- யோகாவிற்கு மதம், மொழி, நாடு என எந்த பேதமும் இல்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். யோகா தினத்தை சர்வதேச தினமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. சபைக்கு வேண்டுகோள் விடுத்தார்.
- அதை ஏற்றுக்கொண்ட ஐ.நா.சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஜூன் மாதம் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- கரோனா பெருந்தொற்று சூழலில், பொது இடங்களில் பலர் ஒன்று சேர முடியாத நிலையில், 'வீட்டில் யோகா- குடும்பத்தாருடன் யோகா' என்பதே இந்த 2020ஆம் ஆண்டின் கொண்டாட்ட முறையாகி உள்ளது.
- உங்கள் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக யோகாவை பழகுங்கள். யோகாவிற்கு மதம், மொழி, நாடு என எந்த பேதமும் இல்லை. கொரோனாவை ஒழிக்க யோகா ஒரு சிறந்த வழிமுறையாக திகழ்கிறது. யோகா செய்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- மன உறுதி மற்றும் நேர்மறை எண்ணங்களுக்கு வழிவகுக்கிறது. உடல் வலிமை மட்டுமின்றி மனதை சமநிலைப்படுத்தவும் யோகா உதவும். வைரசுடன் போராட யோகா உதவும். யோகாவின் பலனை உலகம் தற்போது உணர்ந்துள்ளது.
- யோகா ஒரு ஆரோக்கியமான கிரகத்திற்கான நமது தேடலை மேம்படுத்துகிறது. இது ஒற்றுமைக்கான சக்தியாக உருவெடுத்து மனிதகுலத்தின் பிணைப்பை ஆழப்படுத்துகிறது. இது பாகுபாடு காட்டாது, அது இனம், நிறம், பாலினம், நம்பிக்கை மற்றும் வம்சாவளியைத் தாண்டியது.
- இதற்கிடையே, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாநில ஆளுநர்கள், மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், ராணுவ வீரர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் தங்களது இடத்தில் யோகா செய்து பயிற்சி பெற்றனர்.
சர்வதேச யோகா தினம் / INTERNATIONAL YOGA DAY
June 21, 2020
0
Tags