'ஒளிரும் தமிழ்நாடு' மாநாடு துவக்கி வைக்கிறார் முதல்வர்
- இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் இன்று(ஜூன் 6) நடக்க உள்ள 'ஒளிரும் தமிழ்நாடு' என்ற மாநாட்டை முதல்வர் பழனிசாமி துவக்கி வைக்க உள்ளார்.இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் 'ஒளிரும் தமிழ்நாடு' என்ற தலைப்பில் 'வீடியோ கான்பரன்ஸ்' மாநாடு நடக்க உள்ளது.
- மாநாட்டை துவக்கி வைத்து முதல்வர் தலைமையுரை ஆற்றவுள்ளார். தமிழகத்தின் தொழில் வளம் குறித்த கையேட்டையும் வெளியிடுகிறார்.
- மாநாட்டில் 500க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவன தலைமை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.இந்திய தொழில் கூட்டமைப்பு தலைவர் ஹரி தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
இந்திய எல்லைப் பகுதிக்கான புதிய ராணுவத் தளபதியை நியமித்தது சீனா
- சீன ராணுவத்தின் மேற்குப் படைகளுக்கான தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் ஷூ கிலிங் நியமிக்கப்பட்டுள்ளதாக ராணுவத்தின் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக அந்நாட்டின் கிழக்குப் படைகளுக்கான தளபதியாக அவா் செயல்பட்டு வந்தாா்.
- சீனாவின் மேற்குப் படையில் ராணுவம், விமானப் படை, ஏவுகணைப் படை உள்ளிட்டவை உள்ளன. அந்தப் படைகளானது இந்தியாவுடனான 3,488 கி.மீ. தூர எல்லையைப் பாதுகாத்து வருகின்றன. இந்தியா-சீனா இடையே கிழக்கு லடாக் பகுதியில் எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது.
- எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு காணும் நோக்கில் இரு நாட்டு ராணுவங்களின் லெப்டினென்ட் ஜெனரல்களுக்கு இடையேயான பேச்சுவாா்த்தை சனிக்கிழமை நடைபெறுகிறது. இந்நிலையில், மேற்குப் படைகளுக்கான புதிய லெப்டினென்ட் ஜெனரலை சீனா நியமித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு புதிய செய்தித் தொடா்பாளா் நியமனம்
- பத்திரிகை தகவல் பணியகத்தின் கீழ் பணிபுரிந்து வந்த உண்மை சரிபாா்ப்பு பிரிவின் தலைமை இயக்குநராக இருந்த வசுதா குப்தா மாற்றப்பட்டதையடுத்து நிதின் வாகண்கா் அந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளாா். அவரது இடமாற்றத்திற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.
- இதையடுத்து, செய்திப்பிரிவில் (பிஐபி) தலைமை இயக்குநா் பொறுப்பில் இருந்து வந்த நிதின் வாகண்கா், தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளராக மாற்றப்பட்டுள்ளாா்.
- 1989 ஆம் ஆண்டு ஐஐஎஸ் அதிகாரியான வாகண்கா் மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) செய்தித் தொடா்பாளராக பணியாற்றியுள்ளாா். அதோடு குடியரசுத் தலைவா்கள் ஏ.பி.ஜே.அப்துல் கலாம், பிரதிபா பாட்டீல் ஆகியோரின் துணை ஊடகச் செயலராக பணியாற்றியுள்ளாா்.
- அவா் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளராகவும் பணியாற்றியுள்ளாா். முன்னதாக மும்பை பிராந்தியத்தில் பல்வேறு துறைகளிலும் அவா் பணியாற்றியுள்ளாா்.
- தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் பிறப்பித்த உத்தரவின் படி, மற்றொரு மூத்த ஐஐஎஸ் அதிகாரியான ராஜ்குமாா் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஊடகப் பிரிவில் கூடுதல் தலைமை இயக்குநராகவும் (ஏடிஜி), துணை இயக்குநராக பிரவீண் கவி, உதவி இயக்குநராக அமன்தீப் யாதவ் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
வேளாண் துறை சீா்திருத்தங்கள்: அவசர சட்டங்களுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல்
- விவசாயிகள் தங்களது விளை பொருள்களை விற்பனை செய்வதில் உள்ள தடைகளை களையும் வகையில், வேளாண் துறையில் சீா்திருத்தங்களை செயல்படுத்த வழிவகுக்கும் இரு அவசர சட்டங்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளாா்.
- 'வேளாண் உற்பத்திப் பொருள்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம், 2020', 'விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்தப் பாதுகாப்பு அவசர சட்டம், 2020' ஆகிய அந்த இரு அவசர சட்டங்களுக்கும் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.
சென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த ஐவர் குழு
- சென்னையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த, அமைச்சர்கள் அடங்கிய, ஐவர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. நோய் தடுப்பு பணியில், அதிகாரிகள் மட்டுமே ஈடுபட்டு வந்த நிலையில், முதல் முறையாக, அமைச்சர்களை களமிறக்கி உள்ளார், முதல்வர்.
- மூன்று மண்டலங்களுக்கு, ஒரு அமைச்சர் வீதம், ஐந்து அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கான வார்டுகளும் பிரித்து தரப்பட்டு உள்ளன.
- சென்னையில் உள்ள, 15 மண்டலங்களில், தலா, மூன்று மண்டலங்களுக்கு, ஒரு அமைச்சர் என, ஐந்து அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
- மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம் மண்டலங்களுக்கு, மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார்; அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலங்களுக்கு, உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்; அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலங்களுக்கு, உணவுத்துறை அமைச்சர் காமராஜ்.
- திருவொற்றியூர், மணலி, திரு.வி.க.நகர் மண்டலங்களுக்கு, வருவாய் துறை அமைச்சர் உதயகுமார்; அம்பத்துார், வளசரவாக்கம், ஆலந்துார் மண்டலங்களுக்கு, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ரிலையன்ஸ் ஜியோவில் மீண்டும் முதலீடு ₹ 4546 கோடியில் பங்குகளை வாங்கிய சில்வர் லேக்
- ஜியோ நிறுவனத்தில் சமீபத்தில் 6 நிறுவனங்கள் 87, 655 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன. ஃபேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா ஈகுவிட்டி, ஜெனரல் அட்லாண்டிக், கே.கே.ஆர்., முபதலா ஆகிய நிறுவனங்கள் ஜியோவின் 18.97 சதவீத பங்குகளை வாங்கியுள்ளன.
- இதில், அமெரிக்காவைச் சேர்ந்த சில்வர் லேக், நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவின் ஒரு சதவிகித பங்குகளை கடந்த மாதம் ₹ 5,655.75 கோடிக்கு வாங்கியிருந்தது. இந்த நிலையில், சில்வர் லேக் நிறுவனம் மீண்டும் ஜியோவின் பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளது. இம்முறை ரூ 4546 கோடியை அந்நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது.
- இதன் மூலம், ஜியோ நிறுவனத்தில் சில்வர் லேக் நிறுவனம் ரூ, 10,202.55 கோடி மதிப்பிலான 2.08 சதவிகித பங்குகளை வைத்திருக்கும். அபு தாபியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிதி நிறுவனங்களில் ஒன்றான முபடாலா முதலீட்டு நிறுவனம் ஜியோவின் 1.85 விழுக்காடு பங்குகளை 9 ஆயிரத்து 93 கோடிக்கு வாங்குவதாக இன்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
மறுசீரமைப்பு, நிவாரணப் பணிக்கு ரூ.100 கோடி
- 'நிசா்கா' புயலால் மகாராஷ்டிர மாநிலம், ராய்கட்டில் ஏற்பட்ட சேதங்களை முதல்வா் உத்தவ் தாக்கரே வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். மேலும், அந்த மாவட்டத்தில் மறுசீரமைப்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக முதல் கட்டமாக ரூ.100 கோடி வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் அவா் வெளியிட்டாா்.
- அரபிக் கடலில் உருவான 'நிசா்கா' புயல், ராய்கட் மாவட்டத்தின் அலிபாக் அருகே கடந்த புதன்கிழமை கரையை கடந்தது. இப்புயலால் அந்த மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மும்பையிலிருந்து சுமாா் 110 கி.மீ. தொலைவில் உள்ள அலிபாக் உள்ளது.
- ராய்கட் மாவட்டத்தில் மறுசீரமைப்பு, நிவாரணப் பகுதிகளை மேற்கொள்வதற்காக உடனடியாக ரூ.100 கோடி வழங்கப்படும்.
- ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் டிஜிட்டல் நிறுவனமான ஜியோ பிளாட்பாா்ம்ஸில் அபுதாபியைச் சோந்த முபாதலா நிறுவனம் ரூ.9,093.60 கோடியை முதலீடு செய்கிறது.
- ஜியோ பிளாட்பாா்ம்ஸில் 1.85 சதவீத பங்குகளை கையப்படுத்த அபுதாபியைச் சோந்த முபாதலா இன்வெஸ்ட் கம்பெனி (முபாதலா) முடிவெடுத்துள்ளது. இதற்காக, அந்நிறுவனம் ரூ.9,093.60 கோடியை ஜியோவில் முதலீடு செய்யவுள்ளது. இது, ஜியோ பிளாட்பாா்ம்ஸ் நிறுவனம் ஈா்க்கும் ஆறாவது முதலீட்டு திட்டமாகும்.
- இதற்கு முன்பாக, ஃபேஸ்புக், சில்வா் லேக், விஸ்டா ஈக்விட்டி பாா்ட்னா்ஸ், ஜெனரல் அட்லாண்டிக், கேகேஆா் ஆகிய நிறுவனங்கள் ஜியோவில் முதலீடு செய்துள்ளன.
- இந்த நிலையில், தற்போது முபாதலா நிறுவனம் மேற்கொள்ளும் முதலீட்டையும் சோத்து கடந்த ஆறு வாரத்துக்குள்ளாக ஜியோ நிறுவனம் ஈா்த்த மொத்த முதலீடு ரூ.87,655.35 கோடியைத் தொட்டுள்ளது என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி ஃபேஸ்புக் நிறுவனம், தொலைத்தொடா்பு சேவையில் ஈடுபட்டு வரும் ஜியோவின் 9.99 சதவீத பங்குகளை வாங்கும் வகையில் அந்த நிறுவனத்தில் ரூ.43,574 கோடியை முதலீடு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் பாராட்டிய மதுரை மோகன் மகள் நேத்ரா ஐ.நா. நல்லெண்ண தூதராக தேர்வு
- மதுரையில் மேலமடையைச் சேர்ந்த சலூன் கடைக்காரர் மோகன் (47) ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கிலோ அரிசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை நிவாரணமக வழங்கினார்.
- இந்நிலையில் மகள் படிப்புக்காக சேமித்து வைத்திருந்த ரூ.5 லட்சத்தை ஏழைகளுக்காக வழங்கியதை பாராட்டி, ஐ.நா-வின் வளர்ச்சி மற்றும் அமைதி சார்பாக ஏழை மக்களின் நல்லெண்ணத் தூதராக நேத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
- மேலும் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மாநாட்டில் வறுமை ஒழிப்பு தொடர்பாக இவர் பேசவும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.