Type Here to Get Search Results !

20th MAY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

காற்றில் கரியமில வாயு மாசுபாடு 17% குறைவு பொதுமுடக்க எதிரொலி
  • உலகெங்கிலும் ஆண்டு முழுவதும் கடுமையான பொதுமுடக்கம் இருந்தால், கரியமில வாயுவின் அளவு 7 சதவீதம் குறையும். பொதுமுடக்கம் விரைவில் அகற்றப்பட்டால் கரியமில வாயு வெளியேற்றத்தில் அளவு 4 சதவீதம் மட்டுமே குறையும்.
  • ஏப்ரல் மாதத்தின் ஒரே வாரத்தில் வாரம், அமெரிக்கா தனது கரியமில வாயு வெளியேற்றத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைத்தது. உலகின் மிக அதிகமாக காற்று மாசுபாட்டை வெளியேற்றும் சீனா, பிப்ரவரி மாதத்தில் அதன் கரியமில வாயு வெளியேற்றத்தை ஏறத்தாழ கால் பங்காக குறைத்தது.
  • ஏப்ரல் 4 முதல் 9-ஆம் தேதி வரை உலகம் முழுவதும் கரியமில வாயு அளவில் மிகப் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டது. அந்த நாள்களில், இந்த ஆண்டின் முதல் நாளில் உலகம் வெளியேற்றிய கரியமில வாயுவைட விட தினசரி 1.87 கோடி டன் குறைவாக கரியமில வாயு வெளியேற்றப்பட்டது.
மத்திய வரியில் தமிழகத்துக்கான பங்குத்தொகை ரூ.1928.56 கோடி உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.295 கோடி நிதி
  • மத்திய வரியில் தமிழகத்துக்கான பங்குத்தொகையாக ஆயிரத்து 928 கோடியே 56 லட்சம் ரூபாயை விடுவிக்க மத்திய நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
  • மத்திய வரி மற்றும் தீர்வைகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பகிர்ந்து அளித்து வருகிறது. அதன்படி, மாநிலங்களுக்கு மே மாதத்துக்கான தொகையாக 46 ஆயிரத்து 38 கோடியே 70 லட்சம் ரூபாயை வழங்க மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • அதன்படி, அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு 8 ஆயிரத்து 255 கோடி ரூபாயும், பீகாருக்கு 4 ஆயிரத்து 631 கோடி ரூபாயும் வழங்கப்படுகிறது.மத்தியப்பிரதேசத்துக்கு 3 ஆயிரத்து 630 கோடி ரூபாயும், மேற்குவங்கத்துக்கு 3 ஆயிரத்து 461 கோடி ரூபாயும், மகாராஷ்ட்ராவுக்கு 2 ஆயிரத்து 824 கோடியே 47 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • ராஜஸ்தானுக்கு 2 ஆயிரத்து 752 கோடி ரூபாயும், ஒடிசாவுக்கு 2 ஆயிரத்து 131 கோடியே 13 லட்சம் ரூபாயும் வழங்கப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக தமிழகத்துக்கு 1928 கோடியே 56 லட்சம் ரூபாய் விடுவிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
  • மாநில உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியங்களையும் மத்திய அரசு வழங்கி வருகிறது. அதன்படி 2020-21-ம் ஆண்டுக்கான தமிழகத்தின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல் தவணையாக ரூ.295 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது.



புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு ரூ.3,500 கோடி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு உணவுப் பொருள்: 8 கோடி புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியம், 1 கிலோ பருப்பு ஆகிய உணவுப்பொருள்கள் அடுத்த 2 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. 
  • இந்தத் திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்துக்கு செலவாகும் ரூ.3,500 கோடியை மத்திய அரசே ஏற்கும். புலம்பெயா்ந்த தொழிலாளா்களை அடையாளம் கண்டு, அவா்களுக்கு உணவு தானியங்களை வழங்கும் பணியை மாநில அரசுகள் மேற்கொள்ளும். 
  • கரோனா தொற்றால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ரேஷன் காா்டுகள் இல்லாத புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுவா் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு ரூ.30,000 கோடி: வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், வீட்டுக் கடன் நிறுவனங்கள், சிறு நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் கடன் அளிக்கும் திறனை மேம்படுத்துவதற்காக ரூ.30,000 கோடி மதிப்பிலான சிறப்பு நிதித் திட்டம் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு ரூ.10,000 கோடி: உணவுப் பொருள்கள் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சுமாா் 2 லட்சம் நிறுவனங்கள் பயனடையும் வகையில் ரூ.10,000 கோடியில் மானியத்துடன் கூடிய கடனுதவி திட்டம் அறிவிக்கப்பட்டது. 
  • மத்திய-மாநில அரசுகளில் பங்களிப்புடன் 5 ஆண்டுகளுக்கு, அதாவது 2024-2025-ஆம் ஆண்டுவரை இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • நிலக்கரிச் சுரங்க ஏலத் திட்டங்களுக்கு ஒப்புதல்: நிலக்கரிச் சுரங்கங்களை ஏலம் எடுக்கும் நிறுவனங்கள், தாங்கள் தோண்டியெடுக்கும் நிலக்கரியின் அளவுக்கு ஏற்ப, குறிப்பிட்ட தொகையை அரசுக்கும் செலுத்தும் நடைமுறை இதுவரை இருந்து வந்தது. 
  • அதற்கு மாறாக, ஏலம் எடுக்கும் நிறுவனங்கள் தங்கள் வருவாயில் ஒரு பகுதியை அரசுக்கு செலுத்த வேண்டும் என்று திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. தனியாா் நிறுவனங்கள் எவ்விதத் தடையுமின்றி ஏலத்தில் பங்கேற்கும் இந்த நடைமுறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி அவசர கடனுதவி: பொதுமுடக்கத்தால் பொருளாதார இழப்பை சந்தித்துள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 9.25 சதவீத வட்டியில் ரூ.3 லட்சம் கோடி கடனுதவி அளிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அவசரகால கடனுதவி திட்டத்தின் கீழ் தொழில் நிறுவனங்களுக்கு இந்தத் கடன் வழங்கப்படும்.
  • அரசு உரத் தொழிற்சாலை கடனுக்கான வட்டி ரூ.7.59 கோடி தள்ளுபடி: ஹிந்துஸ்தான் ஆா்கானிக் கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனம், மத்திய அரசிடம் பெற்ற கடனுக்கான வட்டித் தொகை ரூ.7.59 கோடியை தள்ளுபடி செய்வதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
  • கடந்த 2005 மாா்ச் 31-ஆம் நிலவரப்படி, அந்த நிறுவனம், மத்திய அரசிடம் பெற்ற கடனுக்கான வட்டித்தொகை ரூ.7.59 கோடி செலுத்த வேண்டியிருந்தது. அரசின் கணக்குப் பதிவேடுகளில் இருந்தும், அந்த நிறுவனத்தின் கணக்குப் பதிவேடுகளில் இருந்தும் வட்டித்தொகையை செலுத்த வேண்டிய விவரம் ஏற்கெனவே நீக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், அந்த வட்டியை தள்ளுபடி செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • மீன்வளத் துறையை மேம்படுத்த ரூ.20,000 கோடி திட்டம்: மீன்வளத் துறையை மேம்படுத்துவதற்காக ரூ.20,050 கோடியில் திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் பங்களிப்பு ரூ.9,407 கோடி, மாநில அரசுகளின் பங்களிப்பு ரூ.4,880 கோடி, பயனாளிகளின் பங்களிப்பு ரூ.5,763 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
  • மூத்த குடிமக்கள் ஓய்வூதியத் திட்டம் 3 ஆண்டுகள் நீட்டிப்பு: ஆயுள் காப்பீட்டு நிறுவனம் செயல்படுத்தி வரும் பிரதமரின் மூத்த குடிமக்கள் ஓய்வூதியத் திட்டத்தை (வயவந்தன யோஜனா) 3 ஆண்டுகள் நீட்டிப்பதற்கு (2023 மாா்ச் வரை ) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 
  • இத்திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். அதிகபட்சமாக மாதம் ரூ.10,000 வரை ஓய்வூதியம் கிடைக்கும். 10 ஆண்டுகளுக்குப் பின் முதலீட்டுத் தொகை திரும்பக் கிடைக்கும்.



விடுபட்ட நெசவாளர்களுக்கு ரூ.2,000 நிவாரணம் முதல்வர் இ.பி.எஸ்., அறிவிப்பு
  • நெசவாளர்கள் நல வாரியத்தில், உறுப்பினர் ஆகாத நெசவாளர்களுக்கும், 2,000 ரூபாய், நிவாரணத் தொகை வழங்க, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், மார்ச், 24 முதல், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. 
  • தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெசவு செய்யும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள, 1.03 லட்சம் பேருக்கு, இரண்டு தவணைகளாக, தலா, 1,000 ரூபாய், வழங்கப்பட்டு வருகிறது.நல வாரியத்தில் பதிவு பெறாத, கைத்தறி நெசவாளர்கள், தங்களுக்கும் நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். 
  • அதை பரிசீலித்த முதல்வர், அவர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டார். அதன்படி, தமிழகம் முழுவதும், கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் நெசவாளர்கள் பட்டியல், 200 யூனிட் இலவச மின்சாரம் பெறும் நெசவாளர்கள் பட்டியலுடன் ஒப்பிடப்படும்.

இருப்பிட சான்று பெற்றவர்களுக்கே ஜம்மு காஷ்மீரில் அரசு பணி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக கடந்தாண்டு அக்டோபரில் உருவாக்கப்பட்டன. சிறப்பு அந்தஸ்துடன் இருந்தபோது, காஷ்மீரில் வேறு மாநிலத்தினர் அரசு வேலையில் சேர முடியாது. 
  • இந்நிலையில், இருப்பிட சான்றிதழ் பெறுவதற்கான புதிய அரசாணையை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் 1ம் தேதி வெளியிட்டது. 
  • அதில், ஜம்மு காஷ்மீரில் குறைந்தது 15 ஆண்டுகள் வசித்தவர்கள் அல்லது காஷ்மீரில் 7 ஆண்டுகள் படித்து 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் இருப்பிட சான்றிதழ் பெற முடியும்.
  • அகில இந்திய பணியில் உள்ளவர்கள், காஷ்மீரில் 10 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால், அவர்களின் குழந்தைகளும் உள்ளூர்வாசிகள் பிரிவில் வருவார்கள். அரசு பணியில் குரூப் 4 பதவிகள் வரை மட்டுமே, உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்படும்,' என அறிவிக்கப்பட்டது. இதற்கு உள்ளூர் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
  • இதையடுத்து, இரண்டே நாளில் இந்த உத்தரவில் திருத்தம் செய்யப்பட்டது. குரூப்-4 பதவிகள் வரை என்பது அனைத்து அரசு பணிகளுக்கும் இருப்பிட சான்றிதழ் அவசியம் என மாற்றப்பட்டது. இந்த திருத்தத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. 
  • மேலும், கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க 3 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
  • இதற்கும் அமைச்சரவையில் நேற்று ஒப்புதல் வழங்கப்படும். அதோடு, பிரதம மந்திரி வய வந்தனா திட்டத்தை மேலும் 3 ஆண்டுக்கு வரும் 2023 வரை நீட்டிக்கவும் அனுமதி தரப்பட்டது. கடந்த 2017ம் ஆண்டு இத்திட்டத்தை எல்ஐசி ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. 
  • முதியோருக்கு பென்சன் வருவாயை உறுதி செய்யும் இத்திட்டத்தில் அதிகபட்சம் 15 லட்சம் வரை முதலீடு செய்து மாதாமாதம் அதிகபட்சம் 10 ஆயிரம் வரை பென்சன் பெறலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel