- அணி சேரா இயக்கம் என்பது எந்தவொரு அதிகார மையத்தின் சார்பாகவோ எதிராகவோ அணிசேராத நாடுகளின் குழுமமாகும். இதில் 120 நாடுகள் உறுப்பினர்களாகவும் 17 நாடுகள் பார்வையாளர்களாகவும் உள்ளனர்.
- இந்த இயக்கம் 1961ம ஆண்டு பெல்கிரேட்டில் உருவானது. பனிப்போரில் ஈடுபட்டிருந்த மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய அதிகார மையங்களுக்கு இடையே நடுநிலையில் வளரும் நாடுகள் செல்லவேண்டும் என்பதே இதன் மையக் கருத்தாக இருந்தது.
- இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவிகேற்றப்பின், 2016-ம் வெனிசுலாவில் நடந்த அணிசேரா நாடுகளின் பட்டியலில் கலந்து கொள்ளாமல் முதல்முறையாக தவிர்த்தார்.
- தொடர்ந்து, 18வது அணி சேரா நாடுகளின் மாநாடு கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்றபோதும் மோடி பங்கேற்கவில்லை. இந்த மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு எதிராக உள்ளதாக காரணம் கூறி, மோடி இந்த மாநாடுகளை தவிர்த்தார்.
- இந்த நிலையில், அணி சேரா நாடுகளின் மாநாடு அஜர்பைசான் அதிபர் இல்ஹாம் அலிவேவ் தலைமை இன்று வீடியோகான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது. இதில் முதல் முறையாக மோடி பங்கேற்றார். கொரோனா பாதிப்புக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளதால், மோடி, இன்த கூட்டத்தில் பங்கேற்றார்.
பிரதமர் மோடியின் உரையின் பகுதிகள்
- மனிதநேயம் ஒரு பெரிய நெருக்கடியை எதிர்கொள்கிறது; COVID-19 ஐ சமாளிக்க NAM பங்களிக்க வேண்டும்.
- NAM உலகின் தார்மீகக் குரலாக இருந்து வருகிறது; அது அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
- இந்தியா 'உலகின் மருந்தகம்' என்று கருதப்படுகிறது; COVID-19 பாதிப்பை அடுத்து 120-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகளை அனுப்பியுள்ளோம். உலகம் COVID-19 உடன் போராடுகையில், சிலர் சமூகங்களையும் நாடுகளையும் பிளவுபடுத்த பயங்கரவாதம், போலி செய்திகள் மற்றும் மெய்நிகர் வீடியோக்கள் போன்ற வேறு சில கொடிய வைரஸ்களை பரப்புவதில் மும்முரமாக உள்ளனர்.
- COVID-19 தற்போதுள்ள சர்வதேச அமைப்பின் வரம்பைக் காட்டுகிறது. COVID க்குப் பிந்தைய உலகில், நேர்மை, சமத்துவம் மற்றும் மனிதநேயத்தின் அடிப்படையில் உலகமயமாக்கலின் புதிய வார்ப்புரு நமக்குத் தேவை. இன்றைய உலகின் அதிக பிரதிநிதிகளான சர்வதேச நிறுவனங்கள் நமக்குத் தேவை.