
ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்ற நீதிபதியாக கஜாவேத் இக்பால் வானி நியமனம்
- ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்தின் பொது உயா் நீதிமன்றத்தின் நீதிபதியாக ஜாவேத் இக்பால் வானி நியமிக்கப்பட்டுள்ளாா்.
- அவா் ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்ற வழக்குரைஞா் சங்கத் தலைவா் மியான் அப்துல் கயூமின் மருமகன் ஆவாா்.
திண்பண்டங்களை அடைக்கும் பிளாஸ்டிக் பைகள் தயாரிக்க, விற்பனை செய்யவும் தமிழக அரசு அதிரடி தடை
- தமிழகத்தில் மொத்தம் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு 2018-ம் ஆண்டு ஜூன் 25-ல் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை 2019-ம் ஆண்டு ஜனவர் 1-ந் தேதி முதல் அமலானது.
- ஆனால் இதற்கு எதிராக பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூனில், தமிழக அரசின் தடை உத்தரவு செல்லும் என தீர்ப்பளித்தது.
- அத்துடன் விலக்கு அளிக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக்குகளின் பயன்பாட்டையும் தடை செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியது. இதனால் தமிழக அரசின் முந்தைய அரசாணையில் ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
- இந்த திருத்தத்தின்படி, திண்பண்டங்கள்- நொறுக்கு தீனிகளை அடைத்து விற்பனை செய்ய பயன்படுத்துகிற பிளாஸ்டிக் பைகளை தயாரிக்கவும் விற்பனை செய்யும் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 5-ந் தேதியிட்ட அரசாணையில் இத்திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து
- தமிழகத்தில் ஜூன் 15ம் தேதி நடைபெற இருந்த பொதுத்தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- அதிலும் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவிகிதமும் வருகைப் பதிவை அடிப்படையாகக் கொண்டு 20 சதவிகித மதிப்பெண்ணும் வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவிப்பை வெளியிட்டு கொண்டுள்ளார்.
புதுவையிலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து
- தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
- புதுச்சேரி மாநிலத்திற்கென தனி கல்வி வாரியம் கிடையாது. புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் தமிழக பாடதிட்டங்களும், மாகி பிராந்தியத்தில் கேரளா பாடத்திட்டமும், ஏனாம் பிராந்தியத்தில் ஆந்திர பாடத்திட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது.