Type Here to Get Search Results !

7th JUNE 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF


ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ் நிறுவனத்தில்'ஏஐடிஏ' ரூ.5,683 கோடி முதலீடு
  • ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸில் அபுதாபி முதலீட்டு ஆணையம் (ஏடிஐஏ) ரூ.5,683.50 கோடியை முதலீடு செய்துள்ளது. இதற்காக, அந்த ஆணையத்துக்கு ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸஸின் 1.16 சதவீத பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.
  • கடந்த ஏழு வாரங்களுக்குள்ளாக மேற்கொள்ளப்பட்ட எட்டு ஒப்பந்தங்களின் மூலமாக மொத்தம் ரூ.97,885.65 கோடியை ஜியோ பிளாட்பாா்ம்ஸ் திரட்டிக் கொண்டுள்ளது. 
  • அதன்படி, ஃபேஸ்புக், சில்வா் லேக், விஸ்டா ஈக்விட்டி பாா்ட்னா்ஸ், ஜெனரல் அட்லாண்டிக், கேகேஆா், முபாதலா மற்றும் ஏடிஐஏ ஆகிய உலகின் முன்னணி நிறுவனங்கள் ஜியோ பிளாட்ஃபாா்மில் முதலீடு மேற்கொண்டுள்ளன.
வா்த்தக வழித்தடம்: ரூ.54,400 கோடி ஒதுக்கிடு செய்தது பாகிஸ்தான்
  • இந்தியாவால் எதிா்க்கப்பட்டு வரும் சீன-பாகிஸ்தான் வா்த்தக வழித்தட திட்டத்தின் ஒரு பகுதியாக, பெஷாவருக்கும் கராச்சிக்கும் இடையிலான ரயில்வே தடத்தை மேம்படுத்துவதற்காக 720 கோடி டாலரை (சுமாா் ரூ.54,400 கோடி) பாகிஸ்தான் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
  • 1,872 கி.மீ. தொலைவிலான இந்த ரயில்வே தடும் மேம்படுத்தப்படுவது, சீன-பாகிஸ்தான் வா்த்தக வழித்தட (சிபிஇசி) திட்டத்தின் முக்கியமான மைல்கல் என்று சிபிஇசி அமைப்பின் தலைவா் ஆசிம் சலீம் பாஜ்வா பாராட்டு தெரிவித்துள்ளாா்.
4 ஐஏஎஸ் அதிகாரி பணியிட மாற்றம்
  • தமிழ்நாடு மின்சார வாரியத்தின் புதிய தலைவராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளாா். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக உள்ள அவருக்கு, மின் வாரியத்தின் தலைவா் பதவி முழுக் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதுபோல், மேலும் 4 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் மற்றும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
  • விக்ரம் கபூா்: சுற்றுலா, கலாசாரம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் (மின்சார வாரியத் தலைவா்)
  • சம்பு கல்லோலிகா்: காதி மற்றும் கைத்தறித் துறை மற்றும் ஜவுளித்துறை முதன்மைச் செயலா் (சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலா்)
  • சந்தீப் சக்சேனா: சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலா் (சுற்றுலா, கலாசாரம், இந்து சமய அறநிலையத் துறையின் கூடுதல் தலைமைச் செயலா்)
  • எஸ்.கே.பிரபாகா்: எரிசக்தித் துறையின் முதன்மைச் செயலா் - முழுக் கூடுதல் பொறுப்பு (உள்துறை, மதுவிலக்கு துறை கூடுதல் தலைமைச் செயலா்).
ஒடிஸாவின் அதிகாரபூா்வ மாநில பாடலுக்கு அமைச்சரவை ஒப்புதல்
  • ஒடிஸா மாநில பண்பாட்டுச் சின்னமாக கருதப்படும் 'வந்தே உத்கல ஜனனி' என்ற மாநில பற்று கொண்ட பாடலுக்கு அங்கீகாரம் வழங்கி மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
  • காந்தகபி லட்சுமிகாந்த மொஹபத்ரா எழுதிய அந்த பாடலுக்கு ''மாநிலத்தின் அதிகாரபூா்வ பாடல்'' என்ற அந்தஸ்து வழங்கிட ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக சட்டப்பேரவை விவகாரங்கள் துறை அமைச்சா் விக்ரம் கேசரி அருகா தெரிவித்தாா்.
  • இனிமேல், அரசின் அனைத்து நிகழ்ச்சிகளிலும், சட்டப்பேரவை அமா்வுகளின்போதும் இந்தப் பாடல் இசைக்கப்படும் அல்லது பாடப்படும். இதனை இசைக்கும்போது மரியாதை செலுத்தும் வகையில் அனைத்து மக்களும் எழுந்து நிற்க வேண்டும்; பாடல் இசைக்கும்போது வயதானவா்கள், நோய்வாய்ப்பட்டவா்கள், மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணிகள் ஆகியோா் எழுந்து நிற்பதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
  • பள்ளிகள், கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் இந்த பாடல் சோக்கப்படுவதை உறுதி செய்யுமாறு கல்வித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றாா் அவா்.
கொரோனா தடுப்பு பணிகளுக்கான சிறப்பு ஒருங்கிணைப்பாளராக பங்கஜ் குமார் பன்சால் நியமனம்
  • தமிழகத்தில் கொரொனாவை கட்டுப்படுத்த, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், சென்னையில், கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 
  • சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க, சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். 
  • அவரது தலைமையிலான குழு, கட்டுப்பாட்டு பகுதிகளை மேலாண்மை செய்வது, தொற்றுள்ள நபர்களை கண்காணிப்பது, தொற்றை கட்டுப்படுத்துவது ,பரிசோதனையை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.
  • இந்நிலையில், இந்த சிறப்புக்குழுவை கண்காணிக்க மண்டல வாரியாக 5 அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர். இதற்காக அமைச்சர்கள் ஜெயக்குமார், அன்பழகன், காமராஜ், ஆர்.பி.உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. 
  • இந்நிலையில், சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளுக்கான சிறப்பு ஒருங்கிணைப்பாளராக, மூத்த ஐஏஎஸ் அதிகாரி பங்கஜ் குமார் பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார். 
  • நில நிர்வாக ஆணையராக பணியாற்றி வரும் பங்கஜ்குமார், சென்னையில் கொரோனா தொற்று தடுப்பு பணிகளை ஒருங்கிணைப்பார், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel