் சந்திரகுப்தர்
Question 32
குப்த வம்சத்தின் கடைசிப் அரசர்
A
ஸ்கந்த குப்தர்
B
சமுத்திர குப்தர்
C
விஷ்ணு குப்தர்
D
முதலாம் சந்திரகுப்தர்
Question 32 Explanation: 
குறிப்பு: குப்த வம்சத்தின் கடைசி அரசர் விஷ்ணுகுப்தர். இவர் பொ.ஆ. 540 முதல் 550 வரை ஆட்சி புரிந்தார்.
Question 33
சாகர் அரசு, இலங்கை அரசு போன்ற வெளிநாட்டு அரசுகளும் கப்பம் கட்டியதாக குறிப்பிடும் கல்வெட்டு
A
அலகாபாத் தூண் கல்வெட்டு
B
மெஹ்ரோலி இரும்புத்தூண் கல்வெட்டு
C
அசோகர் கல்வெட்டு
D
ஸ்தூபிகள்
Question 33 Explanation: 
குறிப்பு: சாகர் அரசு, இலங்கை அரசு போன்ற வெளிநாட்டு அரசுகளும் கப்பம் கட்டியதாக அக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.
Question 34
பரம-தைவத, பரம-பாகவத போன்ற அடைமொழிகளால் கடவுளோடு தம்மை கடவுளோடு இணைத்துக் கொண்டவர்கள்
A
அரசர்கள்
B
அமைச்சர்கள்
C
அதிகாரிகள்
D
ஜமீன்தார்கள்
Question 34 Explanation: 
குறிப்பு: பரம-தைவத (கடவுளின் பரமபக்தன்), பரம-பாகவத (வாசுதேவ கிருஷ்ணனின் பரமபக்தன்) போன்ற அடைமொழிகளால் அரசர்கள் தம்மைக் கடவுளோடு இணைத்துக் கொண்டனர்.
Question 35
அலகாபாத்தூண் கல்வெட்டில் புருஷா என்ற கடவுளுடன் ஒப்பிடப்படுபவர்
A
ஸ்கந்த குப்தர்
B
சமுத்திர குப்தர்
C
விஷ்ணு குப்தர்
D
முதலாம் சந்திரகுப்தர்
Question 35 Explanation: 
குறிப்பு: அலகாபாத் கல்வெட்டுகளில் சமுத்திரகுப்தர் புருஷா(அனைவருக்கும் மேலானவர்) என்ற கடவுளுடன் ஒப்பிடப்படுகிறார்.
Question 36
குமாரமாத்யா என்ற சொல் எத்தனை வைசாலி முத்திரைகளில் இடம் பெற்றுள்ளது?
A
4
B
5
C
6
D
7
Question 36 Explanation: 
குறிப்பு: குமாரமாத்யா என்ற சொல் ஆறு வைசாலி முத்திரைகளில் இடம் பெற்றுள்ளது. இந்தப் பதவி தனக்கெனத் தனியாக அலுவலகம் உள்ள ஒரு உயரதிகாரியைக் குறிப்பிடுவது போல் உள்ளது. அமாத்யா என்ற சொல் பல முத்திரைகளில் காணப்படுகிறது.
Question 37
மஹாதண்டநாயகா, சந்திவிக்ரஹா ஆகிய பட்டங்களைக் கொண்டவர்
A
சமுத்திரகுப்தர்
B
ஹரிசேனர்
C
முதலாம் சந்திர குப்தர்
D
இரண்டாம் சந்திர குப்தர்
Question 37 Explanation: 
குறிப்பு: அலகாபாத் பிரசஸ்தியை (மெய்க்கீர்த்தி அல்லது புகழுரைக் கல்வெட்டு) எழுதிய ஹரிசேனர் ஒரு குமாரமாத்யா, சந்திவிக்ரஹிகா, மஹாதண்டநாயகா ஆகிய பட்டங்களைக் கொண்டவராக இருந்துள்ளார். அவர் மஹாதண்டநாயகா துருவபூதியின் புதல்வர் ஆவார்.
Question 38
சபா என்ற ஒரு குழுவைப் பற்றிக் கூறும் கல்வெட்டு
A
அலகாபாத் தூண் கல்வெட்டு
B
மெஹ்ரோலி இரும்புத்தூண் கல்வெட்டு
C
அசோகர் கல்வெட்டு
D
ஸ்தூபிகள்
Question 38 Explanation: 
குறிப்பு: குப்த அரசர்களுக்கு ஒரு அமைச்சர் குழு உதவி புரிந்தது. அலகாபாத் கல்வெட்டு சபா என்ற ஒரு குழு குறித்துக் கூறுகிறது
Question 39
குப்தப் பேரரசில் அமைச்சர்களில் உயர்ந்த நிலையில் இருந்தவர் யார்?
A
மஹாசந்திவிக்ரஹா
B
குமாரமாத்யா
C
மஹாதண்டநாயகா
D
தண்டநாயகா
Question 39 Explanation: 
குறிப்பு: மஹாசந்திவிக்ரஹா என்பவர் அமைச்சர்களில் உயர் நிலையில் இருந்துள்ளார். இவர் அமைதி மற்றும் போருக்கான அமைச்சர். இவர் தான் போர் தொடுத்தல், உடன்பாடு காணுதல், ஒப்பந்தங்கள் மேற்கொள்ளுதல் என்று பிற நாடுகளுடனான தொடர்புகளுக்குப் பொறுப்பானவர்.
Question 40
குப்தர் காலத்தில் நீதித்துறை, ராணுவம் ஆகியவற்றில் பொறுப்பு வகித்தவர்
A
மஹாதண்டநாயகா
B
தண்டநாயகா
C
குமாரமாத்யா
D
அ, ஆ இரண்டும்
Question 40 Explanation: 
குறிப்பு: ஒரு முத்திரை அக்கினிகுப்தர் என்ற மஹாதண்டநாயகா குறித்துப் பேசுகிறது. அலகாபாத் கல்வெட்டு மூன்று மஹாதண்டநாயகாக்களைக் குறித்து கூறுகிறது. இவையனைத்தும் இந்தப் பதவிகள் எல்லாம் வாரிசுரிமையாக வருபவை என்பதைக் காட்டுகின்றன.
Question 41
குப்தர்களின் பேரரசு ______ அல்லது ____ எனப்படும் மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன.
A
தேசம்
B
புக்தி
C
அ, ஆ இரண்டும்
D
மேற்கூறிய ஏதும் இல்லை
Question 41 Explanation: 
குறிப்பு: குப்தர்களின் பேரரசு ‘தேசம்’ அல்லது ‘புக்தி’ எனப்படும் மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. உபாரிகா என்றழைக்கப்பட்ட ஆளுநர்களால் இவை நிர்வகிக்கப்பட்டன.
Question 42
தாமோதர்பூர் செப்பேடுகள் மூன்று உபாரிகாக்களுக்கு _______ என்ற பட்டம் இருந்ததாகக் குறிப்பிடுகிறது.
A
மகாராஜா
B
மஹாதாரா
C
அமாத்யா
D
தண்டநாயகா
Question 42 Explanation: 
குறிப்பு: தாமோதர்பூர் செப்பேடுகளில் மூன்று உபாரிகாக்களுக்கு மகாராஜா என்ற பட்டம் இருந்ததாகக் குறிப்பிடப்படுவதன் மூலம் நிர்வாகத்தில் உபாரிகாக்ககளுக்கு இருந்த உயர்நிலை தெரிகிறது.
Question 43
புத்தகுப்தரின் __________ கல்வெட்டு காளிந்தி மற்றும் நர்மதை நதிகளுக்கிடையிலான நிலங்களை ஆட்சிசெய்த லோகபாலா என்ற மகாராஜா சுரஷ்மிசந்திரா என்பவரைக் குறிப்பிடுகிறது
A
அசோகர் கல்வெட்டு
B
அலகாபாத்தூண் கல்வெட்டு
C
ஈரன் தூண் கல்வெட்டு
D
மெஹ்ரோலி கல்வெட்டு
Question 43 Explanation: 
குறிப்பு: குப்தஆண்டு 165 என்று தேதியிடப்பட்டுள்ள புத்தகுப்தரின் ஈரன் தூண்கல்வெட்டு காளிந்தி மற்றும் நர்மதை நதிகளுக்கிடையிலான நிலங்களை ஆட்சிசெய்த லோகபாலா என்ற மகாராஜா சுரஷ்மிசந்திரா என்பவரைக் குறிப்பிடுகிறது. இங்கு லோகபாலா என்பது மாநில ஆளுநரைக் குறிப்பிடுவதாகலாம்.
Question 44
குப்தப்பேரரசின் மாநிலங்கள் _____என்ற அதிகாரியின் கீழ் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன.
A
தண்டநாயகா
B
விஷ்யபதி
C
மஹா அஸ்வபதி
D
மஹா தண்டநாயகா
Question 44 Explanation: 
குறிப்பு: குப்தப்பேரரசின் மாநிலங்கள் விஷ்யபதி என்ற அதிகாரியின் கீழ் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. இவை விஷ்யா என அழைக்கப்பட்டன. விஷ்யபதிகள் பொதுவாக மாநில ஆளுநரால் நியமிக்கப்பட்டதாகத் தெரிகிறது. சில சமயங்களில் அரசரே நேரடியாக விஷ்யபதிகளை நியமித்தார்.
Question 45
புத்தகுப்தர் காலத்து தாமோதர்பூர் செப்பேடு, மஹாதாரா தலைமையிலான எதைப் பற்றிக் குறிப்பிடுகிறது?
A
மஹா அஸ்வபதி
B
அஷ்டகுல-அதிகாரனா
C
கிராமிகா
D
பதகா
Question 45 Explanation: 
குறிப்பு: புத்தகுப்தர் காலத்து தாமோதர்பூர் செப்பேடு, மஹாதாரா என்பவர் தலைமையிலான அஷ்டகுல-அதிகாரனா (எட்டு உறுப்பினர் கொண்ட குழு) குறித்து குறிப்பிடுகிறது. மஹாதாரா என்பதற்கு கிராமப் பெரியவர், கிராமத்தலைவர், குடும்பத்தலைவர் என்று பல பொருள் உண்டு.
Question 46
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
  1. மாவட்ட மட்டத்திற்குக் கீழ் விதி, பூமி, பதகா, பீடா என்று பல்வேறு விதமான நிர்வாக அலகுகள் இருந்தன. ஆயுக்தகா, விதி-மஹாதரா எனப்படும் அதிகாரிகள் குறித்த குறிப்புகளும் காணப்படுகின்றன.
  2. கிராம மட்டத்தில் கிராமிகா, கிராம் அத்யக்ஷா போன்ற அதிகாரிகள் இருந்துள்ளனர். இவர்களை கிராம மக்களே தேர்ந்தெடுத்தனர்.
  3. இரண்டாம் சந்திரகுப்தர் காலத்து சாஞ்சி கல்வெட்டு பஞ்சமண்டலி என்பதைக் குறிப்பிடுகிறது. இது ஒரு குழும நிறுவனமாக இருக்கலாம்.
A
கூற்று 1 மட்டும் சரி
B
கூற்று 2 மட்டும் சரி
C
கூற்று 2 மட்டும் சரி
D
அனைத்தும் சரி
Question 47
பொருத்துக.
  • (1) மஹா அஸ்வபதி - அரச சமையலறைக் கண்காணிப்பாளர்
  • (2) பாலாதிகிருத்யா - அரண்மனைக் காவலர்கள் தலைவர்
  • (3) மஹா பாலாதிகிருத்யா - குதிரைப்படைத் தலைவர்
  • (4) மஹா பிரதிஹாரா - காலாட்படைத் தளபதி
  • (5) கத்யதபகிதா - குதிரைப்படைத் தளபதி
A
5 4 1 2 3
B
4 3 2 1 5
C
3 2 1 4 5
D
4 2 1 3 5
Question 48
ரணபந்தகர் அதிகாரனா என்பவை?
A
காவல்துறை அலுவலகம்
B
ராணுவக்கிடங்கு அலுவலகம்
C
ரயில் நிலையம்
D
மருத்துவமனை
Question 48 Explanation: 
குறிப்பு: ஒரு வைசாலி முத்திரை ராணுவக்கிடங்கின் அலுவலகமான ரணபந்தகர் அதிகாரனாவைக் குறிப்பிடுகிறது. மற்றொரு வைசாலி முத்திரை, தண்டபாஷிகா என்ற அதிகாரியின் அலுவலகத்தைக் குறிப்பிடுகிறது. இது மாவட்ட அளவிலான காவல்துறை அலுவலகமாக இருக்கலாம்.
Question 49
குப்தப் பேரரசில் நிர்வாக அமைப்பின் மேல்மட்டத்தில் இருந்தவர்கள்
A
தண்டபாஷிகா, மஹா தண்டபாஷிகா
B
குமாரமாத்யாக்கள்
C
பிரதிஹாரா, மஹா பிரதிஹாரா
D
அமாத்தியா, சச்சிவா
Question 49 Explanation: 
குறிப்பு: குப்தப் பேரரசில் நிர்வாக அமைப்பின் மேல்மட்டத்தில் அமாத்தியா, சச்சிவா ஆகியோர் இருந்தார்கள். இவர்கள் பல்வேறு துறைகளுக்குப் பொறுப்பாக இருந்த நிர்வாக அதிகாரிகளாவர்.
Question 50
பொருத்துக.
  • (1) துடகா - அரசு ஆவணங்களை பராமரித்த அதிகாரி
  • (2) ஆயுக்தகா - ஹியான்
  • (3) மதுரா பாடலிபுத்திரம் - டாசிடஸ்
  • (4) ரோமானிய வரலாற்றாளர் - ஒற்றர்கள் கொண்ட உளவு அமைப்பு
  • (5) அக்‌ஷபதலிக்கிருதா - உயர்மட்ட அதிகாரப் பதவி
A
5 4 1 3 2
B
5 3 4 1 2
C
4 3 2 1 5
D
4 5 2 1 3
Question 51
குப்தர் காலத்தில் காமாந்தகா எழுதியது _________ என்ற நூல்.
A
நீதிசாரா
B
அர்த்தசாஸ்திரம்
C
முத்ராராட்சசம்
D
தேவிசந்திர குப்தர்
Question 51 Explanation: 
குறிப்பு: குப்தர் காலத்தில் காமாந்தகா எழுதியது நீதிசாரா என்ற நூல் ஆகும். இந்நநூல் மௌரியர் காலத்து நூலான அர்த்தசாஸ்திரம் போன்ற நூலாகும். இந்நூல் அரச கருவூலத்தின் முக்கிய வருவாய்க்கான பல்வேறு மூலவளங்கள் பற்றிக் குறிப்பிடுகிறது.
Question 52
குப்தர் கல்வெட்டுகளில் உள்ள இரண்யவெஷ்தி என்பதன் பொருள்
A
போர் புரிதல்
B
தன்னம்பிக்கை
C
வேலைவாய்ப்பு
D
கட்டாய உழைப்பு
Question 52 Explanation: 
குறிப்பு: குப்தர் கல்வெட்டுகள் கிலிப்தா, பலி, உத்ரங்கா, உபரிகரா, இரண்யவெஷ்தி போன்ற சொற்களைக் குறிப்பிடுகின்றன. இரண்யவெஷ்தி என்றால் கட்டாய உழைப்பு என்று பொருள்.
Question 53
குப்தர் காலத்தில் பழமரங்கள் வளர்ப்பது குறித்து அறிவுரை கூறியவர்
A
காளிதாசர்
B
டாசிடஸ்
C
வராகமிகிரர்
D
அட்டில்லா
Question 53 Explanation: 
குறிப்பு: காளிதாசர் மூலம் தென்பகுதியானது மிளகு, ஏலம் ஆகியவற்றிற்குப் புகழ் பெற்றிருந்தது தெரிய வருகிறது.
Question 54
பஹார்பூர் செப்பேடு நிலத்தின் ஒரே உரிமையாளர் என்று யாரைக் காட்டுகிறது?
A
அமைச்சர்
B
அரசர்
C
ஜமீன்தார்கள்
D
சேனாதிபதி
Question 54 Explanation: 
குறிப்பு: பஹார்பூர் செப்பேடு அரசர்தான் நிலத்தின் ஒரே உரிமையாளர் என்று காட்டுகிறது. நில மானியங்கள் தரும்போதும், அதன் மீதான தனியுரிமையைத் தன்னிடமே அவர் வைத்துக் கொண்டார்.
Question 55
குப்தர் காலத்தில் மாவட்டத்தின் நிலப் பரிமாற்றம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் பாதுகாத்த அதிகாரி
A
அமாத்யா
B
கிராம கணக்கர்
C
தண்டநாயகா
D
உஸ்தபாலா
Question 55 Explanation: 
குறிப்பு: பஹார்பூர் செப்பேடுகளின்படி உஸ்தபாலா என்ற அதிகாரி மாவட்டத்தின் நிலப் பரிமாற்றம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் பாதுகாத்தார். கிராமத்தில் நிலங்கள் தொடர்பான ஆவணங்களை கிராமகணக்கர் பராமரித்தார்.
Question 56
வயல்களை வெள்ளங்களிலிருந்து பாதுகாக்க பந்தியா, பாசனத்திற்கு உதவிய கரா என்ற இருவகை அணைக்கரைகள் இருந்ததாகக் கூறும் நூல்
A
நாரதஸ்மிருதி
B
முத்ராராட்சசம்
C
அர்த்தசாஸ்திரம்
D
ஸ்மிருதி
Question 57
குப்தர் கால நிலங்களின் அடிப்படையி்ல் பொருத்துக.
  • (1) க்ஷேத்ரா - மேய்ச்சல்நிலம்
  • (2) கிலா - குடியிருக்கத் தகுந்த நிலம்
  • (3) அப்ரஹதா - தரிசு நிலம்
  • (4) வாஸ்தி - பயிரிடக்கூடிய நிலம்
  • (5) கபடசஹாரா - காடு அல்லது தரிசு நிலம்
A
5 3 2 1 4
B
4 3 2 1 5
C
3 4 2 1 5
D
5 4 2 1 3
Question 58
தண்ணீர் தேங்குவதைத் தடுக்க ஜலநிர்கமா என்ற வடிகால்கள் இருந்ததாக குறிப்பிடுபவர்
A
சாணக்கியர்
B
அமரசிம்மர்
C
பாஹியான்
D
டாசிடஸ்
Question 58 Explanation: 
குறிப்பு: குப்தர் காலத்தில் தண்ணீர் தேங்குவதைத் தடுக்க ஜலநிர்கமா என்ற வடிகால்கள் இருந்ததாக அமரசிம்மர் குறிப்பிடுகிறார். நதிகளிலிருந்து மட்டுமில்லாமல், ஏரிகளிலிருந்தும் குளங்களிலிருந்தும் வாய்க்கால்கள் வெட்டப்பட்டன.
Question 59
குஜராத்தின் கிர்னார் மலையின் அடிவாரத்தில் அமைந்திருந்த ஏரி
A
அப்ரஹதா
B
ஜலநிர்கமா
C
சுதர்சனா
D
சுதர்சனா
Question 59 Explanation: 
குறிப்பு: குஜராத்தின் கிர்னார் மலையின் அடிவாரத்தில் இருந்த சுதர்சனா ஏரி மிகவும் புகழ் பெற்றதாகும்.
Question 60
குப்தர் காலத்தில் மிகவும் செழித்தத் தொழில்கள்
A
சுரங்கத்தொழில்
B
உலோகத்தொழில்
C
அ, ஆ இரண்டும்
D
ஏதுமில்லை
Question 60 Explanation: 
குறிப்பு: குப்தர் காலத்தில் மிகவும் செழித்தத் தொழில்கள் சுரங்கத்தொழில், உலோகவியல் ஆகியன ஆகும். சுரங்கங்கள் இருந்தது குறித்து அமரசிம்மர், வராஹமிகிரர், காளிதாசர் ஆகியோர் அடிக்கடி குறிப்பிடுகிறார்கள்.
Question 61
நிலகுத்தகை முறையின் அடிப்படையில் பொருத்துக.
  • (1) நிவி தர்மா - தரிசு நிலத்தை சாகுபடி நிலமாக மாற்றுதல்
  • (2) நிவி தர்மஅக்சயனா - வருவாயைப் பிறருக்குத் தானம் செய்ய முடியாது
  • (3) அப்ரதா தர்மா - அறக்கட்டளை போன்ற அமைப்பின் மூலம் நில மானியம்
  • (4) பூமிசித்ராயனா - நிரந்தரமான அறக்கட்டளை
A
4 2 1 3
B
4 3 1 2
C
3 1 4 2
D
4 1 3 2
Question 62
குப்தர் காலகட்டத்தில் இரும்புப்படிவுகள் எங்கிருந்து தோண்டியெடுக்கப்பட்டன?
A
பீகார்
B
ராஜஸ்தான்
C
குஜராத்
D
மஹாராஷ்டிரா
Question 62 Explanation: 
குறிப்பு: பீகாரிலிருந்து இரும்புப் படிவுகள், இராஜஸ்தானிலிருந்து செம்புப் படிவுகள் ஆகியன பெருமளவில் தோண்டி எடுக்கப்பட்டன.
Question 63
குப்தர் கால நிலக்கொடைகளின் அடிப்படையில் பொருத்துக.
  • (1) அக்ரஹார மானியம் - நிலப்பிரபுகளுக்கு தரப்பட்ட மானியம்
  • (2) தேவக்கிரஹார மானியம் - பிராமணர்களுக்கு தரப்பட்ட மானியம்
  • (3) சமயச் சார்பற்ற மானியம் - கோயில் மராமத்து பணிகளுக்குத் தரப்பட்ட மானியம்
A
3 1 2
B
2 1 3
C
1 3 2
D
2 3 1
Question 64
மெஹ்ரோலி இரும்புத்தூண் அமைந்துள்ள இடம்
A
டெல்லி
B
ராஜஸ்தான்
C
குஜராத்
D
மஹாராஷ்டிரா
Question 64 Explanation: 
குறிப்பு: குப்தர் காலகட்டத்தில், உலோகவியல் நுட்பங்கள் உச்சத்தில் இருந்தன என்பதை நிறுவுவதற்கு, இன்று தில்லி குதுப்மினார் வளாகத்தில் காணப்படும் மெஹ்ரோலி இரும்புத்தூண் சான்றாகக் காட்டப்படுகிறது. இது இரண்டாம் சந்திரகுப்தருடன் அடையாளம் காணப்படுகிறது. இந்த இரும்புத்தூண் பல நூற்றாண்டுகளாகத் துருப்பிடிக்காமல் அப்படியே இருக்கிறது. இது குப்தர் காலத்து உலோகவியல் கைவினைஞர்களின் திறனுக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது.
Question 65
குப்தர் காலத்து வரிகளின் அடிப்படையில் பொருத்துக.
  • (1) பாகா - கிராமத்தினர் மீது குறிப்பிட்ட கால இடைவெளியில் விதிக்கப்படும் ஒரு வரி
  • (2) போகா - கட்டாய வரி
  • (3) கரா - காவல் வரி அல்லது நீர் வரி
  • (4) பலி - அரசருக்கு கிராமங்கள் அவ்வப்போது வழங்க வேண்டிய பழங்கள், விறகு, பூக்கள்
  • (5) உதியங்கா - விளைச்சலில் அரசன்பெறும் வழக்கமான ஆறில் ஒரு பங்கு
A
3 5 2 4 1
B
3 4 5 2 1
C
5 4 3 1 2
D
4 3 2 1 5
Question 66
இலாபத்திற்காக ஊர் ஊராகச் சென்று வணிகம் செய்தவர்கள்
A
சிரேஷ்டி
B
சார்த்தவாஹா
C
கிளிப்தா
D
உபகிளிப்தா
Question 66 Explanation: 
குறிப்பு: சிரேஷ்டி, சார்த்தவஹா என்ற இரு வேறுபட்ட வகைகளைச் சேர்ந்த வணிகர்கள் இருந்தனர். சிரேஷ்டி என்பவர் பொதுவாக ஒரே இடத்தில் தங்கியிருப்பவர். தனது செல்வம் மற்றும் வணிகத்திலும், வணிக மையத்தை நிர்வகிப்பதன் மூலமும் பெற்ற வளத்தால் மரியாதைக்குரிய நிலையில் இருந்தவர். சார்த்தவஹா என்பவர் இலாபத்திற்காக ஊர் ஊராகச் சென்று வணிகம் செய்தவர்.
Question 67
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
  1. நாரதஸ்மிருதி, பிருகஸ்பதி ஸ்மிருதி ஆகியவை வணிகக் குழுக்களின் அமைப்பு, செயல்பாடு குறித்து விவரிக்கின்றன. ஒரு குழுவில் குழுத்தலைவர், இரண்டு, மூன்று அல்லது ஐந்து நிர்வாக அதிகாரிகள் இருந்ததாக இவை குறிப்பிடுகின்றன.
  2. குழுச் சட்டங்கள் எழுத்துப்பூர்வமாக ஆவணங்களில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
  3. தமது குழு உறுப்பினர்களின் தகராறுகளின் மீது தீர்ப்பு வழங்கியது குறித்து பிருகஸ்பதி ஸ்மிருதி கூறுகிறது. குழுவின் தீர்ப்பு எப்படி இருந்தாலும் அரசு ஒப்புதல் அளித்தே தீர வேண்டும்.
A
கூற்று 1 மட்டும் சரி
B
கூற்று 2 மட்டும் சரி
C
கூற்று 3 மட்டும் சரி
D
அனைத்தும் சரி
Question 67 Explanation: 
குறிப்பு: சட்டப்பிரிவு 216-ன் படி ஒவ்வொரு உயர் நீதிமன்றத்திற்கும், தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளை குடியரசுத் தலைவர் காலத்திற்கேற்றவாறு நியமனம் செய்கிறார்.
Question 68
குப்தர் காலத்தில் மேற்குக் கரையில் இருந்த கல்யாண், கால்-போர்ட் என்பவை
A
வணிகச்சந்தைகள்
B
கோவில்கள்
C
வணிகத்துறைமுகங்கள்
D
காய்கறிச்சந்தைகள்
Question 68 Explanation: 
குறிப்பு: குப்தர் காலத்தில் மேற்குக் கரையில் கல்யாண், கால்-போர்ட் ஆகிய வணிகத்துறைமுகங்களும், மலபார், மங்களூர் சலோபடானா, நயோபடான, பந்தேபடானா ஆகிய வணிகச்சந்தைகளும் இயங்கியுள்ளன.
Question 69
வங்கத்தின் கிழக்குக் கடற்கரையின் முக்கியமான வணிக மையம் என்று பாஹியான் எதைக் குறிப்பிடுகிறார்?
A
மலபார்
B
சலோபடானா
C
தாமிரலிப்தி
D
பந்தேபடானா
Question 69 Explanation: 
குறிப்பு: வங்கத்தின் தாமிரலிப்தி கிழக்குக் கடற்கரையின் முக்கியமான வணிக மையம் என்று பாஹியான் குறிப்பிடுகிறார்.
Question 70
பொருத்துக
  • (1) அஜந்தா, எல்லோரா - ஒடிசா
  • (2) பாக் - மஹாராஷ்டிரம்
  • (3) உதயகிரி - மத்தியப்பிரதேசம்
A
3 1 2
B
2 1 3
C
3 2 1
D
2 3 1
Question 70 Explanation: 
குறிப்பு: குடைவரைக் கோயில்கள் அஜந்தா, எல்லோரா (மஹாராஷ்டிரம்) மற்றும் பாக் (மத்தியப் பிரதேசம்) ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. உதயகிரி குகைகளும் (ஒடிசா) இவ்வகையைச் சேர்ந்தவைதான்.
Question 71
பொருத்துக.
  • (1) சமத் - சிந்து
  • (2) ரத்தினகிரி - உத்திரப்பிரதேசம்
  • (3) மிர்பூர்கான் - ஒடிசா
A
3 1 2
B
2 1 3
C
1 3 2
D
3 2 1
Question 71 Explanation: 
குறிப்பு: மிகச் சிறந்த ஸ்தூபிகள் சமத் (உத்தரப்பிரதேசம்), ரத்தினகிரி (ஒடிசா), மிர்பூர்கான் (சிந்து) ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
Question 72
குப்தர் காலத்தில், கல் சிற்பக் கலைக்குச் சிறந்த சான்றாக உள்ள நிற்கும் நிலையிலுள்ள புத்தர் சிலை அமைந்துள்ள இடம்
A
பத்ரிநாத்
B
கேதார்நாத்
C
மிர்பூர்கான்
D
சாரநாத்
Question 72 Explanation: 
குறிப்பு: குப்தர் காலத்தில், கல் சிற்பக் கலைக்குச் சிறந்த சான்று சாரநாத்தில் காணப்படும் நிற்கும் நிலையிலுள்ள புத்தர் சிலை.
Question 73
வணிகக்குழுக்கள் வங்கிகளின் பங்கினை ஆற்றியதாகக் கூறும் கல்வெட்டு
A
மண்டசோர் கல்வெட்டு
B
மெஹ்ரோலி இரும்புத்தூண் கல்வெட்டு
C
அலகாபாத்தூண் கல்வெட்டு
D
அசோகர் கல்வெட்டுகள்
Question 73 Explanation: 
குறிப்பு: மண்டசோர் கல்வெட்டுச் சான்றின் படி வணிகக்குழுக்கள் வங்கிகளின் பங்கினை ஆற்றியதாகவும் அறிய முடிகிறது. இதற்கான கொடையாளர்களின் பெயர்கள் இக்கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன.
Question 74
உதயகிரி குகையின் நுழைவாயிலில் இருக்கும் புராணச் சிற்பம்
A
செம்புச்சிலை
B
செவ்வகக்கோவில்
C
புத்தர் சிலை
D
வராஹ அவதாரச் சிலை
Question 74 Explanation: 
குறிப்பு: புராணச் சிற்பங்களில் மிக அழகானது உதயகிரி குகையின் நுழைவாயிலில் இருக்கும் வராஹ அவதாரச் சிலை ஆகும்.
Question 75
குப்தர் காலத்து உலோகச்சிற்பங்களுக்கு எடுத்துக்காட்டு
A
புத்தரின் பதினெட்டடி செம்புச் சிலை
B
ஏழரையடி புத்தர் சிலை - சுல்தான்கஞ்ச்
C
அ, ஆ இரண்டும்
D
மேற்கூறிய ஏதுமில்லை
Question 75 Explanation: 
குறிப்பு: பீகாரின் நாளந்தாவில் உள்ள புத்தரின் பதினெட்டடி செம்புச் சிலை, சுல்தான்கஞ்சில் உள்ள ஏழரையடி புத்தர் சிலை ஆகிய இரண்டும் குப்தர் காலத்து உலோகச் சிற்பங்களுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
Question 76
குப்தரின் சுவரோவியங்கள் காணப்படும் இடங்கள்
A
அஜந்தா
B
பாக்
C
பாதாமி
D
மேற்கூறிய அனைத்தும்
Question 76 Explanation: 
குறிப்பு: குப்தரின் சுவரோவியங்கள் அஜந்தா, பாக், பாதாமி ஆகிய இடங்களில் காணப்படுகின்றன
Question 77
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
  1. அஜந்தாவின் சுவர் ஓவியங்கள் ஃபிரெஸ்கோ எனப்படும் சுவரோவிய வகையைச் சேர்ந்தவை.
  2. அஜந்தா மற்றும் பாக்கில் காணப்படும் ஓவியங்கள் மத்திய தேச ஓவியப் பள்ளி முறையின் தலைசிறந்த ஓவியங்களாகும்.
A
கூற்று 1 மட்டும் சரி
B
கூற்று 2 மட்டும் தவறு
C
கூற்று 1 மட்டும் தவறு
D
மேற்கூறிய ஏதுமில்லை
Question 77 Explanation: 
குறிப்பு: அஜந்தாவின் சுவர் ஓவியங்கள் ஃபிரெஸ்கோ எனப்படும் சுவரோவிய வகையைச் சேர்ந்தவையல்ல. ஏனெனில் ஃபிரெஸ்கோ ஓவியங்கள் சுவரின் பூச்சு ஈரமாக இருக்கும் போதே வரையப்படுபவை. ஆனால் அஜந்தாவின் சுவரோவியங்கள் பூச்சு காய்ந்தபின் வரையப்பட்டவை.
Question 78
குப்தர் காலத்து மட்பாண்டங்கள் மட்பாண்டக் கலையின் சிறப்பிற்கு எடுத்துக்காட்டு
A
அச்சிசத்திரா
B
ராய்கார்
C
ஹஸ்தினாபூர், பஷார்
D
மேற்கூறிய அனைத்தும்
Question 78 Explanation: 
குறிப்பு: குப்தர் காலகட்டத்து மட்பாண்டங்களின் தனிப்பட்ட சிறப்பம்சம் “சிவப்பு மட்பாண்டங்கள்” ஆகும்.
Question 79
குப்தர் காலத்து அலுவல் மொழி
A
ஹிந்தி
B
பாரசீகம்
C
உருது
D
சமஸ்கிருதம்
Question 79 Explanation: 
குறிப்பு: குப்தர் சமஸ்கிருதத்தை அலுவல் மொழியாக்கினார்கள். அவர்களின் அனைத்து கல்வெட்டுகளும் பட்டயங்களும் அம்மொழியில் தான் எழுதப்பட்டன. இக்காலகட்டம்தான் சமஸ்கிருத இலக்கியத்தின் உச்சகட்டமாகும்.
Question 80
பண்டைய காலத்தில் உருவான _____ நல்லொழுக்கம், அரசியல், கலை மற்றும் பண்பாடு என்று பல்வேறு கருப்பொருள்கள் குறித்துப் பேசிய சமய நூல்களாகும்.
A
அர்த்தசாஸ்திரம்
B
ஸ்மிருதிகள்
C
கல்வெட்டுகள்
D
தூண்கள்
Question 80 Explanation: 
குறிப்பு: பண்டைய காலத்தில் உருவான ஸ்மிருதிகள் நல்லொழுக்கம், அரசியல், கலை மற்றும் பண்பாடு என்று பல்வேறு கருப்பொருள்கள் குறித்துப் பேசிய சமய நூல்களாகும். தர்ம சாஸ்திரங்களும் புராணங்களும் இந்த இலக்கியக் கட்டமைப்பின் மையப்பொருளை வடிவமைத்தன.
Question 81
பொருத்துக
  • (1) அஷ்டத்யாயி - சந்திரகோமியர்
  • (2) மஹாபாஷ்யா - அமரசிம்மர்
  • (3) அமரகோசம் - பதஞ்சலி
  • (4) சந்திரவியாகரணம் - பாணினி
A
4 3 2 1
B
3 2 1 4
C
2 3 1 4
D
3 1 2 4
Question 81 Explanation: 
குறிப்பு: பாணினி எழுதிய அஷ்டத்யாயி, பதஞ்சலியால் எழுதப்பட்ட மஹாபாஷ்யா ஆகிய படைப்புகளின் அடிப்படையில் குப்தர் காலத்தில் சமஸ்கிருத இலக்கணத்தின் வளர்ச்சி புலப்படுகிறது. இக்காலகட்டம் குறிப்பாக அமரசிம்மரால் அமரகோசம் என்ற சமஸ்கிருத சொற்களஞ்சியம் தொகுக்கப்பட்டதாக அறியப்படுகிறது. வங்கத்தைச் சேர்ந்த பௌத்த அறிஞர் சந்திரகோமியர் சந்திரவியாகரணம் என்ற இலக்கணநூலைப் படைத்தார்.
Question 82
குப்தர் காலத்தின் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர்கள்
A
ஆர்யதேவர்
B
ஆர்யஅசங்கர்
C
தாலமி
D
அ, ஆ இரண்டும்
Question 82 Explanation: 
குறிப்பு: தொடக்க கால பௌத்த இலக்கியங்கள் மக்கள் மொழியான பாலி மொழியில் இருந்தன. பின்னர் சமஸ்கிருதக் கலப்புடன் கவிதையும் வசனமுமாக மீண்டும் எழுதப்பட்டன. ஆர்யதேவர், ஆர்யஅசங்கர் ஆகியோர் குப்தர் காலத்தின் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர்கள் ஆவர்.
Question 83
குப்தர் காலத்தில் அறிவியல் சார்ந்த முதலாவது முழுமையான நூல் யாரால் எழுதப்பட்டது?
A
சாணக்கியர்
B
தாலமி
C
வசுபந்து
D
பாணினி
Question 83 Explanation: 
குறிப்பு: அறிவியல் சார்ந்த முதலாவது முழுமையான பௌத்தநூல் வசுபந்துவால் குப்தர் காலகட்டத்தில் எழுதப்பட்டது. வசுபந்துவின் சீடரான திக்நாகரும் பல அரிய நூல்களை எழுதினர்.
Question 84
சமண ராமாயணத்தை எழுதியவர்
A
விமலா
B
தாலமி
C
வசுபந்து
D
பாணினி
Question 84 Explanation: 
குறிப்பு: சமணர்களின் மதநூல்களும் தொடக்கத்தில் பிராகிருத மொழியிலேயே எழுதப்பட்டன. பின்னர்தான் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டன. விமலா சமண இராமாயணத்தை எழுதினார். சித்தசேன திவாகரா சமணர்களிடையே தர்க்கசாஸ்திரத்திற்கு அடித்தளமிட்டார்.
Question 85
சாகுந்தலம், மாளவிகாக்னிமித்ரம், விக்ரமோர்வசியம் ஆகிய நாடகங்களை எழுதியவர்
A
தாலமி
B
பாணினி
C
வசுபந்து
D
காளிதாசர்
Question 85 Explanation: 
குறிப்பு: காளிதாசர் இயற்கையை, அழகை எழுதிய கவிஞர். சாகுந்தலம், மாளவிகாக்னிமித்ரம், விக்ரமோர்வசியம் ஆகியவை இவரது புகழ்பெற்ற நாடகங்கள்.
Question 86
மிருச்சகடிகம் என்ற நூலை எழுதியவர்
A
சூத்ரகர்
B
தாலமி
C
வசுபந்து
D
பாணினி
Question 87
பொருத்துக.
  • (1) சூரசேனி வடிவம் - பீகார்
  • (2) அர்தமகதி வடிவம் - மதுரா
  • (3) மகதி வடிவம் - அவுத், பண்டேல்கண்ட்
A
2 1 3
B
3 1 2
C
3 2 1
D
2 3 1
Question 87 Explanation: 
குறிப்பு: குப்தர் காலத்தில் பிராகிருத மொழியின் பல்வேறு வடிவங்கள் உருவாகின. மதுரா பகுதியில் சூரசேனி என்ற வடிவமும், அவுத், பண்டேல்கண்ட் பகுதிகளில் அர்தமகதி வடிவமும், நவீன பீகார் பகுதியில் மகதி வடிவமும் வழக்கத்தில் இருந்தன.
Question 88
கீழ்க்கண்டவற்றில் சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
  1. மகாவிஹாரா என்று பெயர் பெற்ற நாளந்தா இந்தியாவின் பண்டைய மகதப் பேரரசில் (இன்றைய பிகார்) இருந்த மிகப் பெரிய பௌத்த மடாலயமாகும்.
  2. நாளந்தா பாட்னாவிற்குத் தென்மேற்கே சுமார் 95 கிமீ தூரத்தில் பீகார் ஷெரீப் நகரத்திற்கு அருகே உள்ளது. இது பொ.ஆ. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து 1200 வரை புகழ்பெற்ற கல்விச்சாலையாக இருந்தது.
  3. நாளந்தா யுனெஸ்கோவால் பாதுகாக்கப்படும் உலகின் தொன்மைச் சின்னமாகும்.
A
கூற்று 1 மட்டும் சரி
B
கூற்று 2 மட்டும் சரி
C
கூற்று 3 மட்டும் சரி
D
அனைத்தும் சரி
Question 89
இந்தியாவின் தொடக்ககாலப் பல்கலைக்கழகங்கள் எவை?
A
தட்சசீலம்
B
நாளந்தா
C
விக்ரமசீலா
D
மேற்கூறிய அனைத்தும்
Question 89 Explanation: 
குறிப்பு: இந்தியாவின் தொடக்ககாலப் பல்கலைக்கழகங்கள் என்று குறிப்பிடப்படுபவை தட்சசீலம், நாளந்தா, விக்ரமசீலா ஆகும்.
Question 90
கீழ்க்கண்ட கூற்றுக்களை ஆராய்க.
  1. ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டுகளில் நாளந்தா பல்கலைக்கழகம் குப்தப் பேரரசின் ஆதரவிலும், பின்னர் கன்னோசியின் பேரரசரான ஹர்ஷரின் ஆதரவிலும் செழித்தது.
  2. வங்கத்தின் பால வம்ச அரசர்களின் ஆதரவால் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் பௌத்த மதம் புகழ்பெறத் துவங்கியது.
  3. திபேத், சீனா, கொரியா, மத்திய ஆசியா போன்ற இடங்களிலிருந்தெல்லாம் மாணவர்கள் நாளந்தாவில் படித்தனர். இங்கு மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் மூலம் இப்பல்கலைக்கழகத்திற்கு இந்தோனேஷியாவின் சைலேந்திரா வம்சத்தோடு தொடர்பு இருந்தது தெரிய வருகின்றது. இவ்வம்சத்தின் அரசர் ஒருவர் இவ்வளாகத்தில் ஒரு மடாலயத்தைக் கட்டியுள்ளார்.
A
கூற்று 1 மட்டும் சரி
B
கூற்று 2 மட்டும் சரி
C
கூற்று 3 மட்டும் சரி
D
அனைத்தும் சரி
Question 91
கில்ஜியின் படைகளால் நாளந்தா சூறையாடப்பட்டு அழிக்கப்பட்ட ஆண்டு
A
பொ.ஆ.1200
B
பொ.ஆ.1300
C
பொ.ஆ.1400
D
பொ.ஆ.1500
Question 91 Explanation: 
குறிப்பு: பொ.ஆ.1200இல் தில்லி சுல்தானிய மம்லூக் வம்சத்தின் பக்தியார் கில்ஜியின் படைகளால் நாளந்தா சூறையாடப்பட்டு, அழிக்கப்பட்டது.
Question 92
நாளந்தா பல்கலைக்கழகத்தைப் பற்றி முறையான அகழ்வாய்வு நடைபெற்ற ஆண்டு
A
1918
B
1917
C
1916
D
1915
Question 92 Explanation: 
குறிப்பு: முறையான அகழ்வாய்வு 1915இல் ஆரம்பித்தது. அப்போது 12 ஹெக்டேர் பரப்பில் (30 ஏக்கர்) அமைந்திருந்த பதினோரு மடாலயங்களும், ஆறு செங்கல் கோயில்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
Question 93
சுழியம் என்ற கருத்தாக்கத்தைக் கண்டுபிடிக்கப்பட்ட காலம்
A
குப்தர் காலம்
B
குஷாணர் காலம்
C
முகாலயர் காலம்
D
மராத்தியர் காலம்
Question 93 Explanation: 
குறிப்பு: சுழியம் என்ற கருத்தாக்கத்தைக் கண்டுபிடித்தது, அதன் விளைவாக பதின்ம இலக்கமுறை கண்டுபிடித்தது ஆகிய பெருமைகள் இக்காலகட்டத்தின் அறிவியலாளர்களையேச் சாரும்.
Question 94
சூரிய கிரகணங்களின் உண்மையான காரணங்களை ஆராய்ந்தவர்
A
வசுபந்து
B
வராகமிகிரர்
C
ஆரியபட்டர்
D
தாலமி
Question 94 Explanation: 
குறிப்பு: சூரிய சித்தாந்தா என்ற நூலில் ஆரியபட்டர் (பொ.ஆ. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதி முதல் ஆறாம் நூற்றாண்டின் துவக்கம் வரை) சூரிய கிரகணங்களின் உண்மையான காரணங்களை ஆராய்ந்தார்.
Question 95
பூமி ஒரு அச்சில் தன்னைத் தானே சுற்றுகிறது என்பதைக் கண்டுபிடித்த முதல் வானவியலாளர்
A
வசுபந்து
B
வராகமிகிரர்
C
ஆரியபட்டர்
D
தாலமி
Question 95 Explanation: 
குறிப்பு: பூமியின் சுற்றளவு குறித்த கணக்கீட்டில் ஆரியபட்டர் கணிப்பு நவீன மதிப்பீட்டிற்கு மிக நெருக்கமாக உள்ளது.
Question 96
வானவியல், புவியியல், தாவரவியல், இயற்கை வரலாறு ஆகியவற்றிற்கான கலைக்களஞ்சியமாகக் கூறப்படும் நூல்
A
பிருஹத்ஜாதகா
B
பிருஹத்சம்ஹிதா
C
பஞ்சசித்தாந்திகா
D
கண்டகாத்யகா
Question 96 Explanation: 
குறிப்பு: வராகமிகிரரின் (ஆறாம் நூற்றாண்டு) பஞ்சசித்தாந்திகா, பிருஹத்ஜாதகா ஆகியவை இவரது மற்ற படைப்புகளாகும்.
Question 97
ஆரியபட்டீயம் என்ற நூலை எழுதியவர்?
A
வசுபந்து
B
வராகமிகிரர்
C
ஆரியபட்டர்
D
தாலமி
Question 97 Explanation: 
குறிப்பு: கணிதம், கோணவியல், இயற்கணிதம் ஆகியவற்றைப் பேசும் ஆரியபட்டீயம் என்ற நூலை அவர் எழுதினார்.
Question 98
பிரும்மஸ்புத– சித்தாந்தா, கண்டகாத்யகா ஆகிய நூல்களை எழுதியவர்
A
சமுத்திரகுப்தர்
B
முதலாம் சந்திர குப்தர்
C
இரண்டாம் சந்திர குப்தர்
D
பிரம்ம குப்தர்
Question 98 Explanation: 
குறிப்பு: பிரம்மகுப்தர் (ஆறாம் நூற்றாண்டின் இறுதி, ஏழாம் நூற்றாண்டின் துவக்கம்) கணிதம் மற்றும் வானவியலுக்கான முக்கிய நூல்களான பிரும்மஸ்புத– சித்தாந்தா, கண்டகாத்யகா ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
Question 99
நோய்களுக்கான மருந்துகள், மருந்துகள் தயாரிக்கும் முறை ஆகியவற்றைப் பற்றிக் கூறும் மருத்துவ நூல்
A
ஆரியப்பட்டியம்
B
நவனிதகம்
C
ஹஸ்த்யாயுர்வேதா
D
கண்டகாத்யகா
Question 99 Explanation: 
குறிப்பு: நவனிதகம் என்ற மருத்துவ நூல் நோய்களுக்கான மருந்துகள், மருந்துகள் தயாரிக்கும் முறை ஆகியவற்றைக் கூறுகிறது.
Question 100
ஹஸ்த்யாயுர்வேதா என்ற விலங்குகளுக்கான மருத்துவ நூலை எழுதியவர்
A
வசுபந்து
B
வராகமிகிரர்
C
பாலகாப்யா
D
தாலமி
Question 100 Explanation: 
குறிப்பு: பாலகாப்யா எழுதிய ஹஸ்த்யாயுர்வேதா என்ற நூல் விலங்குகளுக்கான மருத்துவ நூலாகும்.
Question 101
நிலப்பிரபுத்துவ பண்புகளை வரையறுத்த வரலாற்றாளர்
A
டாசிடஸ்
B
அட்டில்லா
C
பாலகாப்யா
D
ஆர்.எஸ். சர்மா
Question 101 Explanation: 
குறிப்பு: நிலப்பிரபுத்துவம் என்ற சமூக அமைப்பு இந்தியாவின் மத்தியகால சமூகத்தின் ஒரு பண்புநிலை ஆகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel