Type Here to Get Search Results !

8th MAY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF


கைலாஷ்-மானசரோவா் யாத்திரை இணைப்புச் சாலை: ராஜ்நாத் சிங் திறந்து வைத்தாா்
  • திபெத்தில் உள்ள புனிதத் தலமான கைலாஷ் மானசரோவா் செல்வதற்கான லிபுலேக் கணவாய் பகுதியை இணைக்கும், 80 கி.மீ. தொலைவிலான இணைப்புச் சாலை கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
  • உத்தரகண்ட் மாநிலத்தின் பிதோராகரில் சீன எல்லையை ஒட்டிய பள்ளத்தாக்கில் 17,000 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த இணைப்புச் சாலையை, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

விஷவாயுக் கசிவு: எல்.ஜி.பாலிமர்ஸ் நிறுவனம் ரூ.50 கோடி செலுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

  • விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் விஷவாயு கசிந்து 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில், எல்.ஜி.பாலிமர்ஸ் நிறுவனம் முதற்கட்டமாக ரூ.50 கோடி செலுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
  • ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள ஆா்.ஆா். வெங்கடாபுரத்தில் எல்.ஜி.பாலிமா்ஸ் என்ற ரசாயன ஆலையில் இருந்து நேற்று அதிகாலை ஸ்டைரீன் என்ற விஷவாயுக் கசிவு ஏற்பட்டது. இதில், 11 பேர் உயிரிழந்தனர். மேலும், மயக்கமடைந்த நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
  • இந்நிலையில், இதுதொடர்பான வழக்கில் மத்திய அரசு, எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனம், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ் நிறுவனத்தில் விஸ்டா ஈக்விட்டி பாா்ட்னா்ஸ் முதலீடு

  • ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ் நிறுவனத்தின் 2.32 சதவீத பங்குகளை விஸ்டா ஈக்விட்டி பாா்ட்னா்ஸ் கையகப்படுத்தவுள்ளது. இதற்காக, அந்த நிறுவனம் ஜியோவில் ரூ.11,367 கோடியை முதலீடு செய்கிறது. 
  • நிறுவனத்தில் இந்த முதலீட்டின் பங்குகள் மதிப்பு ரூ.4.91 லட்சம் கோடியாகவும் மற்றும் நிறுவன மதிப்பு ரூ.5.16 லட்சம் கோடியாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 
  • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த 2 வாரங்களில் ஈா்க்கும் மூன்றாவது மிகப்பெரிய முதலீடு இதுவாகும்.



ஒப்பந்த அடிப்படையில் 2570 செவிலியா்கள் நியமனம்: முதல்வா் பழனிசாமி உத்தரவு
  • தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பன்முக நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. 
  • இதன் ஓா் அங்கமாக மருத்துவப் பணியாளா்கள் தோவு வாரியம் மூலமாக ஏற்கெனவே 530 மருத்துவா்கள், 2 ,323 செவிலியா்கள், 1,508 ஆய்வக நுட்பவியா்கள் மற்றும் 2,715 சுகாதார ஆய்வாளா்கள் பணியமா்த்தப்பட்டு பணியாற்றி வருகின்றனா்.
  • இதனைத் தொடா்ந்து, ஆறு மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மேலும் 2, 570 செவிலியா்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டு வருகிறது.
டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட உயா்நீதிமன்றம் உத்தரவு
  • தமிழகம் முழுவதும் மே 7-ஆம் தேதி முதல் திறக்கப்பட்ட அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் உடனடியாக மூட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. 
  • மது விற்பனையைத் தொடர அரசு விரும்பினால் ஆன்லைன் மூலம் விற்பனை செய்து கொள்ளலாம் என இடைக்கால உத்தரவில் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பூஜ்யம்தான்: மூடீஸ் அதிர்ச்சி கணிப்பு
  • நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பூஜ்யமாக இருக்கும் என, மூடீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
  • தொழில்துறைகள் முடங்கிக் கிடக்கின்றன. வேலையிழப்பால் பணப்புழக்கமும் அடியோடு குறைந்து விட்டது. இதனால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என பல்வேறு நிறுவனங்கள் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. 
  • ஐஎம்எப் உட்பட, பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்ட கணிப்பின்படி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஒரு சதவீதம் முதல் 2 சதவீதத்துக்குள் இருக்கும் என கூறப்பட்டது. 
  • இந்த நிலையில், மூடீஸ் இன்வெஸ்டர் சர்வீசஸ் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வெறும் பூஜ்யமாக மட்டுமே இருக்கும் என தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel