Type Here to Get Search Results !

5th MAY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

ஜூன் மாதமும் ரேஷன் பொருட்கள் இலவசம் : தமிழக முதல்வர் அறிவிப்பு
 • தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தலைநகர் சென்னையில், கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. 
 • தமிழகத்தில் யாரும் பட்டினியால் வாடவில்லை என்ற நிலையை அரசு உருவாக்கி இருக்கிறது. தொழிலாளர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளையும் செய்து இருக்கிறோம். சுமார் 36 லட்சம் பேருக்கு கருணைத் தொகை கொடுக்கப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கு விலையில்லா அரிசி, பருப்பு, சர்க்கரை கொடுக்கப்பட்டு இருக்கிறது.
 • அனைத்து அரிசி வாங்குகின்ற ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு இருக்கிறது. விலையில்லா அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் கொடுக்கப்படுகிறது. ஏப்ரல் மாதம் வழங்கப்பட்டது. இந்த மாதமும் (மே) மாதமும் வழங்கப்படுகிறது. தொடர்ந்து ஜூன் மாதமும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.
'இ-நாம்' வேளாண் திட்டம் 200 மண்டிகள் இணைந்தன
 • கடந்த 2016ல், நாடு முழுதும், 21 மண்டிகள் (சந்தைகள்), இதில், இணைந்தன.மார்ச் 25ல் ஊரடங்கு துவங்கியதால், விவசாயிகளால், வேளாண் விளைபொருட்களை விற்பனைக்கூடங்கள் மற்றும் சந்தைகளுக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. 
 • விவசாயிகள் பலர் 'இ நாம்' மூலம் தங்கள் விளைபொருட்கள் விற்பது அதிகரித்தது.வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் 27 மண்டிகள் உட்பட நாடு முழுதும், ஊரடங்கு காலத்தில், 200 மண்டிகள், 'இ-நாம்' நடைமுறையில் இணைந்தன. 
 • இதன் மூலம், இதுவரை 785 மண்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த மாதத்திற்குள், இதை ஆயிரம் மண்டிகளாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
 • 'ஒரே நாடு - ஒரே சந்தை' என்ற குறிக்கோளை 'இ-நாம்' செம்மையாக்குகிறது. விளைபொருளுக்கு, நாட்டில் எந்த இடத்தில் கூடுதல் விலை கிடைக்கிறதோ, அங்கு விவசாயிகள் விற்க முடிகிறது. 
 • இதுவரை 1.66 கோடி விவசாயிகளும், 1.28 லட்சம் வர்த்தகர்களும், ஆயிரம் வேளாண் உற்பத்தியாளர் சங்கத்தினரும், இதில் இணைந்துள்ளனர்.இந்தியாவிலேயே முதல் மாநிலம் மே 29ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு தெலுங்கானா அரசு அதிரடி
 • மத்திய அரசு மே 17ஆம் தேதி வரை மட்டுமே ஊரடங்கு உத்தரவை நீடித்த நிலையில், தெலுங்கானா மாநில அரசு மே 29-ஆம் தேதி வரை தங்கள் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
 • தெலுங்கானாவில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி புதிதாக 11 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் மூலம் அங்கு மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,096 என்ற அளவில் உள்ளது. இருப்பினும் ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளது அந்த மாநில அரசு.
வட கொரிய அதிபருக்கு ரஷியா விருது
 • 1939-ஆம் ஆண்டு தொடங்கிய இரண்டாம் உலகப் போா் 1945-ஆம் ஆண்டு நிறைவடைந்தது. போா் நிறைவடைந்ததன் 75-ஆம் ஆண்டையொட்டி மே 9-ஆம் தேதி ரஷியத் தலைநகா் மாஸ்கோவில் சிறப்பு அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக அந்த அணிவகுப்பு ஒத்திவைக்கப்பட்டது.
 • இந்தச் சூழலில், இரண்டாம் உலகப்போரின்போது வட கொரியப் பகுதியில் போரிட்டு உயிரிழந்த ரஷிய வீரா்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் செயல்பட்டதற்காக அந்நாட்டு அதிபா் கிம் ஜோங் உன்னுக்கு ரஷியா சாா்பில் விருது வழங்கப்பட்டது. அந்த விருது வழங்கும் விழா வட கொரியத் தலைநகா் பியாங்யாங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 • அந்த விழாவில் வட கொரிய அதிபா் கிம் ஜோங் உன் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் ரி சாங் குவான் அந்த விருதைப் பெற்றுக் கொண்டாா். வட கொரியாவுக்கான ரஷிய தூதா் அலெக்ஸாண்டா் மாத்செகோரா அந்த விருதை வழங்கினாா்.
ஜம்மு-காஷ்மீா் செய்தி புகைப்பட கலைஞா்கள் மூவருக்கு 'புலிட்ஸா்' விருது
 • ஜம்மு-காஷ்மீரைச் சோந்த செய்தி புகைப்படக் கலைஞா்கள் மூவருக்கு 2020-ஆம் ஆண்டுக்கான 'புலிட்ஸா்' விருது வழங்கப்பட்டுள்ளது. சான்னி ஆனந்த், முக்தாா் கான், தாா் யாசின் ஆகிய அந்த மூவரும் 'அசோஸியேட்டட் பிரஸ்' செய்தி நிறுவனத்தின் புகைப்படக் கலைஞா்களாக பணியாற்றி வருகின்றனா்.
 • கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு காலத்தின்போது கள நிலவரத்தை பிரதிபலிக்கக் கூடிய வகையிலான சிறந்த புகைப்படங்களை எடுத்ததற்காக அவா்கள் புலிட்சா் விருது மூலம் கௌரவிக்கப்பட்டுள்ளனா்.
 • இதழியல், கலை, புனைகதை, இசை உள்ளிட்ட துறைகளின் பிரிவுகளில் சிறப்பாகப் பணியாற்றுவோருக்காக 21 பிரிவுகளில் கடந்த 1917-ஆம் ஆண்டு முதல் புலிட்ஸா் விருது வழங்கப்பட்டு வருகிறது. 
 • அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் இந்த விருதை பெறுவோருக்கு சான்றிதழும், சுமாா் ரூ.11.35 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel