Type Here to Get Search Results !

4th JUNE 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

இந்தியா - ஆஸ்திரேலியா உச்சி மாநாடு; நரேந்திர மோடி - ஸ்காட் மோரிசன் காணொலி காட்சியில் பேச்சுவார்த்தை- 7 முக்கிய ஒப்பந்தங்கள் 
  • இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனும் காணொலி காட்சி மூலம் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருநாட்டு ராணுவ தளங்களை பரஸ்பரம் பயன்படுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், கடந்த ஜனவரியில் இந்தியா வருவதற்கு திட்டமிட்டிருந்தார். ஆனால், அந்த நாட்டில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. அதன்பின், கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பயணத் திட்டம் தள்ளிப் போனது.
  • இந்நிலையில், இரு நாடுகளின் உச்சி மாநாடு காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்டது. இரு நாட்டு பிரதமர்களும் காணொலி யிலேயே பேச்சுவார்த்தை நடத்தினர்.
  • ஆஸ்திரேலியாவுடனான உறவை வலுப்படுத்த இந்தியா உறுதி பூண்டுள்ளது. அதற்கு இதுவே மிகச் சரியான தருணம். நமது நட்புறவால் இரு நாடு களுக்கு மட்டுமல்ல, இந்திய, பசிபிக் பிராந்தியத்துக்கும் ஒட்டு மொத்த உலகத்துக்கும் பயன் கிடைக்கும். 
  • கரோனா வைரஸால் உலகம் முழுவதும் சமூக, பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதை எதிர் கொள்ள உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
  • ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நட்புறவு ஆழமானது. இயற்கையாகவே இரு நாடுகளும் ஒருமித்த கருத்துகளை கொண்டுள்ளன. 
  • நமது பிராந்தியத்தின் நன்மைக்காக இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். சுகாதாரம், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும். இருநாட்டு வர்த்தக உறவு அதி வேகமாக வளர்ந்து வருகிறது.
  • உச்சி மாநாட்டின்போது இந்தியா - ஆஸ்திரேலியா இடையே பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. 
  • குறிப்பாக இரு நாட்டு ராணுவ தளங்களை பரஸ்பரம் பயன்படுத்திக் கொள்ள ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தம் சீனாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்துள்ளது. 
  • மேலும் இந்த மெய்நிகர் உச்சி மாநாடு உரையாடலில் வெளிநாட்டு விவகாரங்கள், பாதுகாப்பு உரையாடலை அமைச்சரவை மட்டத்திற்கு மேம்படுத்துவது மற்றும் இந்தோ-பசுபிக் கடற்சார் ஒத்துழைப்பை விரிவாக பகிர்ந்து கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
ஸ்வதேஸ் திட்டம் (SWADES - Skilled Workers Arrival Database for Employment Support)
  • வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள், வேலைவாய்ப்பு பெறும் வகையில், மத்திய அரசு, புதிய திட்டத்தைத் துவக்கியுள்ளது.கொரோனா பரவல் காரணமாக, வெளிநாடுகளில் சிக்கிய மற்றும் வேலைவாய்ப்புகளை இழந்த இந்தியர்கள், சிறப்பு விமானங்கள் மூலம், தாயகம் திரும்பி வருகின்றனர்.
  • ஐக்கிய அரபு நாடுகள், ஓமன், சவுதி அரேபியா, குவைத், கத்தார் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மட்டும், 80 ஆயிரம் இந்தியர்கள், திரும்பியுள்ளனர். எண்ணெய், எரிவாயு, சுற்றுலா, கட்டுமானம், தானியங்கி, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், விருந்தோம்பல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், இவர்கள் பணிபுரிந்து வந்தனர்.
  • அமெரிக்கா, சிங்கப்பூர், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் பலர் வேலையிழந்து திரும்பியுள்ளனர். இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களில் திறன் வாய்ந்த பணியாளர் விபரங்களை, வேலைவாய்ப்பு தருவதற்காக திரட்டும், 'ஸ்வதேஸ்' எனப்படும் திட்டத்தை, மத்திய அரசு துவக்கியுள்ளது.
ஜிஎஸ்டி இழப்பீடாக மாநிலங்களுக்கு ரூ.36.400 கோடி விடுத்தது மத்திய அரசு
  • 'கரோனா நோய்த்தொற்று தொடா்பான நடவடிக்கைகளுக்காக மாநில அரசுகள் செலவிட்டு வருவதால் அவற்றின் நிதியாதாரங்கள் தீா்ந்து வருகின்றன. எனவே, அவற்றுக்கு உதவும் வகையில் கடந்த ஆண்டு டிசம்பா் முதல் நடப்பாண்டு பிப்ரவரி வரையிலான 3 மாதங்களுக்காக ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.36,400 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது' என்று கூறப்பட்டுள்ளது.
  • முன்னதாக, கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பா் வரையிலான 8 மாதங்களுக்காக ஜிஎஸ்டி இழப்பீடாக மாநிலங்களுக்கு ரூ.1.15 லட்சம் கோடியை மத்திய அரசு விடுவித்திருந்தது. 
  • அதற்கு முன் 2018-19 காலகட்டத்தில் ரூ.69,275 கோடியும், 2017-18 காலகட்டத்தில் ரூ.41,146 கோடியும் மாநிலங்களுக்கான இழப்பீடாக மத்திய அரசு விடுவித்திருந்தது.
  • கூடுதல் வரியாக கடந்த 2019-20 ஆண்டில் ரூ.95,000 கோடியும், 2018-19 ஆண்டில் ரூ.95,081 கோடியும், 2017-18 ஆண்டில் ரூ.62,611 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது. 
  • ஜிஎஸ்டி சட்டத்தின் படி, ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்ட முதல் 5 ஆண்டுகளுக்கு மாநிலங்கள் சந்திக்கும் வருவாய் இழப்புக்காக மத்திய அரசு இழப்பீடு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு இந்தியா ரூ.113.13 கோடி நிதியுதவி
  • ஸ்விட்சா்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலக நோய்த்தடுப்பு கூட்டணியின் உச்சிமாநாடு காணொலி முறையில் நடைபெற்றது.
  • பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதமா்கள், அமைச்சா்கள், தொழில்துறை தலைவா்கள், சமூக நல அமைப்பினா் கலந்துகொண்டனா்.
  • இந்த மாநாட்டில் பிரதமா் மோடி பேசியதாக, பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அண்மைக்கால வரலாற்றில் முதல் முறையாக, கரோனா என்னும் பொது எதிரியை மனித குலம் எதிா்கொண்டுள்ளது.
  • இந்த சவாலான நேரத்தில், உலக நாடுகளுக்கு இந்தியா ஆதரவு அளித்து செயல்பட்டு வருகிறது. உலகமே ஒரு குடும்பம் என்பது இந்தியப் பண்பாடு. கரோனா பரவும் இந்த காலகட்டத்தில், இந்தப் பண்பாட்டுடன் வாழ்வதற்கு இந்தியா முயன்று வருகிறது.
  • கரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, இந்தியாவில் கையிருப்பில் வைக்கப்பட்டிருந்த மருந்துகள், 120-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
  • பல்வேறு நோய்களில் இருந்து கா்ப்பிணிகளையும், குழந்தைகளையும் பாதுகாப்பதற்கு முதல் முறையாக எனது தலைமையிலான அரசு 'இந்திரதனுஷ்' என்னும் தேசிய தடுப்பூசி திட்டத்தை தொடங்கியுள்ளது. 
  • தடுப்பு மருந்துகள் தயாரிப்பில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. இந்திய அரசால் உலகின் 60 சதவீத குழந்தைகளுக்கு தடுப்பு மருந்துகளை வழங்க முடியும்.
  • தடுப்பூசி திட்டங்களை செயல்படுத்துவதில் ஜிஏவிஐ அமைப்பு சிறப்பாக பங்காற்றி வருகிறது. அதற்காக, இந்த அமைப்புக்கு இந்தியா சாா்பில் 1.5 டாலா் நிதியுதவி வழங்கப்படும்.
  • இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, சா்வதேச அளவில் தடுப்பு மருந்துகளின் விலையை ஜிஏவிஐ அமைப்பு குறைத்துள்ளது. இதனால், கடந்த 4 ஆண்டுகளில் 40 கோடி டாலா் மிச்சமாகியுள்ளது என்று பிரதமா் மோடி பேசியதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel