Type Here to Get Search Results !

24th JUNE 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF


விண்வெளித் துறையில் பங்கேற்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கத் தேவையான சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
  • இதற்கென புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையம் (இன்-ஸ்பேஸ்) அமைப்பானது, தனியார் நிறுவனங்கள் இத்துறையில் ஈடுபடுவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தரும்.
  • அதேபோல தனியார் நிறுவனங்களும் இத்துறையில் பங்கேற்பதற்கு உரியபோட்டிகரமான வர்த்தக சூழலுக்கான கட்டமைப்பை உருவாக்கும். இதன் மூலம் விண்வெளி சார்ந்த ஆராய்ச்சி, மேம்பாடு, வழிகாட்டல் நடவடிக்கைகளை இந்நிறுவனம் மேற்கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டார்.
  • இதன் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) முழுமையாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தும். 
  • புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது, புதிய விண்வெளி பயண திட்டங்களுக்கான வாய்ப்புகளை ஆராய்வது, மனிதர்களை விண்வெளிக்கு பயணம் செய்வதற்கான விண்கலங்களை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தும். 
  • இத்துறையில் ஈடுபட விரும்பும் தனியார் நிறுவனங்களுக்கும் வேற்றுகிரகங்களுக்கு பயணம் செய்வது தொடர்பான வாய்ப்புகள் வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்படும். 
  • இதன் மூலம், நம் விண்வெளி கட்டமைப்பு வசதிகளை, தனியார் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். கோள்கள் குறித்த ஆய்வுகளுக்கும் அனுமதிக்கப்படும். இதற்காக, இந்திய தேசிய விண்வெளி மேம்பாட்டு மற்றும் அங்கீகார மையம் துவக்கப்பட்டு உள்ளது. 
  • 3 சதவீத வட்டிஇதன் மூலம், 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், அதிக ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி திட்டங்களில், புதிய தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த முடியும்.
தமிழகத்தில் இன்று முதல் மாவட்டம் விட்டு மாவட்ட செல்ல இ பாஸ் கட்டாயம் முதல்வர் பழனிசாமி
  • மண்டலங்களுக்குள் இன்று முதல் பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்குள் மட்டுமே இன்று முதல் பேருந்து போக்குவரத்து நடந்து வருகிறது. 
  • அதே போல் இன்று மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கார், பைக், வேன், உள்ளிட்ட எந்த தனியார் வாகனங்களும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் முதல் ஹிந்து கோயிலுக்கு அடிக்கல்
  • பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாத்தில் முதன்முதலாக ரூ. 10 கோடி மதிப்பீட்டில் ஹிந்து கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தலைநகரின் எச் -9 பகுதியில் சுமாா் 20,000 சதுர அடி பரப்பளவில் கிருஷ்ணா் கோயில் அமைய உள்ளது.
  • இஸ்லாமாபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1947க்கு முன்பு வரை பல்வேறு கோயில் கட்டமைப்புகள் இருந்தன. அவற்றில் ஒன்று சைத்பூா் கிராமத்திலும், ராவல் ஏரிக்கு அருகிலுள்ள கோரங் ஆற்றையொட்டிய மலைப்பகுதியிலும் அமைந்திருந்தது.
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடி கடன் உறுதித் திட்டம்: நிதின் கட்கரி தொடக்கி வைத்தாா்
  • சுயசாா்பு இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, நலிவடைந்த நிலையில் காணப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை மீண்டும் செயல்பட வைப்பதற்காக, கடன் உறுதியளிப்புத் திட்டத்தை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்த மாதம் 13-ஆம் தேதி அறிவித்தாா்.
  • இதையடுத்து, நிதியமைச்சகம், ரிசா்வ் வங்கி, சிறு தொழில் வளா்ச்சி வங்கி ஆகியவற்றுடன் விரிவாக விவாதிக்கப்பட்டு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலைப் பெற்ற பிறகு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
  • நாகபுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த திட்டத்தை சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சா் நிதின் கட்கரி அதிகாரபூா்வமாக தொடக்கி வைத்தாா்.
  • இந்த திட்டத்தின்படி, நலிவடைந்த நிலையில் இருக்கும் மற்றும் வாராக் கடன் பட்டியலில் இருக்கும் சுமாா் 2 லட்சம் தொழில் நிறுவனங்கள் பயன்பெறும். 
  • மேலும் இந்த தொழில் நிறுவனங்களை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். இத்திட்டத்தின்கீழ் பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதற்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை அவகாசம் அளிக்கப்படும்.
  • சிறு தொழில்களுக்கு வழங்கப்படும், 'முத்ரா' கடன் திட்டத்தின் கீழ், சிஷு முத்ரா கடன் பெற்று உள்ளோருக்கு, இந்தாண்டு மார்ச், 31ல் இருந்து, அடுத்த, 12 மாதங்களுக்கு, 2 சதவீத வட்டி தள்ளுபடி வசதி அளிக்கப்படும்.
  • சிஷு முத்ரா திட்டத்தின் கீழ், அதிகபட்சம், 50 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படுகிறது.பால் பொருட்கள், கோழி வளர்ப்பு மற்றும் இறைச்சி பதப்படுத்துதல் ஆலைகள் அமைக்க, 15 ஆயிரம் கோடி ரூபாய் கட்டமைப்பு நிதி வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ், 3 சதவீத வட்டி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள்:அமைச்சரவை ஒப்புதல்
  • கூட்டுறவு வங்கிகளில் முதலீடு செய்துள்ளோரை பாதுகாக்கும் வகையில், நாடு முழுதும் உள்ள, 1,500 கூட்டுறவு வங்கிகளை, ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வருவதற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 
  • பஞ்சாப் மற்றும் மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்தது போன்ற மோசடிகளை தடுக்கும் வகையில், நாடு முழுதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை, ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வருவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
  • இதன் மூலம், 1,482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், பல மாநிலங்களில் இயங்கும், 58 கூட்டுறவு வங்கிகள், இனி, ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் இருக்கும்.
  • இந்த வங்கிகளில், 8.6 கோடி முதலீட்டாளர்கள் செய்துள்ள, 4.84 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கீழுள்ள துணை பிரிவுகளுக்கான இடஒதுக்கீட்டு அளவை பகிர்ந்து கொடுப்பது தொடர்பாக பரிந்துரை செய்வதற்கு, டில்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி, ஜி. ரோஹிணி தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. 
  • உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள குஷிநகர் விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இதன் மூலம், புத்த மத சுற்றுலா மையங்களுக்கான சுற்றுலா மேம்படும்.
2ம் உலகப் போர் வெற்றி தினம்; ரஷ்யாவில் பிரமாண்ட அணிவகுப்பு: இந்திய படையும் பங்கேற்றது
  • இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி படைகளை ரஷ்யா வெற்றி பெற்றதன் 75வது ஆண்டு வெற்றி தினம் கொரோனா தொற்று காரணமாக தலைநகர் மாஸ்கோவில் ராணுவ அணிவகுப்புடன் கொண்டாடப்பட்டது. 
  • இதில் கலந்து கொள்வதற்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்யா புறப்பட்டு சென்றார். அங்கு அவர் அந்நாட்டின் துணை அதிபர் யூரி போரிசோவை சந்தித்தார்.
  • அப்போது பிராந்திய ஒத்துழைப்பு, பாதுகாப்பு விவகாரங்களில் இருநாடுகளின் உறவையும் வலுப்படுத்துவது தொடர்பாக கலந்து ஆலோசித்தனர்.
  • இந்நிலையில், ரஷ்யாவின் 75வது வெற்றி தினம் மாஸ்கோவில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் இந்தியா, சீனா உள்பட 11 நாடுகள் பங்கேற்றன. 
இந்தியாவில் 'வரலாறு காணாத' பொருளாதார வீழ்ச்சி சர்வதேச நாணய நிதியம் கணிப்பு
  • இந்தியாவில் வரலாறு காணாத பொருளாதார சரிவு ஏற்படும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) கணக்கீடு செய்துள்ளது. 2020ஆம் ஆண்டில் 4.5 சதவீதம் அளவுக்கு இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை சந்திக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணக்கிட்டுள்ளது.
  • அதேநேரம் 2021 ஆம் ஆண்டு பொருளாதாரம் மறுபடி ஏற்றம் காண்பதற்கான வாய்ப்பிருப்பதாகவும், 6 சதவீதம் என்ற அளவுக்கு பொருளாதாரம் உயரும் என்றும் அந்த அமைப்பு கணித்துள்ளது.
  • 2020 ஆம் ஆண்டு உலகளாவிய பொருளாதார வளர்ச்சி 4.9 சதவீதம் என்ற அளவுக்கு இருக்குமாம். ஏப்ரல் மாதம் உலக பொருளாதார அவுட்லுக் (WEO) கணித்ததைவிட இது 1.9 சதவீதம் குறைவு ஆகும்.
  • சர்வதேச நாணயநிதியத்தின் தலைமை பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத், பிடிஐ செய்தி நிறுவனத்திடம் இதுபற்றி கூறுகையில், 2020ம் ஆண்டில் 4.5 சதவீதம் அளவுக்கு இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியுடன் இருக்கும் என்று நாங்கள் அறிந்துள்ளோம். பெரும்பாலான நாடுகளில் இதுதான் நிலவரமாக இருக்கப் போகிறது.
  • 2020ம் ஆண்டில் முதல் அரையாண்டு காலகட்டத்தில் எதிர்பார்த்ததை விடவும் குறைவாக, பொருளாதார பாதிப்பு அதிகமாக இருந்துள்ளது. அதேநேரம் 2021 ஆம் ஆண்டு உலகப் பொருளாதார வளர்ச்சி என்பது 5.4 சதவீதம் என்ற அளவுக்கு அதிகரிக்கும்.
  • 1961 பிறகு சர்வதேச நாணய நிதியம், இந்தியா தொடர்பாக அளித்துள்ள மிக குறைவான வளர்ச்சி விகிதம் இதுவாகும். ஏனெனில் அதற்கு முந்தைய ஆண்டுகளில் எந்த மாதிரி பொருளாதார வளர்ச்சி இருந்தது என்பது தொடர்பான டேட்டா கிடையாது.
சன்சத் ரத்னா விருது 
  • கடந்த 2010-ம் ஆண்டு சென்னையில் உள்ள ப்ரைம் பாயின்ட் பவுண்டேஷன் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனமும், இந்த நிறுவனம் வெளியிடும் 'ப்ரீசென்ஸ்' இணைய மாத இதழும் சன்சத் ரத்னா விருது திட்டத்தை ஏற்படுத்தின.
  • நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கும் எம்.பி.க்களுக்கு விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும் நோக்கம் என்ற திட்டத்தை உருவாக்கி சன்சத் ரத்னா விருது விழா நடத்திடத் தூண்டுகோலாக இருந்தது.
  • 2010-ம் ஆண்டில் முதல் விருது விழாவை முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் தொடங்கி வைத்தார். விருதுகள் பெறுபவர்கள் சிறந்த நாடாளுமன்ற வாதிகளால் வெளிப்படைத் தன்மையுடன் மக்களவைச் செயலகமும் பி.ஆர்.எஸ். இந்தியா எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனமும் அளிக்கும் தரவுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர்.
  • பிரைம் பாயின்ட் பவுண்டேஷன் மற்றும் சன்சத் ரத்னா விருதுகள் குழுவின் தலைவர் கே.சீனிவாசன் கருத்துப்படி, தேர்வு குழு மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை சன்சத் மகா ரத்னா விருதுக்கு பரிந்துரைத்துள்ளது.
  • 16வது மக்களவையின் செயல்திறன் தரத்தின் அடிப்படையில் இந்த மதிப்புமிக்க விருது வழங்கப்படுள்ளது. இந்த விருது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்படுகிறது. 
  • 17ம் மக்களவையின் உறுப்பினர்களின் செயல் திறன் அடிப்படையில், சன்சத் ரத்னா விருது 2020 பெற 8 மக்களவை உறுப்பினர்களும், 2 மாநிலங்களவை உறுப்பினர்களும், ஒரு நாடாளுமன்ற நிலைகுழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • 2020-ம் ஆண்டுக்கான சன்சத் ரத்னா விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட எம்.பி.க்களின் பட்டியலை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் வெளியிட்டார்.
  • இந்த தேர்வு குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான என்.கே. பிரேம சந்திரன் (கேரளா) மற்றும் ஸ்ரீ ரங் அப்பா பார்னே (மகாராஷ்ட்ரா) ஆகியோரும் உள்ளனர். மூவரும் ஏற்கெனவே நாடாளுமன்றப் பணிப் பங்களிப்பைப் போற்றத்தக்க வகையில் வழங்கி கடந்த மக்களவையில் சன்சத் ரத்னா விருதுகள் பெற்று உயர்ந்தவர்கள் என்பது நினைவு கூறத்தக்கது.
சன்சத் மகா ரத்னா விருதுகள்
  1. பார்த்ருஹரி மஹ்தாப் (பி.ஜே.டி, கட்டாக், ஒடிசா)
  2. சுப்ரியா சூலே (என்.சி.பி, பாரமதி, மகாராஷ்டிரா)
  3. ஷ்ரீ ரங் அப்பா பார்னே (சிவசேனா, மாவல், மஹராஷ்டிரா)
  • ஆகிய மூவருக்கும் 16- வது மக்களவையில் தொடர்ச்சியான தரமான செயல்திறனுக்காக ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுரை வழங்கப்படும் 'சன்சத் மகா ரத்னா' விருது வழங்கப்படுகிறது. .
நிலைக்குழு
  • வேளாண்மை துறை தொடர்பான நிலைக்குழுவுக்கு சன்சத் ரத்னா விருது 2020 வழங்கப்படுகிறது. இந்த நிலைக்குழு நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையிலும் மற்றும் இந்த குழு நடத்திய அமர்வுகளின் அடிப்படையிலும் இந்த குழு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பி சி காடிகவுடர் (பாஜக, பாகல்கோட் கர்நாடகா) இந்த குழுவின் தலைவராக உள்ளார்.
மக்களவை
  • 17 ஆம் ஆண்டு மக்களவையின் முதல் ஆண்டின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு எட்டு மக்களவை உறுப்பினர்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் சன்சத் ரத்னா விருதுகள் 2020 ஐப் பெறுவார்கள்.
  • சுப்ரியா சுலே (என்.சி.பி, பாரமதி, மகாராஷ்டிரா) 17 வது மக்களவையின் முதல் ஆண்டில் விவாதங்கள், கேள்விகள் மற்றும் தனியார் மசோதாக்களில் தனது ஒட்டுமொத்த செயல்திறனுக்காக சன்சத் ரத்னா 2020 விருதைப் பெறுகிறார்.
  • டாக்டர் ஹீனா கேவிட் (பி.ஜே.பி, நந்தூர்பார் , மகாராஷ்டிரா ) பெண் உறுப்பினர்களில் சிறந்த பணியாற்றியதற்கான சன்சத் ரத்னா விருதினை பெறுகிறார்.
  • டாக்டர் அமோல் ராம்சிங் கோலி (தேசியவாத காங்கிரஸ், ஷிர்பூர், மகாராஷ்டிரா) மற்றும் டாக்டர் சுபாஷ் ராமராவ் பாம்லே (பாஜக, தூலே,மகாராஷ்டிர ) ஆகியோர் முதல்முறை உறுப்பினர்கள் மற்றும் அதிக கேள்விகள் பிரிவில் சன்சத் ரத்னா விருதுகள் பெறுகிறார்கள்.
  • இவர்களை தவிர சசி தரூர் (காங்கிரஸ், திருவனந்தபுரம், கேரளா), நிஷிகாந்த் துபே (பாஜக, கோடா, ஜார்கண்ட்), அஜய் மிஸ்ரா (பாஜக, கேரி, உத்தரப்பிரதேசம்) மற்றும் ராம் மோகன் நாயுடு (தெலுங்கு தேசம், ஸ்ரீகாகுளம், ஆந்திரா) ஆகியோர் ஒட்டுமொத்த தரமான செயல்திறன் மற்றும் தனிப்பட்ட முயற்சிகளுக்காக சன்சத் ரத்னா சிறப்பு விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
மாநிலங்களவை
  • விஷம்பர் பிரசாத் நிஷாந்த் (உ.பி. சமாஜ்வாதி கட்சி), மற்றும் சாயா வர்மா (சத்தீஸ்கர், காங்கிரஸ்) ஆகியோர் மாநிலங்களவையில் கடந்த ஓராண்டில் ஆற்றிய பல்முனைத் திறன்களுகாக சன்சத் ரத்னா விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Important point :

 1. சீனா கடைசியாக பீடோ சேட்டிலைட் சிஸ்டத்தை ஏவியது

 2. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் புது தில்லியில் உயர் கல்வி நிறுவனங்களுக்கான யுக்டி 2.0 தளத்தை தொடங்கினார்

 3. ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் (ஏடிடி) சேர சீனா முடிவு செய்துள்ளது

 4. ராஜஸ்தான் அரசு ‘இந்திரா ரசோய் யோஜ்னா’ தொடங்க உள்ளது

 5. வாங்கும் திறன் சமநிலையில் இந்தியா 3 வது பெரிய பொருளாதாரமாக உள்ளது;  சீனா, யு.எஸ்

 6. செர்பியா தேர்தல்: நிலச்சரிவு வெற்றியை ஜனாதிபதி வுசிக் அறிவித்தார்

 7. ரூ.  அரசு நடத்தும் COVID மருத்துவமனைகளுக்கு 50,000 வென்டிலேட்டர்களை வழங்க PM PARES நிதியத்தால் 2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது

 8. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை UNRWA க்கு உறுதியளிக்கிறது

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel