- மே 4ஆம் தேதியை துன்புறுத்தலுக்கு எதிரான உலக தினம். அதனை அனுசரிக்கும் விதமாக அனைவரும் இளஞ்சிவப்பு மேல் சட்டை அணிவது வழக்கம். அத்தகைய வழக்கம் தொடங்கியது கனடாவில்.
- கனடாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது நோவா ஸ்கோஷியா(Nova Scotia) மாநிலம். Chuck McNeill எனும் 9ஆம் வகுப்பு மாணவன் அங்கு 2007ஆம் ஆண்டில், பள்ளி தொடங்கும் முதல் நாளில் இளஞ்சிவப்பு வண்ண மேல்சட்டை அணிந்து சென்றான்.
- அதனாலேயே துன்புறுத்தலுக்கு ஆளானான். அதனையடுத்து, அவனது சக மாணவர்கள் டேவிட் ஷெஃபர்ட்(David Shepard), ட்ராவிஸ் ப்ரைஸ்(Travis Price) இருவருக்கும் ஒரு யோசனை தோன்றியது.
- 50 இளஞ்சிவப்பு வண்ண T-சட்டைகளை வாங்கி நண்பர்களுக்கு வழங்கினர். மறுநாள் அவற்றை அணிந்துவரும்படி கேட்டுக்கொண்டனர்.
- தகவல் அறிந்த வேறு சிலரும் தங்களிடமிருந்த இளஞ்சிவப்பு வண்ண ஆடைகளை அணிந்து மறுநாள் பள்ளிக்கு வந்தனர். அது கனடா முழுவதும் துன்புறுத்தலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
- கனடா உள்பட, உலகில் வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு நாளில் அதை அனுசரிக்கின்றன. ஐக்கிய நாட்டு நிறுவனம் 2012இல் மே 4ஆம் தேதியை துன்புறுத்தலுக்கு எதிரான தினமாக அறிவித்தது.
துன்புறுத்தலுக்கு எதிரான உலக தினம் / World Day Against Persecution
May 05, 2020
0
Tags