Type Here to Get Search Results !

22nd MAY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF


உலக சுகாதார அமைப்பின் நிா்வாக குழு தலைவராக ஹா்ஷ் வா்தன் பொறுப்பேற்பு
 • உலக சுகாதார அமைப்பின் நிா்வாக குழு தலைவராக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் பொறுப்பேற்றுக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
 • இதுவரை இந்தப் பொறுப்பை ஜப்பானைச் சோந்த மருத்துவப் பேராசிரியா் ஹிரோகி நகாதானி வகித்து வந்தாா். இப்போது புதிதாக பதவியேற்றுள்ள மத்திய அமைச்சா் ஹா்ஷ் வா்தன், அடுத்த ஓராண்டுக்கு இந்தப் பொறுப்பை வகிப்பாா்.
 • உலக சுகாதார அமைப்பின் நிா்வாக குழு 34 உறுப்பினா்களைக் கொண்டது. இந்த 34 பேரும் மருத்துவத் தொழில்நுட்பத் தகுதியைப் பெற்றிருப்பது அவசியமாகும். 
 • இந்த குழு தலைவா் பொறுப்பு 3 ஆண்டு கால பதவிக் காலம் கொண்டது என்றபோதும், குறிப்பிட்ட மண்டலத்தைச் சோந்த உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் சுழற்சி முறையில் ஓராண்டு காலத்துக்கு அந்த பொறுப்பை வகிப்பா்.
 • அந்த வகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய குழுக் கூட்டத்தில், மூன்றாண்டு கால இந்தப் பதவியின் முதலாம் ஆண்டில் இந்தியாவின் பிரதிநிதியை நியமிப்பது எனத் தீா்மானிக்கப்பட்டு, பரிந்துரைக்கப்பட்டது. இந்தப் பரிந்துரையை 194 நாடுகளை உறுப்பினராக உலக சுகாதார சபையும் ஏற்று, நியமன ஒப்பந்த்திலும் கடந்த செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டது.

ஜியோவில் தொடர்ந்து குவியும் முதலீடுகள் கே.கே.ஆர்., நிறுவனம் 2.32 சதவீத பங்குகளை வாங்கியது
 • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதன் கடனை அடைக்கும் முயற்சியில், ஜியோ பிளாட்பார்ம் நிறுவனத்தின் பங்குகளை, பெரிய அளவில் விற்பனை செய்து, நிதி திரட்டி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஜியோவின் பங்குகளை தற்போது, கே.கே.ஆர்., வாங்க உள்ளது.
 • கே.கே.ஆர்., ஜியோ பிளாட்பார்ம் நிறுவனத்தில், 11 ஆயிரத்து, 367 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதுஇந்த முதலீட்டின் மூலம், கே.கே.ஆர்., நிறுவனத்துக்கு, ரிலையன்ஸ் ஜியோவின், 2.32 சதவீத பங்குகள் கிடைக்கும். கே.கே.ஆர்., நிறுவனம், ஆசியாவில் மேற்கொள்ளும் மிகப் பெரிய முதலீடு, இதுவேயாகும்.
 • ஜியோ பிளாட்பார்மில், பெரிய அளவில் முதலீடு செய்யும், ஐந்தாவது நிறுவனமாகும், கே.கே.ஆர்.,இதற்கு முன், பேஸ்புக், சில்வர் லேக் பார்ட்னர்ஸ், விஸ்டா ஈக்விட்டி பார்ட்னர்ஸ், ஜெனரல் அட்லான்டிக் ஆகிய நிறுவனங்கள், ஜியோவில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளன.
 • இந்த ஐந்து நிறுவனங்கள் மூலமாக, ஜியோ ஈட்டும் மொத்த தொகை, 78 ஆயிரத்து, 562 கோடி ரூபாய் ஆகும் கொரோனா பாதிப்புகளையும் மீறி, வெற்றிகரமாக அதிகளவில் நிதி திரட்டும் நிறுவனமாக, ரிலையன்ஸ் மாறி உள்ளது.
 • கே.கே.ஆர்., நிறுவனம், 1976ம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும். இந்நிறுவனம், பெரும்பாலும் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களில் முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது.
 • இந்நிறுவனம் துவங்கியதிலிருந்து இதுவரை, கிட்டத்தட்ட, 2.27 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.
 • இந்த ஒப்பந்தத்தை பொறுத்தவரை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிதி ஆலோசகராக, 'மார்கன் ஸ்டான்லி'யும், சட்ட ஆலோசகராக, 'ஏ.இசட்.பி., அண்டு பார்ட்னர்ஸ்' மற்றும் 'டேவிஸ் போல்க் அண்டு வார்டுவெல்' ஆகிய நிறுவனங்கள் செயல்படுகின்றன.
 • கே.கே.ஆர்., நிறுவனத்துக்கு நிதி ஆலோசகராக, 'டெலாய்ட் டச் தோமட்சு இந்தியா எல்.எல்.பி.,' நிறுவனமும், சட்ட ஆலோசகராக, 'ஷர்துல் அமர்சந்த் மங்கல்தாஸ் அண்டு கோ' மற்றும் 'சிம்ப்சன் தாச்சர் அண்டு பார்ட்லெட் எல்.எல்.பி.,' ஆகிய நிறுவனங்களும் செயல்படுகின்றன.கே.கே.ஆர்., முதலீடு, பரிவர்த்தனைஒழுங்குமுறை மற்றும் பிற வழக்கமான ஒப்புதல்களுக்குப் பிறகே முழுமையடையும்.

புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார் மோடி: மே.வங்கத்துக்கு 1000 கோடி நிவாரணத் தொகை: பலியானோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் நிதி
 • வங்கக் கடலில் உருவான அம்பன் புயல் மேற்கு வங்க மாநிலம் மற்றும் வங்கதேசத்தின் இடையே கடந்த 20ம் தேதி கரையை கடந்தது. கொல்கத்தா உட்பட 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில், புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக நேற்று காலை பிரதமர் மோடி விமானம் மூலம் கொல்கத்தா சென்றார்.
 • அவரை மேற்கு வங்க ஆளுநர் ெஜக்தீப் தன்கரும், முதல்வர் மம்தாவும் வரவேற்றனர். பின்னர், மூவரும் ஹெலிகாப்டர் மூலமாக புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டனர். 
 • பிறகு, வடக்கு 24 பர்கனாசின் பசிரத் பகுதியில் பேட்டி அளித்த பிரதமர் மோடி, ''புயல் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன். பலியானோரின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50,000 நிவாரண நிதியும் மத்திய அரசு வழங்கும்.
 • மேலும், மேற்கு வங்கத்தில் நிவாரண பணிகளை மேற்கொள்ள உடனடி இடைக்கால நிவாரணமாக ரூ.1000 கோடி வழங்கப்படும். சோதனை நேரத்திலும் மம்தா தலைமையிலான மேற்கு வங்க அரசு துணிவுடன் அனைத்தையும் எதிர்கொண்டுள்ளது,'' என பாராட்டினார். 
 • அதைத் தொடர்ந்து, விமானம் மூலம் ஒடிசா சென்ற பிரதமர் மோடி, முதல்வர் நவீன் பட்நாயக்குடன் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் ஒடிசாவுக்கு ரூ.500 கோடி நிவாரண தொகை அறிவித்தார்.
 • பிரதமர் மோடியை கொல்கத்தா விமான நிலையத்தில் வரவேற்ற மம்தாவும், புவனேஸ்வர் விமான நிலையத்தில் வரவேற்ற நவீன் பட்நாயக்கும் சமூக இடைவெளியை பின்பற்றினர். 
 • முகக்கவசம் அணிந்து வந்த அவர்கள், பிரதமரை வரவேற்க கைகுலுக்கவோ, மலர் கொத்து வழங்கவோ இல்லை. வணக்கம் மட்டும் தெரிவித்தனர். பிரதமரும் முகக் கவசம் அணிந்திருந்தார். கூட்டாக பேட்டி அளித்த போதும் 6 அடி சமூக இடைவெளி விட்டு நின்றனர்.
 • ஆம்பன் புயலால் பாதித்த ஒடிசா மாநிலத்திற்கு முதல் கட்டமாக ரூ.500 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜெ.,வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அவசர சட்டம் பிறப்பிப்பு
 • ஜெயலலிதா மறைவுக்கு பின், போயஸ் கார்டனில், அவர் வசித்த வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என, அ.தி.மு.க., வினர் வலியுறுத்தினர்.அதையேற்ற, முதல்வர் இ.பி.எஸ்., 'ஜெ., சாதனைகளை நினைவுபடுத்தும் வகையில், அவர் வசித்த வேதா நிலையம், நினைவு இல்லமாக மாற்றப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும்' என, 2017 ஆக., 17ல் அறிவித்தார். அதன்படி, நினைவு இல்லத்தை கையகப்படுத்த, தமிழ் வளர்ச்சிமற்றும் செய்தித்துறை, 2017 அக்., 5ல், நிர்வாக ஒப்புதல் வழங்கியது.
 • அந்த நிலம் மற்றும் இல்லத்தை கையகப்படுத்த, அதிகாரப்பூர்வ முதல்கட்ட அறிவிப்பு, 2019 ஜூன், 28ல் வெளியானது. இதற்கான உறுதி ஆவணம், இம்மாதம், 6ம் தேதி வெளியிடப்பட்டது. 
 • ஜெ., இல்லத்தில் உள்ள, அசையும் சொத்துக்களான, மரச்சாமான்கள், புத்தகங்கள், நகைகள் போன்றவை, மூன்று ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ளன.
 • எனவே, கையகப்படுத்தும் நடவடிக்கை நிறைவடையும் வரை, அங்குள்ள அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களை, அவற்றின் பராமரிப்புக்காக, அரசின் கட்டுப்பாட்டுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. 
 • அதன்படி, அந்த இல்லம் மற்றும் அசையும் சொத்துக்களை, தற்காலிகமாக அரசுடைமையாக்கவும், வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், 'புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை' அமைக்கவும், கவர்னர் பன்வாரிலால் புரோஹித், அவசர சட்டம் பிறப்பித்துள்ளார். 
 • அறக்கட்டளை தலைவராக முதல்வர், உறுப்பினர்களாக துணை முதல்வர், செய்தித் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் இருப்பர். செய்தித் துறை இயக்குனர், உறுப்பினர் செயலராக இருப்பார். 
 • இந்த அறக்கட்டளை, வேதா நிலையம் இல்லத்தை பராமரிக்கவும், அங்குள்ள அனைத்து அசையும் சொத்துக்களை பாதுகாக்கவும், அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.வரும் 31ம் தேதியுடன் முடிவடையும் கடன் தவணை சலுகை மேலும் 3 மாதம் நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
 • கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
 • முதலில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 2 நாட்களில், பொருளாதார மந்தநிலையை கருத்தில் கொண்டு சில நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதில், கொரோனாவால் வேலையிழப்பு, வருவாய் சரிவு போன்றவை ஏற்பட்டுள்ள நிலையில், கடன் தவணைகளை வங்கிகள் 3 மாதங்களுக்கு வசூலிக்க வேண்டாம் என ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டது.
 • பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்கள், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இந்த பரிந்துரை பொருந்தும்.
 • மே 31ம் தேதி வரை இந்த சலுகை உண்டு. கடன் தவணை செலுத்த வங்கிகள் வழங்கும் 3 மாத அவகாசத்தை பயன்படுத்திக் கொள்ளும் வாடிக்கையாளர்களின் சிபில் ஸ்கோரில் வங்கிகள் சேர்க்கக் கூடாது. 3 மாத கடன் தவணையை செலுத்தாததால் அதனை வராக்க கடனாகவும் கருதக்கூடாது என ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டது.
 • இஎம்ஐ தவணை செலுத்துவதில் விடுமுறை காலமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த 3 மாத சலுகை காலத்தை வாடிக்கையாளர்கள் விரும்பினால் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேநேரத்தில், வங்கிகள் இதற்கு அனுமதி வழங்கினால்தான் இந்த சலுகை கிடைக்கும்.
 • இந்த சலுகை தனிநபர் கடன்கள், கல்விக் கடன்கள், வீட்டுக் கடன்கள், விவசாய கடன்கள், வாகன கடன்கள், வீட்டு உபயோக பொருட்களுக்கான கடன்கள் மற்றும் குறிப்பிட்ட கால அளவில் நிர்ணயிக்கப்பட்ட பிற கடன்கள் சிலவற்றுக்கும் இது பொருந்தும். 
 • கடன் அசல் மற்றும் வட்டிக்கும் சேர்த்து இந்த சலுகை உண்டு. இந்நிலையில், நிதிக்கொள்கை சீராய்வு கூட்டத்தில், வரும் மே 31ம் தேதியுடன் முடிவடையும் இந்த சலுகை தற்போது மேலும் 3 மாதங்களுக்கு, அதாவது, ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் தெரிவித் தார்.
 • ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை சீராய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட பிற முக்கிய முடிவுகள் வருமாறு: குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி 0.4 சதவீதம் குறைத்து 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ 3.35 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. 
 • கடந்த முறை வட்டி 0.75 சதவீதம் குறைக்கப்பட்டிருந்தது. பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் சரிவையே சந்திக்கும். இருப்பினும் 2வது அரையாண்டில் ஓரளவு ஏற்றம் பெற வாய்ப்புகள் உள்ளன. 
 • ஊரடங்கால் இந்த காலாண்டில் விவசாயம் தவிர பிற துறைகள் மந்த நிலையிலேயே காணப்படும் என தெரிவித்துள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு நடப்பு நிதியாண்டில், மே 15ம் தேதி வரையிலான புள்ளிவிவரப்படி 920 கோடி டாலர் அதிகரித்து 48,700 கோடி டாலராக உள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
செப்டம்பர் முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்
 • தமிழகத்தில், 'ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு' திட்டம், செப்டம்பர் முதல் அமல்படுத்தப்பட இருப்பதாக, மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானிடம், தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். 
 • ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, ரேஷனில், அதிக உணவு தானியங்கள் வழங்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அவற்றின் வினியோகம் தொடர்பாக, மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், அனைத்து மாநில உணவுத் துறை அமைச்சர்களிடமும், நேற்று டில்லியில் இருந்தபடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்பு படிக்க யுஜிசி ஒப்புதல்
 • மாணவர்கள் ஒரே நேரத்தில் இரு பட்டப்படிப்புகள் படிக்கும் நடைமுறை கடந்த 2016ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. அதாவது, ஒரே நேரத்தில் ஒரு பல்கலையில் முழு நேரமாகவும், அதே பல்கலை அல்லது வேறொரு பல்கலை.,,யில் தொலைதூர கல்வி, ஆன்லைன் மூலமாகவோ மற்றொரு டிகிரிகளை மாணவர்கள் படித்தால், ஏதேனும் ஒன்றே செல்லுபடியாகும்.
 • இந்நிலையில், நாளுக்குள் நாள் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், பட்டப்படிப்புடன் சேர்த்து திறன் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து படிப்பதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் ஏற்கனவே இருந்த ஒரே நேரத்தில் இரு டிகிரிகள் படிக்கும் நடைமுறைக்கு யுஜிசி ஒப்புதல் அளித்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel