Type Here to Get Search Results !

25th JUNE 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

2023 பிபா பெண்கள் உலககோப்பை உரிமையை கைப்பற்றிய ஆஸ்திரேலியா, நியூசிலாந்து
  • சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) சார்பில் பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில் 2023-ம் ஆண்டின் உலகக்கோப்பை தொடரை நடத்துவதற்கு பல்வேறு நாடுகள் விண்ணப்பித்திருந்தன. இதுதொடர்பாக நேற்று சூரிச்சில் நடந்த பிபா கவுன்சில் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
  • இந்த ஆலோசனையில், உலகக் கோப்பையை நடத்தும் அணிகளை தேர்வு செய்ய வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு ஆதரவாக 22 வாக்குகளும், கொலம்பியாவுக்கு ஆதரவாக 13 வாக்குகளும் கிடைத்தன.
  • இதையடுத்து, 2023-ம் ஆண்டு பெண்களுக்கான உலகக் கோப்பை தொடரை நடத்தும் உரிமையை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.
காளையார் கோவில் அருகே 2000 ஆண்டு பழமையான கருப்பு சிவப்பு பானை கண்டெடுப்பு
  • காளையார்கோயில் அருகே உள்ள நல்லேந்தல் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் உடைந்தநிலையிலும் முழுமையான அமைப்பிலும் காணப்படுகின்றன.
  • விஜயமாணிக்கம் கிராமத்தில் இரும்பு தாதுக்கள் இன்னும் நிலப்பரப்பில் கிடக்கிறது. ஆக அந்த காலங்களில் ஆயுதம் தங்கம் ஆபரணம் செய்யும் இடங்களாக இருந்திருக்கிறது.
  • கீழடியின் தொடர்ச்சியாக அங்கு எண்ண பொருள்கள் கிடைத்திருக்கிறதோ அதே பொருள்கள் இந்த பகுதிகளிலும் கிடைக்கிறது. ஆக வைகை நதியின் கிளை நதிகள் சிவகங்கை மாவட்டத்தில் ஓடியிருக்கிறது. இங்கேயும் வைகை நதி நாகரீகம் இருந்திருப்பது இதன் மூலம் உண்மையாகி இருக்கிறது.
  • இந்நிலையில், காளையார்கோயில் அருகே உள்ள நல்லேந்தல் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் உடைந்தநிலையிலும் முழுமையான அமைப்பிலும் தென்படுகிறது. 
  • இந்நிலையில் அப்பகுதியில் தீவிரமான மழைப் பொழிவால் 2,000 ஆண்டுகள் பழைமையான முதுமக்கள் தாழிகளுக்குள் கறுப்பு - சிவப்பு பாத்திரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • காளையார்கோயிலின் தெற்குப் பகுதியான நல்லேந்தல் என்ற இடத்தில் சுமார் 1,800 ஏக்கர் பரப்பளவில் முதுமக்கள் தாழிகள் மேல்பரப்பில் தென்பட்டுள்ளன. 
  • தற்போது முதுமக்கள் தாழிகளுக்குள் மனிதன் பயன்படுத்திய கருப்பு சிவப்பு பாத்திரம் ஒன்று கிடைத்துள்ளது. சிவகங்கையில் இருந்து மதுரை செல்லும் சாலையில் கோவானூர் கிராமத்தில் நதிக்கரை இருந்ததாகவும் அங்கே முத்து நவரத்தினகற்கள் போன்ற வணிக நரகமாக இருந்தது என்றும் சொல்லப்படுகிறது.
இந்திய செஞ்சிலுவைச் சங்கம் உருவாக்கியுள்ள 'மின்னணு ரத்த சேவைகள்' கைபேசிச் செயலி தொடக்கம்
  • இந்திய செஞ்சிலுவைச் சங்கம் உருவாக்கியுள்ள 'மின்னணு ரத்த சேவைகள்' கைபேசிச் செயலியை, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர்.ஹர்ஷ்வர்தன் டெல்லியில் இன்று காணொளிக்காட்சி மூலம் தொடங்கிவைத்தார். 
  • பிரதமர் நரேந்திரமோடி, 2015-இல் தொடங்கிவைத்த டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படும் அதிநவீன கணக்கீட்டு மேம்பாட்டு மையத்தைச் சேர்ந்த இ-ரக்டோஷ் குழுவினரால் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
  • ரத்தம் தேவைப்படுபவர்கள், இந்த செயலியில் பதிவு செய்தால், ரத்தம், செஞ்சிலுவை சங்கத்தின் எந்த ரத்த வங்கியில் கிடைக்கும் என்ற தகவல் கிடைக்கும். செயலி வாயிலாக நான்கு யூனிட் ரத்தம் வரை விண்ணப்பிக்கலாம்.
கோவையில் ரூ.166 கோடி மதிப்பிலான பில்லூர் 3வது குடிநீர் அபிவிருத்தி திட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
  • கோவையில் ரூ.166 கோடி மதிப்பிலான பில்லூர் 3 ஆவது குடிநீர் அபிவிருத்தி திட்டத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து, கோவையில் ரூ.238.40 கோடியில் நிறைவுற்ற திட்டங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
  • இதை தொடர்ந்து, கோவை மாநகராட்சி ஸ்மார் சிட்டி திட்டத்தின் கீழ் உக்கடம் பகுதியில் 39 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் பேரூர் சாலையை ஒட்டியுள்ள பெரிய குளத்தின் வடகரையில் புனரமைக்கப்பட்ட ஒரு பகுதியினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் முதல்வர். 
  • மேலும், கோவை மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் வாலாங்குளம் மேம்பாலத்தின் கீழ் மேம்பாடு செய்யப்பட்ட ரூ 23 கோடியே 83 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட பகுதியினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அவர் திறந்து வைத்தார்.
  • இதையடுத்து, வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ரூ 2 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் அன்னூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடத்தையும் திறந்து வைத்தார். 
  • மேலும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் 2 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு புதிய கட்டிடம் ஒன்றையும் அவர் திறந்து வைத்தார். 
  • ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ 2 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புதிய கட்டிடம் திறந்து வைக்கபட்டது.
  • மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 60 லட்சம் மதிப்பீட்டில் செட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார மைய கட்டிடத்தை காணொளிக் கட்சி மூலமாக முதலமைச்சர் EPS திறந்து வைத்தார். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel