Type Here to Get Search Results !

INDIAN NATIONAL CONGRESS LIST OF CONFERENCES {1885-1946} காங்கிரஸ் மாநாடுகள்

UNIT - VII: INDIAN NATIONAL MOVEMENT

INDIAN NATIONAL CONGRESS  LIST OF 

CONFERENCES {1885-1946} 


ü உமேஸ் சந்திர பானர்ஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, ஆலன் ஆக்டவியன் ஹியூம் (Allan Octavian Hume), வில்லியம் வெட்டர்பர்ன் (William Wedderburn,), கூட்டம், தின்சா வாச்சா (Dinshaw Wacha) ஆகியோரால் தொடங்கப்பட்ட இதன் முதல் தலைவராக பம்பாயில் 1885 டிசம்பரில் நடந்த கூட்டத்தில் உமேஸ் சந்திர பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் 72 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். கூட்டம் புனேயில் நடப்பதாக இருந்தது, ஆனால்  பிளேக்  என்னும் கொள்ளை நோய்  புனேயில் இருந்ததால் அக்கூட்டம் பம்பாய்க்கு மாற்றப்பட்டது.
  

 ü  இரண்டாவது காங்கிரஸ் மகாநாடு 1886இல் கல்கத்தாவில் தாதாபாய்  நெளரோஜி தலைமையில் நடந்தது. இதிலும் நாட்டு நிர்வாகத்தில் சில  சலுகைகளைத்தான் கேட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ü  1887இல் சென்னையில் டிசம்பர் மாதம் 600 பிரதிநிதிகளுடன் நடைபெற்றது. இதற்கு பத்ருதீன் தயாப்ஜி தலைவர். இதிலும் குறிப்பிடத்தக்கத் தீர்மானம் எதுவும் கொண்டு வரவில்லை.

ü  1888இல் அலகாபாத் காங்கிரசின் தலைவர் ஓர் வெள்ளையர். பெயர் ஜார்ஜ் யூல். இதில் 1248 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். லார்டு டப்ரின் என்பவர் காங்கிரசை ராஜத் துரோக இயக்கம் என்று வர்ணித்ததை இந்த காங்கிரஸ் கடுமையாக எதிர்த்தது.இந்த ஆண்டு காங்கிரசின் செயலாளராக இருந்தவர் ஆலன் ஆக்டோவியன் ஹ்யூம்.

ü  1889இல் பம்பாயில் 900 பிரதிநிதிகளுடன் கூடிய காங்கிரசுக்கு பிரோஷ்ஷா மேத்தா தலைமை வகித்தார். இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் சார்லஸ் பிராட்லா இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு இந்திய சீர்திருத்தம் பற்றி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவதாக உறுதியளித்தார்.

ü  1890இல் கல்கத்தா காங்கிரசுக்கு மறுபடியும் பிரோஷ்ஷா மேத்தா தலைவர். காங்கிரஸ் தூதுக்குழு ஒன்றை இங்கிலாந்துக்கு அனுப்ப இந்த மகாநாடு தீர்மானித்தது.

ü  1891இல் நாகபுரி காங்கிரஸ்இதற்கு ஆந்திரத்தைச் சேர்ந்த அனந்தாச்சார்லு தலைவர். 812 பிரதிநிதிகள் கூடினர். ராணுவச் செலவைக் குறைக்க திலகர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது.

ü  1892இல் அலகாபாத் காங்கிரஸ். இதற்கு உமேஷ் சந்திர பானர்ஜி தலைவர்.

ü  1893இல் தாதாபாய் நெளரோஜி தலைமையில் லாகூரில் 867 பிரதிநிதிகள் கலந்துகொண்ட மாநாடு நடந்தது. நாட்டில் வறுமையை ஒழிப்பது என்று ஒரு தீர்மானம் நிறைவேறியது. இந்த கோஷம் இந்திராவின் கரிபி ஹடாவ்’ (ஏழ்மையை ஒழிப்போம்) வரை வந்து இன்று வரை எழுப்பப்படுகிறது. ஆனால்வறுமைதான் ஒழியக் காணோம்.

ü  1894இல் அயர்லாந்தின் சுதந்திர இயக்கத் தலைவர் ஆல்பிரட் வெப் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. போதைப் பொருட்கள் தடுப்புஆலைகளுக்கு வரிவிதிப்புக்கு எதிர்ப்பு போன்ற தீர்மானங்கள் நிறைவேறின.

ü  1895இல் சுரேந்திரநாத் பானர்ஜி தலைமையில் 1584 பிரதிநிதிகளுடன் புனேயில் மாநாடு நடந்தது. இதில் தென்னாப்பிரிக்கஇந்தியர்களின் துயர் துடைத்திடவும்ரயிலில் 3ஆம் வகுப்புப் பயணிகளுக்கு வசதிகள் கேட்டும் தீர்மானங்கள் நிறைவேறின.

ü  1896இல் கல்கத்தா காங்கிரஸ். இதற்குத் தலைவர் ரஹ்மத்துல்லா சயானி. இதில் சென்னைவங்கம் ஆகிய மாகாணப் பஞ்சத்துக்கு அரசே காரணம் என்று ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

ü  1897இல் மத்தியப் பிரதேசம் அம்ரோட்டியில் சங்கரன் நாயர் தலைமையில் மாநாடு நடந்தது. ராஜத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு பால கங்காதர திலகருக்கு தண்டனை விதித்ததை இந்த மாநாடு கண்டித்தது.

ü  1898இல் மீண்டும் சென்னையில் மகாநாடு. இதற்கு ஆனந்த மோகன் போஸ் தலைவர். மக்களைத் தியாகம் செய்யத் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொண்டு தீர்மானம் நிறைவேறியது.

ü  1899இல் ரமேஷ் சந்திர தத்தர் லக்னோவில் மாநாடு நடந்தது. கர்சானின் நிர்வாகத்தை எதிர்த்தும்கல்வியில் சில மாற்றங்கள் வேண்டியும் தீர்மானங்கள் வந்தன.

ü  1900இல் இந்து பிரகாசம்’ பத்திரிகை ஆசிரியர் என். ஜி. சந்தாவர்க்கர் தலைமையில் லாகூரில் மாநாடு நடந்தது.
ü  தென்னாப்பிரிக்காவில் நேட்டாலுக்கு இந்தியர்கள் வருவதையும் தொழில்செய்வதையும் தடுக்கும் சட்டத்துக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

ü  1901இல் தீன்ஷா வாச்சா எனும் பஞ்சாலை முதலாளியின் தலைமையில் மாநாடு நடந்தது. இந்த காங்கிரசில் காந்திஜி கலந்துகொண்டு தென்னாப்பிரிக்கா பற்றிய ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

ü  1902இல் சுரேந்திரநாத் பானர்ஜி தலைமையில் அலகாபாத்தில் மாநாடு. இதில் இந்திய பாதுகாப்புச் செலவுகள் குறைப்பது குறித்து தீர்மானம் வந்தது.

ü  1903இல் பாரிஸ்டர் லால் மோகன் கோஷ் தலைவர். மக்கள் சக்தியை ஒன்று திரட்ட தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

ü  1904இல் ஹென்றி காட்டன் எனும் ஆங்கிலேயர் தலைமையில் காங்கிரஸ் வங்கப் பிரிவினைக்குத் திட்டமிடதை எதிர்த்துத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

ü  1905இல் கோபாலகிருஷ்ண கோகலே தலைமையில் காசியில் காங்கிரஸ் கூடியது. இந்த மாநாட்டில் இங்கிலாந்து இளவரசர் இந்தியா வரும்போது வரவேற்பு கொடுப்பது என்று கோகலேயும்சுரேந்திரநாத் பானர்ஜியும்எதிர்த்து லாலா லஜபதி ராயும் திலகரும் தீர்மானம் கொண்டு வந்தனர். இதில் கோகலேயின் தீர்மானம் நிறைவேறியது.

ü  1906இல் கல்கத்தாவில் தாதாபாய் நெளரோஜி தலைமையில் காங்கிரஸ். இதில் மிதவாததீவிரவாத காங்கிரசின் மோதல் இருந்தது. சுதேசிக் கல்விகைத்தொழில் வளர்ச்சி பற்றி தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.

ü  1907இல் நாகபுரியில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த காங்கிரஸ் சூரத்தில் நடந்தது. இந்த காங்கிரஸ்தான் வரலாற்றுச் சிறப்பு மிக்க காங்கிரஸ்அடிதடி ரகளைநாற்காலி வீச்சு இவற்றில் முடிந்த காங்கிரஸ். தலைவர் ராஷ்பிகாரி கோஷ் பலத்த எதிர்ப்புக்கிடையே தலைமை வகித்தார். கோஷின் தலைமையை நேரு ஆதரித்தார். தமிழ்நாட்டுப் பிரதிநிதிகளான வ.உ.சி.பாரதியார்சிவா ஆகியோர் திலகரின் தீவிரவாதக் குழுவில் செயல்பட்டனர்.

ü  1908இல் மீண்டும் ராஷ்பிகாரி கோஷ் தலைமையில் சென்னையில் நடந்தது. இதில் ஆங்கிலேய அரசு கொண்டு வரும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

ü  1909இல் மதன்மோகன் மாளவியா தலைமையில் லாகூரில் கூடியது. அப்போது மிண்டோ மார்லி சீர்திருத்தம் அறிவிக்கப்பட்டுஇந்து முஸ்லீம் வேற்றுமைக்கு பிரிட்டிஷார் அடிகோலினர். அதை எதிர்த்து ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

ü  1910இல் சர் வில்லியம் வெட்டர்பன் தலைமையில் அல்காபாத்தில் காங்கிரஸ் கூடியது. முகமது அலி ஜின்னா கொண்டு வந்த வகுப்பு வாரி பிரதிநிதித்துவ முறையையும்தனித்தொகுதியையும் எதிர்க்கும் தீர்மானம் நிறைவேறியது.

ü  1911இல் கல்கத்தாவில் பண்டித பிஷன் நாராயண் தலைமையில் காங்கிரஸ். இவ்வாண்டில்தான் இந்தியாவின் தலைநகர் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது. பத்திரிகை சட்டம் பற்றிய தீர்மானம் நிறைவேறியது.

ü  1912இல் பிகாரின் பாட்னா நகரத்தில் மூதோல்கர் தலைமையில் காங்கிரஸ். காங்கிரஸ் ஸ்தாபகர் ஆலன் ஆக்டோவியன் ஹ்யூமின் மரணத்துக்கு அஞ்சலி நடைபெற்றது.

ü  1913இல் கராச்சியில் காங்கிரஸ் கூடியது. காந்திஜி இந்த மகாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டார்.

ü  1914இல் பூபேந்திரநாத் பாசு தலைமையில் சென்னையில் மாநாடு. முதல் உலக யுத்தம் நடந்தது. சென்னை கவர்னர் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் பிரிட்டிஷாருக்கு யுத்த ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

ü  1915இல் பம்பாயில் மாநாடு. தலைவர் சத்யேந்திர பிரசன்ன சின்ஹா. அதுவரை மிதவாதிகள் கரங்களில் இருந்த காங்கிரசில் தீவிரவாத காங்கிரசாரும் அனுமதிக்கப்பட்டனர்.

ü  1916இல் மீண்டும் லக்னோவில் அம்பிகாசரண் மஜூம்தார் தலைமையில் கூடியது. இவ்வாண்டில் கோகலேமேத்தா இறந்து போயினர். திலகர் காங்கிரசில் கலந்து கொண்டார். அன்னிபெசண்ட் ஹோம்ரூல் இயக்கத்தைத் தொடங்கினார். இந்த மகாநாட்டில் ஒரு வேடிக்கை நடந்தது.இங்கு நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கான தேர்தலில் காந்தி திலகரிடம் தோற்றார். ஆனால்வெற்றி பெற்ற திலகர் காந்திஜி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தார்.

ü  1917இல் கல்கத்தாவில் அன்னிபெசண்ட் தலைமையில் காங்கிரஸ். சம்பரான் சத்தியாக்கிரகம் நடந்தது. தேசியக் கொடி உருவாக்கப்பட்டது. ரெளலட் சட்டம் கொண்டு வர அமைக்கப்பட்ட குழுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ü  1918இல் பம்பாயில் ஹஸன் இமாம் தலைமையில் 3500 பிரதிநிதிகளுடன் காங்கிரஸ் கூடியது. அதே ஆண்டு மற்றுமொரு காங்கிரஸ் டெல்லியில் மதன்மோகன் மாளவியா தலைமையில் நடந்தது. இதில் மாண்டேகு செம்ஸ்போர்டு சிபாரிசுகள் கண்டிக்கப்பட்டன. திலகருக்கு பேச்சுரிமை பறிக்கப்பட்டதை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேறியது. வேல்ஸ் இளவரசருக்கு வரவேற்பு தருவதாக தீர்மானிக்கப்பட்டது.

ü  1919இல் 7000 பிரதிநிதிகளுடன் மோதிலால் நேரு தலைமையில் அமிர்தசரசில் காங்கிரஸ் நடந்தது. ஒத்துழையாமை இயக்கம் குறித்து தீர்மானிக்கப்பட்டது.

ü  1920இல் நாகபுரியில் சேலம் தமிழர் சி.விஜயராகவாச்சாரியார் தலைமையில் 20000 பிரதிநிதிகளுடன் காங்கிரஸ் நடந்தது. அகிம்சையை போராட்டப் பாதையாக தேர்ந்தெடுக்கப்பட்டது. ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) காங்கிரசின் செயலாளராக ஆனார்.

ü  1921இல் லாலா லஜபதி ராய் தலைமையில் கல்கத்தாவில் கூடியது. இதில் பட்டதாரிகள் பட்டங்களைத் துறப்பதென்றும்பள்ளிகள்நீதிமன்றங்கள் புறக்கணிக்கப்பட வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேறியது. ஒத்துழையாமை இயக்கம் வலியுறுத்தப்பட்டது.

ü  1922இல் கயாவில் சித்தரஞ்சன் தாஸ் தலைமையில் மாநாடு நடந்தது. சட்டசபைக்குப் போவதா வேண்டாமா என்பதுதான் இம்மாநாட்டின் தலையாய பிரச்சனை. அரசாங்கத்தின் அடக்குமுறைகள் கண்டிக்கப்பட்டன.

ü  1923இல் மெளலான அபுல்கலாம் ஆசாத் தலைமையில் டெல்லியில் மாநாடு. இதைத் தொடர்ந்து காக்கிநாடாவில் ஒரு சிறப்பு மாநாடு நடந்தது. நாட்டின் ஒற்றுமை இதில் வலியுறுத்தப்பட்டது.

ü  1924இல் பெல்காமில் காந்திஜியின் தலைமையில் காங்கிரஸ் கூடியது. இதில் காந்தியக் கொள்கைகளான சத்தியாக்கிரகம்அகிம்சை முதலியன வலியுறுத்தப்பட்டது. தமிழகத் தலைவர் ந.சோமையாஜுலு இதில் நடந்தே சென்று பங்கு கொண்டார்.

ü  1925இல் கான்பூரில் கவிக்குயில் சரோஜினி நாயுடு தலைமையில் மாநாடு கூடியது. சித்தரஞ்சன் தாஸ் மரணமடைந்தார். நாடெங்கிலும் வகுப்புவாதம் தலைதூக்கியது.

ü  1926இல் சென்னை எஸ்.சீனிவாச ஐயங்கார் தலைமையில் கவுகாத்தியில் மாநாடு நடந்தது.

ü  1927இல் டாக்டர் அன்சாரி தலைமையில் சென்னையில் மாநாடு கூடியது. சைமன் கமிஷனை எதிர்ப்பது என்ற தீர்மானம் நிறைவேறியது. கர்னல் நீல் சிலை அகற்ற போராட்டம் நடந்தது.

ü  1928இல் மோதிலால் நேரு தலைமையில் கல்கத்தாவில் காங்கிரஸ் கூடியது. இடைப்பட்ட காலத்தில் சைமன் கமிஷன் எதிர்ப்பு பலமாக நடைபெற்றிருந்தது. ஆங்கிலேய எதிர்ப்பு எங்கும் பரவியிருந்தது.

ü  1929இல் ஜவஹர்லால் நேரு தலைமையில் லாகூரில் கூடியது. இந்தியாவுக்குப் பரிபூரண சுதந்திரம் வேண்டியும் அந்தப் போராட்டத்தில் ஆண் பெண் அனைவரும் பங்கு பெற அழைப்பு விடுக்கப்பட்டது. அன்னியத் துணி எரிப்புப் போராட்டம் நடந்தது. பகத்சிங்குக்கு எதிரான வழக்குகள் நடந்தன. சிறைக் கொடுமைகளை எதிர்த்து ஜதீந்திரநாத் தாஸ் 61 நாள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தார்.1885 முதல் 1928 வரை நடந்த காங்கிரசில் பரிபூர்ண சுதந்திரம் என்பது கோரிக்கையாக இல்லை. 1929இல் நேரு தலைமையில் நடந்த லாகூர் காங்கிரசில்தான் இந்த கோஷம் எழுப்பப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ü  1930இல் கராச்சியில் வல்லபாய் படேல் தலைமையில் காங்கிரஸ் மாநாடு நடந்தது. உப்பு சத்தியாக்கிரகம் நடந்து முடிந்திருந்தது. இதற்குப் பின் 1931, 1932 ஆண்டுகளில் காங்கிரஸ் மாநாடு எதுவும் நடக்கவில்லை.
ü  1933இல் கல்கத்தாவில் நல்லி சென்குப்தா தலைமையில் மாநாடு நடந்தது. ஜனவரி 26ஐ சுதந்திர தினமாக அறிவித்துக் கொண்டாடப்பட்டது. பத்திரிகைகள் அடக்குமுறைக்கு ஆளாயின. மாவீரன் பகத்சிங்சுக்தேவ்ராஜ்குரு தூக்கிலடப்பட்டனர்.

ü  1934இல் பாபு ராஜேந்திர பிரசாத் தலைமையில் பம்பாயில் காங்கிரஸ் கூடியது. காந்திஜி ஆக்க நடவடிக்கைகளில் ஈடுபட கிருபளானி காங்கிரஸ் தலைவரானார்.

ü  1935ஆம் ஆண்டு லக்னோவில் ஜவஹர்லால் நேரு தலைமையிலும்அதன் பிறகு 1937இல் பெயிஸ்பூரிலும் காங்கிரஸ் நடந்தது.

ü  1938இல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் கூர்ஜரத்தைச் சேர்ந்த ஹரிபுரா எனுமிடத்தில் ஒரு கிராமத்தில் நடந்தது. 1939இல் திரிபுராவில் நடந்தது காங்கிரஸ். இதில்காந்திஜி பட்டாபி சீத்தாராமையாவை நிறுத்தஅதை எதிர்த்து போஸ் நின்று ஜெயித்தார். பட்டாபியின் தோல்வி தன் தோல்வி என்றார் காந்திஜி. நேதாஜிக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. நேரு முதலானோர் செயற்குழுவிலிருந்து ராஜிநாமா செய்தனர்.

ü  1940ஆம் ஆண்டில் மெளலானா அபுல்கலாம் ஆசாத் தலைமையில் ராம்நகரில் காங்கிரஸ் கூடியது. அப்போது சுபாஷ் சந்திரபோஸ் பார்வார்டு பிளாக்’ எனும் கட்சியைத் தொடங்கியதால் அவரை காங்கிரசிலிருந்து மூன்று ஆண்டுகள் நீக்கி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது மாகாணங்களில் இருந்த காங்கிரஸ் மந்திரி சபைகள் ராஜிநாமா செய்து விலகின. இதன் பின்னர் நாடு சுதந்திரம் அடையும் வரை காங்கிரஸ் மகாநாடு நடைபெறவில்லை.

ü  1946இல் சுதந்திரம் தொலை தூரத்தில் தெரிந்த நேரத்தில் மீரட் நகரில் ஆச்சார்ய கிருபளானி தலைமையில் காங்கிரஸ் கூடியது. அரசியல் நிர்ணய சபையின் முடிவுகளை இந்த காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது. இதன் பின் 1947 ஆகஸ்ட் 15இல் நாடு சுதந்திரம் அடைந்தது. அதன் பின் 1947 நவம்பர் 15இல் டெல்லியில் கூடிய காங்கிரஸ் கூட்டத்தில் அமைச்சர்களுடன் ஏற்பட்ட வேறுபாடு காரணமாக ஆச்சார்ய கிருபளானி ராஜிநாமா செய்தார். காங்கிரஸ் தொடங்கப்பட்ட காலம் முதல் சுதந்திரம் அடைந்த வரையிலான காங்கிரசின் வளர்ச்சி இங்கே சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுநாம் கடந்து வந்த பாதையை நினைவு படுத்திக் கொள்ள நேர்ந்தது.





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel