உலக சுகாதார அமைப்பின் நிா்வாக குழுத் தலைவராகிறாா் ஹா்ஷ் வா்தன்
- உலக சுகாதார அமைப்பின் நிா்வாகக் குழுத் தலைவராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் மே 22-ஆம் தேதி பொறுப்பேற்கிறாா்.
- 34 உறுப்பினா்களைக் கொண்ட உலக சுகாதார அமைப்பின் நிா்வாகக் குழு தலைவராக தற்போது ஜப்பான் நாட்டின் டாக்டா் ஹிரோகி நகாதனி இருந்து வருகிறாா்.
- இந்தியா சாா்பில் நிா்வாகக் குழுவின் தலைவராக ஹா்ஷ் வா்தனை நியமிக்க 130 நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
- உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியக்குழு கடந்த ஆண்டு ஏகமனதாக மேற்கொண்ட முடிவையடுத்து, இந்தியாவின் சாா்பில் நிா்வாக குழுத் தலைவராக ஹா்ஷ்வா்தன் தோந்தெடுக்க முடிவெடுக்கப்பட்டது.
- மே மாதம் 22-ஆம் தேதி நிா்வாகக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொள்ளும் ஹா்ஷ் வா்தன் அடுத்து வரும் 3 ஆண்டு காலத்துக்கு அந்தப் பதவியில் நீடிப்பாா்.
பாலஸ்தீன அகதிகள் நல்வாழ்வுக்கு ரூ.15 கோடி இந்தியா நிதியுதவி
- பாலஸ்தீன அகதிகளின் நல்வாழ்வுக்கு பாடுபடும் ஐ.நா., முகமைக்கு, இந்தியா, 15 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது. ஐ.நா.,நிவாரணம் மற்றும் பணி முகமையான, யு.என்.ஆர்.டபிள்யு.ஏ., அமைப்பு, பாலஸ்தீன அகதிகளின் கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருகிறது. இந்த அமைப்பிற்கு இந்தியா, 15 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது.
நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க ஹோமியோபதி மருந்து தமிழக அரசு
- சென்னை உயா்நீதிமன்றத்தில் ஹோமியோபதி மருத்துவரான பூவேந்தன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், கரோனா நோய்த்தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
- இந்த நோய்த்தொற்று பரவாமல் இருக்க நமது உடலில் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். சித்தா, ஆயுா்வேதம், ஹோமியோபதி மருத்துவ முறைகளில் உடலில் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகள் உள்ளன.
- நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும், ஹோமியோபதி மருந்தான 'ஆா்சனிகம் ஆல்பம் 30' என்ற மருந்தை பயன்படுத்த ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
- குஜராத் மாநிலத்தில் 75 லட்சம் பேருக்கு இந்த மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை தமிழகத்திலும் வழங்க பரிந்துரை செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
- எனவே, கரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்ள நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் 'ஆா்சனிகம் ஆல்பம் 30' ஹோமியோபதி மருந்தை பொதுமக்களுக்கும், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கும் இலவசமாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
- இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், அனிதா சுமந்த் ஆகியோா் காணொலி காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞா் ஜெயபிரகாஷ் நாராயணன், இந்த மருந்து அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுவதாகத் தெரிவித்தாா். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.
ரூ.500 கோடி மதிப்பில் செங்கல்பட்டில் நவீன தரவு மையம்: அடிக்கல் நாட்டிய முதல்வர்
- செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிறுசேரி சிப்காட்டில் ரூ.500 கோடி மதிப்பில் அமையவுள்ள நவீன தரவு மையத்தை (Smart Data Centre) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
- மத்திய அரசின் NATIONAL PAYMENTS CORPORATION OF INDIA நிறுவனத்தின் மூலம் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவில், நவீன தரவு மையம் அமைக்கப்படவுள்ளது.
- டிஜிட்டல் இந்தியா நோக்கத்தைச் செயல்படுத்தும் விதமாக பல்வேறு டிஜிட்டல்மயமாக்கப்பட்ட தரவுகள் இங்கு சேகரிக்கப்படவுள்ளன.
மே 1 முதல் 1,565 'ஷ்ராமிக் ஸ்பெஷல்' ரயில்கள் இயக்கப்பட்டது: இந்திய ரயில்வே
- இந்திய ரயில்வே மே 1 முதல் 1,565 'ஷ்ராமிக் ஸ்பெஷல்' ரயில்களை இயக்கியுள்ளதுடன் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை நாடு திரும்பியுள்ளது என்று தேசிய போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
- உத்தரபிரதேசம் 837 ரயில்களுக்கும், பீகார் 428 ரயில்களுக்கும், மத்தியப் பிரதேசத்திற்கு 100 க்கும் மேற்பட்ட ரயில்களுக்கும் அனுமதி அளித்துள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ட்வீட்டில் தெரிவித்துள்ளார். திங்கள்கிழமை இரவு நிலவரப்படி, 162 ரயில்கள் போக்குவரத்தில் இருந்தன, 1,252 ரயில்கள் தங்கள் இலக்குகளை அடைந்தன.
- திங்கள்கிழமை இரவு வரையிலான தகவல்களின்படி, குஜராத்திலிருந்து 496 க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்துள்ளன, மேலும் 17 ரயில்கள் இயக்கப்படுகின்றன, அதே நேரத்தில் மகாராஷ்டிராவிலிருந்து 266 க்கும் மேற்பட்ட ரயில்கள் தொடங்கப்பட்டுள்ளன, மேலும் 37 ரயில்கள் உள்ளன.
- பிற மாநிலங்களில், 188 ரயில்கள் பஞ்சாபிலிருந்து, 89 கர்நாடகாவிலிருந்து, 61, தமிழ்நாட்டிலிருந்து 58, தெலுங்கானாவிலிருந்து 58, ராஜஸ்தானிலிருந்து 54, ஹரியானாவிலிருந்து 41 மற்றும் உத்தரப்பிரதேசத்திலிருந்து 38 ரயில்கள் தொடங்கப்பட்டுள்ளன.
- இதுவரை நிறுத்தப்பட்ட ரயில்களில், அதிகபட்சம் உத்தரப்பிரதேசத்தில் 641 ஆகவும், மேலும் 73 போக்குவரத்தில் உள்ளன, பீகாரில் 310 மற்றும் 53 ரயில்களும் உள்ளன.