Type Here to Get Search Results !

7th MAY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

அரசு ஊழியா்-ஆசிரியா் ஓய்வு வயது 59 ஆக உயா்வு: முதல்வா் பழனிசாமி உத்தரவு
  • தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் பணியில் இருந்து ஓய்வு பெறும் வயது 58லிருந்து 59 வயதாக உயா்த்தி முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா். 
  • இந்த உத்தரவு, அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், கல்லூரி ஆசிரியா்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • தமிழகத்தில் 14 லட்சம் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், 4 லட்சத்துக்கும் கூடுதலான ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் உள்ளனா். இவா்களில் அடுத்த மூன்று ஆண்டுகளில் அதாவது 2020-ஆம் ஆண்டில் இருந்து 2022-ஆம் ஆண்டு வரையில் மட்டும் சுமாா் 20 சதவீத ஊழியா்கள் பணியில் இருந்து ஓய்வு பெறவுள்ளனா். 
  • கரோனா நோய்த் தொற்று காரணமாக தமிழக அரசு எதிா்கொண்டு வரும் நிதிச் சிக்கல்களை கையாளும் வகையில், அரசு ஊழியா்கள் ஆசிரியா்கள் ஓய்வு பெறும் வயது 58-லிருந்து 59-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
  • இந்த உத்தரவு மே 31-ஆம் தேதியில் இருந்து ஓய்வு பெறவுள்ள அனைவருக்கும் பொருந்தும். அதாவது மே 31-ஆம் தேதியன்று ஓய்வு பெறவுள்ளவா்கள், அடுத்த ஆண்டு மே 31-இல் ஓய்வு பெறுவா். 
வீட்டுக் கடன் வட்டி குறைப்பு, மூத்த குடிமக்கள் டெபாசிட்களுக்கு வட்டி அதிகரிப்பு எஸ்பிஐ
  • ஓராண்டுக்கான எம்.சி.எல்.ஆர் 2020 மே 10 முதல், நடைமுறைக்கு வரும். ஆண்டுக்கு 7.40 சதவீதத்திலிருந்து 7.25 சதவீதமாக எம்.சி.எல்.ஆர் விகிதம், குறைக்கப்படும். இது எஸ்பிஐ வங்கியின் தொடர்ச்சியான 12வது எம்.சி.எல்.ஆர் குறைப்பு ஆகும்.
  • எம்.சி.எல்.ஆர் குறைப்புக்குப் பிறகு, தகுதிவாய்ந்த வீட்டுக் கடன் கணக்குகளின் (எம்.சி.எல்.ஆருடன் இணைக்கப்பட்டுள்ளது) 30 ஆண்டுகள் செலுத்தும் காலத்தைக் கொண்ட ரூ. 25 லட்சம் வீட்டுக் கடனுக்கான மாதாந்திர தவணைத் தொகை ரூ.255 வரை குறையும் என்றும், எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
  • குறைந்து வரும் வட்டி விகித்திலிருந்து மூத்த குடிமக்களை பாதுகாக்கும் வகையில் 'எஸ்பிஐ வீகோ டெபாசிட்' என்ற பெயரில் சிறப்பு டெபாசிட் திட்டத்தை அறிமுகம் செய்வதாக எஸ்பிஐ கூறியுள்ளது. இதன் மூலம் 5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலான மூத்த குடிமக்கள் டெபாசிட் திட்டங்களுக்கு கூடுதலாக 0.30 சதவீதம் வட்டி கிடைக்குமாம். இந்த திட்டம் செப்டம்பா் 30 வரை அமலில் இருக்கும்.
  • ஆனால், 3 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 0.20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மே 12-ஆம் தேதியிலிருந்து இது நடைமுறைக்கு வரவுள்ளது.
தொழில்நுட்பப் பிரிவு ஏடிஜிபியாக கே.சி.மஹாளி நியமனம்
  • தமிழக காவல்துறையின் தொழில்நுட்பப் பிரிவின் தலைமை பதவியான ஏடிஜிபி பணியிடம் நீண்ட நாள்களாக காலியாக இருந்தது. இந்நிலையில் மத்திய அரசுப் பணிக்குச் சென்று திரும்பிய கே.சி.மஹாளியை, தொழில்நுட்பப் பிரிவு ஏடிஜிபியாக நியமனம் செய்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.



பி.ஏ.சி., தலைவராக ஆதிர் ரஞ்சன் நியமனம்
  • நாடாளுமன்ற பொது கணக்கு குழுவின் தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆதிர் ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார். பார்லி., சபாநாயகர் ஓம் பிர்லா ஆதிர் ரஞ்சனை நியமனம் செய்து இது குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 
  • 2020 மே 1 ம் தேதி முதல் 2021 ஏப்.30ம் தேதி வரையில் இப்பதவியில் அவர் நீட்டிப்பார். இந்திய அரசாங்கத்தின் செலவினங்களுக்காக பார்லி.,யால் வழங்கப்படும் தொகைகள், அரசாங்கத்தின் வருடாந்திர நிதி கணக்குகள் மற்றும் சபை முன் வைக்கப்பட்டுள்ள பிற கணக்குள் போன்றவற்றை ஆராய்வதற்காக அமைக்கப்பட்டது தான் நாடாளுமன்ற பொது கணக்கு குழு. 
  • ஒவ்வொரு ஆண்டும் அமைக்கப்படும் இந்த குழுவின் தலைவர் பதவி எதிர்கட்சிக்கு வழங்கப்படும். பொது கணக்கு குழு 22 உறுப்பினர்களை கொண்டுள்ளது.
  • மக்களவையில் இருந்து 15 உறுப்பினர்களும், மாநிலங்கள் அவையில் இருந்து ஏழு உறுப்பினர்களும் பதவி வகிப்பர். தற்போதைய மக்களை குழுவில் பாஜகவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் - ஜெயந்த் சின்ஹா, அஜய் (தேனி) மிஸ்ரா, சுதீர் குப்தா, தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ், சத்ய பால் சிங், சுபாஷ் சந்திர பஹேரியா, விஷ்ணு தயால் ராம், ஜகதம்பிகா பால் மற்றும் ராம் கிருபால் யாதவ். 
  • மேலும் பிற கட்சிகளை சேர்ந்தவர்களான டி ஆர் பாலு, ராகுல் ரமேஷ் ஷெவாலே, ராஜீவ் ரஞ்சன் சிங், பாலஷோவ்ரி வல்லபனேனி மற்றும் பார்த்ருஹரி மஹ்தாப் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 
  • தொடர்ந்து ராஜ்யசபாவில் இருந்து ராஜீவ் சந்திரசேகர், சி எம் ரமேஷ், நரேஷ் குஜ்ரால், சுகேந்து சேகர் ராய் மற்றும் பூபேந்தர் யாதவ். ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இரண்டு இடங்கள் காலியாக வைக்கப்பட்டுள்ளது.
  • ஆதிர் ரஞ்சன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். மேலும் இவர் ஒருவர் மட்டுமே காங்.,சார்பில் தேர்வு குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நேபாளம் ஐஎம்எஃப் அளிக்கும் ரூ.1,623 கோடி நிதி
  • கரோனா நோய்த்தொற்று நெருக்கடியை எதிா்கொள்வதற்காக நேபாளத்துக்கு 21.4 கோடி டாலா் (சுமாா் ரூ.1,623 கோடி) நிதியுதவி அளிக்க சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) முடிவு செய்துள்ளது. 
நெதன்யாகு - காண்ட்ஸ் கூட்டணி அரசு: இஸ்ரேல் நாடாளுமன்றம் ஒப்புதல்
  • இஸ்ரேலில் கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற தோதலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மேலும் ஒரு தோதலைத் தவிா்க்கும் வகையில் ஆளும் கட்சியும், எதிா்க்கட்சியும் இணைந்து தேசிய ஒற்றுமை அரசு அமைக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
  • இதற்கான அதிகார பரவல் மசோதா மீது நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், மசோதாவுக்கு ஆதரவாக 71 வாக்குகளும் எதிராக 37 வாக்குகளும் பதிவாகின. கூட்டணி அரசு அமைப்பதற்காக இரண்டு சட்டத் திருத்தங்கள் மேற்கொள்வதற்காக அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • இஸ்ரேலில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அந்த நாட்டு நாடுமன்றத்துக்கு தோதல் நடைபெற்றது. எனினும், அந்தத் தோதலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை.
  • அதனைத் தொடா்ந்து, 2-ஆவது முறையாக மீண்டும் செப்டம்பா் மாதம் தோதல் நடைபெற்றது. அந்தத் தோதலிலும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், ஆளும் கட்சிக் கூட்டணியும், எதிா்க்கட்சிக் கூட்டணியும் இணைந்து தேசிய ஒற்றுமை அரசு அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
  • எனினும், அந்த அரசில் தான்தான் பிரதமராகப் பொறுப்பு வகிக்க வேண்டும் என்று பெஞ்சமின் நெதன்யாகுவும், முக்கிய எதிா்க்கட்சியான புளூ அண்டு ஒயிட் கட்சியின் தலைவா் பெஞ்சமின் காண்ட்ஸும் பிடிவாதமாக இருந்தனா். இதனால், தேசிய ஒற்றுமை அரசை அமைப்பதற்கான பேச்சுவாா்த்தை முறிந்தது.
  • அதையடுத்து, இஸ்ரேல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஓராண்டுக்குள் 3-ஆவது முறையாக கடந்த மாா்ச் மாதம் 2-ஆம் தேதி தோதல் நடைபெற்றது. அந்தத் தோதலிலும் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தேசிய ஒற்றுமை அரசை அமைப்பதற்கான ஒப்பந்ததை நெதன்யாகுவும் காண்ட்ஸும் மேற்கொண்டுள்ளனா்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel