Sunday, 21 June 2020

CURRENT AFFAIRS -தமிழக தொல்லியல் துறை

கீழ்பென்னாத்தூர் அடுத்த நீலந்தாங்கல் கிராமத்தில் பழங்கால ஓவியம் கண்டுபிடிப்பு
 • கீழ்பென்னாத்தூர் அடுத்த நீலந்தாங்கல் கிராமத்தில் பழங்கால ஓவியம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பண்டைய கால ஓவியம் சொரட்டுக்கோள் மலை அடிவார பாறை பகுதியில், சிவப்பு மற்றும் வெள்ளை பூச்சுகளால் ஆன பழைய ஓவியங்கள் வரையப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். 
 • இங்கு கிடைத்த சிவப்புநிற ஓவியங்கள் புதியகற்கால பாணியை ஒத்துள்ளது. இந்த ஓவிய தொகுப்பிலேயே பெருங்கற்காலத்தைச் சேர்ந்த வெள்ளை நிற பூச்சுகளால் ஆன ஒவியங்களும் உள்ளன.
 • அதில், விலங்குகளை வேட்டையாடும் உருவம், ஆயுதம் வைத்துள்ள வேட்டையாடும் மனிதன் உள்ளிட்ட பல ஓவியங்களும், கோலம் மற்றும் எழுத்துக்களைப் போன்ற பிற்கால ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன. 
 • வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த பல ஓவியங்கள் இப்பகுதியில் கிடைத்துவருகின்றன. செத்தவரை, பன்னியூர், வேட்டவலம் போன்ற புகழ்பெற்ற ஓவியங்கள் உள்ள பகுதிகளின் வரிசையில் நீலந்தாங்கல் ஒவியமும் தொல்லியல் முக்கியத்துவம் பெறுகின்றது. 
 • இது போன்ற ஓவியங்களை பாதுகாத்து, அடுத்து வரும் தலைமுறைகள் அறியும்படி செய்ய வேண்டும்.
கீழடி 6ம் கட்ட அகழாய்வு குழியில் நெருப்பு பயன்படுத்திய அமைப்பு கண்டுபிடிப்பு:
 • கீழடி 6ம் கட்ட அகழாய்வுப் பணிகள் பிப்ரவரி 19ல் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகின்றன. ஏற்கனவே பானைகள், செங்கல் கட்டடப் பகுதி, விலங்கின் எழும்புக்கூடுகள் கண்டுபிடிக்கபட்ட நிலையில், உலை உள்ள குழி அருகே நெருப்பு பயன்படுத்திய அமைப்பு கண்டுபிடிக்கபட்டது.
 • 13அடி நீளத்தில் 10அடி ஆழமான குழியில் நெருப்பு பயன்படுத்திய அமைப்பு கண்டுபிடிக்கபட்டுள்ளது. அதே குழி அருகே கறுப்புக் கலரில் சாம்பல் துகள்கள் அமைப்பு உள்ளது.
 • ஏற்கனவே கீழடியில் நடைபெற்ற பல ஆய்வுகளில் அது தொழிற் நகரமாக இருந்ததற்கான சான்றாக பல அம்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது நெருப்பு பயன்படுத்திய அமைப்பு மூலம் இரும்பு, கண்ணாடி, எஃக்கு போன்றவற்றைத் தயாரிக்க இது பயன்பட்டிருக்காலம் என தெரியவருகிறது.
 • தொடர்ந்து கீழடி பகுதிகளில் தொழிற் சம்பந்தமாக பொருட்கள் மற்றும் அமைப்புகள் தெரிய வருவதால் 2,600 ஆண்டுக்கு முன்னால் பண்டை தமிழர்கள் தொழிற்சாலை சார்ந்து இயங்கிவந்துள்ளதாக ஆய்வுகளில் தொடர்ந்து நிரூபணம் ஆகி வருகின்றன.
கீழடி ஆய்வு கண்டுபிடிப்புகள் 24 மொழிகளில் நூலாக வெளியீடு; உலகெங்கும் விநியோகம்
 • சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நடைபெற்று வரும் 43வது புத்தகக் காட்சியில் 750க்கும் அதிகமான அரங்குகளுடன் 2 கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் இடம்பிடித்துள்ளன. தொல்லியல் துறை சார்பில் தொல்பொருள் கண்காட்சி ஒன்று இங்குள்ள அரங்கில் அமைக்கப்பட்டுள்ளது. 
 • கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டும் செயற்கை மாதிரிகளாலும் கீழடியில் அகழாய்வு செய்யப்பட்ட இடம் போன்றே தத்ரூபமாக அமைக் கப்பட்டுள்ளது இந்த அரங்கு. 
 • திமில் உள்ள காளைகளின் எழும்புத்துண்டுகள், 2,600 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட செங்கற்கள், மண்பாண்டங்களில் தமிழ் - பிராமி எழுத்துகளால் ஆன கீறல்கள், மணி வகைகள், வட்டசில்லுகள் என அரிய பழம்பொருட்கள் பலவும் கண்ணாடிப் பேழைக்குள் வைத்து மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தபட்டுள்ளன.
 • இந்நிலையில், தமிழ்நாடு தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரன் ஐஏஎஸ் செய்தியாளர்களிடம் கூறும்போது கீழடி ஆய்வு குறித்த அறிக்கை தமிழ், ஆங்கிலம் உள்பட 24 மொழிகளில் புத்தகமாக வெளிவந்துள்ளது என்றார். அவற்றை உலகம் முழுவதும் உள்ள முன்னணி நூலகங்களுக்குக் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 • தமிழக தொல்லியல் துறையின் பதிப்பான "கீழடி - வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்" என்னும் நூல் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மாண்புமிகு தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறையின் அமைச்சர் திரு. க. பாண்டியராஜன் அவர்களால் வெளியிடப்பட்டது.
 • தமிழக தொல்லியல் துறையின் மேம்படுத்தப்பட்ட இணையதள வெளியீடு மாண்புமிகு தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறையின் அமைச்சர் திரு. க. பாண்டியராஜன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது
 • புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னம் -ஆண்டி மலை முழுவதும்:விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர் வட்டம், சோழவாண்டிபுரம் கிராமம் ஆண்டி மலையில் அமைந்துள்ள சமணர் சிற்பங்கள், படுக்கைகள் மற்றும் 10 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டுகள் (ஆண்டி மலை முழுவதையும்) துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அரசாணை (நிலை) எண்.131, சுற்றுலா, பண்பாடு (ம) அறநிலையங்கள் (அதொ2) துறை, நாள் 19.05.2017-ன்படி அரசால் அறிவிக்கப்பட்டு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
சிவகளை அகழாய்வு 
 • தூத்துக்குடிக்கு அருகில் உள்ள ஆதிச்சநல்லூரில் 6 ஆம் கட்ட அகழாய்வானது தொடங்கியுள்ளது. 
 • மேலும் இது “பண்டையத் தமிழ் நாகரிகத்தின் தொட்டில்” என்று அழைக்கப் படுகின்றது. 
 • தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் நகருக்கு அருகில் உள்ள சிவகளையில் முதுமக்கள் தாழி போன்ற பல்வேறு பண்டைய காலப் பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.
அகரம் அகழாய்வு :
 • தமிழ்நாடு தொல்லியல் துறையைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர்கள் கீழடி அகழாய்வுத் தொகுதியின் ஒரு பகுதியான அகரம் அகழாய்வின் போது ஒரு தங்க நாணயத்தைக் கண்டறிந்துள்ளனர். 
 • கி.பி. 17வது நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நாணயமானது “வீர ராயன் நாணயம்” என்று அழைக்கப் படுகின்றது. 
 • இதற்கு முன்பு தஞ்சாவூரில் பல்வேறு வகையான “வீர ராயன் நாணயங்கள்” கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
5 மணிமண்டபங்கள் (நினைவு மண்டபங்கள்) 
 • தமிழ்நாடு மாநில முதல்வரான எடப்பாடி கே பழனிசாமி தலைவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக வேண்டி 5 மணி மண்டபங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 
 • அரசர் பெரும்பிடுகு முத்தரையர், நீதிக் கட்சித் தலைவர் A.T. பன்னீர் செல்வம், தமிழ்த் திரையுலக நட்சத்திரமான MKT தியாகராஜ பாகவதர் ஆகியோரது நினைவு மண்டபங்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ள K. அபிஷேகபுரத்தில் அமைய இருக்கின்றது. 
 • கவிஞர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் நினைவு மண்டபம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளையில் அமைக்கப்பட இருக்கின்றது. 
 • அல்லால இளைய நாயக்கர் மணி மண்டபம் நாமக்கல் மாவட்டத்திற்கு அருகில் உள்ள ஜேடர்பாளையத்தில் அமைக்கப்பட இருக்கின்றது.

TNPSCSHOUTERS

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a comment