Tuesday, 5 May 2020

4th MAY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தில் சில்வர் லேக் ரூ.5,655 கோடி முதலீடு
 • ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் துணை நிறுவனமானகும். இந்த துணை நிறுவனத்தின் 9.99 சதவீத பங்குகளை ஃபேஸ்புக் ஏற்கெனவே கையகப்படுத்தியுள்ளது. இதற்காக ஃபேஸ்புக் நிறுவனம் அந்த துணை நிறுவனத்தில் 570 கோடி டாலரை (ரூ.43,574 கோடி) முதலீடு செய்துள்ளது.
 • இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான சில்வர் லேக் பார்ட்னர்ஸ், ஜியோ பிளாட்ஃபார்ம்ஸில் 1.15 சதவீத பங்குகளை கையகப்படுத்தும் வகையில் ரூ.5,655.75 கோடியை முதலீடு செய்ய ஒப்புதல் தெரிவித்துள்ளதாக ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
ஜப்பானில் மே இறுதிவரை அவசரநிலை நீட்டிப்பு பிரதமர் அறிவிப்பு
 • ஜப்பானில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே மாதம் இறுதிவரை ஊரடங்கை நீட்டித்து அந்த நாட்டு பிரதமர் ஷின்சே அபே உத்தரவிட்டுள்ளார்.
 • ஏப்ரல் 16ம் தேதி முதல் ஜப்பானில் 47 மாகாணங்களில் ஊரடங்கு நீட்டிக்கும் உத்தரவு வெளியானது. ஜப்பானில் கொரோனா வைரஸால் 14,877 பாதிக்கப்பட்டுள்ளனர். 487 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம், 3,981 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
 • ஜப்பானின் டோக்கியோ நகரில் வரும் ஜூலை 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட இருந்தது. ஆனால், கொரோனா பிரச்சினையால், அது ஒத்தி வைக்கப்பட்டது.
அணிசேரா நாடுகள் உச்சிமாநாடு 2020
 • அணி சேரா இயக்கம் என்பது எந்தவொரு அதிகார மையத்தின் சார்பாகவோ எதிராகவோ அணிசேராத நாடுகளின் குழுமமாகும். இதில் 120 நாடுகள் உறுப்பினர்களாகவும் 17 நாடுகள் பார்வையாளர்களாகவும் உள்ளனர்.
 • இந்த இயக்கம் 1961ம ஆண்டு பெல்கிரேட்டில் உருவானது. பனிப்போரில் ஈடுபட்டிருந்த மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய அதிகார மையங்களுக்கு இடையே நடுநிலையில் வளரும் நாடுகள் செல்லவேண்டும் என்பதே இதன் மையக் கருத்தாக இருந்தது.
 • இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவிகேற்றப்பின், 2016-ம் வெனிசுலாவில் நடந்த அணிசேரா நாடுகளின் பட்டியலில் கலந்து கொள்ளாமல் முதல்முறையாக தவிர்த்தார். 
 • தொடர்ந்து, 18வது அணி சேரா நாடுகளின் மாநாடு கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்றபோதும் மோடி பங்கேற்கவில்லை. இந்த மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு எதிராக உள்ளதாக காரணம் கூறி, மோடி இந்த மாநாடுகளை தவிர்த்தார்.
 • இந்த நிலையில், அணி சேரா நாடுகளின் மாநாடு அஜர்பைசான் அதிபர் இல்ஹாம் அலிவேவ் தலைமை இன்று வீடியோகான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது. இதில் முதல் முறையாக மோடி பங்கேற்றார். கொரோனா பாதிப்புக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளதால், மோடி, இன்த கூட்டத்தில் பங்கேற்றார்.பிரதமர் மோடியின் உரையின் பகுதிகள்
 • மனிதநேயம் ஒரு பெரிய நெருக்கடியை எதிர்கொள்கிறது; COVID-19 ஐ சமாளிக்க NAM பங்களிக்க வேண்டும்.
 • NAM உலகின் தார்மீகக் குரலாக இருந்து வருகிறது; அது அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
 • இந்தியா 'உலகின் மருந்தகம்' என்று கருதப்படுகிறது; COVID-19 பாதிப்பை அடுத்து 120-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகளை அனுப்பியுள்ளோம். உலகம் COVID-19 உடன் போராடுகையில், சிலர் சமூகங்களையும் நாடுகளையும் பிளவுபடுத்த பயங்கரவாதம், போலி செய்திகள் மற்றும் மெய்நிகர் வீடியோக்கள் போன்ற வேறு சில கொடிய வைரஸ்களை பரப்புவதில் மும்முரமாக உள்ளனர்.
 • COVID-19 தற்போதுள்ள சர்வதேச அமைப்பின் வரம்பைக் காட்டுகிறது. COVID க்குப் பிந்தைய உலகில், நேர்மை, சமத்துவம் மற்றும் மனிதநேயத்தின் அடிப்படையில் உலகமயமாக்கலின் புதிய வார்ப்புரு நமக்குத் தேவை. இன்றைய உலகின் அதிக பிரதிநிதிகளான சர்வதேச நிறுவனங்கள் நமக்குத் தேவை.
தீநுண்மி அழிப்புக்காக புறஊதா கதிர் கோபுரங்கள்: டிஆர்டிஓ உருவாக்கியது
 • கரோனா நோய்த்தொற்று பாதிப்பு அச்சம் அதிகம் உள்ள பகுதிகளில் தீநுண்மிகளை அழிக்கக் கூடிய வகையில் புறஊதா கதிர்களை வெளியிடும் வகையிலான கோபுரங்களை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கியுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 • 12 அடி நீளம், 12 அடி அகலம் கொண்ட ஒரு அறையில் இந்தக் கருவியைக் கொண்டு 10 நிமிடங்களில் தீநுண்மிகளை அழிக்க முடியும். மொத்தம் 400 சதுர அடி பரப்பு கொண்ட ஒரு அறையில் ஒன்றுக்கு மேற்பட்ட கருவிகளை வைக்கும்போது சுமார் 30 நிமிடங்களில் தீநுண்மிகளை அழிக்க இயலும்.
 • இந்தக் கிருமிநாசினி கோபுரத்தை தொலையுணர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி (ரிமோட் ஆக்ஸஸ்) "வைஃபை' தொடுப்பு மூலம் மடிக்கணினி, செல்லிடப்பேசி ஆகியவற்றைக் கொண்டு இயக்க இயலும். ஒரு கோபுரத்தில் 43 வாட் புறஊதாக கதிர் திறன் கொண்ட 6 மின்விளக்குகள் இடம்பெற்றிருக்கும்.
 • அவை 254 நானோமீட்டர் அலைநீள அளவுக்கு, 360 டிகிரி அளவில் ஒளிரக் கூடியது. "யுவி பிளாஸ்டர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கருவியை தில்லியில் இயங்கும் டிஆர்டிஓ-வின் முதன்மை ஆய்வகமான "லேசர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம்', குருகிராமைச் சேர்ந்த "நியூ ஏஜ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் அண்ட் மெடீரியல்ஸ்' நிறுவனத்தின் உதவியுடன் உருவாக்கியுள்ளது.
 • ரசாயன அடிப்படையிலான திரவங்களைக் கொண்டு தீநுண்மி அழிப்பு செய்ய முடியாத கணினி உள்ளிட்ட மின்னணு கருவிகள் பயன்படுத்தப்படும் ஆய்வகங்கள், அலுவலகங்கள் போன்ற இடங்களில் இந்தக் கருவி பயனுள்ளதாக இருக்கும்.
 • விமான நிலையங்கள், வர்த்தக வளாகங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், ஹோட்டல்கள், தொழிற்சாலைகள் என அதிக அளவு மக்கள் கூடும் பகுதிகளில் இந்தக் கருவியின் பயன்பாடு பலனளிக்கக் கூடியதாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

TNPSCSHOUTERS

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a comment