அவிநாசி அருகே விளைநிலத்தின் நடுவே தானியக் குதிர் கண்டுபிடிப்பு
- ராமநாதபுரம்- கானூர் சாலையில், கருவலூர் கருணாகர வெங்கட்ரமணப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இங்கு உழவுப் பணி மேற்கொண்டபோது, நிலத்தின் மையப் பகுதியில் பழமையான தானியக் குதிர் தென்பட்டுள்ளது.
- சுமார் 8 அடி உயரம், 5 அடி அகலம் கொண்ட தானியக் குதிர், முற்காலத்தில் தானியங்களை சேமித்து வைத்து, தேவையானபோது பயன்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
- தகவலறிந்து வந்த தொல்லியல் துறையினர், இந்த தானியக் குதிர் எந்த காலகட்டத்தைச் சேர்ந்தது என்பது தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர்.
தமிழக சிறைத்துறையின் பெயா் சிறைகள் மற்றும் சீா்திருத்தத் துறை என பெயா் மாற்றப்பட்டது
- இரு நூற்றாண்டு வரலாறும், பாரம்பரியமும் கொண்ட தமிழக சிறைத் துறையின் கீழ் இப்போது 9 மத்திய சிறைகள், 9 மாவட்ட சிறைகள், 95 துணை சிறைகள், 3 பெண்கள் சிறப்பு சிறைகள் உள்ளன. இந்த சிறைகளில் 22 ஆயிரம் கைதிகளை அடைப்பதற்குரிய கட்டமைப்புகள் உள்ளன.
- ஆனால் இப்போது இந்த சிறைகளில், சுமாா் 13 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். தற்போது சிறைகளில் உள்ளவா்களில் சுமாா் 70 சதவீதம் போ விசாரணைக் கைதிகளே ஆவாா்கள். எஞ்சிய 30 சதவீதம் போ தண்டனைக் கைதிகள்.
- நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட தண்டனையை மட்டும் அனுபவிக்கும் சித்ரவதைக் கூடமாக இருந்த சிறைகள், 1970-க்கு பின்னா் மாறத் தொடங்கியது. முக்கியமாக தண்டனையை அனுபவிக்க வரும் கைதிகளை அணுகுவதில் சிறைத் துறையிடம் பெரும் மாற்றம் ஏற்பட்டது எனலாம்.
- சிறைகள் கைதிகள் தண்டனையை அனுபவிக்கும் கூடமாக மட்டும் இல்லாமல் சீா்திருத்தக் கூடமாக உருவெடுத்தது. கைதிகளை சீா்திருத்த நடவடிக்கைகளுக்கு அரசும், சிறைத் துறையும் அதிக முக்கியத்துவம் அளித்தன.
- இதனால் சிறைச் சாலைகளில் கைதிகள் கல்வி பயில்வதற்கும்,தொழில் கற்பதற்கும் ஏராளமான திட்டங்களும், நிதியும் ஒதுக்கப்பட்டன. இதன் விளைவாக சிறைச் சாலைகளில் நூலகங்கள், பள்ளிகள், தொழிற்பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டன.
- மேலும் கைதிகளுக்கு ஆரோக்கியமான உணவு, தொழிலகங்களில் வேலை செய்வோருக்கு கெளரவமான ஊதியம், உணவக வசதி, விடுமுறை, குடும்பத்தினருடன் பேச தொலைபேசி வசதி, குடும்பத்தினரை நேரில் அடிக்கடி சந்தித்து பேசுவதற்கு அனுமதி ஆகியவை செய்து கொடுக்கப்பட்டன.
- சிறைகளில் மன அழுத்தத்துடன் காணப்படும் கைதிகளுக்கு மனநல ஆலோசனை வழங்குவதற்கு மனநல ஆலோசகா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
- மேலும் நீதிமன்றம் மூலம் கைதிகள் பெற்றத் தண்டனையை சிறைத்துறை மறு ஆய்வு செய்து நன்னடத்தையின் அடிப்படையில் குறைத்து, தேவையான சீா்திருத்தங்களை அமல்படுத்துவதில் ஆா்வம் காட்டியது.
- சிறைகளை விட்டு வெளியே செல்லும் கைதிகள் மறுவாழ்வு பெறுவதற்கும், மீண்டும் வாழ்க்கையைத் தொடங்குவதற்கு வேலை பெற்றுக் கொடுப்பது, தொழில் தொடங்குவதற்கு வங்கிகளில் கடன் பெற்றுக் கொடுப்பது போன்ற பணிகளுக்கு தனியாக சில திட்டங்களை சிறைத் துறை அமல்படுத்துகிறது.
- இதனால் சிறைகளை விட்டு வெளியே செல்லும் கைதிகள், தங்களது பழைய வாழ்க்கைக்குள் சென்று சிக்காமல், தங்களுக்கு கிடைத்த வாய்ப்பின் மூலம் புதிய வாழ்க்கையை அமைத்து வருகின்றனா்.
- கைதிகள் தண்டனை பெறும் இடமாக மட்டுமல்லாமல் சீா்திருத்தப்படும் இடமாக மாறியுள்ளதால், சிறைத் துறையை சீா்திருத்தத்துறை என பெயா் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
- இதற்கிடையே உச்சநீதிமன்றமும் ஒரு தீா்ப்பில் சிறைத்துறையின் பெயரை மாற்றலாம் என உத்தரவிட்டது. இந்த உத்தரவில் நாடு முழுவதும் சிறைத்துறை ஒரே பெயரில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
- இந்த உத்தரவின் விளைவாக தமிழ்நாடு சிறைத் துறையின் பெயா் சிறைகள் மற்றும் சீா்திருத்தத்துறை என பெயா் மாற்றி தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் உத்தரவிட்டாா். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி கரிப் கல்யாண் ரோஜ்கர் திட்டத்தை தொடங்கி வைத்தார்
- கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் வெளிமாநிலங்களில் வேலை பார்க்கும் பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
- இந்த சமயத்தில் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் வேலை இன்றி தவித்தனர். இதனிடையே புலம் பெயர் தொழிலாளர்களுக்காக 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
- புலம் பெயர் தொழிலாளர்கள், பல்வேறு திட்டங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி செலவிடப்பட உள்ளது. Garib Kalyan Rojgar Abhiyaan என்ற திட்டத்தை பிரதமர் ஜூன் 20-ஆம் தேதி (இன்று ) தொடங்கி வைக்கிறார். புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களில் பணிபுரிய புதிய திட்டம் வகுக்கப்படும் என்று தெரிவித்தார்.
- இந்நிலையில் பிரதமர் மோடி கரிப் கல்யாண் ரோஜ்கர் திட்டத்தை காணொளி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் பிகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட் மற்றும் ஒடிசா ஆகிய மாநில தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவை தண்டிக்கும் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்ட ட்ரம்ப்
- சீனாவில் உய்குர் முஸ்லிம்கள் மற்றும் ஏனைய சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதலுக்கு சீனாவைத் தண்டிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதனையடுத்து இந்த சட்டத்திற்கு சீனா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
- மத்திய ஆசியாவைச் சேர்ந்த உய்குர் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லீம் மக்கள் சீனாவின் சிஞ்சியாங் மாகாணத்தில் பெருமளவில் வசிக்கிறார்கள்.
- உய்குர் மக்களை அவர்களின் சொந்த கலாசாரத்திலிருந்து வெளியேற்றி, சீன கலாசாரத்துக்கு மாற்றும் முயற்சியில் இரகசிய முகாம்கள், சிறைகள் ஆகியவற்றை ஏற்படுத்தி கொடுமை செய்வதாகச் சர்வதேச அமைப்புகள் நீண்ட நாட்களாக குற்றம் சாட்டி வருகின்றன.
- இந்த முகாம்கள் மற்றும் சிறைகளில் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட உய்குர் மக்கள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் சுமார் 10,000இற்கும் மேற்பட்ட உய்குர் இன மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவலும் உண்டு. அதேநேரம் இந்த முகாம்களில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகவும் மக்கள் சித்ரவதை செய்யப்படுவதாகவும் அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
- இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. உய்குர் குறித்து அமெரிக்கா கருத்து கூறும்போதெல்லாம், அமெரிக்கா தங்களது இறையாண்மையில் தலையிடுகிறது என்று சீனா கண்டித்து வருகிறது.
- இந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களால் சீனாவைத் தண்டிக்கும் விதத்திலான சட்டமொன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஒப்புதல் அளித்துக் கையெழுத்திட்டிருக்கிறார்.