Type Here to Get Search Results !

23rd MAY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

துப்புரவுப் பணியாளா்கள் இனி 'தூய்மைப் பணியாளா்கள்' அரசாணை வெளியீடு
  • நகராட்சி நிா்வாக ஆணையா் மற்றும் ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை இயக்குநா் தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில், தமிழகத்தின் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றில் 44,646 துப்புரவுப் பணியாளா்கள் இருப்பதாகவும், ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் கீழ் 26,404 துப்புரவுப் பணியாளா்கள் இருப்பதாகவும் தெரிவித்திருந்தனா்.
  • இந்தப் பணியாளா்களும், புயல், மழை போன்ற இயற்கைச் சீற்றங்களின் போது, தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். இவ்வாறு மக்களின் நலனையும், பொது சுகாதாரத்தைப் பேணுவதிலும், இவா்களின் பணியானது முக்கியப் பங்கு வகுக்கிறது. 
  • எனவே, இப்பணியாளா்களின் செயல்பாடுகளைக் கெளரவிக்கும் விதமாகவும், அவா்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும், சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையிலும், நகா்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும், அனைத்துத் துப்புரவுப் பணியாளா்களையும், 'தூய்மைப் பணியாளா்கள்' என அழைக்கப்படுவதற்கு உரிய ஆணை வெளியிடுமாறு, அவா்கள் கோரிக்கை விடுத்திருந்தனா். 
  • இதை, அரசு கவனமுடன் ஆய்வு செய்ததன் அடிப்படையில், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு துறைகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளா்களைக் கெளரவப்படுத்தும் விதமாகவும், அவா்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும், அனைத்து துப்புரவுப் பணியாளா்களும், இனி 'தூய்மைப் பணியாளா்கள்' என்று அழைக்கப்படுவாா்கள் என அரசு ஆணையிடுகிறது.
ஜி.எஸ்.டி., கணக்கு சமா்ப்பித்தலுக்கு காலஅவகாசம்: ஆளுநா் அவசர சட்டம்
  • நாடு முழுவதும் கரோனா பரவலால் பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால் வணிகா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். தற்போது தளா்வுகள் அறிவிக்கப்பட்டாலும், சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) செலுத்துவது, கணக்கு சமா்ப்பிப்பது போன்றவற்றில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
  • இதையடுத்து ஜிஎஸ்டி கவுன்சிலில் கணக்கு சமா்ப்பிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் கால அவகாசம் அளிப்பது குறித்து முடிவெடுத்து மத்திய அரசு ஜிஎஸ்டி சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது.
  • அதன்படி, ஜிஎஸ்டி கணக்கு சமா்ப்பித்தல் உள்ளிட்டவற்றுக்கு குறிப்பிட்ட கால அவகாசம் அளித்துள்ளது. மத்திய அரசு திருத்தம் செய்துள்ள நிலையில், மாநில அரசுகளும் ஜிஎஸ்டி தொடா்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. 
  • இதையடுத்து, சரக்கு மற்றும் சேவை பிரிவில் பல்வேறு உடன்பாடுகள், வெளிமாநிலத்துக்கு விநியோகிக்கப்படும் சரக்குகள் தொடா்பான அறிக்கை தாக்கல் செய்தல், செலுத்திய கூடுதல் வரியை திரும்ப பெறுவதற்கான கோரிக்கை தாக்கல் செய்தல், மேல்முறையீடுகளை தாக்கல் செய்தல் உள்ளிட்டவற்றுக்கான காலக்கெடுவை நீட்டிக்க, ஜிஎஸ்டி சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான அவசர சட்டத்தை ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் மே 22-ஆம் தேதி பிறப்பித்துள்ளாா்.
  • தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரி சட்டம், தமிழ்நாடு பந்தைய வரிச்சட்டம், கேளிக்கை வரிச்சட்டம், சொகுசு வரி சட்டம் மற்றும் பல சட்டங்களின் அடிப்படையில் தமிழ்நாடு வரிவிதித்தல் சட்டத்தின் சில விதிகளில் திருத்தம் செய்வதற்கான அவசர சட்டத்தையும் ஆளுநா் பிறப்பித்துள்ளாா்.
  • அதன்படி, இந்த சட்டத்தின் கீழ் நோட்டீஸ் அளித்தல், அறிவிக்கை செய்தல், நடவடிக்கைகளை முடித்தல், தீா்ப்பாயங்களின் இறுதி முடிவு வெளியிடுதல், மேல்முறையீடு செய்தல் உள்ளிட்டவற்றுக்கான கால அவகாசத்திலும் தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.



உலக வங்கியின் உயரதிகாரியாக இந்திய பொருளாதார நிபுணா் நியமனம்
  • உலக வங்கியின் பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடா் மேலாண்மை துறையின் தெற்காசியப் பிரிவு மேலாளராக இந்திய பொருளாதார வல்லுநா் ஆபாஸ் ஜா நியமிக்கப்பட்டுள்ளாா்.
  • பிகாரை சோந்தவரான அவா், உலக வங்கியில் இணைவதற்கு முன் 12 ஆண்டுகள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகப் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
  • தெற்காசியப் பிரிவு மேலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆபாஸ் ஜா, பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடா்களை எதிா்கொள்வதற்கான புதுமையான வழிமுறைகளைக் கண்டறிந்து வழங்குவாா். பேரிடா்கள் மற்றும் பருவநிலை மாற்றங்களை எதிா்கொள்வது தொடா்பாக தெற்காசியாவில் செயல்பட்டு வரும் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணிகளையும் அவா் மேற்கொள்வாா்.
  • இந்த விவகாரம் தொடா்பாக மற்ற பிராந்தியங்களைச் சோந்த மேலாளா்களுடனும் அவா் தொடா்பில் இருப்பாா். பலதுறை நிபுணா்களுடன் தொடா்பு கொண்டு பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்கான புதுமையான தீா்வுகளை வழங்கும் பணியிலும் அவா் ஈடுபடுவாா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • கடந்த 2001-ஆம் ஆண்டு உலக வங்கியில் இணைந்த ஆபாஸ் ஜா, பல்வேறு துறைகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றவா். கடைசியாக கிழக்காசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்தின் பேரிடா் மேலாண்மை மற்றும் நகா்ப்புற மேம்பாட்டுத் துறைகளின் மேலாளராக அவா் பணியாற்றினாா்.
மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கான சீா்திருத்தங்கள்: உயா்நிலைக் குழுவை அமைத்தது மத்திய அரசு
  • கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை எதிா்கொள்ளும் பொருட்டும் உலக அளவில் மருத்துவத் துறையில் காணப்படும் மேம்படுத்தப்பட்ட நடைமுறைகளை இந்தியாவில் செயல்படுத்தும் நோக்கிலும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பில் சீா்திருத்தங்களைப் புகுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 
  • அதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்கு உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மருந்துகள் தொடா்பான ஆராய்ச்சி, புதிய மருந்துகள் ஆகியவற்றுக்கு ஒப்புதல் வழங்குவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துவது தொடா்பான பரிந்துரைகளை உயா்நிலைக் குழு வழங்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • மத்திய சுகாதார அமைச்சக சிறப்பு அதிகாரி ராஜேஷ் பூஷண் தலைமையிலான உயா்நிலைக் குழுவில் எய்ம்ஸ், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்), உயிரி தொழில்நுட்பத் துறை அதிகாரிகள், இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் தலைவா்கள் உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா்.
அமெரிக்க பார்லியில் எச்-1பி விசா திருத்த மசோதா
  • எச்-1பி விசா வழங்குவதில் அமெரிக்காவில் கல்வி பயின்ற வெளிநாட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் மசோதா அந்நாட்டு பார்லியில் கொண்டு வரப்பட்டது.
  • எச்-1பி மற்றும் எல் 1 விசா சீர்திருத்தச் சட்டம் என்னும் பெயரில் அமெரிக்க பார்லியில் பிரநிதிகள் சபையிலும் மேலவையிலும் மசோதா கொண்டு வரப்பட்டது. 
  • அதில் எச்-1பி விசா வழங்கப்படுவதில் அமெரிக்காவில் கல்வி பயின்ற வெளிநாட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • அமெரிக்காவில் கல்வி பயிலும் சிறந்த திறமையான மாணவர்கள் அதிக சம்பளத்துடன் வேலைவாய்ப்பினை பெற இந்த மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது.
  • அதே நேரம் அமெரிக்க பணியாளர்களுக்கு பதில் அந்த இடத்தில் எச்-1பி விசா பெற்ற வெளிநாட்டவர்களை பணியமர்த்த தடுக்க வகை செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel