- பூமியில் உள்ள மொத்த நீரில் 97 சதவீதம் கடல் நீர் தான். பல வழிகளிலும் நன்மை அளிக்கும் கடல் மற்றும் கடல்சார் உயிரினங்களை பாதுகாக்க ஜூன் 8ம் தேதி, உலக பெருங்கடல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
- 'நிலையான பெருங்கடலுக்கான புதிய முயற்சி' என்பது இந்தாண்டு மையக்கருத்து.உலகில் கடலில் தான் அதிக சரக்கு போக்குவரத்து நடக்கிறது. உலகில் 10 கோடி பேர் தினமும், உணவு, வருமானத்துக்கு கடலை நம்பியே உள்ளனர்.
- கடலில் பல அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன. கடல் மாசுநாம் துாக்கி எறியும் பிளாஸ்டிக், பாலித்தீன் மற்றும் தொழிற்சாலை கழிவுநீர் கடலில் கலக்கின்றன.
- இதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கும் அழிவு ஏற்படுகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான ஊரடங்கால் கடல் மாசுபடுவது குறைந்தது.
- கடல்வாழ் உயிரினங்கள் எவ்வித அச்சமின்றி வந்து சென்றதை பார்க்க முடிந்தது. மனிதர்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடில் 30 சதவீதத்தை கடல் எடுத்துக்கொண்டு, பூமி வெப்பமடைவதை குறைக்கிறது.
- கடல் மூலமாக 70 சதவீத ஆக்சிஜன் கிடைக்கிறது. உலகில் ஆண்டுதோறும் 80 லட்சம் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலக்கின்றன. உலகில் 300 கோடி பேருக்கு கடல் உணவு மூலம் புரோட்டின் கிடைக்கிறது.
உலக பெருங்கடல் தினம் / WORLD OCEAN DAY
June 08, 2020
0
Tags